Ads Header

Pages


Showing posts with label அமுத மொழிகள். Show all posts
Showing posts with label அமுத மொழிகள். Show all posts

23 August 2012

ஒரு கடிதமும் சில கேள்விகளும்...மகனின் வளர்ச்சியில் அக்கறை

ரு கடிதமும் சில கேள்விகளும்...

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், தன் மகனின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு அவனது ஆசிரியருக்கு எழுதிய கடிதம் உலக பிரசித்தி பெற்றது.

"ஏமாற்றுவதைவிட தோற்பது எவ்வளவோ பெருமையானது என்பதை என் மகனுக்கு கற்றுத் தாருங்கள். எல்லோருமே தவறு என்று கூறினாலும் தன் சொந்தக் கருத்துக்களில் நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுத் தாருங்கள். கண்ணீர் விடுவதில் அவமானமில்லை என்றும், சிடுமூஞ்சிகளை அலட்சியப்படுத்தவும், இனிமையாக பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு கற்றுத் தாருங்கள்.

பொறுமையின்றி இருக்கும் துணிச்சலும், துணிவோடு இருக்கும் பொறுமையும் அவனுக்கு வேண்டும். தன்னிடம் நம்பிக்கை வைப்பதை கற்றுக் கொடுங்கள். ஏனெனில் அப்போது தான் மனித சமுதாயத்தில் அவன் உன்னத நம்பிக்கை வைப்பான்.''

இது லிங்கன், கடிதத்தின் முக்கியமான பகுதி மட்டுமே.

உங்கள் குழந்தையும் எல்லா வகையிலும், எல்லா நிலையிலும் வளர்ச்சி பெற விரும்புவீர்களானால், குழந்தைகளை சரிசெய்வதைவிட- பெற்றோர்களாகிய உங்களை நீங்களே சீர்படுத்திக்கொள்வது அவசியம்.

அதற்காக இந்த கேள்விகளைப் படியுங்கள்...

* வேறு வேலையாக இருக்கும்போது உங்கள் குழந்தைகள் விளையாட அழைத்தால் செல்வீர்களா?

* குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் உடையை அணிய விடுவீர்களா?

* குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டதை உணர்ந்தால் மன்னிப்பு கேட்பீர்களா?

* இந்த டி.வி. சேனல்தான் பார்க்க வேண்டும், இவ்வளவு நேரம்தான் டி.வி. பார்க்க அனுமதி என்ற கட்டாயம் உண்டா?

* வீட்டுப்பாடத்தை குழந்தை முடிக்கவில்லையென்றால் நான் அதை செய்து கொடுக்க மாட்டேன். பள்ளியில் அதற்கான தண்டனையை பெறட்டும், அப்படியென்றால்தான் அடுத்த முறை தவறு நடக்காது என்று விட்டுவிடுவீர்களா?

* ஒழுக்கமாக வளர வேண்டும் என்பதற்காக, நான் குழந்தையை கண்டிக்கிறேன் என்கிறீர்களா?

* குழந்தைகள் கேட்பதை வாங்கி கொடுக்க மாட்டேன். அடம்பிடிக்கும்போது அன்பாய் நடந்து கொள்ள என்னால் முடியவில்லை?

* ஆசிரியர் உள்பட மற்றவர் மீது குழந்தை புகார் கூறினால் அதில் கவனம் எடுத்துக் கொள்கிறேன்?

* குழந்தை வளர்ந்ததும் அவன் தேர்ந்தெடுக்க விரும்பும் பாடத்தை சொல்கிறான். ஆனால் அது அவனுக்கு சரிப்படாது என்றோ, தேவையில்லை என்றோ கருதுகிறேன். இருந்தாலும் அவன் இஷ்டப்படி படிக்க வைப்பேன்?

இந்த கேள்விகளில் குறைந்தபட்சம் 7 கேள்விகளுக்காவது `ஆம்' என்ற பதில் வந்திருந்தால் நீங்கள் நல்ல பெற்றோர். இல்லாவிட்டால் உங்களையே நீங்கள் ஆத்ம பரிசோதனை செய்து சரிசெய்துகொள்ளவேண்டும். நல்ல பெற்றோரால்தான் குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்க முடியும்.
Read more

13 August 2012

33 பொக்கிஷங்கள்!

" 1. பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை! 15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!
16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!
22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது!
Read more

21 July 2012

கணவரை மகிழ்விப்பது எப்படி?

கணவரை மகிழ்விப்பது எப்படி?
(அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில் - ஒவ்வொரு பெண்மணியும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்)

நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

மனைவியின் அழகிய வரவேற்பு

• பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள்.

• முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.

• உங்களை அழகுபடுத்தி, உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்ளுங்கள்.

• சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும் வரை பிற்படுத்தி வையுங்கள்.

• அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள் (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).

• கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள் (கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்).

இனிய குரலும் தேவையான கனிவும்

• உங்கள் கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாக பேசுங்கள். மேலும் மஹரம் இல்லாத ஆண்களுக்கு முன்னால் இவ்வாறு குழைந்து பேசக் கூடாது என்பதை மறந்துவிடவேண்டாம்.
• உங்கள் கணவரிடத்தில் உம்!! இல்லை!! என்று சொல்லி அவரின் பேச்சை உதாசீனப்படுத்தாதீர்கள்.

நறுமணமும் அலங்கரிப்பும்

• உடலை அழகு-ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிரத்தையுடன் முயற்சி செய்யுங்கள். (வீட்டு வேலைகளை வேலைக்காரியோ அல்லது இயந்திரங்களின் உதவியோ இன்றி நாமே செய்ய முயற்சி செய்யவேண்டும். இதனால் உடல் ஆரோக்கியத்தையும் உடல் அழகையும் பேணுவதோடு பணச்செலவையும் குறைக்கலாம்)

• உங்கள் கணவருக்கு அருகில் (மட்டும்) மெல்லிய ஆடைகளைப் பயன்படுத்துங்கள்.
• தினமும் குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் சுத்தமாக வைத்துக்கொள்ளுவதில் அதிகமாக அக்கறைச் செலுத்துங்கள்.

• வீட்டிற்கு கணவன் வருவதற்கு முன்னால் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். (அழுக்கான ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந்திருக்கும் நிலையில் உங்கள் கணவரிடம் செல்லாதீர்கள்)

• தடுக்கப்பட்ட முறையில் அதாவது ஹராமான முறையில் அலங்கரித்துக் கொள்ளக்கூடாது. (உதாரணமாக புருவத்தை வழித்துக் கொள்ளுதல், ஒட்டுமுடி வைத்துக் கொள்ளுதல்)

• கணவனுக்கு பிடித்தமான வாசனைத் திரவியம், கலர் துணிவகைகள் ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.

• முடி அலங்காரம், வாசனைத் திரவியங்கள், உடையின் வண்ணம் மற்றும் மாடல் ஆகியவற்றை கணவன் ரசிக்கும்படி அடிக்கடி மாற்றுங்கள். இது போன்ற விஷயங்கள் மஹரம் இல்லாத ஆண்களுக்கு முன் செய்வது ஹராம் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.

• நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது: 'எந்தப் பெண் (மனைவி) அனைவரையும் விடச் சிறந்தவள்?" நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: 'எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும், தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்". ( நஸயீ)

இனிய வாழ்வின் திறவுகோல் தாம்பத்தியமே
• திருமணத்தில் இணையும் ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்களது இயற்கையான உடல் தாகங்களை (அனுமதிக்கப்பட்ட முறையில்) செம்மையாகப் பகிர்ந்து கொள்வது இஸ்லாமியத் திருமணத்தின் முக்கிய குறிக்கோளாகும் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உணர்த்தினார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ)

• கணவன் தாம்பத்தியத்திற்காக மனைவியை அழைத்து, அவள் தேவையின்றி மறுக்கிறாள். அதனால் கணவன் அவள் மீது கோபங்கொண்டு அவ்விரவைக் கழித்தால், விடியும் வரை வானவர்கள் அப்பெண்ணை சபித்துக்கொண்டே இருப்பார்கள் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்தார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்).
• நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாக்கினார்கள்: கணவன் ஊரிலிருக்கும் போது அவனது அனுமதியின்றி எந்தப் பெண்ணும் (ரமளான் அல்லாத நஃபிலான) நோன்பு நோற்பது கூடாது. மேலும் தனது வீட்டில் கணவன் அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கக் கூடாது. (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், தாரமி).

• உங்கள் கணவனுக்கு தாம்பத்திய உறவு அவசியம் தேவை என்கிற சூழ்நிலையில் அதனை முதன்மைப் படுத்துங்கள். (பிறர் தவறாக எண்ணுவார்கள் என்றோ ஏதாவது பேசுவார்கள் என்றோ தள்ளிப்போடாதீர்கள்).

• உங்களுடைய உடலை சுத்தமாகவும் வாசனையாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

• கணவருடன் இனிய மொழியில் காதலைப் பரிமாறிக் கொள்ளுங்கள். (குடும்பத்தின் பிரச்சினைகளை மறந்துகூட அப்பொழுது வெளிப்படுத்தாதீர்கள். இல்லையென்றால் சந்தோஷமான சூழ்நிலையை சங்கடமான சூழ்நிலையாக அது மாற்றிவிடக்கூடும்).

• உங்கள் கணவர் திருப்தி அடையும்வரை ஒத்துழையுங்கள்.

• தோதான நல்ல சூழ்நிலைகளில் உங்கள் கணவரை தாம்பத்தியத்திற்கு ஊக்குவியுங்கள் (உதாரணமாக வெளியூர் பயணத்திலிருந்து திரும்பியபோது அல்லது கணவருக்கு அமைதி தேவை
என்னும் பட்சத்தில்).

அல்லாஹ் அருளியவைகளைக் கொண்டு திருப்தி கொள்வது

• உங்களுடைய கணவன் ஏழையாகவோ அல்லது சாதாரண வேலையிலோ இருந்தால் அதற்காக வாழ்க்கையை வெறுத்துவிடாதீர்கள். (பிறரின் கணவர்கள் போல் நீங்கள் இல்லையே என ஒப்புமையும் செய்யாதீர்கள். அது உங்கள் கணவருக்கு வெறுப்பை உருவாக்கும்).

• ஏழைகள், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள், ஊனமுற்றோர்கள் போன்ற நம் நிலைக்கு கீழாக உள்ளவர்களை பார்த்தேனும் இறைவன் நம்மை இந்த நிலைக்கு உயர்த்தி வைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.

• தன்னம்பிக்கையும் மற்றும் கணவருக்கு நீங்கள் அளிக்கும் ஊக்கமும்தான் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

உலக விஷயத்திலேயே மூழ்கிவிடவேண்டாம்

• இவ்வுலக வாழ்க்கை மட்டும்தான் நமக்கு நோக்கம் என்று இருந்திட வேண்டாம்.

• இதன் அர்த்தம் அல்லாஹ் அனுமதித்த இன்பங்களை அனுபவிக்கக் கூடாது என்பதல்ல, மறுமையின் சுகவாழ்வுக்கு எதிரான விஷயங்களை கவனமாகத் தவிர்த்து வாழ வேண்டும்.

• உங்கள் கணவரின் செலவை குறைக்கச் சொல்லி அதனை தர்மம் செய்யவும், ஏழைகள் மற்றும் தேவைப்படும் மக்களுக்கு கொடுக்கவும் ஆர்வம் ஊட்டுங்கள்.

• அவசியம் இல்லாத பொருள்களை வாங்கிக்கேட்டு கணவனை நச்சரிக்காதீர்கள். (உங்கள் பெற்றோர்கள் வீட்டில் கிடைத்த மாதிரி கணவனிடம் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கணவனின் வசதிக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்).

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்வின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப் படுவதில் சிறந்ததுமாகும். (அல்குர்ஆன் 18:46)

கணவனின் உதவியை வரவேற்றல் நன்றி செலுத்துதல்

• நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் 'பெரும்பான்மையான பெண்கள் கணவனின் உதவியை நிராகரித்ததன் காரணமாக அவர்களை நரகத்தில் பார்த்தேன்" என்பதாக. எனவே கணவன் செய்த உதவிகளை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

• உங்கள் கணவரின் உதவிகளுக்கு நன்றி செலுத்தும்போது உங்கள் கணவரை மேலும் உதவி செய்பவராகவும் உங்களை பலவழிகளில் சந்தோஷப் படுத்துபவராகவும் காண்பீர்கள்.

• உங்கள் கணவரின் நன்றியை மறக்கும்போது, உங்கள் கணவர் 'ஏன் இவளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தன்னைத்தானே நொந்து கொள்வார்".உறுதுணையும் உதவியும்

• உங்கள் கணவர் ஏதேனும் விபத்தின் காரணமாக ஊனம் ஏற்பட்டுவிட்டால் அல்லது வியாபாரத்தில் நஷ்டமடைந்துவிட்டால் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட சொந்தத் தொழில் மூலமாகவோ மற்றும் உங்கள் சொத்தின் மூலமாகவோ கணவனுக்கு 'தோள்" கொடுங்கள்.

கட்டுப்படுதல்
• ஒரு பெண் தனது ஐவேளைத் தொழுகையை (செம்மையாக) தொழுது (ரமழான்) மாதத்தில் நோன்பு நோற்று, தனது கற்பையும் காத்துக்கொண்டு (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டும் நடந்து கொண்டால், 'நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம்" என அவளிடம் (மறுமையில்) கூறப்படும் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். (தப்ரானி, முஸ்னத் அஹ்மத்)
• ஒருவர் மற்றொருவருக்கு சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்யலாமென நான் கட்டளையிட நாடியிருந்தால் மனைவியை கணவனுக்கு தலை வணங்கி சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்ய ஆணையிட்டிருப்பேன். (ஆனால் அதுவும் தவறே! எனவே அதனை அனுமதிக்கவில்லை) என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா, பைஹகி)

• கணவனுடைய அத்தனை கட்டளைகளையும் நிறைவேற்றுங்கள் அது இறைவனுக்கு மாற்றமாக இல்லாதபோது.

• ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் கணவன் தலைவன் என்பதையும் மனைவி கணவனுக்கு உதவி செய்பவள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
அமைதிப்படுத்துங்கள் (கோபமாக இருக்கும் போது)

• முதலாவதாக கணவரை எது கோபப்படுத்துமோ அதை தவிர்த்துவிடுங்கள். அப்படி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சமாதானப் படுத்துங்கள்.

• நீங்கள் பிழை செய்திருந்தால் மன்னிப்புக் கேளுங்கள். (கோபமான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் வீசிக் கொள்ளும் 'உப்பு சப்பு" பெறாத வார்த்தைகள்தான் விவாகரத்தில் முடிகிறது என்பதை எல்லோருமே அறிவார்கள்).

• கணவர் தவறு செய்திருந்தால் அதனை நல்ல சூழ்நிலை பார்த்து சொல்ல முயற்சி செய்யுங்கள். அல்லது அவருடைய கோபம் குறையும் வரை அமைதியாகக் காத்திருந்து சாந்தமான முறையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.

• வெளி விஷயத்தின் காரணமாக கோபம் இருந்தால், கோபம் குறையும் வரை காத்திருந்து பிறகு அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள். (உதாரணமாக வேலையில் பிரச்சினை, மற்றவர்களால் அவமானப் படுத்தப்பட்டிருத்தல்)

• அவருடைய பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த கோபமான நிலையிலேயே பற்பல கேள்விகளை எழுப்பி தொந்தரவு செய்யாதீர்கள்.

• 'என்ன நடந்தது? என்று நீங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும்;" என்றோ அல்லது எது உங்களை கோபப்படுத்தியது? என்று எனக்கு தெரிந்துதான் ஆகவேண்டும்! என்றோ அல்லது நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள்! அதைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு முழு உரிமை இருக்கின்றது! என்றோ கேள்வி கணைகளை எழுப்பி எரிகிற வீட்டில் எண்ணெய்யை ஊற்றாதீர்கள்.

பாதுகாப்பது (அவர் வீட்டில் இல்லாத போது)

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன்: 24:31)

அல்லாஹ் கூறுகிறான்: நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்). (அல்குர்ஆன்: 4:34)

• தடுக்கப்பட்ட நட்புகளைவிட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள்.

• குடும்பத்தின் ரகசியங்களை மற்றவரிடம் சொல்லாதீர்கள். (முக்கியமாக தாம்பத்தியம் மற்றும் உங்கள் கணவர் பிறரிடம் சொல்ல விரும்பாத விஷயங்கள்)

• வீட்டில் உள்ள பொருள்களையும் குழந்தைகளையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

• கணவனுடைய பணத்தையும் சொத்துக்களையும் பாதுகாத்து வையுங்கள்.

• கணவனுடைய அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியேறாதீர்கள்.

• அப்படியே உங்கள் கணவர் அனுமதித்தாலும் முழு ஹிஜாபுடனும் பாதுகாப்புடனும் வெளிச் செல்லுங்கள்.

• உங்கள் கணவருக்குப் பிடிக்காதவர்களை வீட்டிற்குள் வர அனுமதிக்காதீர்கள்.

• மஹரம் இல்லாத ஆண்களை நீங்கள் தனியாக இருக்கும் இடங்களில் அனுமதிக்காதீர்கள். (கணவனுடைய சகோதரர்கள், தாயின் சகோதரி மகன்கள், தந்தையின் சகோதரனின் மகன்கள் - போன்றவர்கள்தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள்)

• கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவருடைய பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும் நல்லபடியாக நடந்து கொள்ளுங்கள்.

பொறுமையும் பாதுகாப்பளித்தலும்

• கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது பொறுமையுடன் இருங்கள்.• வாழ்க்கையில் இழப்புகள் சோதனைகள் (உங்களுக்கு, உங்கள் கணவருக்கு, குழந்தைகளுக்கு, உறவினர்களுக்கு, சொத்துக்களுக்கு...) ஏற்படும்போது இறைவனின் கூலியை எதிர்பார்த்து பொறுமை கொள்வது அவசியம். (உதாரணமாக : நோய், விபத்துகள், இறப்புகள்...)

• அழைப்புப்பணியில் துன்பங்கள் ஏற்படும்போது (சிறைபிடிக்கப்படுதல், ஊனமாக்கப்படுதல் ...) பொறுமையுடன் இருந்து கணவரை மீண்டும் அல்லாஹ்வுடைய பாதையில் சுவர்க்கத்தை வேண்டி தியாகம் செய்ய உற்சாகப்படுத்துங்கள்.

• உங்களிடம் உங்கள் கணவர் மோசமாக நடந்து கொண்டால்கூட அவரிடம் நீங்கள் நல்ல முறையாக நடந்து பாடம் புகட்டுங்கள். (இவள் நம்மீது இவ்வளவு அன்பு பொழியும் போது நாம் ஏன் இவளிடம் நல்ல முறையாக நடந்தக் கொள்ளக்கூடாது என்று நினைத்து வருந்தி தன் தவறுகளைத் திருத்திக் கொள்வார்).

இறைவனுக்கு அடிபணிவதிலும், அழைப்புப்பணி, தியாகம் ஆகியவற்றிலும் உதவியாக இருத்தல்

• உங்கள் கணவருடன் ஒத்துழையுங்கள். கடமையான மற்றும் உபரியான வணக்கங்களை அவருக்கு நினைவுபடுத்துங்கள்.

• இரவு தொழுகை தொழ அவருக்கு ஆர்வமூட்டுங்கள்.

• அல்குர்ஆனை கேட்பதிலும் படிப்பதிலும் தனித்தும் கணவருடன் சேர்ந்தும் ஈடுபடுங்கள்.

• இஸ்லாமிய பயான் கேஸட்டுகளை தனியாகவும் கணவருடனும் சேர்ந்தும் கேளுங்கள் (இருவரும் புரிந்து கொண்ட முக்கிய கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள்).
• சுப்ஹ{தொழுகைக்குப் பின்னரும், மஃரிப் தொழுகைக்கு முன்னரும் திக்ருகளில் (இறைநினைவு) ஈடுபடுங்கள்.

• பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் செய்யப்படும் அழைப்புப்பணிகளில் உங்களையும் உட்படுத்திக் கொள்ளுங்கள்.

• இஸ்லாமிய சட்டங்களையும் பெண்களுக்குரிய நல்ல பண்புகளையும் கற்றுக் கொண்டு செயல்படுத்துங்கள்.

• உங்களுடைய அன்புக் கணவருக்கு ஒத்தாசையாக இருந்து அவரை ஊக்கப்படுத்தி, அவருக்குத் தேவையான நல்ல கருத்துகளைச் சொல்லி அவரின் துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

• உங்களுடைய பகுதி நேரத்தை ஒதுக்கி கணவருடன் சேர்ந்து அழைப்பு பணிகளில் ஈடுபடுங்கள்.

• அவசியமான நேரத்தில் அனைத்து தியாகங்களையும் செய்ய உங்கள் கணவருக்கு ஆர்வமூட்டி நீங்களும் உங்கள் குழந்தைகளும் அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் இருப்பதை நினைவுபடுத்துங்கள்.

அழகிய வீட்டு பராமரிப்பு

• வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

• பொழுது போகாத நேரங்களில் வீட்டுப்பொருள்களை சீர்படுத்தி வையுங்கள், உங்கள் கைகளால் தயாரித்த அலங்காரப் பொருள்களைக் கொண்டு வீட்டை அழகுபடுத்துங்கள். (உங்கள் கணவர் மிக சந்தோஷம் அடைவார்).

• தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான உணவுகளையும் புதிய வகையான உணவுகளையும் தயாரித்து உங்கள் கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுங்கள்.

• அனைத்து வீட்டு வேலைகளையும் நேர்த்தியாகச் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

• குழந்தைகளை எப்படி இஸ்லாமிய வழியில் வளர்ப்பது, பராமரிப்பது என்பதை கற்றுக்கொண்டு செயல்வடிவத்தில் வெளிப்படுத்துங்கள்.


குடும்பத்தையும் சொத்துக்களையும் பராமரித்தல்

• கணவனுடைய பணத்தை அவருடைய அனுமதி இல்லாமல் செலவழிக்காதீர்கள். (அது தர்மமாக இருந்தாலும் சரி. ஆனால், உங்கள் கணவர் இதற்கு உடன்படுவார் என்பது தெரிந்தால் செய்யலாம்)

• வீடு, வாகனம் போன்றவற்ளை கணவன் வீட்டில் இல்லாத போது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

• குழந்தைகளை சுத்தப்படுத்தி நல்ல ஆடைகளை அணிவித்து அழகூட்டுங்கள். குழந்தைகளுடைய பாதுகாப்பு மற்றும் கல்வி விஷயங்களில் பேணி நடந்து நல்ல பண்புகள், இஸ்லாமிய அறிவு, நபிமார்களின் சரித்திரங்கள் நபித்தோழர்களின் தியாகங்கள் ஆகியவற்றையும் போதியுங்கள்.

நல்ல மனைவி சுவர்க்கத்தின் துணைவி
• நல்ல பெண்களுக்கு முன்மாதிரியாக நபித்தோழியர் கதீஜா, ஆயிஷா, உம்மு ஸலமா, உம்முசுலைம் ரளியல்லாஹூ அன்ஹூ ம்
போன்றவர்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

• கெட்ட பெண்களை அல்லது நடிகைகளைப் பின்பற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

• கணவனுக்கு சமயோசித முடிவுகள் தேவையானபோது சொல்லிக் கொடுங்கள். (முதலில் அதற்கான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்)

• கணவனுடைய திருப்தியைப் பெற்ற நிலையில் எப்பொழுதுமே இருக்க முயற்சி செய்யுங்கள்.
• ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள். (திர்மிதி, இப்னுமாஜா)
Read more

மனைவியை மகிழ்விப்பது எப்படி?

மனைவியை மகிழ்விப்பது எப்படி?
(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வொரு ஆணும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்)

அழகிய வரவேற்பு

- வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.

- மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும் கூட. - அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி 'முஸாபஹா" செய்யலாம்.

- வெளியில் சந்தித்த நல்ல செய்திகiளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காக தள்ளி வையுங்கள்.

இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்

- நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளை தவிர்ந்து கொள்ளுங்கள்.

- உங்களின் வார்த்தைகளுக்கு அவள் பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.

- தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
- மனைவியை செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.

நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்

- மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.

- நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

- உங்களின் சந்தோஷ அனுபவங்களை இருவரும் சேர்ந்திருக்கும்பொழுது மீட்டிப்பாருங்களேன். (முதலிரவு மற்றும் சுற்றுலாவின்பொழுது ஏற்பட்ட...)

விளையாட்டும் கவன ஈர்ப்பும்

- நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.

- ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.

- இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை...) பார்ப்பதற்கு அழைத்துச் செல்லுங்கள்.

- இஸ்லாம் அனுமதிக்காத 'பொழுது போக்கு" விஷயங்களை (சினிமா போன்றவற்றை) மறுத்து விடுங்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ

- வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயாளியாகவோ களைப்படைந்தோ இருந்தால்.

- கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.

இனியவளின் ஆலோசனை

- குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடி ஆலோசனை செய்யுங்கள். ஹூதைபியா உடன்படிக்கையின் பொழுது நபியவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு நல்ல ஆலோசனை வழங்கியது அவர்களின் மனைவிதான்.

- அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் பொழுது அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை)

- மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.

- மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.

- ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.

பிறரை காணச் செல்லும்பொழுது

- மார்க்கத்தில் மற்றும் பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்க செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்குவதைக் கண்டியுங்கள்).

- அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.

- அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.

உங்களின் வெளியூர் பயணத்தின்பொழுது

- மனைவிக்கு தேவையான நல்ல அறிவுரைகளை கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.

- உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.

- நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவசியமான உதவிகளை செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.

- குடும்பச் செலவுக்கு தேவையான பணத்தை கொடுத்துச் செல்லுங்கள்.

- நீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).

- முடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.

- திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.

- எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).

- பிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம்.
பொருளாதார உதவி

- கணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல் வேண்டும் மாறாக கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது)

- அவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள் வரை அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

- அவசிய தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான் சிறந்தது.

அழகும் நறுமணமும்

- நபிவழியின்படி அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கிவிடுவது.

- எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.

- அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.

தாம்பத்யம்

- மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுப்பது கணவனின் கடமை. (உடல்நலக்குறைவோ அல்லது உங்களின் மனைவியின் அனுமதியோ இருந்தால் தவிர).

- பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருநாமத்தால்) என்று சொல்லி ஆதாரப்பூர்வமான பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கைவிட்டு இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு ஆரம்பியுங்கள்.

- அதற்கெனவே உள்ள முன்பக்கத்தின் வழியாக மட்டும் (மலப்பாதையின் வழியாக ஈடுபடுவது ஹராம்).

- காதல் வார்த்தைகளுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.

- அவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.

- அமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.

- மாதவிடாய் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது ஹராம் (தடுக்கப்பட்டது).

- பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை கடந்துவிடாதீர்கள்.

- அவளுக்கு கஷ்டமான கோணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் பருமனான ஆளாக இருந்தால் அவளின் நெஞ்சில் முழுமையாக சாய்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி சுவாசத்திற்கு கஷ்டம் ஏற்படுத்தாதீர்கள்.

- அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.

இரகசியங்களைப் பாதுகாத்தல்

- படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம் வெளிப்படுத்தாதீர்கள்.

இறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது

- தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப்பகுதியில் எழுப்புங்கள்.

- உங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.

- காலை மற்றும் மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ர் (இறைநினைவுகளை) அவளுக்கு போதியுங்கள். (நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும்)

- இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.

- ஹஜ் மற்றும் உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.

மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்தல்

- அவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.

- உங்களின் வீட்டுக்கு வர அவர்களுக்கு அழைப்பு கொடுங்கள். அப்படி வரும்பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.

- அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.

- பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.

- உங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன் இருக்கும்பொழுது) கொடுத்தது போல் கொடுத்து அன்பு பாராட்டுங்கள்.

இஸ்லாமியப் பயிற்சி
- கீழே கொடுக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது :

- இஸ்லாத்தின் அடிப்படை

- அவளின் பணிகள் மற்றும் உரிமைகள்

- படித்தல் மற்றும் எழுதுதல்

- இஸ்லாமியப் பாடங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை படிப்பதற்காக ஆர்வமூட்டுவது

- பெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள்

- வீட்டின் இஸ்லாமிய நூலகத்திற்காக புத்தகங்கள் மற்றும் கேஸட்டுகள் வாங்குவது.

மேன்மையான அக்கறை

- வெளியில் போகும்பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக் கவனித்துக் கொள்வது.
- மஹரம் இல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டிப்பது. (அவளின் சிறிய மற்றும் பெரிய தந்தை மகன்களாக இருந்தாலும் சின்னம்மா பெரியம்மா மகன்களாக இருந்தாலும் உங்களின் தம்பியாக இருந்தாலும் தவறுதான்).

அதிகப்படியான அக்கறையைத் தவிர்ந்து கொள்வது. உதாரணமாக :

- அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். மனப்பூர்வமாக இல்லாமல் வாய் தவறிக் கூட பேசியிருக்கலாம். -

-அவசர விஷயத்திற்காக அருகாமையில் உள்ள இடங்களுக்குப் போவதை தடுக்காதீர்கள். (ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்)

- தொலைப்பேசிக்கு (நீங்கள் அருகில் இல்லையென்றால்) பதில் அளிப்பதை கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்)

பொறுமையும் சாந்தமும்

- மணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான் (வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவைகள் ஒவ்வொரு உருவத்தில் உலாவருகின்றன). அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் பிரச்சினைகளை பெரிதாக்குவதும் போன்றவைதான் திருமண பந்தத்தை முறித்துவிடுகின்றது.

- இறைவன் விதித்த வரம்புகளை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும். உதாரணமாக தொழுகையை தாமதப்படுத்துதல், புறம் பேசுதல், தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை டி.வியில் பார்த்தல் இது போன்றவை.

- உங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள்.

தவறுகளை திருத்துதல்

- முதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.

- அதிலும் திருந்தாவிட்டால், தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பி படுத்துக் கொள்ளுங்கள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது) அதற்காக படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல.
- அதிலும் திருந்தாவிட்டால், கடைசி முயற்சியாக காயம் ஏற்படாமல் இலேசாக அடிக்கலாம் (அதற்கு அவள் தகுதியானவளாக இருந்தால் மட்டும்).

- மனைவியை அடிப்பது நபிவழியில் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நபியவர்கள் மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் கணவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

- மனைவி (எந்த காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது கணவனுக்கு எங்கே சென்றிருந்தாள் என்பதை சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியை பயன்படுத்தலாம்.

- குர்ஆனில் (4வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டது போல் அவளுக்கு நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தாவிட்டால்தான் இந்த அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம்.

- காயம் உண்டாகும் படியோ முகத்திலோ மற்றும் மென்மையான பகுதியிலோ அடிக்கக் கூடாது.

- செருப்பினால் அடிப்பது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது.

மன்னிப்பும் கண்டிப்பும்

- பெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.

- உங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் விஷயங்களில் தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.

- தவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின் நற்பண்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் (உங்களின் கோபம் குறையலாம்).

- எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். (மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய் போன்றவைகளின் மன உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு)

- சமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியை கடிந்து கொள்ளாதீர்கள். நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியை கண்டித்ததே இல்லை. பிடித்தால் சாப்படுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள் தவிர எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.

- தவறுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்கு முன் வேறுவழியில் நயமாக சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.

- அவமரியாதை செய்யக்கூடிய வகையில் திட்டுவதை தவிர்ந்துக் கொள்ளுங்கள்.

- பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தனிமை கிடைக்கும் வரை பொருத்திருங்கள்.

- உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவற்காக கோபம் குறையும் வரை சற்று பொறுமை கொள்ளுங்கள்.
Read more

14 June 2012

பொக்கிஷங்கள் 33..!

33 பொக்கிஷங்கள்

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது
Read more

26 April 2012

நேரம் ஒதுக்குங்கள்.. !!!

நேரம் ஒதுக்குங்கள்..
உங்கள் வாழ்க்கையில்..
வேலை செய்ய நேரம் ஒதுக்குங்கள்..
அது வெற்றியின் விலை!
சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள்..
அது சக்தி பெருக்கெடுக்கும் ஊற்று!
விளையாட நேரம் ஒதுக்குங்கள்..
அது இளமையின் இனிய ரகசியம்!
நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்..
அது மகிழ்ச்சிக்கு செல்லும் பாதை!
அன்பு செலுத்த நேரம் ஒதுக்குங்கள்..
அது கடவுளரின் சிறப்பு உரிமை!
மனம் விட்டு சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்..
அது ஆத்மாவின் அற்புத இசை!
Read more

நபிகள் நாயத்தின் பொன் மொழிகள்!

நபிகள் நாயகம் பேசுகிறார்

கி.பி.632 மார்ச் 6ல் (துல்ஹஜ் மாதம் 9) நபிகள் நாயகம் மக்களிடையே ஆற்றிய சொற்பொழிவு எம்மாதத்துக்கும் எக்காலத்துக்கும் உரியதாகும். அவரது பேச்சைக் கேளுங்கள்.

மக்களே! நான் கூறுபவற்றைக் கவனத்துடன் செவி தாழ்த்திக் கேளுங்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை துணை எதுவும் கிடையாது. ஆட்சி அனைத்தும் அவனுக்கே உரியது. அனைத்துப் புகழுக்கும் உரியவன் அவனேயாம். உயிர் அளிப்பவனும் மரணிக்கச் செய்பவனும் அவனாகவே இருக்கிறான். அவன் சர்வ வல்லமை பொருந்தியவன். அவன் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றி விட்டான். தன் அடிமையாகிய எனக்கு உதவி புரிந்தான். இனி நீங்களும், நானும் இங்கே ஒன்று கூடுவோமா என்பதை நான் அறியமாட்டேன்.

மனிதர்களே! இந்த மாதமும், இந்த நாளும், இந்த நகரமும் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றனவோ, அவ்வாறே உங்களின் உயிர்களும், உடமைகளும், கவுரவமும் புனிதமாகவும், பாதுகாப்புடனும் இருந்து வரச்செய்வது உங்கள் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். அவ்வாறே எக்காலத்தும் இருந்து வர இறைவன் அருள்பாலிப்பானாக!

நீங்கள் இறைவனைச் சந்திக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நாட்களில் அவன் உங்களின் செயல்களைப் பற்றி உங்களிடம் கணக்கு கேட்பான். ஆகவே சொத்துரிமை உடைய ஒருவனுக்கு அவனது உரிமைக்கும் அதிகமாக சாசனம் செய்து வைத்தல் கூடாது. அமானிதப் பொருள்கள் (பிறர் பொருள்) வைத்திருந்தால் அவற்றை உரியவர்களிடம் சேர்ப்பித்து விடுங்கள்.

கடனாகப் பெற்றதை திருப்பிக் கொடுத்து விட வேண்டும். வாக்குறுதி கொடுத்து பொறுப்பேற்றவன் தன் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஒருவர் மற்றவரின் சொத்தை கபளீகரம் செய்யக்கூடாது.

இனிமேல் எவரும் எந்த வகையாகவும் வட்டி வாங்கக்கூடாது. அசலை மட்டுமே செலுத்த நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

கொலைக்கு பழிவாங்கும் பழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது. குற்றம் செய்தவனே அக்குற்றத்திற்கு பொறுப்பாளி. தந்தையின் குற்றத்திற்கு தனயனும், தனயனின் குற்றத்திற்கு தந்தையும் பொறுப்பாளி அல்ல.

நீங்கள் தவறு செய்யாதீர்கள். பிறர் உங்களுக்கு அநீதி இழைக்கமாட்டார்கள்.

முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உடன் பிறந்த சகோதரர்கள் ஆவர். உங்கள் எல்லாரின் உரிமைகளும் ஒரே விதமானவையே. இதில் பாகுபாடு, ஏற்ற வித்தியாசம் எதுவுமே கிடையாது. மக்களே! செயல்களில் தூய்மையான எண்ணத்தையும், ஜமாஅத் என்னும் சமுதாய ஒற்றுமையையும் உங்களின் நோக்கமாகக் கொள்ளுங்கள்.

இவை உங்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தி வலிவும் பொலிவும் பெற்றவர்களாக விளங்கச்செய்யும்.
பெண்கள் விஷயத்தில் நீங்கள் அஞ்சி நடந்து கொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு சில உரிமைகள் இருப்பது போல், உங்கள் மீதும் அவர்களுக்கு சில உரிமைகள் உண்டு என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்கள் உங்களிடம் ஒப்படைக்கப்பெற்ற இறைவனின் அமானிதத்திற்கு ஒப்பானவர்கள். அவர்களைப் பேணிக்காத்து திரும்ப ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு உங்களைச் சார்ந்ததாகும். அவர்களுக்கு உணவு. உடை கொடுத்து ஆதரியுங்கள்.

கற்புநெறி தவறுபவர்களைக் கண்டியுங்கள். தண்டியுங்கள். அவர்கள் மீது அன்போடு கூடிய அதிகாரத்தை பிரயோகியுங்கள். தேவையில்லாமல் தலாக் (விவாகரத்து) செய்வது அல்லாஹ்வுக்கு மிக வெறுப்பானது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

. நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு!

உங்களுக்கு யாராவது ஒரு பொருள் தந்தால், மறக்காமல் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மனதில் அவரை நன்றியோடு நினையுங்கள். செய்ந்நன்றியை மறக்கவே கூடாது.

நபிகள் நாயகம் வாழ்வில் நடந்த ஒரு சிறு சம்பவத்தைக் கேட்டால், "நன்றி' என்ற சொல்லுக்கு இருக்கும் மகத்துவத்தை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

ஒருமுறை நாயகம் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தார். அவ்வீட்டில் ஒரு குவளை தண்ணீர் வாங்கி குடித்தார். குடித்து முடித்ததும், ""இப்போது நான் பருகிய தண்ணீருக்கு அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லாவிட்டால் மறுமை நாளில் இதனைக் குறித்து அல்லாஹ் கேள்வி கேட்பான்,'' என்றார். இதில் இரண்டு முக்கிய கருத்துகள் ஒளிந்து கிடக்கின்றன.
உலகில் தண்ணீரைப் போல உயர்ந்த பொருள் எதுவுமே இல்லை.
மயக்கமடைந்து கிடக்கும் ஒருவன் முகத்தில் தண்ணீர் தெளிக்கிறார்கள். அவன் உடனே கண்விழித்து விடுகிறான். அவனுக்கு சிறிது தண்ணீர் புகட்டுகிறார்கள். அவன் சுதாரித்துக் கொண்டு எழுந்தே விடுகிறான்.
இது தண்ணீரை பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
இதே தண்ணீரை சிலர் அற்பமாக பார்க்கின்றனர். அவர்களுக்கும் நாயகம் ஒரு கருத்தை சொல்கிறார். ""சாதாரண தண்ணீரைத் தானே இறைவன் கொடுத்தார்.

இது என்ன பெரிய விஷயம்! நமக்கென்ன பொன்னையும், பொருளையுமா அள்ளிக் கொடுத்தார்,'' என்றும் எண்ணக்கூடாது. கடவுள் நமக்கு அற்பமான பொருளைக் கொடுத்தாலும் கூட காரணத்தோடு தான் கொடுப்பார்.

நமக்கு இறைவன் துன்பத்தையே தந்தால் கூட, ""இந்த துன்பத்தை தந்ததன் மூலம், எனக்கு வாழ்க்கையில் அனுபவப்பாடத்தை கற்றுத் தந்த இறைவா, உனக்கு நன்றி,
இந்த துன்பத்தை அனுபவிக்க வைத்ததன் மூலம் என் பாவங்களை குறைத்ததற்காக நன்றி,'' என்றே சொல்ல வேண்டும்.

பணத்தின் மீது மட்டும்தான் பற்றா?:

இந்த உலகம் பணத்தின் மீது மட்டும் தான் பாசம் வைத்திருக்கிறது.
பணத்தின் மீது பாசம் வைப்பது இவ்வுலகைப் பொறுத்தவரை இன்பமாகத் தெரியும். ஆனால், மறுமை நாளில் இந்த பணத்தாசை ஒருவனை நரகத்தில் தள்ளிவிடும்.

நபிகள் நாயகம் இதுபற்றி கூறும் போது,

""மறுமைநாளில் இறைவன் முன்னிலையில் மனிதன் கொண்டு வரப்படும் போது, பலவீனம், அவமானம் காரணமாக அவன் ஆட்டுக்குட்டியை போன்ற நிலையில் இருப்பான்.
பிறகு இறைவன் புறத்தில் இருந்து, "நான் உனக்கு செல்வத்தை அள்ளித்தந்து உனக்கு பல பேருதவிகளை செய்தேனே. அவற்றில் நீ எவ்வாறு செயல்புரிந்தாய்?'என்று கேள்வி கேட்கப்படும். அதற்கு அவன், "இறைவா! நான் செல் வத்தை அதிகமாக திரட்டி, அதனைப் பன் மடங்காகப் பெருக்கி, அதை உலகத்திலேயே விட்டு வந்துவிட் டேன். என்னை மீண்டும் உலகத்திற்கு அனுப்பினால், அவை அனைத்தையும் என்னுடன் எடுத்துக் கொண்டு வந்து விடுவேன்' என்று கூறுவான்.

"சரி...நீ மறுமைக்காக என்ன அனுப்பி வைத்தாய்? அதைக்காட்டு,'' என்று அடுத்தகேள்வி கேட்கப்படும். அதற்கும் அவன் முந்தைய பதிலையே கூறுவான். இவ்வாறு சொல்பவன் நரகத்தில் தள்ளப்படுவான்,'' என்கிறார்.

இதன் பொருள் என்ன?

பூமியில் வாழும் போது, இறைவனின் கேள்விக்கு வெறும் பணத்தை மட்டும் சேர்த்தேன் என்று சொல்லும் மனிதன், நீ சொர்க்கத்தில் வாழ்வதற்காக இங்கே என்ன அனுப்பி வைத்தாய் எனக்கேட்டால், அப்போதும் பணத்தைப் பற்றியே பேசுகிறான்.

பணத்தை தவிர அவனுக்கு வேறு சிந்தனையே இல்லை. சொர்க்கத்தில் வாழ வேண்டுமானால், பூமியில் இறைவனால் கொடுக்கப்பட்ட பணத்தையும், பிற வசதிகளையும் கொண்டு மற்றவர்களுக்கு நன்மை செய்திருக்க வேண்டும்.

யாருக்காவது ஒருவேளை உணவு, ஒரு ஏழை மாணவனுக்கு ஒரு நோட்டு புத்தகம், ரமலான் நோன்பின் போது, இஸ்லாம்அறிவுறுத்தியபடி, ஒரு டம்ளர் தண்ணீராவது பிறருக்கு தானமாகக் கொடுத்திருக்கவேண்டும். இதையெல்லாம் செய்யாமல் போனால், அவன் நரகத்தில் தள்ளப்படுவான்.
Read more

சான்றோர் வாக்கு!

1. வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து போராடாதே...! தோல்வி அடையக் கூடாது என்று போராடு, உலகம் உன் கையில்...! - மாவீரன் அலெக்சாண்டர்.

2. நல்ல நட்பை இழப்பதைவிட கொஞ்சம் பணத்தை இழப்பது மேலானாது! - மகாத்மா காந்தியடிகம்.

3. கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துக் கொம்ளும் தண்டனை. - புத்தபிரான்.

4. உன்னிடம் பாசம் வைக்கும் இதயத்தை நேசி உன்னை கோபப்படுத்தும் இதயத்தை அதிகமாக நேசி. - அன்னை தெரசா.
Read more

22 April 2012

பகைவரை நண்பராக்கும் வழி! - நபி மொழிகள்!

பகைவரை நண்பராக்கும் வழி!

இஸ்லாமிய பெருமக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, "அஸ்ஸலாமு அலைக்கும்' எனச் சொல்லி வணக்கம் சொல்வார்கள். இதன் பொருள், "அல்லாஹ்வின் அருள் உங்கள் மீது உண்டாகட்டும்' என்பதாகும்.

உலகம் பகை என்ற கட்டடத்தை பலமாக கட்டிக் கொண்டிருக்கிறது. ஒருவரது முன்னேற்றத்தை கண்டு, மற்றொருவருக்கு சகிக்கவில்லை. இதன் காரணமாக, போட்டி, பொறாமை அதிகரித்து விட்டது. இதை தவிர்க்க வேண்டும் என்கிறது இஸ்லாம். "அஸ்ஸலாமு அலைக்கும்' சொல்வது தான் இதற்கு ஒரே தீர்வாகும்

ஆம்! பகை உணர்வுடன் நடந்து கொள்ளும் ஒருவரை பார்க்கும் போதெல் லாம் ஒருவர், தொடர்ந்து "அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவரது மனம் மாறி விடும். அவர் பகையை மனதில் நினைக்காமல், அல்லாஹ்வின் அருளை நமக்காக வேண்டுகிறாரே என்ற எண்ணத்தில், நண்பராகி விடுவார்.

பகைவரையும் நண்பராக்கும் வார்த்தையே "அஸ்ஸலாமு அலைக்கும்'.

நபிகள் நாயகம் இதுபற்றி கூறும் போது, "ஸலாத்தின் மூலம் இம்மை மறுமை நன்மைகளைக் காணலாம். மக்களிடையே அன்பு பரவும். எதிரிகள் தங்கள் பகையை மறந்து இணைவார்கள்,'' என்கிறார்.

ஒருவர் நபிகள்நாயகத்திடம், "இஸ்லாத்தில் சிறந்தது எது ?' என கேட்டார். அதற்கு நாயகம், ""பசித்தவருக்கு உணவளிப்பதும், தெரிந்தவராயினும், தெரியாதவராயினும் ஸலாம் சொல்வதும் ஆகும்,'' என்றார்.

நபி ஆதம் (அலை) அவர்களுக்கும், அவர்களது உம்மத்தினர்களுக்கும் அல்லாஹ் இதை கடøமாயாக்கி இருக்கிறான். நபி ஆதம் (அலை) அவர்களுக்கு, ஸலாம் சொல்லும் முறையையும் கற்றுக் கொடுத்துள்ளான். இதிலிருந்து ஸலாத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்.
உறவுகளை நேசியுங்கள்!

நபிகள் நாயகத்திடம் அவரது தோழர் ஒருவர், ""நாயகமே! எனக்கு உற்றார் உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒற்றுமையாக இருக்க விரும்புகின்றேன். அவர்களோ என் உறவை வெட்டி விடுகின்றனர். நான் அவர்களுக்கு நன்மை செய்கின்றேன். அவர்கள் எனக்கு நேர்மாறானதைச் செய்கிறார்கள். நான் அவர்கள் விஷயத்தில் பொறுமையாக இருக்கிறேன். அவர்கள் அநியாயமாக நடக்கின்றனர்,'' என்றார்.

அதற்கு நாயகம், ""நீர் சொல்வது உண்மையானால், அவர்கள் கேவலம் அடைவார்கள். அவர்கள் உதாசீனப் படுத்தினாலும், எதுவரை நீர் அவர்களிடம் பொறுமை காட்டி, நன்மை செய்து வருவீரோ, அதுவரை அல்லாஹ்வின் உதவி உம்மீது இருந்து கொண்டே இருக்கும்,'' என்றார். உறவினர்களை நேசித்தும் அவர்கள் உதாசீனப்படுத் தினால், அவர்கள் தங்கள் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கிறார்கள் என்பதே இதன் பொருள்.

உதவி என்று வந்து விட்டால்...

ஒருமுறை இமாம் ஹூஸைன் (ரலி) அவர்களிடம் கஷ்டப்படும் ஒருவர் தன் நிலையைக் கூறி உதவி செய்யும்படி வேண்டினார். அப்போது இமாம், பள்ளிவாசலில் இஃதிகாபில் ( இறை தியானம்) இருந்தார். எனவே அவர், "இஃதிகாபில் இருப்பதால் வெளியே வர முடியவில்லை' என்றார். உடனே வந்தவர் அவரது சகோதரர், இமாம் ஹஸன் (ரலி) அவர்களிடம் சென்று உதவி கேட்டார். அவரும் இஃதிகாபில் இருந்தார். ஆனால், இமாம் ஹஸன் உடனே வந்தவருக்கு உதவுவதற்காக கிளம்பி விட்டார். வந்தவருக்கோ சந்தேகம். முன்னவர் இஃதிகாபிலிருந்து எழவில்லை. ஆனால், பின்னவர் வந்து விட்டார். இதற்கான காரணத்தை இமாம் ஹஸனிடமே கேட்டு விட்டார் அவர்.
அதற்கு இமாம் ஹஸன், ""யார் தன் சகோதர முஸ்லிமின் உதவிக்காக வெளியேறி அவருடைய தேவையை நிறைவேற்றி விட்டால், ஒரு ஹஜ்ஜூம், உம்ராவும் (இதுவும் ஒரு புனித யாத்திரை) செய்த நன்மை உண்டு. ஆனால், உதவி கிடைக்காவிட்டால், உம்ரா மட்டுமே செய்த நன்மை உண்டு. எனக்கு ஹஜ், உம்ரா இரண்டின் பயன் கிடைப்பதால் நான் வெளியேறி வந்தேன், '' என்றார்.

""ஒரு முஸ்லிமின் தேவையை நிறைவேற்றுவதற்காக முயற்சி மேற்கொள்வது பத்து வருடங்கள் இஃதிகாப் இருப்பதை விட உயர்வானதாகும்,'' என்கிறார் நபிகள் நாயகம். எந்த நிலையிலும் பிறருக்கு உதவ வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.

உழைத்து சம்பாதியுங்கள்

குடும்பத்தில் கஷ்டம் வந்துவிட்டது. கையில் இருந்த பணமெல்லாம் ஏதோ ஒருவழியில் இழக்கப்பட்டுவிட்டது. இந்த சூழ்நிலையில் சிலர் விரக்தியாகவும் உணர்ச்சி வசப்பட்டும், ""பிச்சை எடுத்தாவது என் குடும்பத்தைக் காப்பாற்றுவேன்,'' என்று சபதம் செய்வார்கள். இப்படி சபதம் செய்வதை இஸ்லாம் ஏற்கவில்லை.

குடும்பத்தை காப்பாற்ற ஏதாவது ஒரு வேலை செய்து சம்பாதியுங்கள் என்கிறது இஸ்லாம். நல் வழியில் சேரும் பணம் குறைவாக இருந்தாலும், இருப்பதற்குள் வாழ்க்கையை நடத்துங்கள். ஏதோ ஒரு காரணத்தால் செல்வம் அனைத்தையும் இழந்தாலும் கூட, அடுத்து என்ன செய்வது என உடனடியாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

கூலி வேலை செய்தேனும் குடும்பத்தை காப்பாற்றியாக வேண்டும். ஆனால் எந்த சூழ்நிலையிலும், பிச்சை எடுத்து மட்டும் பணம் ஈட்டக்கூடாது. நபிகள் நாயகம் மக்களிடம், ""குடும்பத்தினரைக் காப்பாற்ற பிச்சை எடுக்காமல் உழைத்து பொருள் சம்பாதிப் பவர் ஒளிப்பிரகாசம் நிறைந்த முகத்துடன் மறுமையில் அல்லாஹ்வை சந்திப்பார்,'' என்கிறார்.

இனி "பிச்சை எடுத்தாவது குடும்பத்தைக் காப்பாற்றுவேன்' என்ற சொற்களையே மறந்து விடுங்கள். அதற்கு பதிலாக, ""எப்பாடுபட்டேனும் உழைத்து என் குடும்பத்தைக் காப்பாற்றுவேன்,'' என சொல்லுங்கள். உழைப்பை தான் இஸ்லாம் ஆதரிக்கிறது.
Read more

10 April 2012

வார்த்தைகளில் வரும் வசந்தம் !!! - அமுத மொழிகள்

வார்த்தைகளில் வரும் வசந்தம்


ரோஜா...

இரண்டு அசைகளைக் கொண்ட ஓர் ஒற்றைச் சொல்.

இந்த ஒற்றைச் சொல்லை சொல்லும் போதே மனசுக்குள் மலர்கிறது, மலர்.

அதன் அழகிய சிவந்த நிறம், விரிந்த இதழ்கள்... நறு

மணம்... படக் காட்சியாய் மனத்திரையில் விரிகின்றது.

வார்த்தையும், மனக்காட்சியும் ஒன்று சேரும்போது

நினைப்பது விரைவில் நடக்கும் என்பது உளவியலாளரின் கருத்து.

ஒவ்வொரு சொல்லும் ஏதேனும் பொருளை உணர்த்தும். சொல்லையும், பொருளையும் பிரிக்க முடியாது. அதனால் `எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்று நன்னூல் இலக்கணம் கூறுகின்றது.

`சொல்' என்பதற்கு வார்த்தை, பதம், கிளவி போன்ற சொற்களும் உண்டு.

சொற்கள் மிகப்பெரிய தாக்கத்தையும், வலிமையையும் தரக்கூடியவை. ஒவ்வொரு சொல்லும் ஒரு சூரியனைப் போன்றது. அதற்கு உதயம் உண்டே தவிர அஸ்தமனம் இல்லை.

எழுத்துக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து சொல்லாக மாறுவதைப் போல மனிதர்களும் ஒருவருடன் ஒருவர் சேர்ந்து அச்சுக் கோர்த்தது போல் நிற்கும்போதுதான் வாழ்விற்கான ஒரு அர்த்தம் பிறக்கின்றது.

ஒரு யுத்தத்தை வார்த்தைகளால் தொடங்க முடியும். அல்லது அமைதியை அதனால் உண்டாக்க முடியும். வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை இணக்கமாக வைப்பது வார்த்தைகளே. வார்த்தைகளை நாம் கட்டுப்படுத்தி விட்டால், வாழ்வில் வெற்றிகரமான இணக்கம் நிலவும் என்பதில் சந்தேகமில்லை என்பார் சிந்தனையாளர் பெர்கென் இவான்ஸ். இவரது இந்த சிந்தனை வார்த்தைகள் வலிமையைத் தருகின்றது.

ஒரு சம்பவம்...

`மாட்டுக்கு பல்லைப் பிடிச்சுப் பார்க்கணும், மனிதனுக்கு சொல்லைப் பிடிச்சுப் பார்க்கணும்' என்பது பழமொழி.

பழமொழிகள், அனுபவ மொழிகள். ஆம், ஒருவர் சொல்லும் சொற்களின் மூலம் அவர் எப்படிப்பட்டவர் என்பதை அடையாளப்படுத்த முடியும்.

தமிழ்நாட்டின் நாடகக் கலைஞர்களில் புகழ்பெற்றவர் எஸ்.ஜி. கிட்டப்பா. இவர் ஒரு வழக்கில் உயர்நீதி மன்றக் கூண்டில் ஏறினார். கிட்டப்பா இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அவரை விசாரணை செய்த நார்ட்டின் துரை மிகப்புகழ் பெற்ற வழக்கறிஞர். கூண்டிலிருந்த கிட்டப்பாவை விசாரணை செய்தார்.உங்கள் பெயர் என்ன?

கிட்டப்பா..

உங்கள் தொழில்?

நான் ஒரு நடிகன்.

நடிகன் என்றால் `கூத்தாடி' தானே?

ஆமாம்!

அது ஒரு மட்டமான தொழில் தானே?

ஆமாம்! ஆனால் என் அப்பாவின் தொழிலை விட இது மேலானது.

உங்கள் அப்பாவின் தொழில் என்ன?

அவர் உங்களைப் போல் ஒரு வக்கீல்...

வழக்கு மன்றமே சிரிப்பலைகளால் கலகலத்தது. மெத்தப்படித்த அவர், கிட்டப்பாவை அவமானப்படுத்த முயன்று தோற்றுப் போனார். கிட்டப்பாவின் வெற்றிக்குக் காரணம், அவரது துணிவு, மற்றொன்று சொற்களின் வழி சமாளித்தது.

இவரைப் போல் மறைந்த நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது. சினிமாவில் கூட நான் யாரையும் `நீ நாசமாய்ப் போ' என்று சொன்னதில்லை.

எப்படிப்பட்ட உயர்ந்த குணம். இதுதான் நயத்தக்க நாகரீகம் என்பது.

புகழ் பெற்ற பேச்சாளர் சர்ச்சில். அவர் குறிப்பிட்டார், `நான் பேச்சாற்றலில் வெற்றிபெறக் காரணம் எவரையும் அவமதித்து பேசமாட்டேன்.'

ஆம்! வார்த்தைகள் பூப்போன்றவை. அதைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால் தான் மதிப்பை பெற முடியும். உங்கள் உடை, தோற்றம், இவற்றை விடவும், உங்கள் வார்த்தை தான் உங்களது மதிப்பை உயர்த்தும். நம்பிக்கை வாய்ந்த சொற்களால் மனதை நிரப்புவதன் மூலம் நம்பிக்கை ஏற்படுகிறது. துணிவுமிக்க சொற்

களால் துணிவு ஏற்படுகிறது. இரக்கம், கருணை போன்ற சொற்களால் பாசமும் பரிவும் உண்டாகிறது. அடுத்தவர்களின் இதயத்தை வெல்ல வேண்டுமா...? அதற்கான வழி, பேசும் வார்த்தைகள் இதயத்திலிருந்து வரவேண்டும்.


அன்பு நிறைந்த இனிய சொல், இரும்புக் கதவையும் திறக்கும் என்பார்கள்.

யாராவது உங்கள் குறைகளை அல்லது தவறை சுட்டிக் காட்டினால், அடடா! நான் இதுவரை கவனிக்கவே இல்லையே. நல்லவேளை சொன்னீர்கள். உடனே அதை சரிசெய்து விடுகிறேன். உங்களுக்கு மிக்க நன்றி, என்று சொல்லிப் பாருங்கள். குற்றம் சாட்டியவர் சூடாறிப் போய் அதனாலென்ன பரவாயில்லை என்று நமக்கே ஆறுதல் சொல்வார். இதுதான் வார்த்தைகளில் வரும் வசந்தம்.

இப்போது `ஒரு சொல் நகர்த்திய கல்லின் கதை...'

புகழ் பெற்ற குரு. அவரிடம் கல்வி கற்க வந்தான், ஒரு மாணவன். அவனது பேச்சில் சுத்தமில்லாததை உணர்ந்தார். அவனைச் சேர்க்க வேண்டாம் என நினைத்தார்.

என்னப்பனே! நீ நல்ல அறிவாளி. நான் உனக்குச் சொல்லித் தருவதில் பாதி உனக்குத் தெரிந்திருக்கிறது. அதோ பார்! இந்தப் பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில் ஒரு பெரிய கல் இருக்கிறது. அதனிடம் போய், `கல்லே நீ நகர்ந்து விடு' என்று சொல். நீ சொன்னபடி எப்போது கல் நகர்கிறதோ அப்போது என்னை வந்து பார்' என்றார்.

சரி ஐயா, `சொல்லால் இந்தக் கல்லை நகர்த்துவதற்கு எவ்வளவு காலம் ஆகும்?'

எனக்குத் தெரியாது, அது உனது சொல்லின் தன்மையைப் பொருத்திருக்கிறது.

`சரி, நான் நகர்த்திய பிறகு என்னை உங்கள் மாணவனாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.'

`நிச்சயமாக...', என்றபடி குரு தன் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

மறுநாள் அவன் அந்தக் கல்லிடம் சென்று `கல்லே நகர்ந்து விடு... கல்லே நகர்ந்து விடு' என்று இடைவிடாமல் சொல்ல ஆரம்பித்தான். இதைப் பார்த்தவர்கள் சிரித்தார்கள், கேலி செய்தார்கள். இப்படியொரு முட்டாளா? என்று...

ஆனால், அவன் சொல்வதை நிறுத்துவதாக இல்லை. மெதுவாகச் சொன்னான், மனசுக்குள் சொன்னான், கெஞ்சிக் கெஞ்சிச் சொன்னான், பரிதாபமாகச் சொன்னான், கோபத்தோடும் சொன்னான், அந்தக் கல் நகர்வதாக இல்லை.

ஒரு வருடமாயிற்று...

அவனுக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. `இந்தக் கல்லை நகர்த்தியே தீருவேன்', என்று தீர்மானித்தான்.

நிச்சயமாக நகரும் என்ற நம்பிக்கையை மனதில் வளர்த்துக் கொண்டான்.

`கல்லே கொஞ்சம் நகர்' கனிவுடன் சொன்னான், மனதில் கல் நகர்வதைக் கண்டான், பிறகு ஆறு மாதமாயிற்று.

ஒரு நாள் மாலை அந்தக்கல் மெதுவாக நகர்ந்தது. வலதுபுறம் நகரச் சொன்னான், நகர்ந்தது. இடதுபுறம் நகரச் சொன்னான், நகர்ந்தது. இப்படி திசைகள் தோறும் நகரச் சொன்னான். நகர்ந்தது. அன்போடு கல்லை மார்போடு அணைத்துக் கொண்டான். மகிழ்ச்சியில் ஆடினான்... பாடினான்.... பரவசப்பட்டான்.

கேலி பேசியவர்கள் ஆச்சரியமாக வந்து பார்த்தார்கள்...

எப்படி இது சாத்தியமாயிற்று? என வியந்தார்கள்.

குருவின் காதிலும் இந்தச் செய்தி விழுந்தது. அவரும் அந்த இடத்திற்கு வந்தார்!

ஐயா! என அவர் காலில் விழுந்தான்.

`நீங்கள் சொன்னது போல் நகர்த்தி விட்டேன். என்னை மாணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்', என்றான்.

`சரி! கல்லை நகரச்சொல்', என்றார்

கல்லின் அருகில் போய் அதைத்தடவி `கல்லே நகர்' என்றான், கல் நகர்ந்தது. அவரும் அதிர்ந்தார்.

கதைதான்... இது கதைதான்... கதைக்குள் அவர் சொன்ன கருத்து இதுதான்...

அப்பா! நீ பெரியவன். உனக்கு வாக்குச் சுத்தம் வந்து விட்டது. எதைப் பேச வேண்டுமோ அதைப் பேச நீ பழகிக்கொண்டாய். இனி, தேவையற்றதைப் பேசாதே. பயனில்லாததைப் பேசாதே. எண்ணமும் சொல்லும் ஒன்றானால் நீ சொல்வதெல்லாம் நடந்துவிடும்' என்றார்.

சரி ஐயா! என் கல்வி என்ன ஆனது! நான் குருகுலம் வரலாமா?

அப்பா... இந்த மனத்தையும் சொல்லையும் ஒருமைப்படுத்தத்தான் கல்வி... நீ கற்றுக்கொண்டு விட்டாய்' என்றார்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும் இதுதான்.

வசந்தம் தரும் வார்த்தைகளால் பிறரை உற்சாகப்படுத்துங்கள். முடிந்தவரை `ந' எழுத்துக்களில் தொடங்கும் மூன்று வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.

`நன்றி சொல்லுங்கள்' - மனிதர்கள் அடி மனதில் பாராட்டை விரும்புபவர்கள்... நீங்கள் நன்றி சொல்லும்போது அவர்களின் உள் மனத் தேவை பூர்த்தியாகிறது.

`நல்லெண்ணத்தை வெளிப்படுத்துங்கள்' - அது உங்கள் வாழ்க்கையில் வசந்த காலத்தை வரவழைக்கும்...

`நல்வாழ்த்துக்களை கூறுங்கள்'- பிறர் நல்லபடியாக வாழ நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை உணர்வார்கள்.

இந்த மூன்று வார்த்தைகளை உங்கள் இதய வானொலி அடிக்கடி ஒலிபரப்பும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

இது உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். வார்த்தைகளில் காத்திருக்கின்றது வாழ்வின் வசந்தம்.
Read more

இதய வாசலை திறக்கும் இனிய சாவிகள்! - அமுத மொழிகள்


இதய வாசலை திறக்கும் இனிய சாவிகள்!
இயல்பில் இருக்கிறது இனிமை

பிறரைப் படிப்பவர்கள் அறிவாளிகள்

தம்மைத்தாமே படிப்பவர்கள் ஞானிகள்...

ஞானிகள் பலர் இந்த உலகில் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் `சூபி' ஞானிகளும் அடங்குவர்.

ஒரு சூபி ஞானி எப்படி இருப்பார் என்பதற்கான ஒரு கதை.

சூபி ஞானியின் புகழ் நாடெங்கும் பரவிக் கொண்டிருந்தது.

அவரிடம் யார் என்ன கேள்வியைக் கேட்டாலும், எத்தனை கேள்விகளை கேட்டாலும் தெளிவாகவும், சுருக்கமாகவும், அறிவுப்பூர்வமாகவும் விடை சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர். அதே நேரத்தில் ஆழ் கடலின் மையத்தை போல் சலனமில்லாமல் அடக்கத்துடன் இயல்பாய் இருப்பவர்.

அவர் ஓர் ஊருக்கு வந்தார். அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் அவரது ஆற்றலை நன்கு உணர்ந்தவர்கள்.

இளமையின் துடிப்பு அவர்களுக்குள் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. அந்த துடிப்பில் அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று சிலர் நினைத்தனர்.

கேள்விகளாலேயே அந்த வேள்வியைத் தொடங்குவது என்று முடிவு செய்தனர்.

சுருக்கமாகப் பதில் சொல்ல முடியாதபடி ஒரு கேள்வியைக் கேட்டு அவரை அவமானப்படுத்த திட்டமிட்டனர்.

பல நாட்கள் நன்றாகச் சிந்தித்து ஒரே ஒரு கேள்வியைத் தேர்வு செய்தனர்.

இளமையின் மிடுக்கோடும், ஆணவத்தின் மமதையோடும் அவரிடம் சென்றனர்.

இளைஞர்களைப் பார்த்தார் ஞானி...

அன்புடன் அவர்களை வரவேற்று `உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையா?' என்று கேட்டார்.

`எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. உங்களுக்குத்தான் இன்று பிரச்சினை ஆரம்பமாகப் போகிறது', என்றனர்.

`அப்படியா!..., சரி சொல்லுங்கள்', என்றார்.

`வேறொன்றுமில்லை, நாங்கள் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு சுருக்கமாக நீங்கள் உடனே பதில் சொல்லியாக வேண்டும்' என்றனர்.

`சரி! கேளுங்கள் முயற்சி செய்து பார்க்கிறேன்'.

இந்த உலகில் எந்தெந்த உயிரினங்கள் குட்டி போடுகின்றன?

எந்தெந்த உயிரினங்கள் முட்டை இடுகின்றன?

- இதுதான் கேள்வி.

இந்தக் கேள்விக்கு நிச்சயமாக அவரால் பதில் சொல்ல முடியாது, ஒரு வேளை சொன்னாலும் நீண்ட பட்டியலே போட வேண்டியிருக்கும். நாம் கேட்டபடி சுருக்கமாகச் சொல்ல முடியாது, என்றெல்லாம் அவர்கள் மனக்கோட்டை கட்டியிருந்தனர்.

சூபி மகானோ இரண்டே இரண்டு வரிகளில் இதற்குப் பொருத்தமாய், பொறுமையாய் விடை சொன்னார்.

`காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும், காதுகள் வெளியே தெரியாத உயிரினங்கள் எல்லாம் முட்டை இடும்'.

ஞானியார் சொன்னதும் இளைஞர்கள் சிந்தனைச் சிறகுகளை விரித்தனர். அடடா! இதுதானே உண்மை. இயற்கையின் படைப்பு இப்படித்தானே உள்ளது. பிறப்பின் ரகசியத்தை இரண்டே வரிகளில் சொன்ன அந்த ஞானியின் அறிவாற்றலைக் கண்டு அவர்கள் அதிர்ந்து போயினர்.

அவமானப்படுத்த நினைத்தவர்கள், அவமானத்திற்குள்ளானார்கள். கடைசியில் அவரிடமே அடைக்கலமாயினர்.

ஞானியாரின் பதிலைப் படிக்கின்ற போது, நமக்குள்ளும், `அடடா, இவ்வளவு ஞானம் பெற்ற இந்த சூபிகள் யார்? அவர்களின் ஞானத்திற்கான திறவுகோல் எது?', என்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

`சூபி' எனப்படுவது ஒரு ஞானத்தின் நிலை.

கண்ணன் காட்டிய கீதை போல்; புத்தர் காட்டிய தம்மபதம் போல்; அரபு நாடுகள் வழங்கிய அருட்கொடைதான் `சூபி' எனப்பட்டது.

இஸ்லாத்தின் ஒரு பிரிவினர் பின்பற்றுகின்ற பாதை தான் சூபி. இவர்களைத்தான் சூபி ஞானிகள் என்று அழைத்தனர்.

`சூபி' என்றால் கம்பளி என்ற பொருளும் உண்டு.

கம்பளிப்பூச்சி கூட்டுப் புழுவாகி வண்ணத்துப்பூச்சியாகி சிறகடித்து பறப்பது போல், சராசரியாக உள்ள ஒரு மனிதன்- தன்னுள் சுருங்கி, சுருண்டு, உருமாற்றம் பெற்ற வண்ணத்துப்பூச்சியாகப் பறக்கலாம் என்பதை கண்டுணர்ந்தவர்கள் இந்த சூபி ஞானிகள். அதனால்தான் அவர்கள் கம்பளி ஆடையை எப்பொழுதும் போர்த்திக் கொண்டுள்ளனர்.

சூபிகளின் வாழ்வே மற்றவர்களுக்கு ஒரு போதனையாகத் திகழ்கிறது. வாழ்க்கை ஒரு நதியின் பிரவாகம் போன்றது. மலையில் பிறந்த நதி கடலில் சென்று முடிவது போல், கருவறையில் பிறந்த வாழ்வு கல்லறையில் முடிவு பெறுகின்றது. இடையிடையே எத்தனையோ மேடுகள், பள்ளங்கள், போராட்டங்கள், அதனால் ஏற்பட்ட காயங்கள், வலிகள் இவை அத்தனையையும் அதன் இயல்பு மாறாமல் அப்படியே ஏற்றுக்கொள் என்கிறது சூபி ஞானம்.

ரெயிலில் பயணம் செய்கிற வாய்ப்பு ஏதேனும் ஒரு விதத்தில் கிடைத்திருக்கும். ஜன்னலின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு பாதையின் ஓரத்தில் உள்ள மரங்கள் பின்னோக்கி ஓடுவதைப் பார்த்திருப்போம். குறிப்பாக சிறு வயதில் இந்தக் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் மனசு மகிழ்ச்சியில் துள்ளும். மனதின் இயல்பான குணம் இது.

உண்மையில் மரங்கள் இருந்த இடத்தில் அப்படியே தான் இருக்கின்றன. உட்கார்ந்திருக்கும் வண்டிதான் முன்னோக்கி ஓடுகிறது. வாழ்க்கையில் நாம் தான் இயல்பாக இருப்பதில்லை. அதனால் நமக்கு மற்றவர்கள் வித்தியாசமாகக் காட்சி அளிக்கின்றனர்.

சூபி ஞானிகளும் இதைத்தான் உணர்த்துகின்றார்கள். இயல்பை இயல்பாக உணர்ந்து, அதன் இயல்போடு அதனை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் சூபிகளின் தத்துவம்.

இதயவாசலை திறக்கும் இனிய சாவிகள்
இயற்கை அபாரமான ஆற்றலையும் ஞானத்தையும் வழங்குகின்றன. இந்த இயற்கை வேண்டியவர் வேண்டாதவர் என்ற பேதம் பார்ப்பதில்லை. கடலில் விழும் அதே மழை தான் மண்ணிலும் விழுகின்றது. காட்டில் காயும் நிலவுதான் மாளிகையிலும் காய்கின்றது. மலைகளில் வீசும் அதே காற்றுதான் சமவெளிகளிலும் வீசுகின்றது. இப்படி இயற்கை எல்லா இடத்திலும் இயல்பாகவே இருக்கின்றது.

மனித மனம் மட்டும்தான் இயல்பை மீறி பிடித்தவை, பிடிக்காதவை என்று பிரித்துப் பார்க்கின்றது. சூபிகளின் தத்துவம் நல்வாழ்வுக்கான தத்துவம்.

ஒவ்வொருவருக்குள்ளும் சூபி தன்மை உண்டு. மூச்சடக்கி மூழ்குபவர்கள் மட்டும்தான் நல் முத்துக்களைக் கொண்டு வர முடியும். அதுபோல் மனதிற்குள் தேடுபவர்கள்தான் அதைக் கண்டடைய முடியும்.
Read more

09 April 2012

நபிகள் நாயகம் சொல்கிறார் ! தர்மம் செய்வதின் விதிமுறை!

தர்மம் செய்வதின் விதிமுறை

நபிகள் நாயகம் சொல்கிறார்

""நீர் ஆரோக்கியமாக இருக்கும் காலத்திலோ, வறுமை வந்து விடும் என்று பயப்படும் காலத்திலோ, இன்னும் அதிக செல்வம் சேரும் என்று எதிர்பார்க்கும் நேரத்திலோ தர்மம் செய்து விட வேண்டும். அதுவே, தர்மத்தில் எல்லாம் தலைசிறந்ததாகும். அதே நேரம், உமது உயிர் தொண்டைக்குழிக்கு வந்து நீர் இறக்கத் துவங்கும் போது, தர்மம் செய்ய ஆரம்பிப்பதில் பலனில்லை. அதனால் என்னபலன் உண்டாக போகிறது? அந்த செல்வம் தான் தானாகவே இன்னொருவரைப் போய் அடைந்து விடுமே!''என்கிறார். சாகப்போகும் வேளையில் புண்ணியம் தேடிப்பயனில்லை.

திருமணத்தின் அவசியம்

திருமணத்தின் அவசியம் பற்றி சற்று வெளிப்படையாகவே பேசுகிறார் நபிகள் நாயகம்.

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் திருமணம் செய்ய இயலாதவர்கள் உடல் ரீதியாகக் கெட்டுப் போகிறார்கள். திருமணம் செய்து மனைவியைக் காப்பாற்றும் வசதியில்லாதவர்கள் தங்கள் உடல் வேட்கைக்காக விலைமாதர்களை நாடுகிறார்கள். இது பெரும் ஒழுக்கக்கேட்டிற்கு வழிவகுக்கிறது. நோய்களை உண்டாக்குகிறது. திருமணம் செய்ய வசதியிருந்தும், ஜாலியாக இருக்கலாம் என்பதன் அடிப்படையில், சிலர் கெட்டு அலைகிறார்கள். அதனால் நாயகம் சொன்னார். ""இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில், திருமணம் பார்வையைத் தாழ்த்துகின்றது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது. பார்வை அங்கும் இங்கும் அலைபாய்வதை விட்டும், காம இச்சை யினால் சுதந்திரமாக திரிவதை விட்டும் பாதுகாக்கிறது. திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கச் சக்தியற்றவர் இச்சையின் வேகத்தைத் தணித்திட அவ்வப்போது நோன்பு வைத்துக் கொள்ளட்டும்,'' என்று. திருமணம் செய்ய வசதியில்லாதவர்கள், தங்கள் உடல் இச்சையை அடக்க நோன்பு முதலானவற்றில் இறங்கி, மனதைக் கட்டுப்படுத்த வேண் டுமே தவிர, தவறான வழியில் இறங்கி விடக்கூடாது என்று சொல்கிறது இஸ்லாம்.

நல்ல குணம் நன்மை தரும்

ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் போது, அவர்கள் சரியான பெற்றோராக இருந்தால், ""மாப்பிள்ளை நல்ல அழகா?'' என்று கேட்பதை விட ""மாப்பிள்ளை நல்ல குணமா? கடைசி வரை என் பெண்ணை வைத்து குடும்பம் கழிப்பாரா?'' என்று தான் கேட்பார்கள். நற்குணமுள்ளவர்களையே நபிகள் நாயகம் விரும்பினார். ""எவரையும் துன்புறுத்தாமல் இருப்பதே நற்குணமாகும்'' என்று இஸ்லாம் சொல்கிறது. நாயகம் நற்குணம் உள்ளவராக வாழ்ந்து காட்டினார். அவரது தோழர் ஒருவர் அவரைப் பற்றிக் கூறும் போது, ""அண்ணல் நபிகள்நாயகம் வெட்கமற்ற பேச்சை தம் நாவால் பேசுவதுமில்லை. வெட்கமற்ற செயலைச் செய்வதுமில்லை. மேலும் "உங்களில் நற்குணமுடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்' என்று கூறுவார்,'' என்றார். நல்ல குணம் நன்மையைத் தரும்.

குறையை திருத்திக் கொள்ளுங்கள்

குர்ஆனில், ""உங்களில் ஒருவர் மற்றொரு சகோதரருக்கு கண்ணாடி போன்றவர்கள் ஆவர். எனவே, தம் சகோதரரிடம் ஒரு குறையைக் கண்டால், அதனைக் களைந்து விட முயற்சி செய்ய வேண்டும்,'' என்ற வசனம் இருக்கிறது. அதாவது, மனிதன் இன்னொரு மனிதனை தன் சொந்தச் சகோதரனாகவே கருத வேண்டும். தம்பி முன்னேற அண்ணனும், அண்ணனின் குறைபாட்டை தம்பியும் எடுத்துச் சொல்லி திருத்தலாம். இவர்கள் ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்பதால் சுட்டிக்காட்டுவது எளிது. ஆனால், நண்பர்கள் விஷயத்திலும், பிற உறவினர்கள் விஷயத்திலும் கொஞ்சம் கவனம் வேண்டும். சிலர் தன்னுடைய சொந்த விஷயங்களில் பிறர் தலையிடுவதை விரும்புவதில்லை. எனவே, அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி திருத்த வேண்டும். நாம் சொல்வதை ஒருவர் கேட்கமாட்டார் எனத்தெரிந்தால், அப்போதைக்கு ஒத்தி வைத்து விட்டு சந்தர்ப்பம் பார்த்து பேச வேண்டும். ஒருவரின் குறையை மற்றொருவரிடம் சொல்லி அவர் மூலமாக திருத்த முயற்சிப்பது தவறான முயற்சி. ஏனெனில், இது புறங்கூறுவது போல் ஆகி, பகையை உண்டாக்கி விடும். எனவே, ஒருவர் நமது குறையைச் சுட்டிக்காட்டினால், அதில் உண்மையிருக்கும் பட்சத்தில் அந்த விமர்சனத்தை ஏற்று, திருத்திக் கொள்ள வேண்டும்.
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner