Ads Header

Pages


05 August 2013

அழகு முகத்துக்கு அழகு குறிப்பு!

அழகு முகத்துக்கு அழகு குறிப்பு!

1. சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் உறைத்து பூசி வந்தால், முகம் வசீகரத் தோற்றத்தைப் பெறும்.
2. முருங்கைப் பிசினை பொடி செய்து அரை ஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வனப்பு பெறும்.
3. வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து பின்னர் குளித்து வந்தால், உடல் சிவப்பாக மாறும்.
4. அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகிவர உடல் அழகும் முக அழகும் கூடும்.
5. மரிக்கொழுந்து இலையையும் சில ஆவாரை இலைகளையும் சம அளவு எடுத்து அரைத்து தலையில் தடவி வந்தால்,செம்பட்டை முடி கருமையாக மாறும்.
6. கணினி, வெல்டிங். வெயில் இவற்றில் வேலை செய்பவர்கள் பலருக்கு கண்கள் தக்காளிப் பழம் போல் சிவந்து காணப்பட்டால், வைத்தியம் வேறு ஒன்றுமில்லை. தக்காளிதான். தினம் இரண்டு தக்காளி வீதம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், பத்து நாட்களில் பறந்துபோய்விடும், கண்களின் சிவப்பு.
7. சிறிதளவு பப்பாளிப் பழத்தை நன்றாக மசித்து வெடிப்பு வந்த பகுதிகளில் தடவி விடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், கால்களிலுள்ள வெடிப்பு மறைந்துவிடும்.
8. வெள்ளை மிளகை ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ) பசும்பாலில் அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.
9. ஒரு நாளைக்கு 10 அல்லது 12 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால், ( அதாவது நினைத்தபோதெல்லாம் தண்ணீர் குடிப்பதை பழக்கமாகக் கொண்டிருக்கவேண்டும். ) உதட்டில் வெடிப்பு வராது. காலையில் எழுந்தவுடனும், மாலையிலும் கொஞ்சம் வெந்தயத்தை வாயில் போட்டு மென்று தின்று வந்தாலும் உதட்டில் வெடிப்பைப் பார்க்க முடியாது.
10. சோம்பு இலை அல்லது சோம்பை கொதிக்கும் நீரில் போட்டு ஜலதோஷத்திற்கு விக்ஸ் போட்டு ஆவி பிடிப்பதுபோல் முகத்தை காட்டி ஆவி பிடிக்க வேண்டும். முகத்தை பாத்திரத்துக்கு வெகு அருகில் கொண்டு போக வேண்டாம்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner