Ads Header

Pages


30 September 2012

வீட்டுக்குறிப்புக்கள், ....டிப்ஸ்!

மையல் குறிப்புகள்

* கீரை வகைகளைச் சமைக்கும்போது, 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து சமைத்தால் அவற்றின் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.

* திராட்சைக்குப் பதிலாக, பேரீச்சம் பழத்தை தூளாக நறுக்கி நெய்யில் வறுத்து போட்டால் சுவையாக இருக்கும்.

* கைகளில் உப்பை தடவிக்கொண்டு வாழைக்காய், வாழைப்பூ போன்றவற்றை நறுக்கினால், பிசுபிசுவென ஒட்டாது.

* நான்ஸ்டிக் பாத்திரத்தில் கேசரி, பால்கோவா போன்ற இனிப்பு வகைகளைச் சமைத்தால் அடிபிடிக்காது.

* இட்லி பொடி தயாரிக்கும்போது ஒரு தேக்கரண்டி தனியாவை வறுத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்தால் இட்லி பொடி மணமாக இருக்கும்.

* மிளகாய் வறுக்கும்போது சிறிது உப்பை சேர்த்து வறுத்தால் நெடியிலிருந்து தப்பிக்கலாம்.

* குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகம் ஆனால் இரண்டு கரண்டி சாதத்தை அதில் போட்டால் உப்பின் அளவு சரியாகி விடும்.

* மீதமாகும் தேங்காய் துருவலுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கி வைத்தால் கெடாமல் இருக்கும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner