Ads Header

Pages


13 June 2012

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடுவது?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடுவது?

உணவு முறை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த வாசகர்களிடம் இருந்து வந்த கேள்விகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவைகளுக்கு மட்டும் இந்த வாரம் பதில் அளிக்கிறார் டயட்டீஷியன்.

விளையாடும் ஆண் மற்றும் பெண்ணுக்கு தேவைப்படும் கலோரி அளவு எவ்வளவு?

விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு நாளுக்கு தேவைப்படும் கலோரி அளவு என்பது விளையாட்டு, விளையாடும் நேரம், வயது என்பதை பொறுத்து மாறுபடும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டாயிரத்து 200 கிராம் கலோரி தேவைப்படும். உதாரணமாக ஒரு விளையாட்டில் ஈடுபடுபவர் வயது 10 வரை இருக்கும் போது ஆயிரத்து 600 முதல் இரண்டாயிரத்து 400 கிராம் கலோரி வரை தேவைப்படும். 10லிருந்து 12 வயது வரை பெண்களுக்கு இந்த அளவுடன் கூடுதலாக 200 கிராம் கலோரியும், ஆண்களுக்கு 500 கிராம் கலோரியும் தேவைப்படும். ஆண்களுக்கு தசை வளர்ச்சி அதிகம் என்பதால் அதிக அளவு புரதச்சத்து மற்றும் கலோரி தேவைப்படும்.

நான் ஒரு சர்க்கரை நோயாளி. தவிர்க்க முடியாத காரணங்களால் இனிப்பு எடுத்துக் கொள்ளும் போதும், உணவின் அளவு அதிகரிக்கும் போதும் அதற்கு தகுந்தது போல் மருந்தின் அளவை நாமே அதிகரித்து கொள்ளலாமா?

சர்க்கரை நோய்க்கு மருந்தின் அளவை நாம் முடிவு செய்வது மிகவும் தவறான ஒன்று. எந்த வகை இனிப்பை எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்தும், உணவின் அளவை பொறுத்தும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக் கிறது. அதற்கு எந்த அளவு மருந்து தேவைப்படும் என்பது மருத்துவருக்கு மட்டுமே தெரியும். நாமே மருந்துகளின் அளவை அதிகப்படுத்தும்போது, சில சமயம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து "லோ சுகர்' ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இது உயிருக்கே ஆபத்தானதாக முடிந்து விடும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?

பல வைட்டமின்கள் மற்றும் தாவர உணவுகள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை துõண்டுகிறது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை என ஆன்ட் ஆக்சிடென்ட், துத்தநாகம், வைட்டமின் ஏ, ஈ மற்றும் சி, தாதுப்பொருட்கள் செலினியம், குளோடாதியோன் உள்ளிட்டவற்றை கூறலாம். இவை உடலில் உள்ள "டி' செல்களை துõண்டி நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்கிறது. இதில் வைட்டமின் "சி' அதிவேகமாக வேலை செய்து வைரஸ் கிருமிகளை உடலில் போகாமல் பாதுகாக்கிறது. வைட்டமின் ஏ உடலில் ஃப்ரிரேடிகல்ஸ் செயலிழக்கச் செய்கிறது. இந்த சத்துப் பொருட்கள் பூண்டு, வெங்காயம், பழங்கள், காளான், கீரை மற்றும் காய் கறிகள், முழுமையான தானியம் மற்றும் பயிறு வகைகள், ஓட்ஸ், சோயாபீன்ஸ், மீன் போன்றவற்றில் நிறைந்துள்ளது.
இவை புற்றுநோய் கட்டி, இருதய பாதிப்பு, நீரிழிவு நோய் முதல் ஜலதோஷம் வரை அனைத்து நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

டயட்டீஷியன் டிப்ஸ்:

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு டிப்ஸ்:
* பதப்படுத்திய உணவுகள், மைதா போன்ற பொருட்களில் செய்த பொருட்கள், காபி, பேக்கரி உணவு பொருட்கள் ஆகியவற்றை தவிர்க்கவும்.
* முட்டை, பால், தயிர், இளநீர், பழங்கள், பேரீட்சை, பாதாம்பருப்பு, முந்திரி போன்றவற்றை அதிகமாக சேர்க்கவும்.
* மூன்று வேளை உணவை பிரித்து ஐந்து வேளையாக சாப்பிடவும்.
* கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சோயாபீன்ஸ், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.
* அதிக ரத்தப்போக்கு உள்ளவர்கள் சாக்லேட், காபி, சேகோ பவுடர்களால் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை தவிர்க்கவும்.
* வயிற்று வலிக்கு அதிக அளவு வலி மாத்திரைகள் எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner