Ads Header

Pages


09 April 2013

கேள்வி பதில்கள் - கணிணிக்குறிப்புக்கள்.

கேள்வி: நினைவிற்கு வரும்போதெல் லாம் பெயர்களை வரிசையாக வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கி அடித்து வைத்தேன். இவற்றை அகர வரிசைப்படி அடுக்கி வைக்க விரும்புகிறேன்.
இதற்கு வேர்டில் வசதி தரப்பட்டுள்ளதா?

பதில்: மிக எளிதாக இதனை மேற்கொள்ளலாம். இவற்றை எல்லாம் செலக்ட் செய்திடுங்கள். பின் Table மெனு சென்று Sort பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் சார்ட் டயலாக் பாக்ஸ் (Sort Text dialogue window) கிடைக்கும். இதில் கீழிருந்து மேலாக, அதாவது A to Z என்ற வகையில் அடுக்கும்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் லிஸ்ட் பெயர்கள் மாற்றி நீங்கள் தேர்ந்தெடுத்தபடி அடுக்கப்படும்.
உங்கள் டாகுமெண்ட்டில் இந்த பெயர்கள் மட்டும் இருந்தால் அவற்றைத் தேர்ந்தெடுக்காமலேயே நீங்கள் சார்ட்டிங் வேலைக்கு நேரடியாகச் செல்லலாம்.

கேள்வி : திரைப்படங்களை விண்டோஸ் மீடியா பிளேயரில் அல்லது வேறு எதில் பார்ப்பது?

பதில் : நீங்கள் கூறியபடி விண்டோஸ் மீடியா பிளேயரில் பார்க்கலாம். அல்லது Xing Mpeg player, Irfan view, Winamp போன்ற சாப்ட்வேர் தொகுப்புகள் மூலமாகவும் பார்க்கலாம்.

கேள்வி பதில்கள்
கேள்வி - பதில் 4

1. கேள்வி: வேர்ட் டேபிள் அமைக்கையில் டேபிள் வரிசை தலைப்புகளை அடுத்த பக்கத்தில் வந்தாலும் அமைக்க ஹெடிங் ரோவ்ஸ் ரிபீட் என்ற வசதி உள்ளது. அதற்கு இணையான
வசதி எக்ஸெல் தொகுப்பில் உள்ளதா? அது என்ன?

பதில்:
எக்ஸெல் தொகுப்பிலும் நீங்கள் கேட்கும் வசதி உள்ளது. இதனை கீழ்க்காணும் முறையில் செட் செய்திட வேண்டும்.

1. 'File' என்பதைக் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் 'Page Setup' என்பதனைத்
தேர்ந்தெடுக்கவும்.

2. பல டேப்கள் கொண்ட 'Page Setup' என்ற டயலாக் பாக்ஸ் கிடைக் கும். இதில் “Sheet” என்ற டேபைக் கிளிக் செய்திடவும்.

3. ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பு உள்ள படுக்கை வரிசை அச்சிடப்பட வேண்டும் என்றால்
'Rows to repeat at top'என்பதற்கு அடுத்து உள்ள சிறிய ஸ்ப்ரட்ஷீட்டின் மீது கிளிக் செய்திடவும்.
'Page Setup Rows to repeat at top' என்னும் புளோட்டிங் டூல் பார் கிடைக் கும். எந்த படுக்கை வரிசையில் உள்ள தலைப்புகள் அச்சிடப்பட வேண்டுமோ அந்த வரிசையினைத்
தேர்ந்தெடுக்கவும். வரிசையினைத் தேர்ந்தெடுத்து முடித்த பின்னர் டூல்பாரின் இறுதியில் உள்ள பட்டனைக் கிளிக் செய்திடவும். இதன் பின் அந்த வரிசை டயலாக் பாக்ஸில்
தெரியும்.


4. இதே போல நெட்டு வரிசையில் உள்ளதுவும் அச்சிடப்பட மீண்டும் என்றால் மீண்டும் சிறிய ஸ்ப்ரட் ஷீட் டைப் பெற்று அதில் 'Columns to repeat at left' என்பதற்கு அடுத்து உள்ள சிறிய ஸ்பிரட்ஷீட்டின் மீது கிளிக் செய்து முன்பு செய்தது போலவே தேர்ந்தெடுத்து அமைத் திடவும்.
இதில் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். நெட்டு வரிசை (column) மற்றும் படுக்கை வரிசை
(row) ஆகிய இரண்டினையும் கட்டாயம் அமைத்திட வேண்டும் என்பதில்லை. எது ஒன்று வேண்டும்
என்றாலும் அதனை மட்டும் அமைத்திடலாம்.


5. இவற்றை எல்லாம் தேர்ந் தெடுத்த பின்னர் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடினால் தேர்ந்தெடுத்தபடி ஒர்க் ஷீட் அச்சிடப்படும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner