Ads Header

Pages


28 July 2012

சுகமாக வாழ ஆரோக்கிய அழகுக் கலை உடற்பயிற்சியும்.

1. நின்றபடியே கைகளிரண்டையும் மேலே தூக்கி, முழங்கால் மடங்காமல், குறைந்தது 25 முதல் 50 தடவை தரையைத் தொடலாம். கைகளை உயர்த்தும்போது மூச்சை இழுத்தும், குனியும்போது மூச்சை வெளியே விடுவது எளிதாய் இருக்கும்.
2. கைகளை பக்கவாட்டில் விரித்தும், கால்களை அகல விரித்தும், வலக்கையால் இடதுகால் பாதங்களைத் தொட்டு, இடக் கையை மேலே உயர்த்தி, தலையை இடக்கையாய் பார்க்கும்படி செய்ய வேண்டும். (இதையும் இருபத்தைந்து தடவை, கைகால்களை மாற்றிச் செய்யலாம்). யோகாசனத்தில் இது ‘திரிகோணாசனம்’ எனப்படும்.
3. குப்புறப் படுத்துக்கொண்டு கைகளிரண்டையும் தொடைக்கு அருகில் வைத்து, கால்களையும் தலையையும், தரையிலிருந்து 2 அங்குலம் உயர்த்தி ஆறுவரை எண்ணிவிட்டு, பழைய நிலைக்கு வரவும். (இதுபோல் ஆறு தடவை செய்யலாம்).
4. குப்புறப் படுத்துக் கொண்டு, முழங்கால்களை மடக்கி, இரு கைகளால் பிடித்துக் கொண்டு, தலையை தரையிலிருந்து நிமிர்த்தி மேலே பார்த்துக் கொண்டே தொடைகளையும் உயர்த்த வேண்டும். இம்மாதிரி ஆறு தடவை செய்யலாம். யோகாவில் இது ‘தனுராசனம்’ எனப்படும்.
5. நேராகப் படுத்துக்கொண்டு தலை, கால்கள் ஆகியவற்றை தரையிலிருந்து 4 அங்குலம் மேலே உயர்த்தி 6 முதல் 10 தடவை எண்ணிவிட்டு, தலையைப் பழைய நிலைக்குக் கொண்டு வரவும். (இம்மாதிரி 6 தடவை செய்யலாம்).
6. கைகளிரண்டையும் பின்னால் உயர்த்தி, எழும்பி, படுத்தபடியே கால் கட்டைவிரல்களைத் (முழங்கால்களை மடக்காமல்) தொடலாம். இம்மாதிரி 10 முதல் 20 தடவை செய்யலாம்.
7. நின்றுகொண்டே மெதுவாய்த் தரையிலிருந்து 2 அங்குலம் உயர்ந்து, மெதுவாக 10 நிமிடம் ‘ஜாகிங்’ செய்து இரண்டு, மூன்று நிமிடம் நின்று ஓய்வெடுத்து, மெதுவாக மூச்சுப் பயிற்சி செய்து மீண்டும் பத்து நிமிடம் குதிக்கலாம்.
8. நேராக மல்லாந்து படுத்துக் கொண்டு, கைகளிரண்டையும் தலைக்கு மேல் உயர்த்தி, மூச்சை நன்றாய் உள்ளிழுத்து எழும்பி, மூச்சைவிட்டுக் கொண்டே, கால் சட்டை விரல்களை முழங்கால்கள் மடங்காமல் தொடவேண்டும். தொடும்போது முகம் முழங்கால்களில் படுமளவு குனிந்தால் வயிற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைவது நிச்சயம்.

1 comments:

Balasubramaniyan said...

like

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner