Ads Header

Pages


Showing posts with label பரீட்சை சுலபமாக. Show all posts
Showing posts with label பரீட்சை சுலபமாக. Show all posts

07 May 2012

தேர்வு பதட்டத்தை குறைக்க 16 பயிற்சிகள்

தேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுதும் போது பயம் வந்துவிடும். தேர்வு எழுத பயந்ததால் நினைவிலுள்ள தகவல்கள் கூட மறந்து விடும்.

இப்படி தேர்வு நேரத்தில் குழம்பிப் போன சிலர் , நன்கு படித்திருந்தும் தேர்வை நல்ல முறையில் எழுத இயலாத நிலையே ஏற்பட்டு

விடுகிறது.எவ்வளவுதான் சிறப்பாக படித்திருந்தாலும் , தேர்வு நேரங்களில் ஏற்படும் குழப்பங்களையும் ,அதனை தவிர்க்கும்ë வழிகளையும் மாணவர்கள் முன் கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது ஆகும்.

படித்த பாடங்களை திரும்ப திரும்ப படிப்பதன் மூலம் அந்த பாடத்தை நினைவில் எளிதில் மனதில் பதிய வைக்கலாம். மேலும் எப்பொழுதெல்லாம் அந்தத் தகவல்கள் தேவைப்படுன்றதோ அப்போதெல்லாம் அவற்றை உப யோகித்துக் கொள்ளவும் முடியும்.

தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பே ஏற்கனவே படித்த பாடத்தை திரும்பவும் படிப்பது அவசியமாகும். திருப்புதல் நேரத்திட்டம் ஒன்றை வகுத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் எவ்வளவு மணிநேரம் ஒரு பாடத்தை திரும்பப் படிக்க வேண்டும் ? என்பதை முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

நேரம் இருந்தால் கடந்த ஆண்டு நடந்த தேர்வின் கேள்வித் தாள்களில் இடம் பெற்ற கேள்விகளுக்கான பதில்களை எழுதி நீங்களே திருத்தி மதிப்பெண் வழங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களை நீங்களே மதிப்பிட்டு கொள்ளலாம்.

சில மாணவர்கள் இப்படி முன்கூட்டியே திட்டமிடாமல் தேர்வுக்கு முன்ëபு இரவு நேரங்களில் வெகு நேரம் விழித்துத் தொடர்ந்து படிப்பார்கள். தொடர்ந்து இப்படி அதிக நேரம் கண்விழித்துப் படித்துப் பழக்கமில்லாமல் திடீரென அதிக நேரம் கண்விழிக்கும் போது உடலில் பிரச்சினைகள் ஏற்பட்டு விடுகிறது. சிலருக்கு தீராத தலைவலி ஏற்படும். காய்ச்சல் கூட ஏற்பட்டு தேர்வு எழுத இயலாத நிலை சில நேரங்களில் உருவாகிவிடும். எனவே திட்டமிட்டு முன் கூட்டியே ஒரு நேரத்திட்டத்தை வகுத்துக் கொண்டு படிக்கலாம்.

சிலரது பள்ளி அல்லது கல்லூரி வெகு தூரத்தில் இருக்கலாம் .பஸ்சில் பயணம் செய்யும் போது புத்தகத்தை எடுத்து படிக்க இயலாத நிலை உருவாகும். சுமார் 1மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்படும் போது பயணம் செய்யும் நேரத்தையே படிக்கும் நேரமாக மாற்றிக் கொள்ளலாம்.

தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய ஆர்வத்தில் சிலர் ஓய்வு எடுக்காமல் படிப்பார்கள். ஓய்வெடுப்பதற்க்கும் சிந்திப்பதற்கு தகுந்த நேரத்தை ஒதுக்கத் தவறியவர்களுக்கு படிக்கும் போது குழப்பம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே தூக்கத்தை தியாகம் செய்வதைத் தவிர்த்து தேவையான அளவு தூங்குவதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

தேர்வு நேரத்தில் அதிக நேரம் ஓய்வெடுக்க பலருக்கு நேரம் இருக்காது. எனவே சிறிது நேரம் ஓய்வெடுத்து , பெரிய அளவில் புத்துணர்வு பெற சில பயிற்சிகளை பழகிக் கொள்ளலாம்.

மூச்சு விடுதல் பயிற்சி:

மூச்சு விடுதல் பயிற்சி என்பது அதிக அளவு மூச்சு காற்றை உள்ளிழுத்து அந்த மூச்சுக் காற்றை வெளிவிடும் பயிற்சியா கும். இப்பயிற்சியை செய்ய விரும்புபவர் கள் தரையில் துணியை விரித்து அதன் மீது அமர்ந்து கொள்ளுங்கள். இப் பொழுது உங்கள் இரு கண்களையும் இறுக மூடிக் கொள்ளுங்கள்.

உங்கள் வலது பக்க மூக்குத் துவாரத்தை வலது கைப்பெருவிரலால் அழுத்தி மூடிக் கொள்ளுங்கள் . இடது மூக்கின் வழியாக காற்றை மெதுவாக உள்ளிழுத்துக்கொள்ளுங்கள்.பின்புமெதுவாககாற்றைவெளிவிடுங்கள்.

இப்படி 5முறை காற்றை மெதுவாக உள்ளிழுத்து, மெதுவாக வெளி விடுங்கள். அதன்பின்னர் வலது கைப் பெருவிரலை மூக்கிலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் மூக்கின் இடது புறமுள்ள துவாரத்தை இடது கை பெருவிரலால் அழுத்தி மூடிக் கொள்ளுங்கள். வலதுபுறமுள்ள மூக்குத் துவாரத்தின் வழியாக மெதுவாக காற்றை உள்ளே இழுங்கள். சிறிது நேரம் கழித்து உள்ளிழுத்த காற்றை மெதுவாக வெளியே விடுங்கள். இப்படி வலது மூக்குத்துவாரத்தின் வழியாக 5முறை காற்றை உள்ளே, இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.

அதன் பின்னர் இடது கை பெருவிரலை மூக்கிலிருந்து எடுத்து விடுங் கள். இபபோது மூக்கின் இரண்டு துவாரங்களின் வழியாகவும் மெதுவாக காற்றை உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள். பின்னர் உள்ளிழுத்த காற்றை மூக்கின் இரண்டு துவாரத்தின் வழியே வெளியேற்றுங்கள்.

இப்படி திரும்பத் திரும்ப சுமார் 5முறை இந்தப் பயிற்சியைச் செய்ய லாம். இந்த பயிற்சியை செய்வதன்மூலம் ரத்தத்திற்கு தேவையான அதிக ஆக்ஸிஜன் கிடைக்கும். இதனால் மனஅழுத்தம் குறையவும் வாய்ப் புள்ளது.

தோள்பட்டைப் பயிற்சி

தோள்பட்டைப் பயிற்சியைச் செய்ய விரும்புபவர்கள் ஓரிடத்தில் வசதி யாக அமர்ந்துக் கொள்ளுங்கள். உங்கள் தோள்ப் பட்டையை மேலும் கீழும் மூன்றுஅல்லது நான்குமுறை அசைத்துக் கொள்ளுங்கள். அதே போல் தோள்பட்டையை முன்னும், பின்னும் அசைத்து வாருங்கள். இப்படி நான்குஅல்லது ஐந்து முறை செய்து பாருங்கள்.அதன் பின்னர் திடீரென தோள் பட்டையின் நுனிப்பகுதி காதைத்தொடுகின்ற அள விற்கு தோள்பட்டையை உயர்த்துங்கள். அதேபோல் திடீரென உயர்த்திய தோள்பட்டையைத் தளர்த்திக்கொள்ளுங்கள். இப்படிநான்கு முறை செய்வதன்மூலம் களைப்பு கரைந்து போய் விடுகிறது. உற்சாகம் ஊற்றெடுக் கிறது.

கழுத்தை அசைக்கும் பயிற்சி

கழுத்தை அசைக்கும் பயிற்சியைச் செய்ய விரும்புபவர்கள் முதலில் இரண்டு பக்கமுள்ëள தோள்ப்பட்டைகளைத் தளர்த்திக் கொள்ளுங்கள் தலையை இடது புற தோள்பட்டை பக்கமாக சாய்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் இடதுகாதுமடல், இடது தோள்ப் பட்டையை தொடு மாறு வைத்துக்கொள்ளுங்கள்.


இனி மெதுவாக மூச்சை உள் இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள். இப்படி நான்கு முறை செய்த பின்பு தலையை வலதுபுறமாக சரித்து வலது காதின் மடல் வலது கை தோள்ப் பட்டையை தொடுமாறு செய்யுங்கள். இப்போது மெதுவாக காற்றை உள்ளிழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

இந்தப் பயிற்சி செய்யும் போது எந்த பக்கம் தலையை சாய்க்கிறோமோ அந்த கையின் விரல்கள் தலையின் உச்சியைத் தொடும்படி பார்த்துக் கொண்டால் பயிற்சியின் பலன் அதிகரிக்கும். இதன் மூலம் களைப்புநீங்கும். புத்துணர்ச்சியும் பெறலாம்.

முன்பக்கம் வளையும் பயிற்சி:

முன்பக்கம் வளையும் பயிற்சி மிக வும் எளிதான பயிற்சியாகும்.இந்தப்பயிற்சியை செய்ய விரும்புபவர்கள் முதலில் ஒரு நாற்காலியில் பின்பக்கமாக சாய்ந்து, நிமிர்ந்து உட்காந்து கொள்ளுங் கள்.பின்னர் நன்கு மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள். உங்கள் இரு கைகளையும் பின்பக்கம் கொண்டு வாருங்கள் . உங்கள் இடது கைவிரல்களினால் வலதுகையைப் பிடித்து கொள் ளுங்கள்.

முன்பு உள்ளிழுத்து வைத்துள்ள மூச்சுக் காற்றைமுன்பக்கமாக சாய்ந்து கொண்டு மெதுவாக வெளியே விடுங்கள்

இப்படி நான்கு அல்லது ஐந்து முறை தொடர்ந்து செய்து வாருங்கள். பின்னர். பின்பக்கமாக இருந்த கைகளை முன்பக்கமாக மெதுவாக கொண்டு வந்து பயிற்சியை நிறைவு செய்யலாம்.

பாடங்களை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது ஏற்படுகின்ற களைப்பை உடனே போக்கிக்கொள்ள இந்த பயிற்சி உதவும். பதட்டத்தையும் நீக்கும்.

அமர்ந்து திரும்பும் பயிற்சி

இந்தபயிற்சியை செய்ய விரும்புபவர்கள் முதலில் ஒரு நாற்காலில் உட்காந்து கொள்ளுங்கள். பின்னர் இடது கையால் உங்கள் வலது காலின் விரல் நகங்களைத் தொடுங்கள். இடது கை வலது கையின் விரல்களைத் தொட்டு கொண்டிருக்கும் போதே, உங்கள் வலது கையை நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியின் பின்பக்கமாக கொண்டு வாருங்கள். இப்போது மூச்சுக் காற்றை நன்கு உள்ளே இழுத்து கொள்ளுங்கள். சிறிது நேரம் அதே நிலையில் இருந்து கொண்டு வலது புறமாக திருப்புங்கள்.

பின்னர் உள்ளே இழுத்த காற்றை வெளியே விடுங்கள் இப்படி தொடர்ந்து மூன்று அல்லது நான்கு முறை காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். அதன் பின்புதொடக்கநிலைக்கு வாருங்கள்.

இப்போது வலது கையால் இடது கால் விரல்களை தொடுங்கள்.இடது கையை நாற்காலிக்குபின்பறம் கொண்டு வாருங்கள். மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியே விடுங்கள். அதேநிலையில்இருந்து கொண்டு இடது புறமாக திரும்புங்கள். இப்படித் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு முறை காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். மீண்டும் தொடக்க நிலைக்கு வாருங்கள். இந்த பயிற்சி உடலில்ë உற்சாகத்தை அள்ளி தரும் சிறந்த பயிற்சியாகும்.

மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சிகள் யாவும் தேர்வு நேரத்தில் ஏற்படுகின்ற களைப்பை நீக்க பயன்படும் எளிய பயிற்சிகள் ஆகும்.இந்தப் பயிற்சிகள் ஒவ்வொன்றும் சுமார் 5 நிமிடத்திற்குள் செய்து முடிக்க கூடிய பயிற்சிகள் என் பதால் தேர்வுக்கு படிக்கின்ற மாணவர்கள் தவிர படிக்கும்போது ஏற்படுகின்ற சோர்வை போக்க எந்நேரமும் இந்தப் பயிற்சியை செய்யலாம். இந்தப் பயிற்சிகள் பதட்டத்தை குறைக்கவும் பயன்படுவதால் "ஒரே டென்சனாக இருக்கிறது'' என்று குறைப்பட்டுக் கொள்பவர்களும் இந்தப் பயிற்சியை தினமும் செய்து பலன் பெறலாம்.
Read more

17 March 2012

முழுமையாக மனம் இசைந்து படித்தால்... பரீட்சை சுலபமாகும், சுகமாகும்! !100-100 வாங்கித் தரும் பத்துக் கட்டளைகள்

எக்ஸாம் சீஸன் ஸ்டார்ட்ஸ்...

வருடம் முழுக்க விழுந்து விழுந்து படித்தாலும், தேர்வுக் காலத்தை ஒட்டிய இந்த முக்கிய நாட்களில் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்துப் படிப்பதன் பலனை ரிசல்ட்டில் உணரலாம்... மகிழலாம்! ஆனால்... குழப்பம், பதற்றம், கவலை, பயம் என்று அனைத்தும் சேர்ந்து மாணவர்களை சுழற்றியடிப்பதும் இந்த நாட்களில்தான்.


''நன்றாகப் படிப்பவர், சுமாராகப் படிப்பவர், இத்தனை நாளாக நத்தையாக இருந்துவிட்டு, இனிமேல்தான் வேகம் கூட்டப் போகிறவர்... என மாணவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி... குழப்பம், பதற்றம் போக்கும் வழிகளையும், தேர்வுக்கான சரியான பிரிபரேஷன் முறைகளையும் தெரிந்து கொண்டால், நிச்சயம் கணிசமான மதிப்பெண்களைக் கூடுதலாகப் பெறலாம். போட்டிகள் நிறைந்த உலகில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் தங்கமாச்சே!'' அந்த 'தங்க’ சேமிப்புக்கான பத்து வழிமுறைகள்!

1. Day’s Schedule: உணவு, படிப்பு, எழுத்து, தூக்கம் அனைத்துக்குமான நேரத்தை பிரித்து வைத்துக்கொண்டு அதை ஃபாலோ செய்வதுதான் இந்த தினசரி அட்டவணை. இத்தனை நாட்கள் படித்ததில் அறிந்தோ... அறியாமலோ ஒரு அஜாக்கிரதை ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால், கவுன்ட் டவுன் துவங்கிவிட்ட கடைசி கட்டத்தில், ஒவ்வொரு மணித்துளியையும் இப்படி திட்டமிடலுக்குள் கொண்டுவந்து விடுவது, நேரத்தின் இழுபறியால் ஏற்படும் பதற்றத்தை முளையிலேயே கிள்ளியெறியும்.

2. Time Management: நேர நிர்வாகம் என்பது திட்டமிடுதலை தொடர்ந்ததுதான். எது முக்கியம், எது அவசரம் என்ற அலசலுடன் கூடிய இந்த நேர நிர்வாகம்... அமைதியையும், நிதானத்தையும் தரும்.

3. Material Collection: முந்தைய வருடங்களின் வினாத்தாள்களை சேகரித்து ஆராய்ந்து, அவற்றில் அடிக்கடி கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் படிப்பது, நிச்சயம் ஏமாற்றாது.

4. Blue Print: அரசே தயாரித்து வழங்கும் இந்த முதனிலை திட்டப்படிவம், அதிக மதிப்பெண் எடுக்க விரும்புபவர்களுக்கு முக்கியமானது. எந்தப் பாடத்திலிருந்து... எந்த மார்க் கேள்வி எத்தனை வரும் என்ற தெளிவை இந்த 'Blue Print’ தரும்.

5. Model Paper: வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவனின் விடைத்தாள், அல்லது ஆசிரியரின் கோப்பிலிருக்கும் முன்னாள் 'டாப்பரி’ன் விடைத்தாள் போன்றவற்றை பார்வையிட்டு, தன்னைத் திருத்திக் கொள்வதும், மெருகேற்றிக் கொள்வதும் நல்லதொரு வழிமுறை.

6. Self Test: வீட்டிலேயே சில வினாத்தாள்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எழுதிப் பார்க்கும் சுயபரிசோதனை, சிறப்பானதொரு பயிற்சி. அந்த வினாத்தாள்கள் மூன்று ஆண்டுகளுக்கு உள்ளானதாக இருப்பது நல்லது.

7. Presentation: உயிரை உருக்கி படித்தவற்றை எல்லாம் கொடுக்கப்பட்ட நேரம், கேள்விகளின் எண்ணிக்கை, அவற்றுக்கான மதிப்பெண்கள் என்ற வரையறைகளுக்குள் தேர்வுத்தாளில் நிரூபிக்கும் தருணம் இது. தேர்வுக்கான 180 நிமிடங்களில் 170 நிமிடங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்தந்த பகுதியை இத்தனை நிமிடங்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு விஷயங்கள் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். முதலாவது... போதுமான இடம் விடுவது, அடிக்கோடிடுவது, விடைத்தாள் பக்கங்களை மாற்றி, இறுக்கமாக இணைத்துவிடாமல் சரியாகச் செய்வது... போன்றவை (Physical Presentation). இரண்டாவது... விடைத்தாள் திருத்துபவர் எதிர்பார்ப்பதை கேள்விக்கேற்றவாறு சரியாக அனுமானித்து, அதை விடைத்தாளில் தெளிவாக வெளிப்படுத்துவது (Mental Presentation)

8. Paper Analysis: தன்னுடைய விடைத்தாளை தானே அலசி ஆராய்ந்து பகுத்தறியும் மாணவனுக்கு தனது நிறை, குறைகள் தெளிவாகத் தெரிந்துவிடும். தன்னால் எந்த கேள்விகளுக்கு மதிப்பெண் அள்ள முடிகிறது, வழக்கமாக தான் சொதப்பும் பகுதி எது என்ற இந்த பகுப்பாய்வு, பறிபோகும் மதிப்பெண்களை மீட்க உதவும். உதாரணத்துக்கு, ஒரு சிலர் பெரிய வினாக்களுக்கு பர்ஃபெக்ட்டாக விடையளிப்பார்கள். ஆனால், ஒரு மதிப்பெண் வினாக்களில் தடுமாறுவார்கள். ஆக, தாங்கள் கவனம் செலுத்த வேண்டியது ஒரு மதிப்பெண் வினாக்களில்தான் என்ற உண்மை அவர்களுக்கு புரிபட இந்த 'பேப்பர் அனாலிஸிஸ்’ உதவும்.

9. SWOT: Strength (பலம்), Weakness (பலவீனம்), Opportunities (வாய்ப்புகள்), Threat(அச்சுறுத்தல்) இந்த நான்கு ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்தைச் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் இது, தன்னை உணர்வதற்கான நான்கு படிகளைக் குறிக்கிறது. படம் வரைவது, ஈக்குவேஷன் சால்வ் செய்வது என்று தன் பலத்தைப் பொறுத்து கேள்விகளைத் தேர்வு செய்வது, தன்னுடைய பலவீனங்கள் எந்த வகையிலும் விடைத் தாளில் வெளிப்படாதபடி பார்த்துக்கொள்வது, டியூஷன், ஆசிரியர், நண்பர், கைடு என்று தன்னைச் சுற்றி இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது, கவனச் சிதறலுக்கான வாய்ப்புகள், தனது குறைகள் போன்ற அச்சுறுத்தல்களைத் அறிந்து தவிர்ப்பது.

10. Food And Relaxation: தேர்வு சமீபமாகப் பார்த்து, உடலைத் தேற்றுகிறேன் என்று எசகுபிசகாக சாப்பிட்டு முதலுக்கு மோசம் செய்யக்கூடாது. அசைவம், ஆயிலி அயிட்டங்கள், செரிமானத்துக்குத் தொந்தரவானவை போன்றவற்றை பரீட்சை நாட்களில் தவிர்த்துவிட வேண்டும். தினமும் இரவு போதிய உறக்கம் அவசியம். ஆனால், பகலில் தொடர் படிப்பின் இடையே தூக்கமோ, ஓய்வோ தேவை இல்லை. காலாற நடப்பது, சப்ஜெக்ட்டை மாற்றிப் படிப்பது போன்றவை இறுக்கத்தைத் தவிர்க்கும்.

இறுதியாக, ஆசிரியர், பெற்றோர் இவர்களுக் காகவோ... வேலை, சம்பாத்தியம் இவற்றுக்காகவோ வெற்று இயந்திரமாக படிக்க முயற்சிக்காமல்... தனக்காக, தன் மேம்பாட்டுக்காக என்ற அர்ப்பணிப்புடன் முழுமையாக மனம் இசைந்து படித்தால்... பரீட்சை சுலபமாகும், சுகமாகும்!
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner