Ads Header

Pages


16 August 2013

மூல நோயை குணப்படுத்தும் மாங்கொட்டை

ல்லா வகை மாம்பழத்திலும் ஒரு கொட்டை இருக்கும். இந்த மாங் கொட்டையின் உள்ளே உள்ள பருப்பு சிறந்த ஒரு மருந்துப்பொருள். மாம்பழம் தின்றபின் கிடைக்கக்கூடிய மிகுதிக் கொட்டைகளை எல்லாம் வெயிலில் போட்டு நன்றாகக் காயவிட வேண்டும்.எல்லாக் கொட்டைகளும் நன்றாகக் காய்ந்தபின் அவைகளை உடைத்து உள்ளே இருக்கும் பருப்புகளைக் கவனித்து சொத்தை, பூச்சி இல்லாதவைகளாக எடுத்து, அந்தப் பருப்பின் மேலுள்ள நீல நிறமான தோலையும் நீக்கிவிட்டு, சுத்தமா மாம்பருப்பை மட்டும் எடுத்து அதைப் பாக்கு அளவு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொண்டு, ஒரு இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு நெய்விட்டு, நெய் காய்ந்தபின் அதில் அந்தப் பருப்பைப் போட்டு வறுக்க வேண்டும். பருப்பு பொன்னிறமாகச் சிவந்து வரும் வரை வறுக்க வேண்டும்.

பிறகு அதை அப்படியே எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆறவிடவேண்டும். நன்றாக ஆறியபின் அம்மியிலோ மிக்ஸியிலோ போட்டு, அதைப் பட்டுப் போல தூள் செய்து எடுத்து, அதை ஒரு வாயகன்ற சுத்தமான பாட்டிலில் போட்டு நன்றாக மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.

இநத்ப் பாட்டிலின் மேல் ‘மாங்கொட்டை சூரணம்’ என்று எழுதி ஒட்டிவிடவேண்டும். இது முற்கால பெரியவர்கள் கையாண்ட ஒரு முறை. நல்ல பலன் தரக்கூடியது.

இது உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய கைகண்ட மருந்து. வீட்டில் ஏதாவது உஷ்ண சம்பந்தமான பதார்த்தங்களைச் செய்து சாப்பிட்டு விட்டால், அன்றைய சாப்பாட்டுடன் ஒரு டீ ஸ்பூன் அளவு இந்த மாங்கொட்டைச் சூரணத்தையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டால், உஷ்ண பதார்த்தம் ஒன்றும் செய்யாது. அதாவது கோழி, பப்பாளிப்பழம், பலாப்பழம், மாம்பழம் இன்னும் பலவிதமான உஷ்ண பதார்த்தங்களைச் சாப்பிட்ட அன்று மட்டும் இதைச் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு அதாவது மூன்று வயதிற்கு மேல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு அரைத் தேக்கரண்டி அளவு கொடுத்தால் போதுமானது.

மூல வியாதியால் கஷ்டப்படுகிறவர்கள் இந்த மாங்கொட்டை சூரணத்தை ஐந்து நாள் காலை மாலை பாலில் அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலக்கடுப்பு, இரத்தம் விழுதல், ஆசனக் கடுப்பு குணமாகும்.

ஐந்து நாள் விட்டு மறுபடி ஐந்து நாள் தொடர்ந்து மூலம் குணமாகும் வரை சாப்பிடலாம்.

இந்த மருந்தை சாப்பிடும்பொழுது அதிக காரம், அதிகப் புளி இவற்றை நீக்கிவிட்டு சாப்பிடவும். அத்துடன் அரைக் கீரை, முளைக்கீரை, பருப்புக் கீரை இவைகளில் ஒன்றைத் தாராளமாக சாப்பிட்டு வந்தால் மூலநோய் பூரணமாகக் குணமாகும்.

மூலச்சூடு, வயிற்றுப் போக்கு, கிராணி, வயிற்றுக் கிருமிகள் ஆகியவை குணமாக மாங்கொட்டை சூரணத்தில் ஒரு அளவு எடுத்துக்கொண்டு அந்த அளவு ஓமத் தூளும் ஓமத்தூள் அளவு சுக்குத்தூளும், சுக்குத்தூள் அளவு கசகசாத் தூளும் சேர்த்து நன்றாகக் கலந்து ஒரு வாயகன்ற கண்ணாடி சீசாவில் போட்டு நன்றாக மூடிவிட்டு அதன் மேல் ‘மாங்கொட்டை கூட்டுச் சூரணம்’ என்று எழுதி ஒட்டிவிட வேண்டும்.

மேலே சொன்ன நோய்கள் குணமாக ‘மாங்கொட்டை கூட்டு சூரண’த்தில் ஒரு பாக்களவு எடுத்து அத்துடன் பசு நெய் சேர்த்துக் கலக்கிச் சாப்பிட வேண்டும். சிறுவர்களுக்கு அரைப் பங்கு போதுமானது.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner