Ads Header

Pages


01 July 2012

கூந்தல் பராமரிப்பு அழகுக்குறிப்புகள்!

கூந்தல் பராமரிப்பு

விளம்பரங்களில் வருவது போன்ற பட்டுக் கூந்தலை பெற வேண்டுமா. இதோ சில கூந்தல் பராமரிப்பு குறிப்புகள் ;

ஒரு கை அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும்.அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம் .

வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும் .

சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் .

வெந்தயம் ,வேப்பிலை,கறிவேபிள்ளை ,பாசிபருப்பு ,ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மைய அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலச.. பளபளக்கும் உங்கள் கூந்தல்

ஹேர் டிரையர் (hair dryer)அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு,முடியின் வேர்கள் பழுதடைந்து விடும் .அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது .

ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேண் தொல்லையில் இருந்து விடுபடலாம் .தலை குளித்த பின்பு ஒரு கப் சுடுதண்ணியில் 1/2 கப் வினிகரை கலந்து தலையை அலசவும் அப்படியே துண்டால் தலையை கட்டி கொள்ளவும் .15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும் பின்பு தலையை பேண் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்து விடும் .இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் பேண் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம் .

முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து ,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும் உங்கள் கூந்தல் .

முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன்,வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும் .

இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது .அது முற்றிலும் தவறு .தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.

எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் .சிறிது நல்ல எண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும் . முடி உதிர்வதையும் தடுக்கலாம் .

கறிவேபிள்ளை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம் .

2 comments:

ANBUTHIL said...

பலருக்கும் பயன்படும் தகவல் நன்றி நண்பரே

Anonymous said...

THANKS FOR UR SUGGECTION

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner