
29 October 2013
28 October 2013
தேமல் மறைய...
தேமல் மறைய
தேள், பாம்புக் கடிக்கு உடனடி நிவாரணம்
தேள், பாம்புக் கடிக்கு உடனடி நிவாரணம்
பிரமத் தண்டு இலைச் சாறை பத்து மில்லியளவு எடுத்து காலையில் வெறும்
வயிற்றில் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, மேக ரணங்கள்,
குட்டம் குணமாகும். பிரமத்தண்டு இலைச் சாறை தேள் கொட்டிய இடத்தில் தடவ
கடுப்பு நீங்கும். பிரமத்தண்டு இலைச் சாறு 30 மில்லியளவு குடிக்கக்
கொடுத்து கடிவாயில் அரைத்துக் கட்ட பேதியாகி பாம்பு விஷம் இறங்கும். பிரமத்
தண்டு இலையை அரைத்துக் கட்டிவரக் கரப்பான், பேய்ச் சொறி, சிரங்கு,
உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள் குணமாகும். பிரம தண்டு
பூக்களை 20 எடுத்து நீரில் ஊற வைத்து குளித்து வர 50 நாட்களில் கண் நோய்
குணமாகும்.
27 October 2013
வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்
காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து
அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று
விழுங்கிவர வேண்டும்
நிறைய நீர் குடிக்க வேண்டும். உணவைக் குறைத்து பழங்கள் நிறைய
சாப்பிடவேண்டும்.
பத்தியம் ஏதேனும் உண்டா?
வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ
கூடாது.
அல்சர் நோய் குணமாக....
அல்சர் நோய் குணமாக
கற்பூர வாழைக்காயை தோல்சீவாமல் வெட்டி காயவைத்து பொடிசெய்து கொள்ளவும். இது 500 கிராம்,பனங்கற்கண்டு 2 5 கிராம் ஏலக்காய் பொடி 10 கிராம் சேர்த்து அரை ஸ்பூன் வீதம் காலை,மாலை சாப்பிட்டு வந்தால் அல்சர் நோய் குணமாகி விடும்.பொடுகு நீங்க என்ன செய்யலாம்?
துளசி பொடி, வேப்பிலை பொடி இரண்டையும் சுடு நீரில் குழைத்து, தலையில்
தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து குளிக்கவும். நாளடைவில் பொடுகு மறைந்து
விடும்.
26 October 2013
24 October 2013
மூட்டுக்கு கீழ வலி
'என்னோட பேரன் இவன்... என்னமோ கை காலெல்லாம் நடுங்குதுங்குறான்...
படிச்சதெல்லாம் மறந்து போகுதுங்குறான்... விளையாடிட்டு வந்தா மூட்டுக்கு
கீழ வலிக்குதுங்குறான்... என்னென்னே தெரியல.... நல்லாத்தாம்ல இருந்தான்...
திடீர்னு இப்பிடிச் சொல்றான்...
சீரகம் - 5 கிராம்
சோம்பு - 5 கிராம்
ஏலம் - 2
மணத்தக்காளி விதை - 5 கிராம்
கீழாநெல்லி - 5 கிராம்
வெள்ளை கரிசலாங்கண்ணி - 5 கிராம்
ஆரைக்கீரை - 5 கிராம்
கொத்தமல்லி - 5 கிராம்
கறிவேப்பிலை - 5 கிராம்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 2 பல்
சின்ன வெங்காயம் - 4
மிளகு - 4
இது எல்லாத்தையும் எடுத்து 2 கொவள தண்ணி விட்டு 1 கொவள தண்ணியா வத்தற
வரைக்கும் நல்லா கொதிக்க வச்சி சூப் மாதிரி சாப்பிடச் சொல்லு.
இப்பிடி வாரத்துல மூணு நாளைக்கி காலைல இல்லாட்டி சாயங்காலம் ஒரு வேள
மட்டும் குடிச்சிட்டு வந்தா சீக்கிரம் குணமாயிடுவான்...'
சக்கர நோய் பாதிப்பால வர்ற கை கால் பாதிப்பு சரியாகும்....
கடுக்காய் விதை நீக்கியது- 5 கிராம்
நெல்லிக்காய் - 5 கிராம்
தான்றிக்காய் - 5 கிராம்
பொன் ஆவாரை
(பூ, இலை, பட்டை) - 5 கிராம்
இலவங்கப் பட்டை - 5 கிராம்
நாவல் பழக் கொட்டை - 5 கிராம்
மாம் பருப்பு காய்ந்தது - 5 கிராம்
புளியங் கொட்டை
வறுத்த தோடு - 5 கிராம்
கருவேப்பிலை காய்ந்தது-10 கிராம்
எடுத்து இடித்து பொடித்து காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிடணும்..
அல்லது 2 தேக்கரண்டி அளவு 1 குவளை தண்ணீரில் கொதிக்க வெச்சி வடிகட்டி
கஷாயமாதிரி சாப்பிட்டு வந்தா சக்கர நோய் பாதிப்பால வர்ற கை கால் பாதிப்பு
சரியாகும் வே...
இது சித்தருங்க ளோடு அனுபவ மருந்து... ஆச்சரியம் 1500 ங்குற ஏட்டுல
இதப்பத்தி எழுதியிருக்கு..
சிக்குன் குன்யா காய்ச்சல்...
'அதிமதுரம், நற்சீரகம், சடமாஞ்சி, சாரணை வேர், தோல் நீக்கிய வில்வ வேர்,
முடக்கத்தான், நிலவேம்பு, குருந்தொட்டி சமூலம், நல்ல மிளகு, துளசி,
தூதுவளை, ஆடாதோடை இது எல்லாத்துலயும் வகைக்கு 5 கிராம் எடுத்து நல்லா
இடிச்சி பொடியாக்கி அதோட தண்ணி சேத்து மூணுல ஒரு பங்கா வத்துற வரை
கொதிக்க வையி...'
'இந்த கஷாயத்த வடிகட்டி மூணு வேளையும் சாப்பிட்டு வர... எல்லாம்
சரியாப்போகும்'
21 October 2013
இரத்த விருத்திற்கு கைகொடுக்கும் உலர்ந்த திராட்சை
இரத்த விருத்திற்கு கைகொடுக்கும் உலர்ந்த திராட்சை
திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். ஆரம்ப காலத்தில் அயல் நாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த தால் இதற்கு கிசுமுசுப் பழம் எனப் பெயரிட்டனர்.!
பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயா சம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதில் விற்றமின் பிபிபீ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.!
குழந்தைகள் வளர்ச்சிக்கு வளரும் குழந்தைகளுக்கு ஏற்றபழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கல்சியம்தான். கல்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கிய மாகவும், பலமாகவும் இருப்பார்கள்.!
இரத்த விருத்திக்கு எலும்பு மச்சைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மச்சைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.!
உடல் வலி குணமாக பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.!
பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சினை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படு கிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கஷாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும். மலச்சிக்கல் தீரமலச்சிக்கலே நோய்கள் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு காலம் நோயின்றி வாழலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் ஜீரண உறுப்புகள் வலு விழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சினை தீராது. இதனால் மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி என பல உபாதைகள் உருவாகின்றன.!
இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும்.குடற்புண் ஆறஅஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவறை புண்ணாக்கி விடுகின்றன.!
இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்க வைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடற் புண்கள் குணமாகும்.இதயத் துடிப்பு சீராகசிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதற்றத்துடனே காணப்படுவார் கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும். சுகமான நித்திரைக்கு தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும். தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்ஆண்மை வலுப்பெற !
அரசம்பழத்தை பாலில்போட்டு காச்சி வெல்லத்துடன் தினம் பருகிவந்தால் ஆண்மை வலுப்பெறும், தழற்சிநீங்கும்.. ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில்கலந்து குடித்தாலும் தழற்சிநீங்கும். செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து வென்சூட்டில் சர்க்கரைசேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும். பேரீச்சம்பழம்,உழுந்து இவைகளை தேனுடன்சேர்த்துஅருந்தினால்தழர்வு நீங்கும்.. இலுப்பைப்பூகஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்துவரின் ஆண்மை வலுப்பெறும்.
அஜீரணசக்திக்கு
அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.
அம்மைநோய் வேகத்தை தணிக்க!
அம்மைநோய் வேகத்தை தணிக்க!
பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.
அம்மைநோய் தடுக்க!
அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.
பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.
அம்மைநோய் தடுக்க!
அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.
20 October 2013
பெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க...
தேவையற்ற ரோமம் போக குப்பைமேனி, வேப்பிலை, விரலிமஞ்சள் மூன்றையும் அரைத்து
தேவையற்ற ரோமத்தின் மீது பூச உதிர்ந்து விடும்.
பெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க குப்பைமேனி இலை, வேப்பங்
கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் அரைத்து இரவில் படுக்கைக்கு
செல்லும்முன் முகத்தில் தடவி வந்தால் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்துவிடும்.
இன்றைய காலகட்டத்தில் பத்து வயதிலேயே பெண் குழந்தைகள் அபார வளர்ச்சி
அடைகின்றனர். இதனால், உடலில் அநாவசிய ரோமங்கள் அதிகமாகி விடலாம். இந்த
ரோமங்களை நீக்குவதோடு, மேலும் வளரவிடாமல் தடுக்க, விசேஷமான ஒரு குளியல்
பவுடர்-.
பயத்தம் பருப்பு அரை கிலோ,
சம்பங்கி விதை 50 கிராம்,
செண்பகப்பூ 50 கிராம்,
பொன் ஆவாரம் பூ 50 கிராம்,
கோரைக்கிழங்கு 100 கிராம்.
இவற்றை பவுடர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும், குளிக்கும் போது
இந்தப் பவுடரை குழைத்துப் பூசுங்கள். மெழுகு போல் சருமம் மிளிரும்.
என் வயது 21. நான் நல்ல நிறமாக இருப்பேன். என் முகத்தில் உதடுகளுக்கு மேல்
ரோம வளர்ச்சி அதிகமிருக்கிறது. பார்ப்பவர்கள் எல்லாம் கிண்டல்
செய்கிறார்கள். மஞ்சள் உபயோகித்தும் பலனில்லை. வேறு என்ன தீர்வு?
மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஹார்மோன்
கோளாறுகள் இருந்தாலும் இப்படி ரோம வளர்ச்சி இருக்கும். ஒரு வெற்றிலை, ஐந்து
மிளகு, மூன்று பற்கள் பூண்டு சேர்த்து வாரம் ஒரு முறை வெறும் வயிற்றில்
காலையில் சாப்பிட்டு வரவும். இது உங்கள் மாத விலக்கு சுழற்சியைம்
சரியாக்கும். ரோம வளர்ச்சியையும் குறைக்கும். சிலருக்குத் திருமணத்துக்கு
முன்பு வரை இருக்கிற ரோம வளர்ச்சி, திருமணத்துக்குப் பிறகு உடலில் நிகழ்கிற
ஹார் மோன் மாறுதல்களால் குறையும். உங்களுக்கும் அப்படி நடக்கலாம். பயத்தம்
பருப்பு மற்றும் கஸ்தூரி மஞ்சளை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
சாதாரண மஞ்சள் மாதிரி இல்லாமல் மரத் துண்டு மாதிரி இருக்கும்) அரைத்து
முகத்தில் தடவி, சிறிது நேரம் காய விட்டுக் கழுவவும். வாரம் மூன்று முறைகள்
இப்படிச் செய்யவும். மீதி நாட்களில் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சம் சாறு
கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில்
கழுவவும். கூடவே திரெடிங் செய்து வரலாம். இவையெல்லாம் ரோம வளர்ச்சியைப்
படிப் படியாகக் கட்டுப்படுத்தும். கவலை வேண்டாம்.
18 October 2013
பொடுகை அகற்ற ...
பொடுகு தொல்லை பலருக்கு பெரிய பிரச்னையாக உள்ளது.
தலையின் சருமம் வறண்டு
போகவோ, எண்ணெய் வடியவோ விடுவதால் தலைமுடிகள் வறண்டு போவதோடு, பொடுகு
வரவும் வாய்ப்புண்டு.இது குளிர் காலங்களில் அதிகமாகிறது. இதனால் தலையில்
அரிப்பும் ஏற்படலாம்.
பொடுகு வராமலிருக்க அல்லது பொடுகை அகற்ற சில எளிய முறைகளை கீழே கொடுத்துள்ளோம்.
காரணங்கள் : ஜெல் , ஸ்ப்ரே, ஷாம்பூ ஆகியவை அதிகமாக உபயோகிப்பது.
பர்மிங், கலரிங் ஆகியவற்றாலும் பொடுகு வரலாம். அடிக்கடி நீண்ட நேரத்திற்கு ஹேர் ட்ரையர் உபயோகிப்பது.
கவலை, டென்ஷன் அதிகமானால் ஷாம்பூ போட்ட பிறகு சரியாக முடியை அலசாமல் இருப்பது.
நிவாரணங்கள் :
ஆன்டி செப்டிக் தன்மை
நிரம்பிய மூலிகைகளால் உருவான ஆயுர்வேத எண்ணெயை (அதில் வேப்பிலை, வெந்தயம்,
துளசி ஆகியவை கலந்தது) முடியின் வேரில் மென்மையாக அழுத்தித் தடவவும்.
அதே ஆன்டிசெப்டிக் எண்ணெயை முழுத் தலையிலும் சீராகத் தடவவும்.
வென்னீரில் டவலை ஊற வைத்து, பிறகு நீரைப் பிழிந்து விடவும். சீராக நீராவி முடிகளுக்குள் செல்லுமாறு அந்த டவலை தலையில் கட்டவும்.
5 லிருந்து 10 நிமிடம் வரை அதை உலர விடவும்.
பொடுகு அகற்றுவதற்காக விசேஷமாக தயாரிக்கப்படும் ஒரு கலவை :
ஒரு கப் மருதாணியில்
நெல்லிக்காய், சீயக்காய், ஒரு தேக்கரண்டி, வெந்தயம், வேப்பிலை, துளசி அரை
தேக்கரண்டி எல்லாவற்றையும் பொடியாக கலக்கவும், எல்லாவற்றையும் தயிரில்
கலந்து அல்லது பாதி எலுமிச்சை துண்டின் சாறுடன் கலந்து ஒரு கலவையை தயார்
செய்து கொள்ளவும். இதை தலை முழுக்கத் தடவி ஒரு மணி நேரம் வரை
வைத்திருக்கவும். இப்பொழுது இந்த ஆயுர்வேத ஷாம்புவால் தலையை கழுவிக்
கொள்ளவும். இதை வாரத்திற்கு ஒரு முறை என 3 மாதங்கள் வரை தடவவும். இதனால்
நிச்சயமாக பொடுகு விலகும். இதற்குப் பிறகும் தலையில் பொடுகு ஏற்பட்டால்
உங்கள் உடல் கோளாறுதான் இதற்குக் காரணம். எனவே உங்கள் மருத்துவரை கலந்து
ஆலோசிக்கவும்.
நலமும் அழகும் சில குறிப்புகள்
பற்கள் பளபளப்பாக இருக்க எலுமிச்சை சாற்றுடன் உப்பு கலந்து பிரஷ் செய்யவும்.-
குளிப்பதற்கு முன்பு மஞ்சள்
பொடியையும் நல்லெண்ணையையும் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் காயவிடவும்.
அதன்பிறகு வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தை கழுவவும். முகம் பளபளக்கும்.-
உங்கள் கூந்தல் பளபளப்பாகவும், கறுமையாகவும் இருக்க உங்கள் உணவில் எலுமிச்சை சாற்றை சேர்த்துக் கொள்ளவும்.-
வாரம் 5 முறையாவது தவராமல்
செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது, எடை குறைகிறது, பல
நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.
உதடுகளின் வடிவத்தை லிப்
லைனரைக் கொண்டு வரைந்து, அதன் பிறகு அதற்குள் லிப்ஸ்டிக்கால் நிறத்தை
நிறப்புவது நல்லது. லிப்ஸ்டிக் உதட்டைவிட்டு வெளியே பரவுவதை இது
தடுக்கும்.
ஆரஞ்சு ஜூஸ் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக பொலிவுடன் தோன்றும்.
கசகசா ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம்.
பப்பாளி ஜூஸ் தடவினால், வியற்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்.
கொத்துமல்லி இலையை அரைத்து
பூசினால் முகம் வசீகரமாக மாறும்.மேனகா - நாமக்கல்எல்லா வித பழங்களும்
முகத்திற்கு நல்லது. அவற்றை மசித்து முகத்தில் பூசினால் முகம் உடனுக்குடன்
சுத்தமடைந்து பளபளப்பாய் காட்சி தரும்.
தக்காளி சாறு : சருமத்தை மிருதுவாக்கி ஒளிரச் செய்யும்.
பப்பாளி : முகத்தில் சுருக்கம் விழுவதையும் தற்காலிகமாக ஒத்திப்போடும்.
சிட்ரஸ் பழங்கள் : ப்ளீச்சிங் ஏஜெண்ட் . சருமத்தின் எண்ணெய் பசையை கட்டப்படுத்துகின்றன.
உருளை : கண்களுக்கு அடியில் வீக்கம் இருந்தால் உருளை துண்டுகளை கண்ணுக்கடியில் வைக்கவும். வீக்கம் குறையும்.எம். அருள் வாணி
உங்கள் முடி சுருட்டையானதாக
இருந்தால் சீப்பு உபயோகிப்பதை தவிர்க்கவும். சீப்பு உபயோகித்தால் நீங்கள்
விரும்பும் வகையில் முடியை `ஸ்டைல்‘ செய்ய முடியாது.
குளித்தவுடன் புருவத்தை ஷேப்
செய்தால் வலி தெரியாது. அல்லது வெந்நீரில் பஞ்சை நனைத்து, புருவத்தின்
மேல் தடவிய பிறகும் ஷேப் செய்யலாம்.
"ப்ளஷ்" (Blush ) எங்கே தடவ வேண்டும் என்று சந்தேகம் இருந்தால், அதை சுலபமாக தீர்க்கலாம். 1/2 மணி நேரம் உடற்பயிற்சி செய்த பிறகு முகத்தை கண்ணாடியில் பார்க்கவும். கன்னங்களில் சிவந்திருக்கும் இடத்தில் தான் `ப்ளஷ்‘ தடவ வேண்டும்!
மேலே பார்த்தவாறு ஒரு
விரலால் உங்கள் புருவத்தை மேல் நோக்கி தள்ளவும். அதன் பிறகு கீழே
பார்த்தவாறு மேல் கண் இமையில் மஸ்காரா தடவவும்.
உங்கள் புருவங்களை குளித்த
பிறகு ஷேப் செய்யவும். இல்லையென்றால் வெந்நீரில் நனைத்த துணியை
புருவத்தின் மேல் சில நிமிடங்கள் வைக்கவும். இது வலியை குறைத்து
புருவத்திலுள்ள முடிகளை எடுப்பதை சுலபமாக்கும்.
தலை முடியை ஷாம்பு போட்டு
கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு மக் நீரில் கலக்கி அதைக் கொண்டு
தலையை ஒரு முறை கழுவுங்கள், உங்கள் தலை முடி மிருதுவாகவும், பட்டுப்
போன்றும், பளபளப்பாகவும் இருக்கும்.
காதில் போடும் கம்மல்,
மூக்குத்தி ஆகியவற்றால் காது அல்லது மூக்கு துளைகளில் புண் ஏற்படுகிறதா?
கவலை வேண்டாம். பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து அந்தத் தண்ணீரைக் கொண்டு
புண்களைக் கழுவினால், புண் விரைவில் குணமாகும்.
கணினியில் பணிபுரிபவர்களுக்கு -- கணிணிக்குறிப்புக்கள்
கணினியில் பணிபுரிபவர்களுக்கு
17 October 2013
உடலில் பூனை முடிகள் உதிரும்
மஞ்சள் இலை மற்றும்
குப்பைமேனி இலை இரண்டையும் அரைத்து குளித்த பிறகு உடலில் பூசிக் கழுவுவதை
தினமும் செய்தால் பூனை முடிகள் உதிரும்.
அடர்த்தியான தலைமுடி வேண்டுமா?
அடர்த்தியான தலைமுடிக்கு
அடர்த்தியான தலைமுடி வேண்டுமா?!!
1.வாரம் ஒருமுரை தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்க்கு முன்பாக,தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி,massage செய்யவும்.பின்பு சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.
2.தலையில் முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து,
அதனை தலைக்கு தடவி பின் 30நிமிடம் கழித்து அதேபோல் கழுவவும்.
3.ஒவ்வொரு வாரமும்,தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவே தலையில் தேங்காய் எண்ணையையும் ஆலிவ் எண்ணையையும் தடவி massage செய்து கொள்ளவும்.
(கண்டிப்பாக ஒரு மாதமாவது தொடர்ந்து செய்யவெண்டும்.
பலன் கிடைக்கும்!!!!!!!!!!!!)
முக அழகுக்குறிப்புகள் !
அழகுக்குறிப்பு
வரண்ட சருமத்திற்க்கு
தினமும் இரவில்,கைகள் கால்கள் பாதங்கள் போன்ற இடங்களில்,
ஆலிவ் எண்ணையை தடவி வர, வரண்ட சருமம்-பட்டு போல் மாறி விடும்!!!!
சுருக்கங்களை போக்க
முட்டையின் வெள்ளையை தேன் கலந்து,முகத்தில் தடவி,பின் 15நிமிடம் கழித்து கழுவிவிடவும்.
வழ வழ முகத்திற்க்கு
பழுத்த வாழை பழத்தைப் பாலோடு கலந்து,பிசைந்து,முகம் கழுத்து கைகள்ளில் தடவி, 30நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
ப்ரகாசமான முகத்திற்க்கு
ஆரஞ்சு பழத்தோல் பொடியை,தயிரில் கலந்து முகம்,கழுது பகுதிகளில் தடவிவர, பளிச்சென ப்ரகாசமாய் சிவப்பழகுடன் மாறி விடும் முகம்!
முக்கியமான அழகுக்குறிப்பு
எப்போதும் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருங்கள்!!!
அந்த ஒரு சிரிப்பே நம்மை உலக அழகியாக்கிவிடும்!!!
முக பருவை போக்க..
அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம். ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும்
இதை தடுக்க...
1 டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை 1 டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறிய பிறகு மிருதுவாக துடைக்கவும்.
பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும்.
எருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும்.
பயத்த மாவு, கடலை மாவு, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் அலசவும்
முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
பார்த்து படித்துவிட்டு அப்படியே போய்விடாதீர்கள்! பதில் அனுப்புங்கள்.!
பெண்கள் சிவப்பழகை பெற...
பெண்கள் சிவப்பழகை பெற
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1, உலர்ந்த திராட்சை பழம்-10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்!இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.
பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள்.
20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.கறுகறு கூந்தல் வேண்டுமா?
சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள்.
சின்ன சின்ன அழகு குறிப்புகள்
கண்களுக்கு கீழே பை தொங்குகிறதா? கடுகைப் பொடி செய்து சலித்து அதை தேங்காய் எண்ணெயில் குழைத்து கண்களுக்கு கீழே தடவுங்கள்.
கடுகு எண்ணெய் 6 சொட்டுகள்
எடுத்து சூடாக்கி அதை அரிப்பு, தோல் உதிரும் இடங்களில் தடவி மசாஜ்
செய்தால் அரிப்பு பறந்துவிடும். ஒரு வாரம் வரை கூட இதனை செய்யலாம்.
கறுத்த முகத்தை ஜொலிக்க வைக்க கொஞ்சம் கடுகு கொஞ்சம் பயத்தம்பருப்பை தயிரில் கலந்து ஊறவைத்து அரைத்து முகத்தில் தடவி வரலாம்.
முட்டிப் பகுதிகளின் கருமையைப் போக்க சிறிதளவு கடுகை நீரில் ஊறவைத்து குழைத்து தடவி வரவும்.
கர்ப்பகால வயிற்று வரிகளை ஒழிக்க சூடான கடுகு எண்ணெயுடன் வெண்ணெயை கலந்து தினமும் வயிற்றில் தடவி வரவும்.
எலும்புகள் உறுதிபட கடுகு எண்ணெயை சூடாக்கி உடல் முழுதும் தடவி கடலை மாவு தேய்த்து குளிக்கவும்.
கடுகு எண்ணெயை சூடாக்கி பாதம் முழுக்க தடவவும், பிறகு இளஞ்சூட்டு நீரில் கால்களை வைத்திருந்தால் வெடிப்புகள் மறையும்.
தலை முடிக்கு ஷாம்பூ
வேண்டாம்! கடுகு 100, சீயக்காய் ஒரு கிலோ, துவரை 100 கிராம், வெந்தயம் அரை
கிலோ அரைத்துப் பொடி செய்து கொண்டு தலைக்கு பயன்படுத்தவும். தலை முடி
நிலைக்கும்.
மஞ்சளும் அழகு குறிப்பும்
மஞ்சளை அதன் இலையோடு சேர்த்து பாசிப்பயிறு மாவோடு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் சுருக்கம் நீங்கும்.
மஞ்சள் இலை மற்றும்
குப்பைமேனி இலை இரண்டையும் அரைத்து குளித்த பிறகு உடலில் பூசிக்
கழுவுவதை தினமும் செய்தால் பூனை முடிகள் உதிரும்.
கழுத்து, கணுக்கால்களில் கருமையைப் போக்க மஞ்சள் தூளை தயிரில் கலந்து தடவி வரவும்.
மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூசி பிறகு குளிர் நீரில் கழுவினால் முகப்பருவில் சீழ் பிடிக்காது.
முகத்தோல் சொரசொரப்பாக இருந்தால் மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி வரவும்.
மஞ்சள் கிழங்கு ஒன்றுடன் ஒரு எலுமிச்சை இலையை சேர்த்தரைத்துப் பூசினால் முகம் பளிச்சென்று மாறும்.
மஞ்சளை அரைத்துப் பூசத் தேவையில்லை, மஞ்சள் கலந்த நீராவி கூட அழகை கூட்டும்.
குண்டு மஞ்சள் கிழங்கு, கெட்டிக் கிழங்கு முக அழகை கூட்டி அதிக நிறம் கொடுக்கும்.
பாதவெடிப்பிற்கு குண்டு மஞ்சள் கிழங்கை அரைத்துப் பூசி வந்தால் போதும்.