வெல்லமும், மிளகும் உடலுக்கு நல்லது
குளிர்
காலத்தில் குழந்தைகளுக்கு ஜலதோஷம் ஏற்படுவது சகஜம். கோதுமை தவிட்டை மண்
சட்டியில் போட்டு வறுத்து, ஒரு வெள்ளைத் துணியில் போட்டு, முடிச்சு
போடவும். இதை, உடல் பொறுக்கும் சூட்டில் குழந்தைகள் தலைப்பகுதியில் ஒத்தி,
ஒத்தி எடுக்க வேண்டும். மார்பு மற்றும் முதுகு பகுதியில் ஒத்தடம்
கொடுக்கலாம்; நிவாரணம் கிடைக்கும். பனி காலங்களில் உதட்டில் வெடிப்பு
ஏற்பட்டு, கருத்து விடும். இதை தவிர்க்க, குளிர் சீசன் ஆரம்பித் ததுமே
தினமும் உதட்டில் லேசாக வெண்ணெய் தடவி வரவும்.
கடுகுடன் பால் அல்லது தண்ணீர் சேர்த்து அரைத்து, தினமும் பூசி வர, சருமம்
மென்மையாகி, பளபளக்கும். ஒரு கரண்டி ஆலிவ் ஆயிலை ஒரு பக்கெட் நீரில் கலந்து
குளிக்கலாம். சருமம் மிகவும் வறண்டிருந்தால், ஆலிவ் ஆயிலை உடம்பில் பூசி,
மசாஜ் செய்யவும். 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கலாம். குளிர் காலத்தில்
உரை மோர் விடும் போது, அதனுடன் சிறிது புளி உருண்டையை போட்டால், கெட்டியான
தயிர் தயார் அல்லது ஹாட் பேக்கில் பாலை ஊற்றி, உரை ஊற்றுங்கள்; கெட்டியான
தயிர் கிடைக்கும். வெறும் தரையில் படுக்க வேண்டாம். பாய் விரித்து, அதன்
மீது பெட்ஷீட் விரித்து படுக்கவும்.
வெளியே செல்லும் போது, காதுகளை மறைத்தபடி மப்ளர் அல்லது ஸ்கார்ப் கட்டிக்
கொண்டு செல்லவும். சிறிது பஞ்சை காதில் வைத்துக் கொண்டு சென்றாலும், குளிர்
காற்றிலிருந்து தப்பிக்கலாம். குளிர்ச்சியான பானங்களை அருந்துவதை
தவிர்க்கவும். சூப் அருந்தலாம். சூடான சாப்பாட்டையே சாப்பிடவும்.
சப்பாத்தி, கொண்டை கடலை, கொள்ளு போனறவற்றை நம் உணவில் அதிகம் சேர்த்துக்
கொள்வது அவசியம். குளிப்பதற்கு வெது வெதுப்பான நீரை பயன்படுத்தலாம். குளிர்
காலத்தில் வெந்நீர் அருந்துவது, நோய் பாதிப்பிலிருந்து நம்மை காக்கும்;
ஜீரணத்திற்கும் நல்லது. காட்டன் வகை உடைகளைத் தவிர்த்து, சிந்தடிக் ஆடைகளை
அணியலாம். வெளியே செல்லும் போது ஸ்வெட்டர், சால்வை அணிந்து செல்வது நல்லது.
குழந்தைகளுக்கு குல்லா, ஸ்வெட்டர், சாக்ஸ் அணிந்து, வெளியே அழைத்துச்
செல்வதும் அவசியம்.
குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு ஜலதோஷம் ஏற்படுவது சகஜம். கோதுமை தவிட்டை
மண் சட்டியில் போட்டு வறுத்து, ஒரு வெள்ளைத் துணியில் போட்டு, முடிச்சு
போடவும். இதை, உடல் பொறுக்கும் சூட்டில் குழந்தைகள் தலைப்பகுதியில் ஒத்தி,
ஒத்தி எடுக்க வேண்டும். மார்பு மற்றும் முதுகுபகுதியில் ஒத்தடம்
கொடுக்கலாம்; நிவாரணம் கிடைக்கும். தலைக்கு குளித்தபின், சாம்பிராணி புகை
போடுவது நல்லது. மாலை வேளையில் வீடு முழுக்க சாம்பிராணி புகை போடுவதால்,
வெது வெதுப்பாக இருப்பதோடு, கொசு தொல்லையும் இருக்காது. எண்ணெய் மற்றும்
மசாலா ஐட்டங்கள் அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. தினமும்
காலையில், துளசி இலை நான்கை தண்ணீரில் ஊற வைத்து அருந்துவது நல்லது.
குளிக்கும் போது சோப்பு பயன்படுத்தாமல், கடலை மாவு அல்லது பயிற்றம் பருப்பு
மாவு தேய்த்து குளிக்கலாம். தொண்டை வலி, கமறல், இருமல் போன்றவற்றுக்கு,
ஒரு கரண்டியில் நெய்யை விட்டு காய்ந்ததும், ஒரு சிறு துண்டு வெல்லத்தை
போட்டு பொங்கி வரும் போது, அரை தேக்கரண்டி மிளகுப் பொடி போட்டு, அடுப்பை
அணைத்து விடவும். சற்று ஆறியதும் உருட்டி வாயில் போட்டு கொண்டால் இதமாக
இருக்கும்; இருமலும் அடங்கும். என்ன தோழியரே... குளிர்காலத்தை வரவேற்க
தயாராக இருப்போமா?