Ads Header

Pages


09 April 2013

கம்ப்யூட்டர் டிப்ஸ்.... டிப்ஸ்.... டிப்ஸ்.....

இலவச டூல்பார்


நீங்களே உங்களுக்கு சொந்தமான டூல்பார் தயாரிக்க விரும்பினால் பின் வரும் லிங்கில் சென்று தயாரித்துக்கொள்ளவும்.

www.ourtoolbar.com

இலவச மென்பொருள்கள், டிப்ஸ்.... டிப்ஸ்.... டிப்ஸ்.....

என்ன புரோகிராம் என்ற அறிவிப்பு

கம்ப்யூட்டரில் டூல்பார் அல்லது டெஸ்க்டாப்பில் ஐகான் மீது உங்களுடைய மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால் உடனே புரோகிராம் பெயர் சிறிய மஞ்சள் கட்டத்தில் கிடைக்கும். சில புரோகிராம்களுக்கு நாம் மேலும் சில குறிப்புகளை எழுதி வைத்து நமக்கு நினைவூட்டும் படி செய்திடலாம். எடுத்துக் காட்டாக என்னிடம் பிராட்பேண்ட் இணைப்பு இருந்தாலும் அது காலை வாரிவிடும் பட்சத்தில் டெலிபோன் வழியே இணைப்பிற்கான வழியையும் ஏற்படுத்தி ஐகானை உருவாக்கி வைத்திருக்கிறேன். அதனைப் பயன்படுத்தும் முன் சிபியுவின் பின்புறம் இருந்து வரும் டெலிபோன் இணைப்பிற்கான கேபிளை டெலிபோனுடன் இணைக்க வேண்டும்.

இதனை அடிக்கடி மறந்து போவோம். எனவே இந்த புரோகிராம் ஐகான் மீது கிளிக் செய்திட கர்சரைக் கொண்டு சென்றவுடன் Fix the Telephone line first என்ற செய்தி வரும்படி அமைத்துக் கொண்டேன். இதே போல பல புரோகிராம்களுக்கு எச்சரிக்கை செய்தியினைப் போட்டு வைக்கலாம். இதனை ஏற்றுக் கொள்ளும் புரோகிராம்களை இயக் குகையில் நமக்கு ஒரு நினைவூட்டல் கிடைக்கும் அல்லவா! இதனை எப்படி ஏற்படுத்துவது எனப் பார்ப்போம்.

எந்த புரோகிராமிற்கு இந்த செய்தி இணைப்பு வேலை நடைபெற வேண்டுமோ அந்த புரோகிராமின் ஐகான் மீது கர்சரைக் கொண்டு செல்லவும். பின் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் கீழாக Comment என்ற பிரிவில் உங்களுக்கு நினைவூட்ட வேண்டிய செய்தியை டைப் செய்து வைக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் அந்த ஐகான் மீது கர்சரைக் கொண்டு செல்லும் போதெல்லாம் அந்த செய்தி உங்களுக்குக் காட்டப்படும்.
-----------------------------------------------------------
டிப்ஸ்.... டிப்ஸ்.... டிப்ஸ்.....
சிஸ்டம் டிப்ஸ்

மை கம்ப்யூட்டருக்கு புதிய வழி

நாம் எல்லாரும் அடிக்கடி பயன்படுத்தும் கம்ப்யூட்டர் பிரிவு மை கம்ப்யூட்டர் ஆகும். ஏனென்றால் இதன் மூலமே நாம் நம் ஹார்ட் டிஸ்க்கை அணுகுகிறோம். சிடி மற்றும் இயக்கி எடுக்கக் கூடிய பிளாஷ் டிரைவ்களையும் அணுகுகிறோம். மை கம்ப்யூட்டர் போல்டரைப் பெற டெஸ்க் டாப்பில் உள்ள அதன் ஐகானைக் கிளிக் செய்கிறோம்.

அல்லது இன்னும் சற்று சுற்று வழியாக ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் எக்ஸ்புளோர் சென்று பின் அதனைக் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோவில் பெறுகிறோம். இந்த வேலையெல்லாம் வேண்டாம்; எனக்குத் திரை யிலேயே ஒரு மெனு வர வேண்டும்.

அதன் மூலம் மை கம்ப்யூட்டர் பெற வேண்டும் என விரும்புகிறீர்களா! அதற்கான வழியும் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஸ்டார்ட் மெனு செல் லுங்கள். அங்கு கிடைக்கும் இரட்டை மெனுவில் வலது பக்கம் பார்வையைச் செலுத்துங்கள். அங்கு மை கம்ப்யூட்டர் என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் கிளிக் செய்தால் நேராக மை கம்ப்யூட்டர் போல்டருக்குச் செல்வீர்கள். இந்த மெனுவிலேயே மை மியூசிக், மை பிக்சர்ஸ், மை நெட்வொர்க் பிளேசஸ் என்ற போல்டர்களுக்கும் வழி இருப்பதனை நீங்கள் பார்க்கலாம்.
----------------------------------------------------------------
டிப்ஸ்.... டிப்ஸ்.... டிப்ஸ்.....
சில டிப்ஸ்

சீரியல் நம்பர் டைப் செய்கிறீர்களா? புதியதாக சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றினை விலை கொடுத்து உங்களுடையதாக்கிக் கொண்டுள்ளீர்கள். இதனை கம்ப்யூட்டரில் பதியும் போது அல்லது முதல் முதலாகப் பயன்படுத்தும்போது வரிசை எண்ணை பதியும்படி அந்த புரோகிராம் கேட்கும். உடனே நம் லாக் கீ பேடிலிருந்து எண்களை டைப் செய்திடக் கூடாது. எழுத்துகளுக்கு மேலுள்ள கீகளிலிருந்துதான் டைப் செய்திட வேண்டும். ஏனென்றால் சில வேளைகளில் கீபேடில் உள்ள எண்களுக்கான கீகளை அழுத்துகையில் அதனை வேறு ஒன்றின் குறியீடாகக் கம்ப்யூட்டர் எடுத்துக் கொண்டு பதிவு செய்திடும் எண்ணை ஏற்றுக் கொள்ளாது.

இணைய தளத்திற்கான ஷார்ட் கட் : உங்களுக்குப் பிடித்த இணைய தளங்களுக்கு ஷார்ட் கட் ஐகான் இருந்து அவற்றைக் கிளிக் செய்தால் நேரடியாக நீங்கள் அந்த தளத்திற்குச் சென்றால் எப்படி இருக்கும்? அப்படிச் செய்ய முடியுமா?
முடியும். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தொகுப்பில் உங்களுக்குப் பிடித்த இணைய தளத்தைப் பார்க்கையில் தளத்தின் முகவரிக்கு அருகே சிறிய ஆங்கில எழுத்தான 'e' இருக்கும் அல்லவா?

இப்போது உங்கள் பிரவுசர் விண்டோவைச் சிறியதாக்கி அதன் பின் அந்த சிறிய 'e' எழுத்து உள்ள கட்டத்தை இழுத்து வந்து டெஸ்க்டாப்பில் உள்ள காலியிடத்தில் விட்டுவிட்டால் அதுதான் உங்களுக்குப் பிடித்த தளத்தின் ஷார்ட்கட். இந்த ஐகான்களின் மீது கிளிக் செய்தால் பிரவுசர் திறக்கப்பட்டு நீங்கள் தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

கீ லாக்கர்களிடமிருந்து தப்பிக்க: கீ லாக்கர் என்பது நாம் டைப் செய்திடும் கீகள் என்ன என்னவென்று அப்படியே காப்பி செய்து பைலாக உருவாக்கித் தரும் சாப்ட்வேர் ஆகும். எனவே இந்த புரோகிராம் இருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் நாம் இன்டர் நெட் மற்றும் நிதி பரிவர்த் தனைகளை மேற்கொண்டால் நம்முடைய பாஸ்வேர்டுகள் மற்றவருக்குத் தெரிந்துவிடும் அல்லவா? இதிலிருந்து தப்பிக்க ஒரு வழி உள்ளது.

பாஸ்வேர்ட் டைப் செய்திடுகையில் இடையே பாஸ்வேர்டில் இல்லாத எழுத்துக்களையும் டைப் செய்து விடுங்கள். பின் மவுஸ் மூலம் அந்த தேவையற்ற எழுத்துக் களை நீக்கிவிடுங்கள். கீ லாக்கர் புரோகிராம்கள் டைப் அடிக்கும் கீகளை மட்டுமே நினைவில் கொள்ளும். இது போல தேவையற்ற கீகளை அழுத் துகையில் எடுத்துக் கொள்ளும்; ஆனால் அவற்றை மவுஸ் மூலம் அழிக்கையில் எடுத்துக் கொள்ளாது. எனவே நம் பாஸ் வேர்ட்களை மற்றவர்கள் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியாது.

பைலின் பாத் தெரிய: ஒரு பைல் எங்கு உள்ளது என்று கூற அதற்கான பாத் (path) சரியாகத் தரப்பட வேண்டும். இதனை எப்படி அமைப்பது? அல்லது பாத் 'இன் முழு வழியை எப்படி எழுதுவது என்று தெரியாமல் பலர் இருக்கின்றனர். இதனை மிக எளிதாகக் கண்டு பிடிக்கலாம். ஸ்டார்ட் அழுத்தி பின் ரன் விண்டோவினைத் திறக்கவும்.

விண்டோஸ் எக்ஸ்புளோரரையும் திறந்து குறிப்பிட்ட பைலை மவுஸால் இழுத்து வந்து ரன் விண்டோவில் விடவும். பைல் அங்கேயேதான் இருக்கும். ஆனால் பைலின் பெயர் முழு path உடன் காட்டப்படும். இதனை அப்படியே காப்பி செய்து எங்கு பைல் குறித்து பாத் காட்ட வேண்டுமோ அங்கு பேஸ்ட் செய்துவிடலாம்.
--------------------------------------------------------------
டிப்ஸ்.... டிப்ஸ்.... டிப்ஸ்.....

புல்லட் இல்லாமல் இடை வரி அமைக்க

வேர்ட் அல்லது பவர் பாயிண்ட்டில் புல்லட்களுடன் லிஸ்ட் அமைக்கிறீர்களா? அப்போது ஏதேனும் ஒரு வரியில் புல்லட் வராமல் இருக்க நீங்கள் விரும்பலாம். ஆனால் ஏற்கனவே புல்லட் அமைத்ததனால் அனைத்து வரிகளும் புல்லட் களுடனேயே அமைந் திடும்.

புல்லட் இல்லா மல் புதிய வரி அமைத் திட ஷிப்ட் மற்றும் என்டர் (ShiftEnter) இணைந்து அழுத்தவும். அடுத்த முறை புல்லட்டுடன் வரி அமைய ஒரு முறை என்டர் அழுத்தித் தொடரலாம்.

---------------------------------------------------------------
விண்டோஸ் அப்டேட்

பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படியானால் அடுத்த முறை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்திட முயற்சி செய்து பாருங்கள். உங்களால் முடியாது. பயர்பாக்ஸ் வழியாக அப்டேட் செய்திட முடியாமல் மைக்ரோசாப்ட் அதனை அமைத்துள்ளது. எனவே இண்டர்நெட் எக்ஸ்ப் ளோரரை இயக்கித் தான் அப்டேட் செய்திட முடியும்.

வார்த்தைகளை ஆடியோவாக மாற்ற

வார்த்தைகளை ஆடியோவாக மாற்ற
இந்த தளத்திற்கு சென்று நாம் ஆடியோ வடிவில் மாற்ற வேண்டிய வலைப்பதிவு முகவரி, இணையதள முகவரி, டாகுமெண்டுகள் போன்றவற்றை அளிக்க வேண்டும். உடனே அவற்றை எம்.பி-3 வடிவில் மாற்றி அளிப்பார்கள். அதை நாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நமது சொந்த இணையதளத்திலும் இடம்பெறச் செய்யலாம்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner