ஃபாஸ்ட் ஃபுட் மேளா!
பூண்டு பொடி இட்லி
தேவையானவை: வேக வைத்த இட்லி - 6, இட்லி மிளகாய்ப்பொடி - 2 டேபிள்ஸ்
பூன், பூண்டு - 4 பல், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: இட்லியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோலுரித்து பொடியாக நறுக்கவும். எண்ணெயைக் காய வைத்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பூண்டை சேர்க்கவும். பூண்டு லேசாக வதங்கியதும் இட்லி துண்டுகள், இட்லி மிளகாய்பொடியை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி சூடாக பரிமாறவும்.
--------------------------------------------------------------------------------
ஸ்டஃப்டு பஜ்ஜி

தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு, கார்ன் ஃப்ளார் மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, வெங்காயம் (அ) வாழைக்காய் - 2.
ஸ்டஃப்பிங் செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம் - குடமிளகாய் - கொத்தமல்லி, துருவிய கேரட் சேர்ந்த கலவை - அரை கப், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், உப்பு - சிறிதளவு.
செய்முறை: எண்ணெய் நீங்கலாக தேவையான மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். வெங்காயம் (அ) வாழைக்காயை விரும்பிய வடிவத்தில் நறுக்கவும். எண்ணெயைக் காய வைத்து, நறுக்கிய காயை மாவில் முக்கி எடுத்து பஜ்ஜிகளாக பொரித்தெடுக்கவும். பொரித்த பஜ்ஜியை லேசாக கீறிக் கொள்ளவும். ஸ்டஃப்பிங்குக்கு கொடுத்துள்ளவற்றை ஒன்றாகக் கலந்து இதனுள் நிரப்பி பரிமாறவும்.

0 comments:
Post a Comment