தினசரி புதுப்புது அழகு
சாதனங்களின் விளம்பரத்தை நாம் பார்க்கிறோம். எது உங்கள் சருமத்துக்கு
தீங்கு விளைவிக்காதது, எதை வாங்கினால் நீங்கள் விரும்பும் பயன் கிடைக்கும்
என்ற கேள்விகளுக்கு பதில், நீங்கள் அந்தப் பொருட்களை வாங்கி பயன்
படுத்திய பிறகுதான் கிடைக்கும்!. ஆனால் எந்த விதமான பக்க விளைவுகளும்
இல்லாமல் நம் அழகுக்கு அழகு சேர்க்க, இயற்கை பல அழகு சாதனங்களை நமக்கு
வழங்கியுள்ளது. இவற்றை தேடி நாம் வெகு தூரம் செல்ல வேண்டாம். உங்கள்
சமையல் அறையிலேயே கிடைக்கும் பொருட்கள்தான் இவை.
1. வெள்ளரிப் பிஞ்சு:
இதன் சாற்றை எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சற்று சூடான நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும்.
2. எலுமிச்சம் பழம் :
எலுமிச்சம் பழச் சாற்றை
தேனுடன் கலந்து முகத்தில் தடவினால் முகத்தை வெண்மையாக்கும். ப்ளீச் செய்து
கொள்வதற்கு பதிலாக இதை உபயோகித்துப் பாருங்கள்.
எலுமிச்சம் பழச் சாற்றுடன்
முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து முகத்தில் தடவினால், முகத்தில்
சுருக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உலர்ந்த சருமம் உள்ளவர்கள்
கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்து உபயோகிக்கவும்.
3. மோர் :
இது குடிப்பதற்கு மட்டுமல்ல,
குளிப்பதற்கு முன்பு முகத்திலும் உடம்பிலும் தடவி பிறகு குளித்தால்,
உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
4.வெந்தயம் :
சீயக்காய் அரைக்கும்போது
வெந்தயம் போட்டு அரைப்பது வழக்கம். ஷாம்பு உபயோகிக்கும் இந்த காலத்தில்,
இதைத் தண்ணீரில் ஊர வைத்து குளிப்பதற்கு முன் முடியில் தடவினால் முடி
பளபளப்பாக இருக்கும்.
5.விளக்கெண்ணெய் :
கை, கால்களில் விளக்கெண்ணெய் தடவினால் வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
இதை புருவத்திலும், கண் இமையில் உள்ள முடியிலும் தினமும் படுப்பதற்கு முன் தடவி வந்தால் அது அடர்த்தியாகும்.
6. பருப்பு :
கடலை மாவையும் பயத்தம் பருப்பு மாவையும் கலந்து சோப்புக்கு பதிலாக உபயோகித்து வந்தால், உங்கள் சருமம் உலர்வதை தவிர்க்கலாம்.
7. தேங்காய் எண்ணெய் :
இதை முடியில் தடவுவது
பல்லாண்டு காலமாக தொடர்ந்து வரும் பழக்கம். இதை வாரம் ஒருமுறை உடலில்
நன்றாகத் தேய்த்து, அதன் பின் குளித்தால் பட்டுப் போன்ற மென்மை தரும்.
8. பூசு மஞ்சள் தூள் :
இதை, தொடர்ந்து முகத்தில்
பூசி குளித்தால் முகத்தில் முடி வளர்வதை தடுக்கலாம். ஆனால் மஞ்சள்
தேய்த்து குளித்தவுடன் வெய்யிலில் செல்வதைத் தவிர்க்கவும். ஏனென்றால்
இதனால் சருமம் கருமை அடையும்.
0 comments:
Post a Comment