பிரண்டையை இடித்து, சாறெடுத்து, அதனுடன் சிறிது புளியும், உப்பும் சேர்த்து குழம்பு பதமாக காய்ச்சி, பொறுக்கக் கூடிய சூட்டில் பற்றுப் போட்டு வர இரண்டொரு நாட்களில் குணமாகும்.
சுளுக்கு மற்றும அடி பட்ட வீக்கம் குணமாக, பிரண்டை வேரை நிழலில் நன்கு உலர்த்தி, பொடியாக்கி, நெய் விட்டு லேசாக வறுத்து 1-2 கிராம் அளவு காலை மாலை ஆகிய இரு வேளை உட்கொண்டுவரலாம்.
பிரண்டையில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு அதிகம் உதவும். எனவே, கால்சியம் குறைவாக இருப்பவர்கள் பிரண்டையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பிரண்டை துவையல், பிரண்டை வற்றல் செய்து சாப்பிடலாம். நல்ல பலன் கிட்டும்.
0 comments:
Post a Comment