1.ஆலிவ் எண்ணெய் எடுத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால், தோலில் உள்ள சுருக்கங்கள், மரு போன்றவை நீங்கி விடும்.
2.உலர்ந்த சருமத்திற்கு முட்டையின் வெள்ளை கருவை தனியே பிரித்து எடுத்து அத்துடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து முகத்தில் தடவவேண்டும். அரைமணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ, முகம் பொலிவுடன் மிளிரும்.
3.கரட் எடுத்து நன்கு அரைத்து அத்துடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி விடவும். நன்கு காய்ந்தவுடன் முகத்தை கழுவவும். முகம் பளிச் என்று இருக்கும். (திருமணங்களுக்கு செல்லும்போது பார்லர் போய் ப்ளீச் செய்யாமல் இந்த முறையை பயன்படுத்தலாம்.)
4.பச்சைபயறு, கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு மூன்றையும் ஒன்றாக கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். அதில் சிறிது எடுத்து தயிர் கலந்து முகத்தில் பூசவும். சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இதே கலவையில் சிறிது எடுத்து தேங்காய் எண்ணெய், ரோஸ் வாட்டர், எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து சோப்புக்கு பதிலாக உடலில் பூசி குளித்தால் சருமம் அழகாக தோன்றும்.
5.தினமும் காலையில் இளநீர் பருகினால் முகத்தில் உள்ள பருக்கள் மறையும்
6.கண் பார்வை நன்கு வலுப்பெற அதிகாலையில் உதிக்கும் சூரியனை தினமும் பார்த்தல் வேண்டும்

0 comments:
Post a Comment