Ads Header

Pages


Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

05 May 2012

வழக்கு எண் 18/9 - திரை விமர்சனம்

சென்னை, மே 5 (டிஎன்எஸ்) பணம் என்னவெல்லாம் செய்யும், அந்த பணம் இல்லாத அப்பாவி கீழ் தட்டு மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதையும், பள்ளி மாணவர்களுக்கு அவர்களது பெற்றொர்கள் கொடுக்கும் பணமும், செல்லமும் அவர்களை எப்படிப்பட விபரீத செயலில் ஈடுபட வைக்கிறது என்பதையும் சுத்தியலில் அடித்தாற்போல் ரொம்பவே அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். இப்படம் சினிமா ரசிகர்களுக்கு வெறும் படமாக மட்டும் இன்றி ஒரு பாடமாகவும், அதே சமயம் பெற்றொர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவும் அமைந்திருக்கிறது.

அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்யும் பெண் மீது ஒருவன் ஆசிட் வீசிவிட, குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க போலீஸ் விசாரணையை ஆரம்பிக்கிறது. யார் மீதாவாது சந்தேகம் இருக்கிறதா என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மாவிடம் கேட்க, அவர் தனது பெண்ணை ஒரு தலையாக காதலித்த தெரு வண்டிக்கடை உணவகத்தில் வேலை செய்யும் ஸ்ரீயை கைகாட்டுகிறார். ஸ்ரீயை அழைத்து போலீஸ் தனது விசாரனையை ஆரம்பிக்க, வாழ்க்கையில் ஒருவன் எந்த எந்த துண்பத்தையெல்லாம் அனுபவிக்க கூடாதோ, அப்படிபட்ட துன்பங்களையெல்லாம் அனுபவித்து, இறுதியில் சென்னை வண்டிகடை உணவகத்தில் வேலை செய்யும் ஸ்ரீயின் கதையை கேட்டு போலீஸே அனுதாபப்படுகிறது.

அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண் வேலைப் பார்த்த வீட்டு உரிமையாளரின் பெண்ணான பள்ளி மாணவி ஸ்ரீ யை விசாரித்த போலீஸிடம் "சார் இந்த பையனை விசாரித்தது போல மற்றொருவனையும் விசாரிக்கணும்" என்று சொல்கிறார். ஏன் அவனை விசாரிக்க வேண்டும் என்று போலீசாரின் கேள்விக்கு அந்த மாணவி தனது கதையை விவரிக்க ஆரம்பித்ததும் தொடர்கிறது மற்றொரு பகுதி. இந்த இரண்டு பகுதிகளையும் இணைத்து மிக நேர்த்த்தியான திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் பணம் படைத்த மேல்தட்டு வர்க்கத்தினால் கீழ்தட்டு மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருப்பதுதான் க்ளைமாக்ஸ்.

இரண்டு கதைகளாக நகரும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக திரைக்கதை அமைந்திருக்கிறது. பத்திரிகைகளில் சாதரணாம படித்து விட்டு செல்லும் செய்திக்குப் பின்னால் எவ்வளவு பெரிய கதை இருக்கும் என்பதை மிக ஆழமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் நடித்த புதுமுகங்கள் அனைவருமே நடிப்பில் தங்களது திறமையை அபாரமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வண்டிகடை உணவகத்தில் வேலை செய்யும் வேலு கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீயின் தோற்றமும், அவருடைய நடிப்பும் அந்த கதாபாத்திரதை படம் முடிந்தும் நம் கண்ணை விட்ட அகலாமல் பார்த்துக்கொள்கிறது. வீட்டு வேலை செய்யும் ஜோதி கதாபாத்திரத்தில் நடித்த ஊர்மிளா மகந்தாவுக்கு வசனங்கள் இல்லை என்றாலும் அவருடைய கண்களே பெரும் அளவுக்கு நடித்திருக்கிறது. அதேபோல பள்ளி மாணவனாகவும், மாணவியாகவும் நடித்த நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தது போல நடித்திருக்கிறார்கள்.

போலீஸாக நடித்த குமாரவேலு அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். பள்ளி மாணவர்களை பிடித்து கண்டிப்பது, ஜோதியின் முகத்தில் ஆசிட் அடித்தவனை கண்டுபிடிப்பது என ரசிகர்களின் மனதில் நல்ல போலீஸாக இடம்பிடிக்கும் குமாரவேலு, இறுதியில் கெட்ட போலீசாக இடம்பிடிக்கிறார். சின்னசாமி கதாபாத்திரத்தில் நடித்த சிவனும் நம்மை கவனிக்க வைக்கிறான்.

உருத்தாத எந்தவித ஒளியையும் பயன்படுத்தாமல் அற்புதமான ஓளிப்பதிவை கொடுத்திருக்கிறார் விஜய் மில்டன். ஸ்டில் கேமராவில் படமாக்கப்பட்ட படமாம் இது. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

அமைதியான, அழகான மெட்டுக்களைப் போட்டிருக்கும் அறிமுக இசையமைப்பாளர் பிரசன்னா, பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பு ரசிகர்களுக்கு எந்த வித குழப்பத்தையும் ஏற்படுத்தாமல், இரண்டு பகுதிகளாக நகரும் காட்சிகளை துள்ளியமாக வெட்டியிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கியிருக்கும் இப்படம், தமிழ் சினிமாவில் இன்னும் பல ஆண்டுகள் பேசப்படும் படமாக அமையும். அந்த அளவுக்கு ரசிகர்களின் அடிமனதில் பதியும் அளவுக்கு இப்படத்தை செதுக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

குடுபத்தோடு பார்க்க வேண்டிய இப்படம் வழக்காக இல்லாமல் ரசிக்களுக்கு ஒரு பாடமாகவும் அமையும்.

ஜெ.சுகுமார்
Read more

13 March 2012

சேவற்கொடி – திரை விமர்சனம்


கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்செந்தூர் ஆகிய தென்முனை ஊர்களை கதைக்களமாக்கிய படங்கள் மிகக்குறைவு. பாரதிராஜா தனது கடல்சார்ந்த படங்களில் முட்டம் கிராமத்தை தமிழ்ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஊராக்கிக் காட்டினார்.
பாரதிராஜாவின் கடற்சார்ந்த படங்களில் தமிழ் வாழ்க்கையின் அடையாளங்கள் கொட்டிக்கிடக்கும். சேவற்கொடி பட்த்திலும் தென்முனை வாழ்கையின் அடையாளங்களை அதன் யாதார்த்தம் மீறாமல் படமாக்கியிருகிறார்கள். இதில் பளிச்சென்று தெரியும் முதல் அம்சம், அப்பகுதியின் வட்டார வழக்கில் அத்தனை கதாபாத்திரங்களும் மிகத்துல்லியமாக பேசுவதைச் சொல்ல வேண்டும்!

திருசெந்தூரை ஒட்டிய இரண்டு கடற்கரை கிராமங்களில் வாழும் வெள்ளந்தியான மனிதர்களின் கனவு, காதல், வன்மம், ஆகிய மூன்று முக்கியமான உணர்ச்சிகளை பிண்ணிப் பிணைந்து அருமையான கலவையில் ஒரு ஒரு ஜனரஞ்சக த்ரில்லரை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சுப்ரமணியன்.


எப்படியும் ஒரு சுமை தூக்கும் வேனை சொந்தமாக வாங்கி அதற்கு முதலாளி ஆகிவிட வேண்டும் என்று நினைப்பவன் மீன்பிடி துறைமுகத்தில் வேன் டிரைவராக வேலை செய்யும் காளி. களியின் இந்தக் கனவை எந்தக் கஷ்டமும் இல்லாமல் நிறைவேற்ற வருகிறார் அவனது முதலாளி. “ உனது தங்கையை எனக்கு மணம் முடித்துக் கொடு.” என்கிறார்.  காளியோ பதிலுக்கு “ தங்கைய கட்டிகொடுத்தா எனக்கு என்ன கிடைக்கும்? ” என்கிறார். “நீ ஓட்டும் வண்டிக்கு நீதான் முதலாளி” என்கிறார். காளியின் தங்கையோ இந்த இரண்டாம்தார திருமணத்தில் விருப்பமில்லாமல், காதலனோடு ஊரைவிட்டே போய்விடுகிறார். இங்கேதான் திரைக்கதையின் மைய முடிச்சை மிக யதார்த்தமாக போடுகிறார் இயக்குனர். காளியின் தங்கை, அவளது காதலனோடு புறப்படும் கடைசி தருணத்தில் பேருந்து நிலையத்தில் அவர்களை எதிர்பாராமல் சந்திக்கும் நாயகன், காளி தங்கையின் காதலனை பார்த்து கையசைக்கிறான். ஒரேஒரு சந்திப்பில் உருவான நட்பின் நிமித்தம் வாழ்த்தும் சொல்கிறான் கதையின் நாயகன். இதைப் பார்க்கும் காளியின் உதவியாளன், அவர்களை ஊரைவிட்டு அப்புறப்படுத்தியதே நாயகன்தான் என்று சொல்லப்போய், மொத்த திரைக்கதையையும் தாங்கிப் பிடிக்கும் காளி- நாயகன் இடையிலான வன்மம் மிக அழுத்தமாக கருக்கொள்கிறது. அதன்பிறகு காளிக்கும் நாயகுனுக்கும் இடையிலான ஆடுபுளி ஆட்டத்தை உளவியல் அனுகுமுறையுடன் நகர்த்திச் செல்கிறார் இயக்குனர்.
இந்தப்படத்தில் நாம் காணும் காதாபாத்திரங்கள் மிக எளிய மனிதர்கள்தான். ஆனால் சகமனிதர்களை புரிந்து கொள்வதில் நாம் எத்தனை பல்கீனமானவர்களாக இருக்கிறோம் என்கிற இழையை வைத்துக்கொண்டு அற்புதாமான த்ரில்லரை தந்துவிடுகிறார் இயக்குனர்.

அதேபோல காட்சிகளை அனுகும் விதத்திலும், சின்னச் சின்ன வசனங்கள் வழியே திரைக்கதையின் அடுத்தடுத்த முடிச்சுக்களை லீட் செய்வதிலும் தனது குரு ராதாமோகனை விட ஆளுமை காட்டுகிறார் இயக்குனர். உதாரணத்துக்கு ... நாயகன் அருண் பாலஜியுடன் நாயகி பாமா பைக்கில் செல்வதை பார்த்துவிடுகிறார் நாயகியின் தந்தை. அப்பா தன்னை இன்னோரு ஆணுடன் செல்வதைப் பார்த்தை நாயகியும் கவனித்து விடுகிறார். ஆனால் இதைப்பற்றி மகளிடம் வாய்த்திறக்கவில்லை அவர். இதில் தவிப்புக்கு ஆளாகி அப்பாவிடமே “ ஏம்பா எதுவுமே கேட்க மாட்டேங்கிற?” எனக் கேட்கும் காட்சி உட்பட பல காட்சிகள், தமிழ்சினிமா ரசிகனுக்கு புத்துணர்ச்சி தரும் சொல்லமுறையில் காட்சிபடுத்தப்படிருகின்றன.

கதாபாத்திரங்களை அவற்றுக்கே உரிய நியா தர்க்கத்தோடு அணுகும் இயக்குனர்கள் மிகக்குறைவு. விருமாண்டியில் கமல் இதனை முயன்றிருப்பார். சேவற்கொடியில் அதையே சாதித்துக்காட்டியிருகும் சுப்ரமணியத்திடமிருந்து இன்னும் கணமான படங்களை எதிர்பார்க்கலாம்.

கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் அருண்பாலாஜி யை விட காளி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கும் பவன் எல்லா காட்சியிலும் ஸ்கோர் செய்து விடுகிறார். நாயகி பாமா நம்பிக்கையூட்டும் எளிய அறிமுகம்.  ‘எங்கேயும் எப்போதும்’ பட இசையமைப்பாளர் சத்யா இசையமைப்பில் பாடல்கள் ஒன்று போலவே இருக்கிறது. சேவற்கொடியின் மிகச்சிறப்பான அம்சங்களில் செல்லதுரையின் ஒளிப்பதிவு கதைக்களத்துக்கே நம்மை அழைத்துச் செல்கிறது. படத்தில் பெரும் குறை சேவற்கொடி என்று தலைப்பு வைத்ததற்காக திருச்செந்தூர் திருவிழாவை கதையில் பயன்படுத்த நினைத்தது. இதற்காக மட்டும் இந்த தரமான படத்தை ஒட்டுமொத்தமாக புறகணிப்பது சரியல்ல!    சேவற்கொடி யதார்த்தக் கம்பத்தின் உச்சியில் பறக்கும் நெத்தியடி! 
Read more

பில்லா 2 சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியது!

 அஜித்தின் பில்லா 2 படத்தின் சேட்டிலைட் உரிமையை  சன் டிவி நிறுவனம் வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2007ம் ஆண்டில் அஜித்துக்கு மெகா ஹிட் படமாக அமைந்த படம் பில்லா. அதன் தொடர்ச்சியாக இப்போது பில்லா-2 படம் உருவாகி வருகிறது. டைரக்டர் சக்ரி டோல்டி இயக்கி வரும் இப்படத்தில் அஜித், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இன்‌எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஓய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.


  இப்படத்துக்கான உள் நாட்டு உரிமையை சன் டிவி கைப்பற்றியது, வெளிநாட்டு வியாபாரம் ஜரூராக நடந்து வரும் நிலையில், இதன் வெளிநாட்டு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று ரூ.5 கோடியே 30 லட்சத்துக்கு விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Read more

பிரசன்னா, சினேகா திருமண தேதி அறிவிப்பு!


பிரசன்னா, சினேகா காதல் ஜோடியின் திருமணம் வருகிற மே 11ம் தேதி நடைபெற இருக்கிறது. நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாக தொடர்பில் இருந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.  இருவரும் இதுகுறித்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக வலம் வர தொடங்கினர். விரைவில் திருமணம் தேதியை அறிவிக்கிறோம் என்று இருவரும் கூறி வந்தனர். இதனிடையே சமீபத்தில் இருவரது வீட்டாரும் சந்தித்து திருமணம் தேதியை முடிவு செய்து இருக்கின்றனர். அதன்படி சினேகா-பிரசன்னா திருமணம் வருகிற மே-11ம் தேதி, சென்னையில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் விமரிசையாக நடக்க இருக்கிறது.
Read more

கதை விவாதத்தில் கே.வி ஆனந்த்


ரஜினி உடல்நிலை சரியான பிறகு நடிக்க இருக்கும் படம் 'கோச்சடையான்'. கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரஜினியுடன் தீபிகா படுகோன், சரத்குமார்,ஷோபனா, நாசர், ருக்மணி, ஆதி, ஜாக்கி ஷெரஃப் மற்றும் பலர்  ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மாற்றான் படத்தை இயக்கியபடி, ரஜினியை வைத்து இயக்கும் படத்துக்கான கதை விவாதத்திலும் பங்கேற்று வருகிறார் கே.வி ஆனந்த்.
Read more

ஷங்கரின் புது டீம்


இயக்குனர் ஷங்கருக்கு சுஜாதாவின் வசனம் என்றால் மிக ப்ரியம். தற்போது அவர் மறைவிற்கு பிறகு, நண்பன் படத்தில் தானே வசனகர்த்தா ஆகிய ஷங்கர் தன்னுடன் கார்கியும் சேர்த்து கொண்டார். இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் சுபா வசனகர்த்தாவுடன் விரைவில் இணைய உள்ளார். சுபா என்பவர்கள் ஒருவர் அல்ல இருவர். சு-சுரேஷ், பா-பாலகிருஷ்ணன் இதன் சுருக்கமே சுபா. இவர்கள் இருவரும், இயக்குனர் கே.வி,ஆனந்திடம் திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக பணியாற்றி வருகின்றனர். கனா கண்டேன், அயன், கோ போன்ற படங்களே சுபாவின் சிறந்து சான்றுகள். இவர்களது உழைப்பு ஷங்கருக்கு பிடித்துப்போக அடுத்தப் படத்தில் நாம் இணைந்து பண்ணலாம் என்று ஷங்கர் கூறியிருக்கிறார்.
Read more

காதலில் சொதப்புவது எப்படி? - நீங்க பார்க்கலாமா? கூடாதா?


கதை ரொம்ப சிம்ப்பிள் அண்ட் நீட்.. எம் ஜி ஆர் அன்பே வா படத்திலும், எஸ் ஜே சூர்யா குஷி படத்திலும் சொன்னதுதான்.. காதலர்களுக்குள் ஏற்படும் ஈகோ மோதல்கள் அவர்கள் அன்பை குறைத்து விடாது, இறுதியில் சேர்த்து விடும்.. இந்த ஒன்லைன் கதையை 8 நிமிட குறும்படத்தில் எந்த அளவு சுவராஸ்யமாய் சொன்னாரோ அதே அளவு சுவராஸ்யத்துடன் திரையிலும் சொல்லி இருக்கிறார்..
சித்தார்த்தின் காதலி அமலா பால் ஃபேமிலில அப்பா சுரேஷ் அம்மாவை விட்டு பிரிஞ்சிருக்கார்.. டைவர்ஸ் வரை போகுது.. அந்த கேசை டீல் பண்றது சித்தார்த்தின் அப்பா.. சின்ன சின்ன விஷயத்துக்காக அடிச்சுக்கற, பிரிஞ்சுக்கற சித்தார்த் - அமலா பால் காதல் ஜோடி, அது போக அவங்க நண்பர்களில் 3 காதல் ஜோடி எப்படி ஊடல் தாண்டி கூடல் வரை சுபமா சேர்றாங்க என்பது தான் கல கல காதல் திரைக்கதை..
 
தமிழ் சினிமா பயன் படுத்த தவறிய நல்ல நடிகர்களில் ஒருவர் சித்தார்த் என்பது இந்தப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகிறது. மவுன ராகம் கார்த்திக்கிடம் பார்த்த அதே துள்ளல், இளமை என ஆள் செம கலாய்க்கும் நடிப்பு.. ஆனால் அவர் சுற்றுலா கைடு போல் ஆடியன்சை பார்த்து கதை சொல்வது, அவ்வப்போது கதை மாந்தர்களிடமிருந்து ஒரு ஸ்டெப் விலகி கேமராவைப்பார்த்து கமெண்ட் சொல்வது அந்நியம் ஆக்குகிறது.. குறும்படத்தில் சக்ஸஸ் ஆன இந்த டெக்னிக் திரைபப்டத்தில் ஒர்க் அவுட் ஆகவில்லை..
 
அமலா பால் மெழுகு பொம்மை போல் வர்றார்.. நல்ல கெமிஸ்ட்ரி.. பாடல் காட்சிகளில் அழகாக தெரிகிறார்.. படத்தில் வரும் 78 சீன்களில் ஒரு சீனில் கூட துப்பட்டா போடாமல் வருவதற்கு நன்றி தெரிவிப்பதா? வாழ்த்து சொல்வதா? ( 2 சீன்ல மட்டும் போனா போகுதுன்னு துப்பட்டா இருக்கு கழுத்து ஒண்ட.. ஹி ஹி )
 
குறும்படத்தில் சித்தார்த்தின் நண்பர்களாக வந்த அதே ஆட்கள் தான் இதிலும்.. மனிதர்கள் கலக்கி எடுத்துட்டாங்க.. அந்த தாடிக்காரரின் நடிப்பு செம செம.. குண்டு பப்ளிமாசாக வரும் நண்பர் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாய் ஹீரோ ஹீரோயின்  இருவர்க்கு இடையே பஞ்சாயத்து பேசும்போது மேலும் சண்டையை இழுத்து விடும் சீன் தியேட்ட்டரே அல்லோலகல்லோலப்படும் அதகளம் ஆரவாரம்.. வாட் எ ஒண்டர் ஃபுல் பர்ஃபார்மென்ஸ்.. பை டைரக்டர்.. 
 
அமலா பாலின் அப்பாவாக வரும் சுரேஷ்  பாந்தமான நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்..கோயிலில் அவர் தன் மனைவியை பல வருட பிரிவுக்குப்பின் அணைக்கும் காட்சியில் சத்யா பட பாட்டு - வளையோசை  கல கல -- கலக்கல்
 
ஹீரோ - ஹீரோயின் இருவர் பெற்றோரையும் மிகச்சிறப்பாக கதைக்குள் கொண்டு வந்த விதம் வெல்டன்..
 
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு கன கச்சிதம்.. யூத் ஃபுல்..
 
இந்தப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? ஒருவனுக்கு ஒருத்தி என ஒரே ஒரு உள்ளத்தை ஆயுள் முழுக்க காதலிக்க நினைக்கும் உண்மையான காதலர்கள், சின்ன சின்ன பிரச்சனைகளால் ஊடல் கொண்டிருக்கும் தம்பதிகள், கணவனை பிரிந்து வாழும் மனைவிகள், மனைவியை பிரிந்து வழும் கணவர்கள்,காதலிக்க நினைப்பவர்கள் என எல்லாரும் பார்க்கலாம்..
 
யாரெல்லாம் பார்க்கக்கூடாது? பஞ்ச் டயலாக், ஓப்பனிங்க் ஃபைட் வேணும் என்ற மசாலா பட ரசிகர்கள்,ஹீரோ ஒரு அடி அடித்தால் 56 பேர் ஆஸ்பிடலில் போய் படுக்கனும்னு நினைக்கற ஓவர் பில்டப் ஒலக சாமிகள் தவிர்க்க வேண்டிய படம்.
 
ஏராளமான திறமைகளை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு , தங்கள் தன்மானத்தை அடகு வைத்து, இளமையை தொலைத்து கனவுத்தொழிற்சாலை என்று வர்ணிக்கப்படும் கோடம்பாக்கத்தில் குடி இருக்கும் ஆயிரக்கணக்கான உதவி இயக்குநர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாய் எட்டு நிமிட குறும்படத்தையே விசிட்டிங்க் கார்டாக வைத்து  இரண்டரை மணி நேர படம் எடுக்கும் வாய்ப்பை தேடி வந்த சீதனமாய் பெற்று, பெயரை தக்க வைத்திருக்கும் நாளைய இயக்குநர் புகழ்  பாலாஜி மோகன்-க்கு வாழ்த்துக்கள்.
Read more

மீண்டும் அமீர்கான் படம் ரீமேக்! - கலக்க தயாராகும் சந்தானம்.

அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த முழு நீள காமெடி படம் 'டெல்லி பெல்லி'. இப்படம் இந்தி திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது. படத்திற்கு ஹீரோவாக 'சிம்பு' நடிக்கிறார்.
இந்த படம் காமெடிக்கு முக்கியத்துவம் இருப்பதால், படத்தில் சந்தானம் நடிக்கவைக்க படக்குழு தொடர்பு கொண்டது. சந்தானமும் உடனே ஓ.கே சொல்ல அடுத்த கட்ட பட வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.
ஏற்கனவே சந்தானம்-சிம்பு கூட்டணி, 'வெற்றி கூட்டணி' என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
Read more

நிறுத்தப்பட்டதா கார்த்தியின் அலெக்ஷ்பாண்டியன்?

 கார்த்தி சந்தானம் நடிப்பில் உருவாகிவந்த திரைப்படம் அலெக்ஷ்பாண்டியன்.
ஒழுங்காக நடைபெற்றுவந்த படப்பிடிப்பு FEFSI யின் ஸ்ரைக்கிற்கு பிறகு பாதிப்படைந்தது. தற்போது ஸ்ரைக் முடிவடைந்த நிலையில் இன்னமும் படத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் இயக்குனர் அமீரினால் ஏற்படுத்தப்பட்ட சட்டச்சிக்கல்கள் ஆகும்.
 
பருத்திவீரன் திரைப்படத்தை அமீரின் அனுமதியின்றி தெலுங்கில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டமையே இத் தடையை அமீர் ஏற்படுத்த காரணமாக அமைந்துள்ளது. தற்போது FEFSI  குழுமத்துடன் இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
 
பிஸியாக இருக்கும் நடிகர்களான கார்த்தி மற்றும் சந்தானத்தின் கால்சீட் வீணடிக்கப்பட்டு விடுமோ என்ற கவலையில் தயாரிப்பு குழு உள்ளது.
Read more

12 March 2012

தெலுங்கு ரீமேக் படம் கிரிக்கெட் வீரர் கங்குலி ஹீரோ


வங்காள மொழியில் ரீமேக் ஆகும் தெலுங்கு படத்தை கிரிக்கெட் வீரர் கங்குலி தயாரித்து நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் பின்னணியில் அமைந்த படம் 'கோல்கொண்டா ஹை ஸ்கூல்'. இப்படம் வங்க மொழியில் ரீமேக் ஆகிறது. இதில் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி 'கோல்கொண்டா ஹை ஸ்கூல்' பட தயாரிப்பாளர் ராம் மோகன் பருவு கூறும்போது,''கொல்கத்தாவில் இருந்து ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தினர் என்னை அணுகினர். அப்போது கோல்கொண்டா... படத்தை வங்க மொழியில் ரீமேக் செய்ய விரும்புவதாகவும் அதற்கான உரிமை வேண்டும் என்றும் கேட்டனர். அவர்களிடம் இதை தயாரிக்கப்போவது யார், நடிக்கப்போவது யார் என்று கேட்டேன். அவர்கள்தான் கிரிக்கெட் பின்னணியிலான கதை என்பதால் கிரிக்கெட் வீரர் சவ்ரவ் கங்குலி தயாரித்து கிரிக்கெட் கோச்சாக நடிக்க உள்ளார் என்றனர். இதையடுத்து வங்க மொழி உரிமையை விற்றேன். மற்ற எந்த மொழியிலும் ரீமேக் செய்ய உரிமை தரவில்லை. இப்படத்தை ஆங்கிலத்தில் டப்பிங் செய்ய முடிவு செய்துள்ளோம்'' என்றார். இதுபற்றி கங்குலி தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கூறும்போது,''கோல்கொண்டா... படத்தை நான் பார்க்கவில்லை. இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் யாரும் கேட்கவில்லை'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Read more

ரஜினி - கேவி ஆனந்த் படம் கையழுத்தானது?


கடந்த வாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது, கேவி ஆனந்த் இயக்கத்தில் ரஜினி நடிப்பது குறித்துதான்.

இந்த செய்தியை தயாரிப்பாளர், இயக்குநர், ரஜினி என யாருமே உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அதற்குள் மேலும் ஒரு தகவல்.

'ரஜினி - கேவி ஆனந்த் படத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. கேவி ஆனந்தின் ஆஸ்தான எழுத்தாளர்கள் 'சுபா', படத்தின் ஸ்க்ரிப்ட் பணிகளில் தீவிரமாக உள்ளார்கள்' என்பதுதான்.

இந்தப் படத்துக்கு பெயர் கூட முடிவாகிவிட்டதாம். முன்பு தள்ளி வைக்கப்பட்ட சரித்திரப்படமான அதே ராணாதான் தலைப்பு. ஆனால் இது சரித்திரக் கதை அல்ல. அதிரடி ஆக்ஷன்- பொழுதுபோக்குப் படமாம்.

இப்போதும் இந்த செய்திகளை யாரும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்க வேண்டிய சமாச்சாரம், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் நிலைமை. ஏற்கெனவே ரவிக்குமார் இயக்கத்தில் ஜக்குபாய் பூஜை போடப்பட்டு, விளம்பரமும் கொடுத்த நிலையில் கைவிடப்பட்டது. வாசு இயக்கத்தில் சந்திரமுகி வந்தது.

இப்போது ராணா!
Read more

கிசு கிசு - ஏமாற்றும் கும்பல் ஒதுங்கும் ஹீரோயின்


நல்லகாலம் பொறக்குது...
நல்லகாலம் பொறக்குது...

டாப் ஹீரோ, ஹீரோயின்களை வைச்சி படம் இயக்கின பிரகாசமான இயக்கம் நொந்துபோய் இருக்காராம்... இருக்காராம்... புது படத்துக்கு ஹீரோயின தேடும் இவருக்கு டாப் ஹீரோயினுங்க கால்ஷீட் தர தயங்கறாங்களாம். சமீபமா டோலிவுட், கோலிவுட் எதிலயும் ஹிட்டும் கொடுக்காம, பரபரப்புலயும் இல்லாம காணாமபோயிருக்கும் இவரது பேரு புது ஹீரோயின்களுக்கு தெரியவே மாட்டேங்குதாம். இதுக்கு ஒரே வழி பழைய டிரண்டுல ஏதாவது ஏடாகூட கூத்தை அரங்கேத்துனாதான் சரியா வரும்ன்னு கூட இருக்கிறவங்க ஐடியா கொடுக்கிறாங்களாம்... இருக்காங்களாம்...

தல ஹீரோவோட செகண்ட் பார்ட் படத்த அவரது பர்த்டே கிப்டா தரப்போறாருன்னு கிளப்பிவிட்றாங்களாம்... விட்றாங்களாம்... ஆனா படத்தை முடிக்கறதுக்கு இன்னும் நெறய சீன் பாக்கி இருக்காம். இதுபத்தி இயக்கத்துக்கிட்ட கேட்டா, சொல்றவங்க சொல்வாங்க. படத்தோட ரிலீஸவிட அது ஜெயிக்கணும்ன்றது முக்கியம். அதுக்கு உருப்படியான சீனுங்க தேவை அதுலதான் எங்க கவனம்னு  எஸ்ஸாகறாராம்... ஆகறாராம்...

பாவமான ஹீரோயின  வெச்சி ஒரு கும்பல் பிராடு செய்ய ஆரம்பிச்சிருக்காம்... இருக்காம்... சமீபத்துல பேஸ்புக்ல அவரோ உடலையும் இன்னொரு பெண்ணோட உருவத்தையும் வெட்டிஒட்டி வெளிநாட்டு ஆசாமிக்கு ஆசைகாட்டி பணம் கறந்துச்சாம் கும்பல். பணத்தை கொடுத்தவரு எங்க அந்த லேடின்னு வந்து நிக்க அவ திடீர்ன்னு ஓடிப்போயிட்டான்னு சொல்லி காதுல பூ சுத்திடுச்சாம். ஏமாந்த எலிமாதிரி எதுவும் சொல்ல முடியாம வெ.வாலிபர் கப்சிப்னு கிளம்பிட்டாராம்... கிளம்பிட்டாராம்...
Read more

11 March 2012

அரவான் - சரியான நேரத்தில் வெளியான மிகச்சிறந்த திரைப்படம்!

பலத்த எதிர்பார்ப்புக்களின் மத்தியில் வெளியாகி இருக்கும் ஒரு திரைப்படம் அரவான் ஆகும். அப்படத்தின் திரைப்பார்வையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
படத்தோட கதை என்ன? பசுபதி களவாணி கிராமத்துல உள்ள ஒரு களவாணி.. அவர் அசலூர்ல போய் களவாண்டு வர்றதுதான் அந்த கிராமத்து மக்களுக்குப் படி அளக்குற அரிசி.. அவர் மதிப்பு மிக்க நகைகளை கொள்ளை அடிச்சு வந்தாலும் ரொம்ப கம்மி விலைக்கு அதை எடுத்துக்கிட்டு பண்டமாற்றா கொஞ்சம் நெல் தர்றாங்க..
 
மகாராணியோட வைர நெக்லஸ் திருட்டு போயிடுது.. அதை கண்டு பிடிச்சுக்கொடுத்தா 6 மாசத்துக்கு உக்காந்து சாப்பிடற அளவு நெல் கிடைக்கும்னு சொல்றாங்க.. பசுபதி அதை தேடி போகையில் தான் ஹீரோ ஆதி சகவாசம் கிடைக்குது.. ஆதியும் ஒரு களவாணி தான்.. அவர் தான் அந்த நகையை களவாண்டவர்..
 
அந்த நகையை மகா ராணியிடம் ஒப்படைச்சு கிராம மக்களுக்கு நெல் வாங்கி தர்றாரு பசுபதி.. ஆதி பசுபதி கூடவே கூட்டு சேர்ந்துடறார்..
 
ஆதி ஆரம்பத்துல தன்னை அநாதைன்னு சொல்லிக்கறார்.. ஆனா ஒரு கட்டத்துல அவருக்கு குடும்பம் இருக்கு.. அவர் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதின்னு தெரிய வருது.. இடை வேளை..
 
ஃபிளாஸ் பேக் கதை.. ஆதியோட ஊர்ல யாரோ ஒரு டெட் பாடியை கொண்டு வந்து போட்டுடறாங்க.. அசலூர்க்காரனோட டெட் பாடியை அடையாளம் கண்டுக்க அக்கம் பக்கம் ஊர்க்கெல்லாம் ஆள் அனுப்பி காட்டறாங்க/.. அந்த டெட் பாடி பரத்.. அவரோட அண்ணன்க்கும் ஆதியோட ஊர்க்கும் ஆல்ரெடி தகறாரு.. இரண்டு ஊர்க்கும் பயங்கர கை கலப்பு வர்ற சூழல்.. பரத்தோட அண்ணன் வேணும்னே என் தம்பியை ஊர் மக்கள் கூடி கொன்னுட்டீங்கன்னு சொல்றார்.. பழிக்கு பழி எடுக்கனும்கறார்.
ராஜா ( கதை நடக்கற கால கட்டம் 18ஆம் நூற்றாண்டு) என்ன தீர்ப்பு சொல்றார்ன்னா ஆனது ஆகிடுச்சு.. ஆதியோட ஊர்க்காரங்க இறந்து போன பரத்க்கு ஈடாக அதே வயசுள்ள ஒரு இளைஞனை பலி கொடுக்கனும்கறார்.
 
5 இளைஞர்களை தேர்ந்தெடுத்து அதுல இருந்து ஆதியை பலி ஆள் ஆக்க முடிவு பண்றாங்க.. ஆதிக்கும், ஹீரோயினுக்கும் ஆல்ரெடி லவ்,.,. பலி ஆக இன்னும் 30 நாள் டைம் இருக்கு.. அதுக்குள்ள மேரேஜ் பண்ணி அட்லீஸ்ட் 30 நாளாவது. வாழ்ந்திடனும்னு நினைக்கறாங்க.. மேரேஜ் ஆகுது..
இனிமே கதை பி கே பி நாவல் மாதிரி க்ரைம் இன்வெஸ்டிகேஷன்ல போகுது.. ஆதி உண்மையான கொலையாளீயை தேடி போறார்.. பரத்தும், அஞ்சலியும் லவ்வர்ஸ்.. அது அஞ்சலியோட அப்பாவுக்கு பிடிக்கலை.. அவர் கொன்னிருப்பாரா?ன்னு பார்த்தா அவர் இல்லை..
தொடர்ந்த விசாரணைல பரத் அரண்மனைக்கு போனது தெரிய வருது.. வாசனைத்திரவியம் விற்கும் வியாபாரியா போய் சின்ன மகாராணியை சந்திச்சிருக்கார்.. சின்ன மகாராணிக்கு மன்னர்  மேல ஆல்ரெடி செம காண்டு.. அதாவது அவரது காதலனை முடிச்சுட்டு பலவந்தமா கூட்டிட்டு வந்தாரு.. ஆனாலும் கில்மா நடக்கலை..
 மகாராணி மன்னரை   பழி வாங்க பரத் கூட கில்மா பண்ணிடறார்.. இந்த மேட்டர் மன்னனுக்கு தெரிய வருது.. அவர் தானே போய் பரத்தை கொலை செஞ்சுடறார்..
 
இந்த மேட்டர் தெரிஞ்சதும் ஆதி மன்னரை கட்டி கூட்டிட்டு வர்ற வழில ஒரு விபத்து.. அருவில குதிச்சு மன்னர் தற்கொலை.. ஆதிக்கு கால்ல அடிபட்டு நடக்க முடியாத சூழல்..
 
பலி ஆள் தேடி ஆள் வந்தாச்சு , ஆனா பலி ஆள் காணோம்.. அதனால ஆல்டர்ந்நேட்டிவ்வா வேற ஒரு ஆளை பலி குடுக்கறாங்க..
 
ஆதி கிராமம் வர்றார்.. உண்மை தெரிஞ்சதும் ஆதியோட மாமனார் நடந்தது நடந்துடுச்சு நீங்க 10 வருஷங்கள் எங்காவது தலைமறைவா இருங்க.. கிராம வ்ழக்கப்படி 10 வருஷம் கழிச்சு பலி ஆள் வந்தா மன்னிச்சுடுவாங்க அப்டிங்கறார்..
 
அதுக்காகத்தான் ஆதி தலை மறைவா வாழ்றார்.. ஃபிளாஸ் பேக் முடியுது..
 
ஆனா 9 வது வருஷத்துலயே ஆதியை கண்டு பிடிச்சிடறாங்க.. என்ன நடக்குது? அப்டிங்கறதை மனதைத்தொடும் விதத்தில் படமாக்கி இருக்காங்க.
 
படத்தில் முதல்ல பாராட்ட வேண்டியது ஆர்ட் டைரக்‌ஷன்.. 18 ஆம் நூற்றாண்டு மனிதர்களீன் ஆடை, அணிகலன்கள், வீடு எல்லாம் நேர்த்தி.
 
இசை புது முகம் என்பது நம்ப முடியவில்லை.. செம 4 பாடல்கள் எல்லாமே கேட்கற மாதிரி இருக்கு..
 
ஒளிப்பதிவு அருமை.. களவு செய்ய ஆட்கள் போறப்ப கூடவே நாமும் போற மாதிரி ஃபீலிங்க்..
 
நடிப்பு செக்‌ஷன்ல ஆதி முதல் இடம்.. சிக்ஸ் பேக் பாடி.. அசால்ட்டான நடிப்பு.. என மனிதர் கலக்கிட்டார்.. ஆல்ரெடி மிருகம், ஈரம்ல கலக்கினவர் தானே?
 
பசுபதி சொல்லவே வேணாம்.. வெயில் அளவு சான்ஸ் இல்லைன்னாலும் இடைவேளை வரை இவர் தான் ஹீரோவா? என்று கேட்கும் அளவு பின்னிட்டார்..
 
ஹீரோயின் தன்ஷிகா உடல் வாகு, கண்கள், பார்வை என மனதில் தங்கும் பெண்னாகிறார்.. நல்ல எதிர்காலம் உண்டு.
 
சீரியசான கதையில் சிங்கம்புலியின் கொளுந்தியா , மச்சினி காமெடி கலகலப்பான பார்ட்.
Read more

08 March 2012

அம்புலி 3 டி - சினிமா விமர்சனம்

நடிகர்கள்: பார்த்திபன், அஜய், ஸ்ரீஜித், தம்பி ராமையா, சனம், ஜோதிஷா அம்மு, ஜெகன், கோகுல்
இசை: வெங்கட் பிரபு சங்கர், சாம், சதீஷ், மெர்வின்
பிஆர்ஓ: மவுனம் ரவி
ஒளிப்பதிவு: சதீஷ் ஜி
எடிட்டிங்: ஹரி சங்கர்
எழுத்து - இயக்கம்: ஹரி சங்கர் - ஹரீஷ் நாராயணன்.
தயாரிப்பு: கேடிவிஆர் லோகநாதன்




 

தமிழின் முதல் ஸ்டீரியோஸ்கோப் 3 டி படம் என்ற அறிமுகத்தோடு வந்திருக்கிறது அம்புலி.


மனோஜ் ஷியாமளனின் 'வில்லேஜ்' மாதிரி ஒரு த்ரில்லர் கதையை 3 டியில் சொல்ல முயன்றிருக்கிறார்கள் புதிய இயக்குநர்கள் ஹரி சங்கர் - ஹரீஷ் நாராயணன்.

இந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் அவர்களுக்குக் கிட்டியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். க்ளைமாக்ஸை இன்னும் புத்திசாலித்தனமாக, மிரட்டலாக அமைத்திருந்தால் இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு.

எழுபதுகளின் இறுதியில் நடக்கிறது கதை. கிராமத்தையொட்டியுள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் வேந்தன் (ஸ்ரீஜித்) அமுதன் (அஜய்) இருவரும், கோடை விடுமுறைக்கு கூட ஊருக்குச் செல்லாமல் கல்லூரி வாளகத்திலேயே தங்கிவிடுகின்றனர். வேந்தனின் தந்தை தம்பி ராமையாதான் அந்தக் கல்லூரி வாட்ச்மேன். அமுதனுக்கு பக்கத்து கிராம பஞ்சாயத்து தலைவர் பெண் மீது காதல். இந்த விடுமுறையில் காதலைச் சொல்ல அங்கேயே தங்கிவிடுகிறான்.

ஒரு இரவு நண்பன் துணையுடன் தன் காதலியைப் பார்க்கச் செல்கிறான். இந்த கிராமத்திலிருந்து பக்கத்து கிராமத்துக்கு செல்ல ஒரு சோளக்காட்டு குறுக்கு வழி உண்டு. ஆனால் அந்த வழியாக யாரும் செல்லப் பயப்படுவார்கள். காரணம் அம்புலி. அம்புலி ஆளை அடித்து கொன்றுவிடும் என்ற பயம். அதற்காகவே சோளக்காட்டுக்கு குறுக்கே தடுப்பு சுவரெழுப்பி வசிக்கிறார்கள் கிராமத்தினர்.

ஆனால் அந்த பயமின்றி, நண்பனை தடுப்பு சுவர் அருகில் நிற்கவைத்துவிட்டு நிலா இரவில் காதலியைப் பார்க்கப் போகிறான் அமுதன். போகும்போது பிரச்சினையில்லை. வரும்போது அவனை நடுங்க வைத்துவிடும் அளவு திகிலான நிகழ்வுகள் நடக்க அலறிப் புடைத்துக் கொண்டு வருகிறான் அமுதன்.

தனக்கு நேர்ந்ததை நண்பனிடம் சொல்ல, அதைக் கேட்கும் தம்பி ராமையா அம்புலியின் கதையைச் சொல்கிறார்.

ப்ளாஷ்பேக்கில் கர்ப்பிணியான உமா ரியாஸுக்கு குழந்தை பிறக்கிறது. பிறக்கும்போதே மிருகமாகப் பிறக்கும் அந்தக் குழந்தை, மருத்துவம் பார்த்த பெண்ணின் கழுத்தைக் கடித்துக் கொன்றுவிடுகிறது. ஊர் பயந்து நடுங்குகிறது. அந்த குழந்தையை கொல்லச் சொல்லி வற்புறுத்த, கொல்ல மனமின்றி, புறவாசல் பக்கம் இருக்கு சோளக்காட்டுக்கு துரத்திவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்கிறார் உமா. அந்தக் குழந்தை வளர்ந்து அம்புலியாகி, மனிதர்களை அடித்துக் கொன்று சாப்பிடும் அளவுக்குப் போய்விட்டதாக தம்பி ராமையா சொல்கிறார். இந்த அம்புலியுடன் பிறந்தவரான பார்த்திபன் மட்டும் அம்புலிக்குப் பயப்படாமல் சோளக்காட்டுக்கு நடுவில் குடிசை கட்டி வசிக்கிறார்.

ஒரு பெண்ணின் வயிற்றில் இப்படியொரு மிருகம் தோன்ற காரணம் என்ன என்பது இன்னொரு கிளைக்கதை. இந்த அம்புலியை எப்படி அழித்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

தமிழில் சில காட்சிகளைத்தான் இதற்கு முன்பு 3 டியில் காட்டினார்கள். ஆனால் இந்தப் படத்தில் அனைத்துக் காட்சிகளுமே 3 டி. சில காட்சிகளில் ஈட்டி கண்ணைக் குத்திவிடுமோ என சட்டென்று கண்ணாடியைக் கழட்டுமளவுக்கு அசத்தல்.

மகள் சொல்லச் சொல்ல கேட்காமல் சோளக்காட்டுக்கு நடுவில் குடித்துவிட்டு தடுமாறிக்கொண்டே அடமாக மொட்டை ராஜேந்திரன் நடக்கும் அந்தக் காட்சியே கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது.

ஆனால் சில காட்சிகள் தொடர்பற்றுத் தெரிவதால், குழப்பங்கள், கேள்விகள். பார்த்திபன் பாத்திரம் மிரட்டலாக இருந்தாலும், அந்தப் பாத்திரம் அம்புலியைக் கொல்ல வருவது எதனால் என்பதில் தெளிவில்லை.

அம்புலி என்ற அந்த கேரக்டருக்கு படம் முழுக்க அவ்வளவு பில்ட் அப் கொடுத்துவிட்டு, கடைசியில் மனிதக்குரங்கை விட சற்று பெரிய சைஸ் உருவத்தைக் காட்டி, இதுதான் அத்தனை கொலைகளுக்கும் காரணமான அம்புலி எனும்போது சப்பென்றாகிவிடுகிறது, அந்த சஸ்பென்ஸ்.

குறைகள் சில இருந்தாலும், ஒரு வித்தியாசமான முயற்சி என்ற வகையில் இந்தப் படத்தை பாராட்டத்தான் வேண்டும். அதுவும் எந்த வெளிநாட்டு கலைஞர்களின் துணையுமின்றி, கோடம்பாக்கத்திலேயே இத்தனை நுட்பமாக 3டி படம் காட்டியிருப்பது சாதாரண விஷயமல்ல.

வெறும் 'ஹார்ரர்' வகைப் படமாகக் காட்டாமல், விஞ்ஞான ஆராய்ச்சி என்ற பெயரில் நடக்கும் விபரீதங்களைத் தவிர்ப்போம் என்ற மெசேஜும் படத்தில் உண்டு.

ஹீரோக்கள் என்று யாரையும் சொல்ல முடியாது. எல்லோருமே முக்கிய பாத்திரங்கள்தான். இவர்களில் பார்த்திபன் அசத்தலாக செய்திருக்கிறார். என்ன அவரது தோற்றம்தான் ஆயிரத்தில் ஒருவனை நினைவுபடுத்துவதாக உள்ளது.

புதியவர்கள் ஹரீஷ், ஸ்ரீஜித், கோகுல், சனம், ஜோதிஷா அம்மு என அனைவருமே சரியாக செய்திருக்கிறார்கள் தங்கள் பாத்திரங்களை. தம்பி ராமையா வழக்கம் போல அருமையான நடிப்பைத் தந்துள்ளார்.

ஜெகன்தான் படத்தில் அம்புலியை உண்மையில் கண்டுபிடிப்பவர். சிறப்பாக செய்துள்ளார். அம்புலியாக கோகுல் நடித்துள்ளார்.

நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்த படம். இரண்டு பாடல்கள் ஓகே. பின்னணி இசை நன்றாக உள்ளது. ஒளிப்பதிவுதான் படத்துக்கு உண்மையான ஹீரோ. அந்த சோளக்காட்டை காட்டிய விதத்திலேயே பாதி பயத்தை மனதில் விதைத்துவிடுகிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ் ஜி. ஹரி சங்கரின் எடிட்டிங் கச்சிதம். படத்தை இரண்டரை மணி நேரத்துக்குள் முடித்திருப்பது இன்னொரு ப்ளஸ்.

முதல் பரீட்சையே கடினமானதாக அமைந்திருந்தாலும், விருப்பத்தோடு செய்திருப்பதால் பார்வையாளர்களிடம் பாஸ் மார்க்கோடு, பாராட்டுகளையும் பெறுகின்றனர் புதிய இயக்குநர்கள்!
Read more

கமலில் விஸ்வரூபம் சாதிக்குமா?? - இன்னும் 12 நாட்களே!

கேன்ஸ் பட விழாவில் விஸ்வரூபம் படத்தை திரையிட கமல்ஹாசனுக்கு விழா குழு நிபந்தனை விதித்துள்ளது. எழுதி, இயக்கி, கமல்ஹாசன் நடிக்கும் படம் விஸ்வரூபம். தீவிரவாதம் தொடர்பான பின்னணியில் இப்படக் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசனுடன் ஆண்ட்ரியா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஷங்கர்-எஹசான்-லாய் இசையமைக்கிறார். பட ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை கேன்ஸ் பட விழா குழுவினருக்கு கமல்ஹாசன் திரையிட்டு காண்பித்தார். இதை பார்த்த குழுவினர், இப்படத்தை பட விழாவில் திரையிடலாம் என அனுமதி வழங்கிவிட்டது.
ஆனால் மார்ச் 15ம் தேதிக்குள் பட பிரின்ட் எங்களுக்கு வேண்டும் என கமல்ஹாசனுக்கு விழா குழு நிபந்தனை விதித்துள்ளது. இதனால் பட யூனிட் அதிர்ச்சி அடைந்துள்ளது. இது பற்றி கமல்ஹாசன் கூறும்போது, விஸ்வரூபம் படத்தை 9 பேர் அடங்கிய விழா குழு பார்த்தது. கிரிஸ்டியன் ஜெவ்ன் என்பவருடன் தொடர்ந்து பேசி வருகிறேன். அவரும் பட வேலைகள் பற்றி அவ்வப்போது கேட்டு அறிந்துகொள்கிறார். கேன்ஸ் பட விழாவில் விஸ்வரூபம் திரையிடப்பட்டால் அது சந்தோஷமாக இருக்கும் என்றார். விழா குழு அளித்த நிபந்தனைபடி இன்னும் 14 நாட்களே இருப்பதால் அதற்குள் படத்தை முடிக்க கமல் அண்ட் கோ தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேரடி டப்பிங்குடன் ஷூட்டிங் நடப்பதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவித்தன.
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner