Ads Header

Pages


12 July 2012

எ‌ளிய வீட்டுக் குறிப்புகள்!

எ‌ளிய வீட்டுக் குறிப்புகள்

பிரிட்ஜிலிருந்து சில சமயம் ஒருவித கெட்ட வாசனை வரக் கூடும். இதை நீக்க நல்ல மணமான குளியல் சோப் கொண்டு பிரிட்ஜை துடைத்து சுத்தம் செய்யலாம்.

குக்கரின் பணி முடிந்தபின்பு அது உஷ்ணமாக இருக்கும்போதே, அதன் மேல் மூடியைத் திறந்து விட்டு மிகவும் குளிர்ந்த நீரை அதன் மீது ஊற்ற வேண்டும். ஐஸ் வாட்டர் பயன்படுத்துவது உகந்தது. இப்படி செய்துவர குக்கரின் ரப்பர் வளையத்தின் ஆயுள் கூடும்.

வார்னீஷ் கலந்த சுண்ணாம்பை வீடுகளின் சுவர்களுக்குப் பூச அவை உறுதியாக நீடித்து இருக்கும்.

மெழுகுவர்த்தியைப் பயன்படுத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அதனை கு‌ளி‌ர்பதன‌ப் பெ‌ட்டி‌யி‌ல் வை‌த்து எடு‌த்தா‌ல் உருகுவது குறையு‌ம்.

சில துளி ஷாம்பூவை நீரில் விட்டு அதில் பொலிவிழந்த தங்க நகைகளைப் போட்டு, பல் துலக்கும் பிரஷ்ஷினால் மென்மையாக பிரஷ் செய்து பின்பு சுடு நீரில் அலசிக் கழுவி எடுத்துப் பாருங்கள். அவை பளபளவென மின்னும்.

ஊதுவத்திகளை ஏற்றுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு நீரில் நனைத்து பின்பு காற்றில் உலரவிட்டு அவற்றை ஏற்றினால், அதிக மணமும் தரும், நின்றும் எரியும்.

1 comments:

ANBUTHIL said...

thanks for usefull post

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner