Ads Header

Pages


09 April 2013

இணைய வெளியில் பைல் சேமிக்க - கணிணிக்குறிப்புக்கள்.

ணைய வெளியில் பைல் சேமிக்க

ஹார்ட் டிஸ்க், சிடி, டிவிடி, ப்ளாஷ் ட்ரைவ் என எந்த மீடியாவில் நாம் பைல்களைப் பதிந்து சேமித்து வைத்தாலும், என்றாவது ஒரு நாள், ஏதேனும் ஒரு வழியில் அவை கெட்டுப் போய் நமக்குக் கிடைக்காமல் போகலாம். நம் ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போகாது என்ற எண்ணத்தில், பைல்களைக் கம்ப்யூட்டரிலேயே பதிந்து வைக்கிறோம். ஆனால், நகர்ந்து செயல்படும் வகையில் அது இயங்குவதால், நாம் எதிர்பாராத ஒரு நாளில், அதன் இயக்கம் முடங்கிப் போய் பைல்களை நம்மால் பெற இயலாமல் போய்விடுகிறது. என்ன செய்தாலும் பைல்கள் கிடைப்பது இரண்டாம் பட்சம் தான் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகிறது. மற்ற மீடியாக்களின் வாழ்நாளும் அதே போல் தான்.

இதற்கான பல தீர்வுகளில் ஒன்றாக கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் ஒரு தீர்வு கிடைக்கிறது. பல இணைய தளங்கள், நம் பைல்களை பதிந்து சேவ் செய்து வைத்திட வசதிகளை நமக்குத் தருகின்றன. ஓரளவில் பைல்களைச் சேமித்து வைத்திட இந்த வசதி இலவசமாகவே தரப்படுகிறது. இந்த வகையில் சி.எக்ஸ் (cx) என்னும் இணைய தளம் இயங்குகிறது.

இந்த தளத்தின் இணைய முகவரி: http://www/cx.com. இந்த தளம் சென்று, நம் மின்னஞ்சல் முகவரி, யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வருக்கும் 10 ஜிபி இடம் தரப்படுகிறது. பதிந்தபின், இந்த தளத்தில் லாக் இன் செய்து, நாம் பதிந்து சேவ் செய்திட விரும்பும் பைல்களை, நம் கம்ப்யூட்டரிலிருந்து அப்லோட் செய்திடலாம். மிக எளிதாக இதனை மேற்கொள்ளலாம். நாம் எத்தனை பைல்களை அப்லோட் செய்துள்ளோம் என்ற கணக்கும் காட்டப்படுகிறது.

இந்த தளத்தில், எந்த ஒரு வகை கம்ப்யூட்டரிலிருந்தும் பைல்களை அப்லோட் செய்திடலாம். விண்டோஸ், மேக் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மேலும், இணைய இணைப்பு வசதி கொண்ட மொபைல் போன்களிலிருந்தும் அப்லோட் மற்றும் டவுண்லோட் பணிகளை மேற்கொள்ள லாம். இதனால், நாடு விட்டு நாடு சென்றாலும், ஓரிடத்தில் இணைய இணைப்பே கிடைக்கவில்லை என்றாலும், கிடைக்கும் இடத்தில் இருந்து பைல்களைக் கையாளலாம். பின்னர், இதனை மீண்டும் நம் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்வதும் எளிதாகவும், வேகமாகவும் நடைபெறுகிறது. ஒவ்வொரு பெயர் பதிவிற்கும் 10 ஜிபி இடம் தரப்படுவதால், தனி நபர் பயன்பாட்டிற்கு இது மிகவும் உகந்தது. எந்த இடத்திலிருந்தும், எந்த கம்ப்யூட்டரிலிருந்தும் இந்த பைல்களை டவுண்லோட் செய்து கொள்ளலாம் என்பதால், அடிக்கடி பயணம் மேற்கொள்வோர், தங்கள் பைல்களைப் பாதுகாப்பாக வைத்திட இது ஒரு சிறந்த வசதி ஆகும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner