Ads Header

Pages


Showing posts with label சளி. Show all posts
Showing posts with label சளி. Show all posts

04 September 2013

ஆஸ்துமா,மார்ச்சளி குணப்படும்--பாகற்காய் சாறு

பாகற்காய் மூன்று தேக்கரண்டி பாகல் இலைச்சாறுடன் ஒர் கிளாஸ் மோர்கலந்து பருகிட மூலம் குணமாகும். ஒரு கோப்பை பாகல் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தினமும் வெறும் வயிற்றில் அருந்த இரத்த கோளாறுகள் நீங்கும். குடுத்து குடித்து ஈரலைப் பாழாக்கிக் கொண்டவர்கள் தினமும் காலையில் 30 மி.லி அளவுபாகல் சாற்றை மோருடன் கலந்து குடித்தால் நல்ல பயன் கிடைக்கும். ஒரு தேக்கரண்டி பாகல் வேர்களை பசைபோல் அரைத்து அத்துடன் சம அளவு தேன் அல்லது அதே அளவு துளசிச்சாறு கலந்து இரவு தோறும் அருந்த ஆஸ்துமா,மார்ச்சளி குணப்படும். பாகற்காய் ருசியில் கசக்கும் என்றாலும் பல மருத்துவ குணங்களைக் கொண்டது.இதனை வறுக்கலாம்,அவிக்கலாம்,ஸ்ஃப் செய்யலாம்.குழம்பு,பொரியல்,செய்யலாம்.வற்றல் செய்து சேமித்து வைக்க ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். ஈரபதம்-92.4 கிராம் புரதம்-1.6 கிராம் கொழுப்பு -0.2 கிராம் இழைப்பாண்டம்-0.8 கிராம் தாதுக்கள்-0.8 கிராம் கார்போஹைட்ரேட்கள்-4.2 கிராம் கால்சியம்- 20 மி.கி மக்ளீசியம்- 17 மி.கி ஆக்ஸாலிக் அமிலம்- 40 மி.கி பாஸ்பரஸ்- 70 மி.கிஅயம்- 0.4 மி.கி சோடியம்- 17.8 மி.கி பொட்டாசியம்- 152 மி.கி செம்பு- 0.18 மி.கி சல்ஃபர்- 15 மி.கி குளோரின்- 8 மி.கி வைட்டமின் ஏ- 210 ஐ.யூ தயமின்- 0.07 மி.கி ரைபோஃப்ளேவின்- 0.09 மி.கி நியாஸின்- 0.5 மி.கி வைட்டமின் சி- 88 மி.கி 100கிராமில் 5 கலோரி உள்ளது. பாகற்காய் குளிர்ச்சியைத் தரும்.சிறந்த மலமிளிக்கி.பசியைத் தூண்டும்.பித்த உபாதைகள் நீக்கும். நீரழிவுக்கார்ர்களின் உணவில் பாகற்காய் அவசியம் இடம் பெற வேண்டும் என்று பரிந்துரைக்கும். பாகற்காய்யில் தாவர இன்சுலின(plant insulin)இருப்பதை பிரிட்டிஷ் மருத்துவ குழு ஆரிய்ச்சி செய்து தெரிவிக்கிறது. நீரழிவு நோயாளிகள் தினம் சாப்பிட்டு வந்தால்,வைட்டமின் ஏ,பி,பி2,சி மற்றும் அயச்சத்துக்ளை அவர்கள் பெறமுடியும். தொடர்த்து பயன்படுத்திவர உயர் இரத்த அழுத்தம்,கண் உபாதைகள்,நரம்புவீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
Read more

24 August 2013

சளியை போக்கும் சுக்கு..

மருத்துவப் பயன்கள்: 1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். 2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். 3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும். 4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். 5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும். 6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும். 7. சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும். 8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும். 9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும். 10. சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும். 11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும். 12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும். 13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். 14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும். 15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும். 16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும். 17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும். 18. சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும். 19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும். 20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும். சுக்கு மொழிகள் பத்து: 1. தொக்குக்கு மிஞ்சிய தொடுகறி இல்லை, சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை. 2. சுக்கு சுவையில் மிகக் காரம், பயனில் மிக இனிமை. 3. சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுதந்திரத்திற்கு மிஞ்சிய உயர்வில்லை. 4. மசக்கை உள்ளவளுக்கு ஏலக்காய், சுக்கைத் தின்றவளுக்கு சுகப்பிரசவம். 5. சுக்கு அறியாத கஷாயம் உண்டா? 6. இஞ்சி காய்ந்தால் சுக்கு, எப்போதும் சோம்பி இருப்பவன் மக்கு. 7. பல்வலிக்கு கிராம்பு, பக்கவாதத்திற்கு சுக்கு. 8. சுக்கும், தேனும் மக்குப்பிள்ளையையும் சுறுசுறுப்பாக்கும். 9. சுக்கை நம்பியவன் எக்காலத்தும் நோய்க்கு அஞ்சான். 10. சுக்கிடம் தஞ்சமடையும் அஜீரணம்.
Read more

27 April 2013

சளி பிடிக்காமல் இருக்க...

ளி பிடிக்காமல் இருக்க:

சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும்.
அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது.
அதில் வைட்டமின் 'c' இருக்கிறது.வைட்டமின் 'c' ஜலதோஷம் பிடிக்காமல்
தடுக்க உதவியாய் இருக்கிறது.

நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால்
மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று
முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்.
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner