Ads Header

Pages


10 June 2012

கோடையை குளுமையாக்க வித விதமான பானங்கள்! டிப்ஸ்!

டிப்ஸ்! கோடையை குளுமையாக்க வித விதமான பானங்கள்!

Variety juices for summer! - Tips for Women

கறுப்பு திராட்சைப் பழங்களைக் கழுவி சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு அல்லது மத்தால் நசுக்கி கரைத்துக் கொள்ளவும். பின்பு அதை மெல்லிய துணியால் வடிகட்டி, தோல், விதை ஆகியவற்றை நீக்கிவிட்டு சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் சிறிது எலுமிச்சை சாறும் சேர்த்து, சர்க்கரையையும், ஐஸ் கட்டியைச் சிறு துண்டுகளாக்கிப் போட்டு பருகலாம்.

* இரண்டு தக்காளிப் பழங்களை மிக்ஸியில் விழுதாக அரைத்து, நீர் மோரில் கலந்து ஒரு சிட்டிகை டேபிள் சால்ட், கால் ஸ்பூன் பெருங்காயத் தூள், கொத்துமல்லி இலைகள், கறிவேப்பிலை போட்டு இரண்டு மூன்று கப் குடித்தால் உஷ்ணத்தால் உடல் சோர்ந்து போகாது. களைப்பும் தெரியாது.

* வெயிலில் தயிர் புளித்துவிட்டதா? ஒரு கப் புளித்த தயிருடன் 6 ஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, மிக்ஸியில் அடித்து குடித்துப் பாருங்கள். அப்புறம் புளிப்புத் தயிரைத் தேடுவீர்கள்.

* வெயிலில் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்கு நுங்குடன் சர்க்கரை அல்லது கன்டென்ஸ்டு மில்க் சேர்த்துப் பொடியாக அரிந்த மாம்பழம், வாழைப்பழம் கலந்து கொடுத்தால் உங்களுக்குப் பாராட்டு நிச்சயம்.

* புதினா இலைக்கு உடலைக் குளிர்ச்சியடைய வைக்கும் தன்மை உள்ளது. புதினா இலையை நறுக்கி நீரில் போட்டு அந்த நீரைப் பருகலாம்.

* அதிக தாகம், நாக்கு வறட்சி இருப்பவர்கள் கோடைக் காலத்தில் குளிர்ந்த நீரில் நன்னாரி வேரைப் போட்டு வைத்து பருகி வரலாம்.

* காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து அதில் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும். எலுமிச்சை சாறில் உப்பு சேர்த்து அருந்த மயக்கம், பித்தம், தொண்டை சூடு மாறும்.

* தர்ப்பூசணி பழச்சாறுடன் சிறிது எலுமிச்சைச் சாறு, கசக்கிய புதினாத் தழைச் சாறு, சர்க்கரை சேர்த்து குடித்தால் வெயிலால் ஏற்படும் உடல் வெம்மை தணியும்.

* தர்ப்பூசணியில் இனிப்பு சர்பத்துதான் செய்ய வேண்டும் என்பதில்லை. தோல் சீவி மிக்ஸியில் போட்டு புளிக்காத மோர்விட்டு மிளகு, சீரகம் தட்டிப் போட்டுக் குடித்துப் பாருங்கள். சம்மர் முழுக்க விடமாட்டீர்கள்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner