Ads Header

Pages


15 September 2013

பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்குக் காரணம் மனிதனையே கொல்லக்கூடிய அதன் விசம்தான். இந்த விஷகடிக்கு சரியான சிகிச்சை, உரிய நேரத்தில் செய்யவேண்டியது அவசியம்.
உலகில் சுமார் 3500 வகை பாம்புகள் காணப்படுகின்றன. அவற்றில் 250 வகைதான் விசத்தன்மையுள்ளவை.
இந்தியாவில் சுமார் 216 வகைப்பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 வகைதான் விஷமுள்ளவை.
ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய இரண்டு லட்சம் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள். அவர்களில் 15000-20000 பேர் விஷத்தால் இறக்கிறார்கள்.
விஷப்பாம்புகளில் நம் நாட்டில் முக்கியமானது நல்லபாம்பு. இது படமெடுத்து ஆடும். இதன் படத்தில் இரண்டு கருப்பான கண் போன்ற அமைப்பு இருக்கும். கண் போன்ற அமைப்பில் சிறு தங்கநிற செதில்கள் காணப்படும். சில பாம்புகளில் ஒற்றைக்கண் கூட உண்டு. கருநாகத்தின் படத்தில் கண் இருக்காது.
இறந்த பாம்பில் படம் விரிந்து இருக்காது. இதற்கு அந்தக் கழுத்துப்பகுதி இணைப்புகள் இறுகி விடுவதே காரணம். நல்லபாம்பின் தாடையில் விஷப்பற்கள் இரண்டு உண்டு. அதனருகில் ஒன்று அல்லது இரண்டு சிறு பற்கள் காணப்படலாம்.
நல்ல பாம்பின் விஷக்கடி பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
நல்லபாம்பு விஷமானது பொதுவாக நரம்புமண்டலத்தைத் தாக்கக்கூடிய விஷமாகும்.
1. கடித்த 6-8 நிமிடத்தில் கடிவாயைச் சுற்றியுள்ள பகுதி சிவந்துவிடும்.
2. கடிவாயிலிருந்து இரத்தத்துடன் நீர் கசியும்.
3. 30 நிமிடத்தில் கடிபட்ட நபருக்கு தூக்கம் வருதல், கால்கள் சுரணைக்குறைவு, நிற்க நடக்க இயலாமை ஆகியவை ஏற்படும்.
4. சிலருக்கு உமட்டல், வாந்தி வரலாம்.
5. நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் கால் தசைககள் செயலிழந்து போய்விடும். இதனால் நிற்க முடியாது.
6. கண் இமைகள் செயலிழந்து கண்ணைத் திறக்க முடியாது.
7. கடித்த அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரத்தில் எச்சில் அதிகம் ஊறும். வாந்தி, நாக்குத் தடித்தல், குரல்வளை தடித்து செயல் இழத்தல் ஆகியவை ஏற்பட்டுப் பேசவும், விழுங்கவும் இயலாது.
8. சுமார் இரண்டு மணி நேரத்தில் உடல் தசைகள் முழுவதும் செயலிழப்பதால் மூச்சு விடுதல் (Respiratory Paralysis) ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். கடிபட்டவர் சுய நினைவிலிருந்தாலும் பேசமுடியாது.
9. அதன் பின் வலிப்பு வரலாம். நுரையீரல் செயலிழந்து மூச்சு நின்று விடும். பின் இதயத்துடிப்பும் நின்று போகும்.
10. சிகிச்சை:
 முதலுதவி - கடிவாயின் மேல் சிறிது அகலமாக, பட்டையாக துணியால் கட்டலாம். அகலமாக அழுத்திக்கட்டுவதால் தோலுக்கடியிலுள்ள இரத்தத் தமனிககளின் வழியாக விசம் பரவுவது குறையும்.
 கடித்த கால் அல்லது கைப் பகுதியை அசைக்காமல் வைக்க வேண்டும்.
மருந்துகள்:
 விச முறிவு மருந்தை தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்தவ மனைகளிலும் உள்ளது. இது நல்லபாம்பு மற்றும் அனைத்துவிதப் பாம்பு விசத்தையும் குணப்படுத்தும்.
 விசம் அதிகமாக இருந்தால் செயற்கை சுவாசக் கருவிகள் (Ventilator) உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுதல் சிறந்தது.
நல்லபாம்புக் கடியால் இறப்பதற்கு முக்கிய காரணங்கள் :
1. அதிக அளவு விஷத்தை பாம்பு கடித்து உடலுக்குள் செலுத்துதல்.
2. கடிபட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுவராமை, தகுந்த சிகிச்சை அளிக்காதது ஆகியவையே.
உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை அளித்து இன்னுயிர் காப்போம்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner