Ads Header

Pages


04 September 2012

வீட்டிலேயே செய்து கொள்ளும் பியூட்டி டிப்ஸ்!

ழகே வணக்கம்

வீட்டிலேயே செய்து கொள்ளும் பியூட்டி டிப்ஸ்களை உங்களுக்கும் சொல்கிறேன்.

சிலருக்கு ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின்னாக இருக்கும். இப்படிப் பட்டவங்க ஃபேஷியல் செய்துகொள் ளவும் முடியாது. மசாஜ் செய்தால் பருக்கள் தலைகாட்டும். இவர்கள் ‘ஓட்மீல் கிளென்ஸர்’ போட்டால் முகம் வழவழப்பாகி, பளபளக்கும்.

பலசரக்குக்கடைகள் எல்லா வற்றிலும் ஓட்மீல் கிடைக்கும். அரை கப் ஓட்மீலில் ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரும் ஒரு டேபிள்ஸ்பூன் கிளிசரினும் கலந்து, க்ரீம் மாதிரி ஆக்கி முகத்தில் பூசுங்கள். கலவை காய்ந்ததும் இளஞ்சூடான தண்ணீரில் முகத்தைக் கழுவவேண்டியதுதான்.வாரம் இருமுறை போட்டாலே முகம் சூப்பராகிவிடும்.

தேங்காய் எண்ணெயை லேசாகச் சுடவைத்து உடம்பு முழுக்க வாரம் ஒருமுறை பூசி மசாஜ் செய்து, கடலைமாவு தேய்த்துக் குளித்தால் தோல் பட்டு மாதிரி மென்மையாகவும் பளபளப்பாகவும் ஒளிரும்.

வீட்டில் முட்டைகோஸ் சமைக்கும்போதெல்லாம், அதை வேக வைத்த தண்ணீரை முகமெல்லாம் தடவிக்கொண்டு, கால் மணிநேரம் கழித்துக் கழுவுவேன். முகம் மென்மை யாக இருக்க கோஸ் தண்ணீர் சிறந்த வைத்தியம்!

கொஞ்சம் சர்க்கரையைக் கைகளில் கொட்டி லேசாகத் தண்ணீர் தெளித்துக் கரகரவென்று தேயுங்கள். சர்க்கரை கரைந்ததும் கைகழுவி விடலாம். கைகளின் சொரசொரப்புத் தன்மை நீங்கி மிருதுவாகும்.

வறண்ட சருமம் கொண்டவர் களுக்கு அருமருந்து பாதாம் எண்ணெய்! ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெயை லேசாகச் சுடவைத்து முகம், கழுத்தில் மசாஜ் செய்து வந்தால் தோல் வறட்சி நீங்கும்.

சீரகம் போட்டுக் காய்ச்சி ஆறிய தண்ணீரைக் குடித்து வந்தால், நாளடைவில் நிறம் சிவக்கும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner