Ads Header

Pages


25 July 2012

உபயோகமான சில வீட்டுக் குறிப்புகள்!

பயோகமான சில வீட்டுக் குறிப்புகள்

*முட்டையின் வெள்ளைக் கருவை அடித்து வைத்து, அத்துடன் கொஞ்சம் உப்பையும், சில துளிகள் எலுமிச்சம் பழச் சாற்றையும் கலந்து வைத்துவிட்டால் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

* காய்கறிகளை சமைக்கும்போது அவற்றில் பச்சை நிறம் போகாமலிருக்க, அவற்றை நறுக்கியதும் உப்பு கலந்த வெந்நீ ரில் சிறிது நேரம் போட்டு வைத்துவிட்டுப் பிறகு ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு வேக விட்டு எடுக்கவும்.

* துணிகளை தேய்க்கும்போது சில துளிகள் யுடிகோலனை விட்டுத் தேய்த்தால், சென்ட் போட வேண்டிய அவசியமில்லா மல், நல்ல மணமுடனிருக்கும்.

*மெழுகுவர்த்தி ஸ்டான்டினுள் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பதற்கு முன்பாக கொஞ்சம் எண்ணெய் தடவி வைத்து விடுங்கள். மெழுகு எரிந்து முடிந்ததும் அதை நீக்குவது சுலபமாக இருக்கும்.

* வாஷ பேசின் அடைத்துக் கொண்டிருக்கிறதா? ஒரு கைப்பிடியளவு சோடா பை கார்பனேட்டும், ஒரு கப் வினிகரையும் ஊற்றி, அதன்மேல் தண்ணீரையும் ஊற்றி விடவும். அடைப்பு நீங்கி வாஷ பேசின் சுத்தமாகும்.

* கை விரல்களில் ஏதேனும் இரும்புத் துகளோ,கண்ணாடித்துகளோ புகுந்து கொண்டு விட்டதா? அந்த இடத்தில் முதலில் கொஞ்சம் ஃபெவிகாலைத் தடவுங்கள். அது காய்ந்ததும் உரித்தெடுங்கள். அத்துடன் சேர்ந்து விரலினுள் மாட்டிக் கொண்ட துகளும் வந்து விடும்.

* மழையில் நனைந்து ஷூக்கள் ரொம்பவும் ஈரமாக இருக்கின்றனவா? அவற்றினுள் கொஞ்சம் நியூஸ் பேப்பரை அடைத்து வைத்து விடுங்கள். பேப்பர் எல்லா ஈரத் தையும் இழுத்துக் கொண்டு விடும்.

* சட்டைக் காலர்களிலும், கை மடிப்பு களிலும் உள்ள அழுக்குகள் எப்படித் துவைத்தாலும் போக மறுக்கிறதா? முதல் நாள் இரவே அவற்றின்மேல் கொஞ்சம் டால்கம் பவுடரைத் தடவி வைத்துவிட்டு, மறுநாள் காலை வழக்கம்போலத் துவைத்து விடுங்கள். அழுக்கு இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

* சட்டைகளிலோ, பெட்ஷீட்டுகளிலோ ஒட்டிக்கொண்டு வர மறுக்கும் சூயிங்கத்தின் மேல் ஐஸ் கட்டியால் தேய்த்தால் சுலபமாக வந்து விடும்.

*உங்கள் வீட்டு ஃப்ரிசரினுள் அடிக்கடி நிறைய ஐஸ் கட்டிகள் சேர்ந்து விடுகின்றனவா? அதனுள்ளே கொஞ்சம் உப்பைத் தூவி வைத்து விடுங்கள். ஐஸ் உறையாது.

* கதவிடுக்குகள் கிறீச் ஒலி எழுப்பி இம்சிக்கின்றனவா? அந்த இடங்களில் பென்சிலால் தேய்த்து விடுங்கள். பென்சி லில் உள்ள கிராஃபைட் சத்தத்தைக் குறைக்க உதவும்.

* அடிப்பிடித்துக் கறை படிந்த பாத் திரங்களினுள் குளிர்ந்த தண்ணீரை நிரப்பி, அத்துடன் கொஞ்சம் பிளீச்சிங் பவுடரையும் போட்டு இரவு முழுக்க அப்படியே வைத்து விடுங்கள். மறுநாள் காலை சோப்பு போட் டுக் கழுவினால் பாத்திரங்கள் பளிச்சென மாறும்.

* தேங்காயை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து விட்டு உடைத்தால் அதன் நாரை சுலபமாக நீக்க முடியும். தேங்காயும் சரி பாதியாக உடையும்.

*துணிகளில் மருதாணிக் கறை கள் பட்டுவிட்டால், அந்த இடத்தை வெது வெதுப்பான பாலில் ஊற வைத்துப் பிறகு சோப்பு போட்டுத் துவைத்தால் கறை நீங்கும்.

* கொஞ்சம் அம்மோனியா அல்லது வினிகர் கலந்த குளிர்ந்த தண்ணீரில் கண்ணாடிப் பாத்திரங்களைக் கழுவினால் அவை புதிது போல பளபளக்கும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner