கணினியில் பணிபுரிபவர்களுக்கு
Showing posts with label கணினி (Computer). Show all posts

18 October 2013
கணினியில் பணிபுரிபவர்களுக்கு -- கணிணிக்குறிப்புக்கள்
26 September 2013
தங்களின் கணினியில் மவுஸ் வேலை செய்யவில்லையா கவலை வேண்டாம்!
| தங்களின் கணினியில் மவுஸ் வேலை செய்யவில்லையா கவலை வேண்டாம்! |
- 1. தங்களின் கீ-போர்டில் SHIFT கீயை 5 முறை அழுத்துங்கள். தொடர்ந்து,
- 2.தற்போது தங்களின் விண்டோவில் S STICKY KEYSTIஎன்னும் ஓர் சிறிய திரை தோன்றும். அதில் SETTINGS என்பதைனை கிளிக் செய்யவும்.
- 3.பின்னர் தோன்றும் திரையில்MOUSE என்பதைனை கிளிக் செய்யவும். உதவிக்கு மேலே உள்ள புகைபடத்தை காணவும்.
- 4. பின்னர் USE MOUSE KEYS என்பதில் டிக் மார்க் அடையாளத்தை ஏற்ப்படுத்தவும். பின்னர் APPLY---OK என்பதைனை தந்து வெளியேறவும்.
- 5.தாங்கள் மேற்கொள்ள வேண்டிய முறை முடிந்தது.
இனி தங்களின் கீபோர்டினை எப்படி மவுஸ் ஆக பயன்படுத்துவது என காணலாம்.
- 1.தங்களின் மவுஸ் கர்சர் மேலே நகர்த்த வேண்டும் என்றால், தங்களின் கீபோர்டில் வலதுகை ஓரமாக இருக்கும் நம்பர் பட்டன்களில் 8 என்பதை அழுத்தவும்.
- 2.கீழே நகர்த்த வேண்டுமென்றால்-0
- 3.இடதுகை (LEFT)ஓரமாக நகர்த்த வேண்டுமென்றால்-4
- 4.வலதுகை(RIGHT) ஓரமாக நகர்த்த வேண்டுமென்றால்-6
இணையத்தில் தாங்கள் விரும்பும் பக்கங்களை PDF பைலாக பெற...
![]() |
| இணையத்தில் தாங்கள் விரும்பும் பக்கங்கள் PDF பைலாக பெற |
இந்த இணைய தளத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும்:
06 August 2013
COMPUTER n EYES – கணிணியும் கண்ணும் - ஹெல்த் ஸ்பெஷல்
அதிக நேரம் கணிப்பொறிக்கு முன்னால் கண் விழித்திருப்பவர்களை பல விதமான நோய்கள் பிடிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கண் உலர்தல். இமைக்கக் கூடச் செய்யாமல் கணினியே கதியெனக் கிடைக்கும் மக்களை, இந்த நோயை விரும்பி அழைப்பவர்கள் பட்டியலில், சேர்த்துக் கொள்ளலாம்.
கணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களின் கண்கள் அதிக அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இத்தகைய சூழலில் வேலை செய்யும் கண்களுக்கு டிரை ஐ சிண்ட்ரோம் எனப்படும் கண் உலர்தல் நோய் விரைவிலேயே வந்து விடுகிறது.அதன் விளைவுகளாக கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி போன்ற இணைப்புகள் கூடவே வந்து விடும். என்கின்றனர் மருத்துவர்கள்.
கண்ணில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து போவது தான் டிரை ஐ சிண்ட்ரோம் அல்லது கண் உலர்தல் நோயின் ஒரு வரி விளக்கம். இது எளிதான நோய் எனக் கருதி விட்டு விட்டால் இரும்பை துரும்பு அரித்து தீர்ப்பது போல இந்த நோய் நிரந்தரமாகவே கண் பார்வையைப் பறித்துக் கொள்ளும் அபாயம் உண்டு.
கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் வலி, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு இந்த நோய் இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாய் இருத்தல் பெரும் இன்னலைத் தீர்க்கும்.
பெருநகரங்களில் வாழும் மக்கள் தான் இந்த கண் உலர்தல் நோயினால் அதிகம் பாதிப்படைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் அவர்கள் தான் அடிக்கடி கணினியே கதியெனக் கிடைக்கிறார்கள்.
கணினியில் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் போது குளிர்க்காற்று படும் இடத்தில் நேரம் இருப்பது கூட கண் உலர்தலுக்குக் காரணமாகி விடுமாம். கண் உலர்தலிலிருந்து தப்பிக்கும் சுலப வழிகள் கண்ணை அடிக்கடி இமைத்துக் கொண்டே இருப்பதும், தொடர்ந்து கணினியைப் பார்க்காமல் இருப்பதும் தான்.
கணினி பயன்படுத்தும் போது அடிக்கடி கண்ணை இமைத்துக் கொண்டே இருப்பது கண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கும். குளிர் கண்ணாடிகளை அணிந்து பயணம் செய்வதும் கண்ணைப் பாதுகாக்கும்.
FUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும் - கணிணிக்குறிப்புக்கள்
கணனி
விசைப் பலகையின் மேல் வரிசையில் F1, F2 என பெயரிடப்பட்ட 12 விசைகள்
இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இவை (Function Keys) பன்ங்ஷன் கீஸ்
எனப்படுகின்றன. இந்
த பன்ங்ஷன் விசைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளன.
இந்த
பன்ங்ஷன் விசைகள் பயன்படுத்தப்படும் இயங்கு தளத்திலும் எப்லிகேசன்
மென்பொருளிலுமே சார்ந்திருக்கின்றன. அதாவது இவை எல்லா எப்லிகேசன்களிலும்
எல்லா இயங்கு தளங்களிலும் ஒரே மாதிரியாகத் தொழிற்படுவதில்லை. அதேவேளை சில
விசைகள் சில எப்லிகேசன்களில் தனியாக தொழிற்படுவதோடு வேறு சில விசைகள் ALT
மற்றும் CTRL விசைகளோடு சேர்த்தே இயக்கப்படும். உதாரணமாக விண்டோஸ் இயங்கு
தளத்தில் ALT + F4 விசைகளை அழுத்துவதன் மூலம் இயக்கத்திலிருக்கும் ஒரு
எப்லிகேசனை நிறுத்திவிட முடியும்.
விண்டோஸ் இயங்கு தளத்தில் மேலே குறிப்பிட்டது போல் எல்லா எப்லிகேசன்களும் பங்ஷன் விசைகளை ஆதரிப்பதில்லை. அதேவேளை சில விசைகள் எந்த செயற்பாடுகளும் வழங்கப்படாமலும் உள்ளன.
பங்க்ஷன் விசைகளில் சில பொதுவான தொழில்கள் கீழே விவரிக்கப்படுகின்றன.
F1
இந்த விசை அனேகமாக எந்த எப்லிகேசனிலும் அதற்குரிய உதவிக் குறிப்புகளடங்கிய பைலை வரவழைக்கும். அதேவேளை எந்த எப்லிகேசனும் திறக்கப்படாத நிலையில் இந்த விசையை அழுத்தும் போது விண்டோஸ¤க்குரிய ஹெல்ப் பைல் திறந்து கொள்ளும். எம். எஸ். வர்ட்டில் இந்த விசையை அழுத்த டாஸ்க் பேன் (Task Pane) திறந்து கொள்ளும் அதிலிருந்து உதவிகள் பெறலாம்.
F2
விண்டோஸில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு பைலின் அல்லது போல்டரின் பெயரை மாற்ற (rename) இந்த விசை பயன்படும். எம். எஸ். வர்டில் Alt + Ctrl + F2 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தும் போது open டயலொக் பொக்ஸ் திறக்கும்.
F3
இதனை அழுத்தும் போது கணினியில் பைல் போல்டர்களைத் தேடித்தரும் Search விண்டோ திறந்து கொள்ளும். எம். எஸ். வர்டில் Shift + F3 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் வாக்கியமொன்றின் ஆரம்பத்தில் ஆங்கில பெரிய எழுத்தில் (upper case) உள்ளதை சிறிய எழுத்தாகவும் (lower case) சிறிய எழுத்திலுள்ளதை பெரிய எழுத்தாகவும் மாற்றிக்கொள்ளலாம்.
F4
விண்டோஸில் எந்த தொழில்பாடையும் செய்வதில்லை. எம். எஸ். வர்டில் இறுதியாகச் செய்த வேலையை மறுபடி செய்யும் Alt + F4 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் தற்போது இயக்கத்திலிருக்கும் எப்லிகேசனை நிறுத்தி விடலாம். எப்லிகேசன் எதுவும் திறந்திறாத நிலையில் Alt + F4 விசைகளை அழுத்தி விண்டோஸ் இயக்கத்தையும் நிறுத்த முடியும்.
F5
விண்டோஸில் இந்த விசையை அழுத்தி ஒரு விண்டோவின் உள்ளடக்கத்தை Refresh செய்து புதுப்பிக்கலாம். அனேகமான வெப் பிரவுஸர்களில் ஒரு இணைய பக்கத்தைப் புதுப்பிக்கவும் இந்த விசையே பயன்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட பக்கத்தை மறுபடி ஆரம்பத்திலிருந்து தோன்றச் செய்யலாம். எம். எஸ். வர்டில் இந்த விசை அழுத்தி Find & Replace டயலொக் பொக்ஸை வரவழைக்கலாம். எம். எஸ். பவர் பொயிண்டில் இந்த விசையை அழுத்தி ஸ்லைட் ஷோவை இயக்க முடியும்.
F6
இண்டர் நெட் எக்ஸ்ப்லோரர் மற்றும் மொஸில்லா பயபொக்ஸ் பிரவுசர்களில் கர்சரை எட்ரஸ் பாரை நோக்கி நகர்த்தலாம் Ctrl + Shift + F6 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் திறந்து வைத்துள்ள எம். எஸ். வார்ட் ஆவணங்களில் மாறிக்கொள்ள
F7
எம். எஸ். வர்ட் மற்றும் பவர்பொயின்ட் மென் பொருள்களில் எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் கண்டறிந்து சரி செய்யக் கூடிய டயலொக் பொக்ஸ் தோன்றும்.
F8
இந்த இசையை விண்டோஸ் இயங்க ஆரம்பிக்கும் முன்னர் அழுத்துவதன் மூலம் விண்டோஸ் ஸ்டாட்-அப் மெனுவை வரவழைக்கலாம். விண்டோஸ் ஆரம்பிப்பதில் சிக்கல் தோன்றும் போது அதனை சேப் மோடில் (Safe Mode) இயக்க இந்த விசையே பயன்படுத்தப்படுகிறது-
F9
இந்த விசையை அழுத்தும் போது விண்டோஸில் எந்த இயக்கமும் நடைபெறாது.
F10
விண்டோஸில் திறந்திருக்கும் எந்த எப்லிகேசனிலும் மெனுபாரை இயக்க நிலைக்கு மாற்றி (activate) அதன் மூலம் கீபோர்டைக் கொண்டே மேலும் தெரிவுகளை மேற்கொள்ளலாம். அத்தோடு Shift + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் ரைட் க்ளிக் செய்யும் போது தோன்றும் கண்டெக்ஸ்ட் மெனுவை வரவழைக்கலாம்.
F11
அனேகமான இணையை உலாவிகளில் (வெப் பிரவுஸர்) முழுத் திரையைத் தோன்றச் செய்யும்.
F12
எம். எஸ். வர்டில் ஷிavலீ as விண்டோவை வர வழைக்கும். அத்தோடு Shift + F12 விசைகளை அழுத்தும் போது வர்டில் ஆவணமொன்று சேமிக்கப்படும். Ctrl + Shift + F12 விசைகளை அழுத்தி Print டயலொக் பொக்ஸை வரவழைக்கும்.
விண்டோஸில் எல்லா பங்க்ஷன் விசைகளும் பயன்படுவதில்லை என்பதை இப்போது நீங்கள் புரிந்திருக்கலாம். (உதாரணம் F9) எனவே இதனை சாதகமாகப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் ஒரு எப்லிகேசனுக்கு அந்த விசையை ஒதுக்கிவிட முடியும். அதன் மூலம் குறிப்பிட்ட அந்த பங்ஷன் விசையை அழுத்தி ஒரு எப்லிகேசனைத் திறந்து கொள்ளலாம். அதற்குப் பின்வரும் வழிமுறைகளைக் கையாளுங்கள்.
டெஸ்க் டொப்பில் அல்லது ஸ்டார்ட் மெனுவில் இருக்கும் நீங்கள் விரும்பிய எப்லிகேசனுக்குரிய ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்று டயலொக் பொக்ஸில் Shortcut டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Shortcut Key எனுமிடத்தில் நீங்கள் விரும்பிய பங்க்ஷன் கீயை அழுத்தி ஒகே செய்து விடுங்கள் .

கணிணியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி?
கணிணி பயன்படுத்தும் அனைவரும் எதிர் நோக்கும் பிரச்சினை வைரஸ் தாக்கம், windows file corrupted. கணிணி வேகம் குறைதல் இவ்வாறு பிரச்சினைகள் தரும் போது கணனி பாவனையாளர்கள் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம் Format Hard Disk , சரி Format செய்தவுடன் கணிணி பழைய நிலைக்கு வரும் என்று பார்த்தால் அதுவும் நடக்காது.
Sound
file open செய்வர்கள் சத்தம் வெளியே வராது, இன்டெர் நெட் open
பன்னுவார்கள் cannot find page தோன்றும்,Games Open செய்தால் அதுவும்
இயங்காது, காரணம் அதற்கான Drivers Install செய்திருக்கமாட்டார்கள்
பின்னர் கைவசம் இல்லாத Drivers களை Download செய்ய தனது நேரத்தை
செலவழிப்பர்கள்.
இப்படியான பிரச்சினையை தீர்க்க வடிவமைக்கப்பட்ட மென்பொருள் Driver Max.
இதை பயன்படுத்தி உங்கள் கணனியில் இருந்து Drivers backup செய்துகொண்டு Format செய்தவுடன் மீண்டும் நிருவமுடியும்.

இதை எவ்வாறு பயன்படுத்துவது என கிழே உள்ள படிமுறையை பாருங்கள்
இந்த மென்பொருள் install செய்தவுடன். open செய்யவும்.
முதல் பக்கம் தோன்றும். பின்னர் உங்கள் கணிணியில் நிருவப்பட்டிருக்கும் Drivers Analysis செய்து அதன் பட்டியல் தரும்.
அதில் தேவையான Drivers அல்லது Select All தெரிவு செய்யமுடியும்
click next
கிழே உள்ள படத்தில் போன்று தோன்றும் பெட்டியில் எந்த Format இல் எங்கே Save செய்ய வேண்டும் என்று தெரிவு செய்யவும்.

பின்னர் கணனியில் நிருவப்பட்டிருக்கும் drivers களை backup செய்ய சிறிது நேரம் எடுக்கும்
backup எடுதவுடன் Save செய்த தொகுப்பை திறந்து பார்க்க முடியும்.
backup
செய்த Driver தொகுப்பை உங்கள் Pen Drive இல் அல்லது DVD இல் எடுத்து
கவனமாக வையுங்கள்.தேவைபடும் போது இலகுவாக பயன்படுத்தலாம்.
Download
01 May 2013
உங்கள் கோப்புறைகளுக்கு (Folder) ஒன்றை கடவுச்சொல்(password) கொடுத்து மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
கோப்புறைகளுக்கு கடவுச்சொல் கொடுத்து மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுக்க வேண்டுமா?
உங்கள்
கோப்புறைகளுக்கு (Folder) ஒன்றை கடவுச்சொல்(password) கொடுத்து
மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று
விரும்புகிறீர்களா?
அதற்கு
இரண்டு வழிகள் தரப்பட்டுள்ளன. Windows operating System க்கு என சில
இலவசமாக தரவிறக்கம்(Download) செய்து பயன்படுத்தும் நிரல்களும் உள்ளன.
1.
உங்கள் அலுவலகக் கணனியில் உங்களுக்கென பயனர் கணக்குடன்(user Account)
கடவுச்சொல் உள்ளதாக இருந்தால், அதன் File System என்.டி.எப்.எஸ்(NTFS) ஆக
இருக்கும்.
2.
இனி எந்த கோப்புறைக்கு கடவுச்சொல் கொடுக்க வேண்டுமோ, அதன் மீது Right
Click செய்திடவும். பின் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது Alt
அழுத்தியவாறே Double Click செய்திடவும்.
3.
கிடைக்கும் விண்டோவில் Sharing என்று உள்ள Tab ஐத் தேர்ந்தெடுக்கவும்.
அதில் Make this Folder Private என்று உள்ளதை தேர்ந்தெடுக்கவும்.
4.
பின் Apply என்பதில் சொடுக்கவும். உங்களுடைய கணக்குக்கு கடவுச்சொல் இல்லை
என்றால், ஒரு சிறிய பெட்டிச் செய்தி வரும். கடவுச்சொல் ஒன்றை
தரப்போகிறீர்களா? என்று கேட்கப்படும். உங்கள் கோப்புறையை நீங்கள் Private
ஆக மாற்ற வேண்டும் என்றால் இந்த கடவுச்சொல்லினைக் கட்டாயம் கொடுத்தே
ஆகவேண்டும். இவ்வாறு கொடுத்துவிட்டால் பின் கணனியில் உங்கள் கணக்கில்
நுழைகையிலும் அதே கடவுச்சொல்லினை கொடுக்க வேண்டியதிருக்கும்.
5. கடவுச்சொல் ஒன்றைக் கொடுத்துப் பின் அதனை உறுதிப்படுத்தவும். பின் Create Password என்பதை அழுத்தி கடவுச்சொல் விண்டோவினை மூடவும்.
6. பின் Properties எனும் Dialog Box இல் OK என அழுத்தவும். இனி உங்கள் கடவுச்சொல் இல்லாமல் இந்த கோப்புறையை யாரும் திறக்க முடியாது.
இரண்டாவதாக
ஒரு வழி: இந்த கோப்புறை Zip செய்யப்பட்டிருந்தால் அதற்கு தனியாக
கடவுச்சொல் ஒன்றினைக் கொடுக்க முடியாது. இதற்கு Zip செய்யப்பட்ட கோப்புறை
மீது இருமுறை அழுத்திடவும். மேலாக உள்ள பட்டியலில்(menu) File
தேர்ந்தெடுத்து, பின் Add a Password என்பதில் சொடுக்கவும். கடவுச்சொல்
பெட்டியில் கடவுச்சொல் ஒன்றை கொடுக்கவும். மீண்டும் Confirm Password
பெட்டியிலும் இதனை கொடுக்கவும். இனி இந்த கோப்புறையை நீங்கள் மட்டுமே
கடவுச்சொல் பயன்படுத்திப் பார்க்க முடியும்
09 April 2013
கேள்வி பதில்கள் - கணிணிக்குறிப்புக்கள்.
கேள்வி: மானிட்டரில் தெரியும் விண்டோவில் வலது மேல் மூலையில் உள்ள
கட்டங்களைப் பெரிதாக அமைக்க முடியுமா? ஏனென்றால் பல வேளைகளில் நான் மாற்றி
அழுத்திவிடுகிறேன்.
பதில்: தாராளமாக மாற்றலாம். ஆனால் அதற்கேற்றார்போல் மேலே உள்ள டைட்டில் பாரும் பெரிதாகத் தோற்றமளிக்கும். சரியா! முதலில் திரையில் காலி இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள்.
கிடைக்கும் மெனுவில் Appearance tab என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். சில சிஸ்டங்களில் Advanced என்று இருக்கும். இதில் Item என்ற பிரிவில் பின்னர் கிளிக் செய்திடவும். இதில் நீங்கள் குறிப்பிட்ட கட் டங்களின் அளவை பெரிதாக்கவும் சிறிதாக்கவும் வசதி தரப் பட்டிருக்கும். இங்கே உள்ள அம்புக்குறியினை மேல் நோக்கி அல்லது கீழ் நோக்கி அழுத்தினால்
கட்டங்கள் பெரிதாகவும் சிறிதாகவும் மாறும் நீங்கள் தேவைப்படும் அளவிற்கு பெரிதாக ஆக்கலாம்.
கேள்வி: எக்ஸெல் தொகுப்பில் நெட்டு மற்றும் படுக்கை வரிசைகளுக்கு எண்கள் மற்றும் எழுத்துக்கள் கலந்த பெயர்கள் தரப்படுகின்றன. ஆனால் அதற்குப் பதிலாக நம் இஷ்டப்படி பெயர்களை வழங்கலாமா? இதனால் இந்த செல்களை நாம் கணக்கு வழக்கில் கையாளுகையில் கணக்கில் தவறு ஏற்படுமா?
பதில்: செல்களுக்குப் பெயர்களைச் சூட்டலாம். இதற்கு எக்ஸெல் இடமளிக்கிறது. பார்முலாக்களைப் பயன்படுத்துகையில் இந்த பெயர்களையே சூட்டப்படும் பெயர்களையே அமைக்க வேண்டும்.
எடுத்துக் காட்டாக C1, D1, E1 செல்களில் உள்ள மதிப்புகளுக்கு முறையே Principle, Years, Interest எனப் பெயர் கொடுப்பதாக வைத்துக் கொள்ளுவோம். வட்டி கண்டு பிடிக்க =C1*D1*E1/100 என பார்முலா கொடுப்பதற்குப் பதில் = principal* Years* Interest/100 எனக் கொடுப்பது எளிதாக உள்ளதல்லவா? பெயர்களை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும்.
பார்முலா பாருக்கு பெயரை கிளிக் செய்தால் அந்த பெயருக்கான செல்லை அல்லது ரேஞ்சை எக்செல் தேர்வு செய்து விடும். பெயர் இல்லாமல், செல்லுகளின் முகவரிகளை வைத்து பார்முலா
அமைத்திருந்தால், டிராக் இல்லாமல் செல்லுகளின் முகவரிகளை வைத்து பார்முலா அமைத்திருந்தால், டிராக் செய்யும் பொழுது செல்லுகளின் முகவரிகளும் மாறி விடும். எடுத்துக் காட்டாக F1 செல்லில் = c1*D1*E1/100 என பார்முலா கொடுத்து, பின்பு F1 செல்லின் பில் ஹேண்டிலை F2 செல்லிற்கு இழுத்துச் சென்றால் அந்த பார்முலா = C2*D2*E2/100 என மாறி விடும். ஆனால் பெயர்கள் கொடுத்தால் அந்த தொல்லை வராது.

இணைய வெளியில் பைல் சேமிக்க - கணிணிக்குறிப்புக்கள்.
ஹார்ட் டிஸ்க், சிடி, டிவிடி, ப்ளாஷ் ட்ரைவ் என எந்த மீடியாவில் நாம் பைல்களைப் பதிந்து சேமித்து வைத்தாலும், என்றாவது ஒரு நாள், ஏதேனும் ஒரு வழியில் அவை கெட்டுப் போய் நமக்குக் கிடைக்காமல் போகலாம். நம் ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போகாது என்ற எண்ணத்தில், பைல்களைக் கம்ப்யூட்டரிலேயே பதிந்து வைக்கிறோம். ஆனால், நகர்ந்து செயல்படும் வகையில் அது இயங்குவதால், நாம் எதிர்பாராத ஒரு நாளில், அதன் இயக்கம் முடங்கிப் போய் பைல்களை நம்மால் பெற இயலாமல் போய்விடுகிறது. என்ன செய்தாலும் பைல்கள் கிடைப்பது இரண்டாம் பட்சம் தான் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகிறது. மற்ற மீடியாக்களின் வாழ்நாளும் அதே போல் தான்.
இதற்கான பல தீர்வுகளில் ஒன்றாக கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் ஒரு தீர்வு கிடைக்கிறது. பல இணைய தளங்கள், நம் பைல்களை பதிந்து சேவ் செய்து வைத்திட வசதிகளை நமக்குத் தருகின்றன. ஓரளவில் பைல்களைச் சேமித்து வைத்திட இந்த வசதி இலவசமாகவே தரப்படுகிறது. இந்த வகையில் சி.எக்ஸ் (cx) என்னும் இணைய தளம் இயங்குகிறது.
இந்த தளத்தின் இணைய முகவரி: http://www/cx.com. இந்த தளம் சென்று, நம் மின்னஞ்சல் முகவரி, யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வருக்கும் 10 ஜிபி இடம் தரப்படுகிறது. பதிந்தபின், இந்த தளத்தில் லாக் இன் செய்து, நாம் பதிந்து சேவ் செய்திட விரும்பும் பைல்களை, நம் கம்ப்யூட்டரிலிருந்து அப்லோட் செய்திடலாம். மிக எளிதாக இதனை மேற்கொள்ளலாம். நாம் எத்தனை பைல்களை அப்லோட் செய்துள்ளோம் என்ற கணக்கும் காட்டப்படுகிறது.
இந்த தளத்தில், எந்த ஒரு வகை கம்ப்யூட்டரிலிருந்தும் பைல்களை அப்லோட் செய்திடலாம். விண்டோஸ், மேக் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மேலும், இணைய இணைப்பு வசதி கொண்ட மொபைல் போன்களிலிருந்தும் அப்லோட் மற்றும் டவுண்லோட் பணிகளை மேற்கொள்ள லாம். இதனால், நாடு விட்டு நாடு சென்றாலும், ஓரிடத்தில் இணைய இணைப்பே கிடைக்கவில்லை என்றாலும், கிடைக்கும் இடத்தில் இருந்து பைல்களைக் கையாளலாம். பின்னர், இதனை மீண்டும் நம் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்வதும் எளிதாகவும், வேகமாகவும் நடைபெறுகிறது. ஒவ்வொரு பெயர் பதிவிற்கும் 10 ஜிபி இடம் தரப்படுவதால், தனி நபர் பயன்பாட்டிற்கு இது மிகவும் உகந்தது. எந்த இடத்திலிருந்தும், எந்த கம்ப்யூட்டரிலிருந்தும் இந்த பைல்களை டவுண்லோட் செய்து கொள்ளலாம் என்பதால், அடிக்கடி பயணம் மேற்கொள்வோர், தங்கள் பைல்களைப் பாதுகாப்பாக வைத்திட இது ஒரு சிறந்த வசதி ஆகும்.
கேள்வி பதில்கள் - கணிணிக்குறிப்புக்கள்.
கேள்வி: நினைவிற்கு வரும்போதெல் லாம் பெயர்களை வரிசையாக வேர்ட் டாகுமெண்ட்
ஒன்றை உருவாக்கி அடித்து வைத்தேன். இவற்றை அகர வரிசைப்படி அடுக்கி வைக்க
விரும்புகிறேன்.
இதற்கு வேர்டில் வசதி தரப்பட்டுள்ளதா?
பதில்: மிக எளிதாக இதனை மேற்கொள்ளலாம். இவற்றை எல்லாம் செலக்ட் செய்திடுங்கள். பின் Table மெனு சென்று Sort பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் சார்ட் டயலாக் பாக்ஸ் (Sort Text dialogue window) கிடைக்கும். இதில் கீழிருந்து மேலாக, அதாவது A to Z என்ற வகையில் அடுக்கும்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் லிஸ்ட் பெயர்கள் மாற்றி நீங்கள் தேர்ந்தெடுத்தபடி அடுக்கப்படும்.
உங்கள் டாகுமெண்ட்டில் இந்த பெயர்கள் மட்டும் இருந்தால் அவற்றைத் தேர்ந்தெடுக்காமலேயே நீங்கள் சார்ட்டிங் வேலைக்கு நேரடியாகச் செல்லலாம்.
கேள்வி : திரைப்படங்களை விண்டோஸ் மீடியா பிளேயரில் அல்லது வேறு எதில் பார்ப்பது?
பதில் : நீங்கள் கூறியபடி விண்டோஸ் மீடியா பிளேயரில் பார்க்கலாம். அல்லது Xing Mpeg player, Irfan view, Winamp போன்ற சாப்ட்வேர் தொகுப்புகள் மூலமாகவும் பார்க்கலாம்.
கேள்வி பதில்கள்
கேள்வி - பதில் 4
1. கேள்வி: வேர்ட் டேபிள் அமைக்கையில் டேபிள் வரிசை தலைப்புகளை அடுத்த பக்கத்தில் வந்தாலும் அமைக்க ஹெடிங் ரோவ்ஸ் ரிபீட் என்ற வசதி உள்ளது. அதற்கு இணையான
வசதி எக்ஸெல் தொகுப்பில் உள்ளதா? அது என்ன?
பதில்:
எக்ஸெல் தொகுப்பிலும் நீங்கள் கேட்கும் வசதி உள்ளது. இதனை கீழ்க்காணும் முறையில் செட் செய்திட வேண்டும்.
1. 'File' என்பதைக் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் 'Page Setup' என்பதனைத்
தேர்ந்தெடுக்கவும்.
2. பல டேப்கள் கொண்ட 'Page Setup' என்ற டயலாக் பாக்ஸ் கிடைக் கும். இதில் “Sheet” என்ற டேபைக் கிளிக் செய்திடவும்.
3. ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பு உள்ள படுக்கை வரிசை அச்சிடப்பட வேண்டும் என்றால்
'Rows to repeat at top'என்பதற்கு அடுத்து உள்ள சிறிய ஸ்ப்ரட்ஷீட்டின் மீது கிளிக் செய்திடவும்.
'Page Setup Rows to repeat at top' என்னும் புளோட்டிங் டூல் பார் கிடைக் கும். எந்த படுக்கை வரிசையில் உள்ள தலைப்புகள் அச்சிடப்பட வேண்டுமோ அந்த வரிசையினைத்
தேர்ந்தெடுக்கவும். வரிசையினைத் தேர்ந்தெடுத்து முடித்த பின்னர் டூல்பாரின் இறுதியில் உள்ள பட்டனைக் கிளிக் செய்திடவும். இதன் பின் அந்த வரிசை டயலாக் பாக்ஸில்
தெரியும்.
4. இதே போல நெட்டு வரிசையில் உள்ளதுவும் அச்சிடப்பட மீண்டும் என்றால் மீண்டும் சிறிய ஸ்ப்ரட் ஷீட் டைப் பெற்று அதில் 'Columns to repeat at left' என்பதற்கு அடுத்து உள்ள சிறிய ஸ்பிரட்ஷீட்டின் மீது கிளிக் செய்து முன்பு செய்தது போலவே தேர்ந்தெடுத்து அமைத் திடவும்.
இதில் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். நெட்டு வரிசை (column) மற்றும் படுக்கை வரிசை
(row) ஆகிய இரண்டினையும் கட்டாயம் அமைத்திட வேண்டும் என்பதில்லை. எது ஒன்று வேண்டும்
என்றாலும் அதனை மட்டும் அமைத்திடலாம்.
5. இவற்றை எல்லாம் தேர்ந் தெடுத்த பின்னர் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடினால் தேர்ந்தெடுத்தபடி ஒர்க் ஷீட் அச்சிடப்படும்.

கம்ப்யூட்டர் டிப்ஸ்.... டிப்ஸ்.... டிப்ஸ்.....
இலவச டூல்பார்
நீங்களே உங்களுக்கு சொந்தமான டூல்பார் தயாரிக்க விரும்பினால் பின் வரும் லிங்கில் சென்று தயாரித்துக்கொள்ளவும்.
www.ourtoolbar.com
இலவச மென்பொருள்கள், டிப்ஸ்.... டிப்ஸ்.... டிப்ஸ்.....
என்ன புரோகிராம் என்ற அறிவிப்பு
கம்ப்யூட்டரில் டூல்பார் அல்லது டெஸ்க்டாப்பில் ஐகான் மீது உங்களுடைய மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால் உடனே புரோகிராம் பெயர் சிறிய மஞ்சள் கட்டத்தில் கிடைக்கும். சில புரோகிராம்களுக்கு நாம் மேலும் சில குறிப்புகளை எழுதி வைத்து நமக்கு நினைவூட்டும் படி செய்திடலாம். எடுத்துக் காட்டாக என்னிடம் பிராட்பேண்ட் இணைப்பு இருந்தாலும் அது காலை வாரிவிடும் பட்சத்தில் டெலிபோன் வழியே இணைப்பிற்கான வழியையும் ஏற்படுத்தி ஐகானை உருவாக்கி வைத்திருக்கிறேன். அதனைப் பயன்படுத்தும் முன் சிபியுவின் பின்புறம் இருந்து வரும் டெலிபோன் இணைப்பிற்கான கேபிளை டெலிபோனுடன் இணைக்க வேண்டும்.
இதனை அடிக்கடி மறந்து போவோம். எனவே இந்த புரோகிராம் ஐகான் மீது கிளிக் செய்திட கர்சரைக் கொண்டு சென்றவுடன் Fix the Telephone line first என்ற செய்தி வரும்படி அமைத்துக் கொண்டேன். இதே போல பல புரோகிராம்களுக்கு எச்சரிக்கை செய்தியினைப் போட்டு வைக்கலாம். இதனை ஏற்றுக் கொள்ளும் புரோகிராம்களை இயக் குகையில் நமக்கு ஒரு நினைவூட்டல் கிடைக்கும் அல்லவா! இதனை எப்படி ஏற்படுத்துவது எனப் பார்ப்போம்.
எந்த புரோகிராமிற்கு இந்த செய்தி இணைப்பு வேலை நடைபெற வேண்டுமோ அந்த புரோகிராமின் ஐகான் மீது கர்சரைக் கொண்டு செல்லவும். பின் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் கீழாக Comment என்ற பிரிவில் உங்களுக்கு நினைவூட்ட வேண்டிய செய்தியை டைப் செய்து வைக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் அந்த ஐகான் மீது கர்சரைக் கொண்டு செல்லும் போதெல்லாம் அந்த செய்தி உங்களுக்குக் காட்டப்படும்.
-----------------------------------------------------------
டிப்ஸ்.... டிப்ஸ்.... டிப்ஸ்.....
சிஸ்டம் டிப்ஸ்
மை கம்ப்யூட்டருக்கு புதிய வழி
நாம் எல்லாரும் அடிக்கடி பயன்படுத்தும் கம்ப்யூட்டர் பிரிவு மை கம்ப்யூட்டர் ஆகும். ஏனென்றால் இதன் மூலமே நாம் நம் ஹார்ட் டிஸ்க்கை அணுகுகிறோம். சிடி மற்றும் இயக்கி எடுக்கக் கூடிய பிளாஷ் டிரைவ்களையும் அணுகுகிறோம். மை கம்ப்யூட்டர் போல்டரைப் பெற டெஸ்க் டாப்பில் உள்ள அதன் ஐகானைக் கிளிக் செய்கிறோம்.
அல்லது இன்னும் சற்று சுற்று வழியாக ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் எக்ஸ்புளோர் சென்று பின் அதனைக் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோவில் பெறுகிறோம். இந்த வேலையெல்லாம் வேண்டாம்; எனக்குத் திரை யிலேயே ஒரு மெனு வர வேண்டும்.
அதன் மூலம் மை கம்ப்யூட்டர் பெற வேண்டும் என விரும்புகிறீர்களா! அதற்கான வழியும் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஸ்டார்ட் மெனு செல் லுங்கள். அங்கு கிடைக்கும் இரட்டை மெனுவில் வலது பக்கம் பார்வையைச் செலுத்துங்கள். அங்கு மை கம்ப்யூட்டர் என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் கிளிக் செய்தால் நேராக மை கம்ப்யூட்டர் போல்டருக்குச் செல்வீர்கள். இந்த மெனுவிலேயே மை மியூசிக், மை பிக்சர்ஸ், மை நெட்வொர்க் பிளேசஸ் என்ற போல்டர்களுக்கும் வழி இருப்பதனை நீங்கள் பார்க்கலாம்.
----------------------------------------------------------------
டிப்ஸ்.... டிப்ஸ்.... டிப்ஸ்.....
சில டிப்ஸ்
சீரியல் நம்பர் டைப் செய்கிறீர்களா? புதியதாக சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றினை விலை கொடுத்து உங்களுடையதாக்கிக் கொண்டுள்ளீர்கள். இதனை கம்ப்யூட்டரில் பதியும் போது அல்லது முதல் முதலாகப் பயன்படுத்தும்போது வரிசை எண்ணை பதியும்படி அந்த புரோகிராம் கேட்கும். உடனே நம் லாக் கீ பேடிலிருந்து எண்களை டைப் செய்திடக் கூடாது. எழுத்துகளுக்கு மேலுள்ள கீகளிலிருந்துதான் டைப் செய்திட வேண்டும். ஏனென்றால் சில வேளைகளில் கீபேடில் உள்ள எண்களுக்கான கீகளை அழுத்துகையில் அதனை வேறு ஒன்றின் குறியீடாகக் கம்ப்யூட்டர் எடுத்துக் கொண்டு பதிவு செய்திடும் எண்ணை ஏற்றுக் கொள்ளாது.
இணைய தளத்திற்கான ஷார்ட் கட் : உங்களுக்குப் பிடித்த இணைய தளங்களுக்கு ஷார்ட் கட் ஐகான் இருந்து அவற்றைக் கிளிக் செய்தால் நேரடியாக நீங்கள் அந்த தளத்திற்குச் சென்றால் எப்படி இருக்கும்? அப்படிச் செய்ய முடியுமா?
முடியும். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தொகுப்பில் உங்களுக்குப் பிடித்த இணைய தளத்தைப் பார்க்கையில் தளத்தின் முகவரிக்கு அருகே சிறிய ஆங்கில எழுத்தான 'e' இருக்கும் அல்லவா?
இப்போது உங்கள் பிரவுசர் விண்டோவைச் சிறியதாக்கி அதன் பின் அந்த சிறிய 'e' எழுத்து உள்ள கட்டத்தை இழுத்து வந்து டெஸ்க்டாப்பில் உள்ள காலியிடத்தில் விட்டுவிட்டால் அதுதான் உங்களுக்குப் பிடித்த தளத்தின் ஷார்ட்கட். இந்த ஐகான்களின் மீது கிளிக் செய்தால் பிரவுசர் திறக்கப்பட்டு நீங்கள் தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
கீ லாக்கர்களிடமிருந்து தப்பிக்க: கீ லாக்கர் என்பது நாம் டைப் செய்திடும் கீகள் என்ன என்னவென்று அப்படியே காப்பி செய்து பைலாக உருவாக்கித் தரும் சாப்ட்வேர் ஆகும். எனவே இந்த புரோகிராம் இருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் நாம் இன்டர் நெட் மற்றும் நிதி பரிவர்த் தனைகளை மேற்கொண்டால் நம்முடைய பாஸ்வேர்டுகள் மற்றவருக்குத் தெரிந்துவிடும் அல்லவா? இதிலிருந்து தப்பிக்க ஒரு வழி உள்ளது.
பாஸ்வேர்ட் டைப் செய்திடுகையில் இடையே பாஸ்வேர்டில் இல்லாத எழுத்துக்களையும் டைப் செய்து விடுங்கள். பின் மவுஸ் மூலம் அந்த தேவையற்ற எழுத்துக் களை நீக்கிவிடுங்கள். கீ லாக்கர் புரோகிராம்கள் டைப் அடிக்கும் கீகளை மட்டுமே நினைவில் கொள்ளும். இது போல தேவையற்ற கீகளை அழுத் துகையில் எடுத்துக் கொள்ளும்; ஆனால் அவற்றை மவுஸ் மூலம் அழிக்கையில் எடுத்துக் கொள்ளாது. எனவே நம் பாஸ் வேர்ட்களை மற்றவர்கள் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியாது.
பைலின் பாத் தெரிய: ஒரு பைல் எங்கு உள்ளது என்று கூற அதற்கான பாத் (path) சரியாகத் தரப்பட வேண்டும். இதனை எப்படி அமைப்பது? அல்லது பாத் 'இன் முழு வழியை எப்படி எழுதுவது என்று தெரியாமல் பலர் இருக்கின்றனர். இதனை மிக எளிதாகக் கண்டு பிடிக்கலாம். ஸ்டார்ட் அழுத்தி பின் ரன் விண்டோவினைத் திறக்கவும்.
விண்டோஸ் எக்ஸ்புளோரரையும் திறந்து குறிப்பிட்ட பைலை மவுஸால் இழுத்து வந்து ரன் விண்டோவில் விடவும். பைல் அங்கேயேதான் இருக்கும். ஆனால் பைலின் பெயர் முழு path உடன் காட்டப்படும். இதனை அப்படியே காப்பி செய்து எங்கு பைல் குறித்து பாத் காட்ட வேண்டுமோ அங்கு பேஸ்ட் செய்துவிடலாம்.
--------------------------------------------------------------
டிப்ஸ்.... டிப்ஸ்.... டிப்ஸ்.....
புல்லட் இல்லாமல் இடை வரி அமைக்க
வேர்ட் அல்லது பவர் பாயிண்ட்டில் புல்லட்களுடன் லிஸ்ட் அமைக்கிறீர்களா? அப்போது ஏதேனும் ஒரு வரியில் புல்லட் வராமல் இருக்க நீங்கள் விரும்பலாம். ஆனால் ஏற்கனவே புல்லட் அமைத்ததனால் அனைத்து வரிகளும் புல்லட் களுடனேயே அமைந் திடும்.
புல்லட் இல்லா மல் புதிய வரி அமைத் திட ஷிப்ட் மற்றும் என்டர் (ShiftEnter) இணைந்து அழுத்தவும். அடுத்த முறை புல்லட்டுடன் வரி அமைய ஒரு முறை என்டர் அழுத்தித் தொடரலாம்.
---------------------------------------------------------------
விண்டோஸ் அப்டேட்
பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படியானால் அடுத்த முறை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்திட முயற்சி செய்து பாருங்கள். உங்களால் முடியாது. பயர்பாக்ஸ் வழியாக அப்டேட் செய்திட முடியாமல் மைக்ரோசாப்ட் அதனை அமைத்துள்ளது. எனவே இண்டர்நெட் எக்ஸ்ப் ளோரரை இயக்கித் தான் அப்டேட் செய்திட முடியும்.
வார்த்தைகளை ஆடியோவாக மாற்ற
வார்த்தைகளை ஆடியோவாக மாற்ற
இந்த தளத்திற்கு சென்று நாம் ஆடியோ வடிவில் மாற்ற வேண்டிய வலைப்பதிவு முகவரி, இணையதள முகவரி, டாகுமெண்டுகள் போன்றவற்றை அளிக்க வேண்டும். உடனே அவற்றை எம்.பி-3 வடிவில் மாற்றி அளிப்பார்கள். அதை நாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நமது சொந்த இணையதளத்திலும் இடம்பெறச் செய்யலாம்.

30 March 2013
Live CD என்றால் என்ன?
Live CD என்றால் என்ன?
லைவ் சீடி அல்லது லைவ் டிவிடி என்பது கணினியின் செயற்பாட்டை ஆரம்பிக்கக் கூடியவாறு தன்னகத்தே ஒரு இயங்கு தளத்தைக்கொண்ட ஒரு சீடி அல்லது டிவிடியைக் குறிக்கிறது. கணினியில் தற்போது நிறுவியுள்ள இயங்கு தளத்திலோ அல்லது ஹாட் டிஸ்கிலோ எந்த மாற்றமோ பாதிப்போ ஏற்படாதவாறு புதியதோர் இயங்கு தளத்தைப் பயன்படுத்திப் பார்க்கக்கூடிய வசதியை அளிக்கிறது லைவ் சீடி.
ஒரு லைவ் சீடியை சீடி ரொம் ட்ரைவில் அடையாளம் காணும் கணினி ஏற்கனவே நிறுவியுள்ள இயங்கு தளத்திற்குப் பதிலாக சீடியிலுள்ள இயங்குதளத்திலேயே கணினி பூட் செய்ய ஆரம்பிக்கும். லைவ் சீடியிலிருந்து கணினி இயங்க ஆரம்பித்தும் எமது விருப்பப்படி கணினியில் வலம்வர முடியும். அதிலிருந்தே மீண்டும் கணினியில் நிறுவியுள்ள இயங்கு தளத்திற்குத் திரும்ப வேண்டுமானால் சீடி ட்ரைவிலிருந்து லைவ் சீடியை அகற்றி விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும்.
லைவ் சீடி எமக்குப் பல வழிகளில் பயன்படுகிறது. ஒரு புதிய இயங்குதளம் ஒன்றைக் கணினியில் நிறுவ ஹாட் டிஸ்கில் இடம் ஒதுக்கவோ அல்லது அதற்கு நேரத்தைச் செலவிட வேண்டிய அவசியமோ இல்லை. அதனை கணினியில் நிறுவாமலேயே இயக்கிப் பார்க்கக் கூடிய வசதியைத் தருகிறது... லைவ் சீடி
ஹாட்டிஸ்கில் நிறுவியிருக்கும் இயங்குதளம் செயற்பட மறுக்கும் போது ஒரு லைவ் சீடியை பயன்படுத்தி எமது பணிகளை மேற்கொள்ள முடிகிறது.
குறிப்பாக உபுண்டு போன்ற லினக்ஸ் இயங்கு தளத்தின் பல பதிப்புகள் word processor, spreadsheet program, graphics editor, web browser போன்ற பல்வேறு பயன்பாட்டு மென்பொருள்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. இதன் மூலம் கணினிப் பயனர்கள் ஒரு லைவ் சீடியை எந்தவொரு கணினியில் இட்டும் ஏற்கனவே நிறுவியுள்ள இயங்கு தளத்திற்குப் பாதிப்புகள் வராமல் தமது பணிகளை மேற்கொள்ள முடியும்.
லைவ் சீடியை ட்ரைவிலிட்டதும் கணினி பூட் ஆகாமல் மறுபடியும் ஹாட்டிஸ்கிலிருந்தே இயங்க ஆரம்பித்தால் BIOS இல் மாற்றம் செய்துகொள்ள வேண்டும்.
இதற்கு நீங்கள் கணினி பூட் ஆக ஆரம்பிக்கும் போதே டெல் விசையை அழுத்தி பயோஸ் செட்டப்பில் நுளைய வேண்டும். (எனினும் இது கணினிக்குக் கணினி வேறுபடலாம்) அங்கு கணினியிலுள்ள பூட் சாதனங்கள் பட்டியலில் சீடி ட்ரைவை முதல் பூட் சாதனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பயோஸில் செய்யும் இந்த மாற்றத்தை கணினியில் சிக்கலை ஏற்படுத்தாதவாறு சேமித்துக்கொள்ள முடியும். ஒரு லைவ் சீடி ட்ரைவில் இல்லாத போது கணினி ஹாட் டிஸ்கிலிருந்தே பூட் ஆக ஆரம்பிக்கும்.
அனேகமாக லினக்ஸ் இயங்கு தளத்தின் பல்வேறு பதிப்புகள் லைவ் சீடி வடிவில் கிடைக்கின்றன.
இவற்றை இணையத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ள முடியும். அல்லது இந்த சீடிக்களை தபாலில் இலவமாக வரவழைத்துக்கொள்ளவும் முடியும். லினக்ஸ் தவிர Mac Os, Windows, sunjava Desktop. OpenBSD எனப் பல்வேறு இயங்கு தளங்கள் லைவ் சீடி வடிவில் கிடைக்கின்றன.
இவற்றுள் ஏதோவொரு லைவ் சீடியைக் கைவசம் வைத்திருப்பது ஹாட் டிஸ்கில் இருந்து கணினி பூட் ஆக மறுக்கும் சந்தர்ப்பங்களில் நமக்குப் பபயன்படக் கூடும்.

நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை - கணிணிக்குறிப்புக்கள்.
தமிழ் கணணி Computer in Tamil - தமிழில் கம்பியூட்டர்
பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - பாடும்குயில்
நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை
நம் வீட்டில் குழந்தைகள் நம்மிடம் கேட்கும் முறையான கேள்விகளுக்கு முறையான பதிலைத் தர வேண்டும் என்றால் நாம் பல புத்தகங்களைப் புரட்ட வேண்டியுள்ளது. சில கேள்விகள் நியா யமானவையாக இருந்தாலும் அதற்கு பதிலே கூற முடியாது.
குழந்தைகள் மட்டுமல்லாது சிறுவர்களும், இளைஞர்களும் ஏன் சில சமயங்களில் பெரியவர்களும் இது போன்ற கேள்விகளைக் கேட்டு பதில் தேடுகின்றனர்.
இந்த உலகில் நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களில் நமக்கு ஆர்வம் இருக்கும் வரை கேள்விகள் எழுந்துகொண்டுதான் இருக்கும். ஏன்? எப்படி? என்ன? என்ற ன்று கேள்விகளைக் கொண்டுதான் நாம் நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களை அறிந்து கொள்கிறோம்.
இதுபோன்ற கேள்விகளைத் தொகுத்து அவற்றிற்கான பதில்களையும் சுருக்கமாகக் கொண்டு ஒர் இணையதளம் இயங்குகிறது. இந்த தளத்தின் முகவரி http://www.whyzz.com
இதனைப் பயன்படுத்த எளிதான முதல் வழி, இதன் முகப்புத் தளத்தில் உள்ள தேடுதல் கட்டத்தில் நம் கேள்வியை சுருக்கமாக டைப் செய்து அருகில் உள்ள கேள்விக்குறி யின் மீது கிளிக் செய்வதுதான். உடன் பல பதில்கள் கொண்ட லிங்குகள் கிடைக்கும்.
இதில், உங்களுக்குத் தேவையான பதிலுக்கான லிங்கினைக் கிளிக் செய்தால் சற்று விரிவான தகவல்கள் கிடைக்கும். பதில் இல்லை என்றால் உங்கள் கேள்வி எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது. விரைவில் அதற்கான பதில் தரப்படும் என்ற குறிப்புக் கிடைக்கும்.
இன்னொரு வழியிலும் தேவையான தகவலைத் தேடலாம். இந்த கேள்விக்கான கட்டத்தின் கீழாக Featured Answer, Most Recently Answered மற்றும் Category . இதில், மேலும் பிவுகளாக Nature, Animals, World, Science, Human Body, Serious Issues, Creativity & Imagination, Fun Stuff, Current Events எனப் பல பிவுகளை காணலாம்.
இவற்றில் உங்களுக்கு தேவையான பொருள் உள்ள பிரிவில் கிளிக் செய்து விடையைப் பெறலாம். இதில் விடை தரப்படாத கேள்விகளையும் காணலாம். உங்களுக்குத் தெரிந்தால் அதற்கான பதிலையும் அனுப்பலாம். சிறுவர் களுக்கு இந்தத் தளத்தை அறிகப்படுத்தினால், அவர்களே அவர்களின் சந்தேகங்களுக்குப் பதில் பெறுவார்கள்.

அக்ரோபெட் ரீடரை விரைவாக்க - கணிணிக்குறிப்புக்கள்.
அக்ரோபெட் ரீடரை விரைவாக்க
அடோபி நிறுவனத்தின் அக்ரொபெட் ரீடர் (Acrobat Reader) எனும் மென்பொருளை அறிந்திருப்பீர்கள்.PDF பைல்களைத் திறக்கக் கூடிய ஒரு மென்பொருளே அக்ரொபெட் ரீடர். எனினும் இந்த அக்ரோபெட் ரீடர் திறந்து கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
இதனை விரைவாகத் திறந்து கொள்ள வேண்டுமானால் கணனியில் (அக்ரோபெட் ரீடர் நிறுவியிருப்பின்) C / Program files / adobe / acrobat / reader / . ஊடாகச் சென்று Plugins எனும் போல்டரைத் திறந்து கொள்ளுங்கள்.
அடுத்து அதிலுள்ள பைகள் அனைத்தையும் cut & Paste கட்டளை மூலம் Optional போல்டருக்கு நகர்த்தி விடுங்கள். இப்போது அக்ரொபெட் ரீடர் மென்பொருளைத் திறந்து பாருங்கள். முன்னரை விட வேகமாகத் திறக்கக் காணலாம்.

26 March 2013
கம்பியூட்டரில் சில சாதாரண தவறுகள் ! கணிணிக்குறிப்புக்கள்.
கம்பியூட்டரில் சில சாதாரண தவறுகள் !
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் ஏற்படுத்தும், சில சாதாரண தவறுகளை இங்கு காணலாம்.
1. டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்:
பலரின் டெஸ்க்டாப், எதனையும் ஏற்றுக் கொள்ளும் நம் மேஜை டிராயர் மாதிரி, குப்பையாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில் வைத்த பைலையே தேடி உடனே எடுக்க முடிவதில்லை. இதனாலேயே விண்டோஸ் இயக்கம், -பல ஐகான்கள் வெகுநாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன அவற்றைச் சரி செய்திடலாமா?- என்று பிழைச் செய்தி காட்டுகிறது.
இதனை எப்படி சரி செய்திடலாம்? அவ்வப்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஐகான்களுக்குரிய பைல்களை, சார்ந்த ட்ரைவ்களுக்குக் கொண்டு சென்று வைக்க வேண்டும். பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்கையில், பெரும்பாலும் டெஸ்க் டாப்பிலேயே டவுண்லோட் செய்து வக்கிறோம். அவரச வழிக்கு இது சரிதான். ஆனால் அடுத்து, அந்த பைலின் தன்மை, பொருள் சார்ந்து அதனை, அதற்கான ட்ரைவிற்குக் கொண்டு செல்ல வேண்டும்.
2. ஷட்டவுண் செய்திட பவர் பட்டன்:
இது லேப்டாப் கம்ப்யூட்டர் சார்ந்த செய்தி. பலர் லேப்டாப் கம்ப்யூட்டரின் பணி முடிந்தவுடன், அதனை முறையாக ஷட் டவுண் செய்திடுவதில்லை. பவர் பட்டனை அழுத்தி, கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடிவிற்குக் கொண்டு வருகிறோம். அல்லது கொண்டு வருவதாக நினைக்கிறோம். பல லேப்டாப்களில் இந்த பவர் பட்டன், லேப்டாப் கம்ப்யூட்டரை ஸ்லீப் மோட் என்னும் செயலற்ற நிலைக்குத்தான் கொண்டு செல்லும்.
இது ஒன்றும் மோசமான தவறு அல்ல. இது போலத் தூங்கும் லேப்டாப், சில நொடிகளில் இயக்கத்திற்கு வந்துவிடும். ஆனாலும் இவ்வாறு செய்வது தவறு. இதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, ஸ்லீப் மோட் என்பது முற்றிலும் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலை அல்ல. பேட்டரியின் பவர் அப்போதும் செலவழிந்து கொண்டுதான் இருக்கும். எனவே, தொடர்ந்து அது மின்சார சாக்கெட் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தாலே, பாதுகாப்பாக இருக்கும். இல்லையேல், அதன் பேட்டரி பவர் தீர்ந்து போய், மொத்தமும் சக்தி அற்ற பேட்டரி கொண்ட லேப்டாப் தான் உங்களுக்குக் கிடைக்கும்.
இரண்டவாதாக, நீங்கள் எப்போதும் கம்ப்பயூட்டரை நிறுத்தி வைக்க, ஸ்லீப் மோடினை விரும்புவதாக இருந்தால், அது கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடும் வாய்ப்பினையே இழக்கிறது. விண்டோஸ் சுமுகமாக இயங்க வேண்டும் என்றால், அது முற்றிலும் நிறுத்தப்பட்டு, பின்னர் ரீ பூட் செய்யப்பட வேண்டும்.
3. மவுஸ் பயன்படுத்தி புரோகிராம் இயக்கம்:
ஒரு புரோகிராமினை இயக்க ஒவ்வொரு முறையும், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று, புரோகிராமின் இயக்க பைல் பார்த்து கிளிக் செய்வது அல்லது அதன் ஐகான் மீது டபிள் கிளிக் செய்வது போன்ற பழைய பழக்கங்களை விட்டு விடுங்கள். அல்லது குயிக் லாஞ்ச் ஏரியாவில், புரோகிராம் ஐகான்களை வைத்து, அதில் ஒரே ஒரு முறை கிளிக் செய்வதன் மூலம் அவற்றை இயக்கலாம்.
இப்போது இன்னும் வேகமான முறை ஒன்று உள்ளது. விஸ்டா மற்றும் விண்டோஸ் இயக்கத் தொகுப்புகளில், ஸ்டார்ட் பட்டனை அடுத்துள்ள இடத்தில் உள்ள புரோகிராம்களில் வரிசைப்படி, அதற்கான எண்ணை விண்டோஸ் கீயுடன் அழுத்தினால், அந்த புரோகிராம் இயக்கப்படும். எடுத்துக் காட்டாக, ஸ்டார்ட் பட்டனை அடுத்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பெயிண்ட், குவார்க் எக்ஸ்பிரஸ் என வைத்திருந்தால், விண்+1, விண்+2 என அழுத்தினால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அடுத்ததாக பெயிண்ட் எனத் திறக்கப்படும்.
4. பாதுகாப்பற்ற பிளாஷ் ட்ரைவ்:
டேட்டாவினை எடுத்துச் செல்ல, பிளாஷ் ட்ரைவ்கள் மிகவும் வசதியானவை தான். ஆனால் இதில் உள்ள டேட்டாவினை மற்றவர் அறியாதபடி என்கிரிபட் செய்து நாம் வைப்பதில்லை. இதனால், அது தொலைந்திடும் பட்சத்தில், நம் தனிப்பட்ட தகவல்கள் மற்றவருக்குக் கிடைத்திடும் சூழ்நிலைகள் உருவாகிவிடும். இதில் டேட்டாவினை எளிதாக என்கிரிப்ட் செய்திட, இணையத்தில் கிடைக்கும் ட்ரூகிரிபட் போன்ற புரோகிராம்களைப் பதிந்து இயக்குவது நல்லது.
5. கண்ணை மூடிக் கொண்டு நெக்ஸ்ட் அழுத்துவது:
திடீரென நம் டெஸ்க்டாப்பில் ஏதோதோ படங்களுடன் ஐகான்கள் தோன்றி நம்மை ஆச்சரியப்படுத்தும். நாம் பயன்படுத்தும் வெப் பிரவுசரிலும் இதே போல் சில தோற்றமளிக்கும் இவை தோன்றுவதற்கு நாம் தான் காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா? சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையில், என்ன ஏது எனப் படிக்காமலேயே, அடுத்தடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்துகிறோம்.
இதன் மூலம் அந்த புரோகிராம்களைத் தயாரித்த நிறுவனங்களின் சோதனை டூல்கள், புரோகிராம்களை நம் கம்ப்யூட்டரில் நிறுவ நாம் சம்மதம் அளிக்கிறோம். மேலும் நமக்குத் தேவைப்படாத சில இயக்கத்திற்கும் இசைகிறோம். இது போல நாம் நம்மை அறியாமல் அளிக்கும் சலுகைகள், நம் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களை நிறுவி, நம்மை சிக்க வைக்கின்றன. எனவே, ஒரு புரோகிராமினை இன்ஸ்டலேஷன் செய்கையில், இணையப் பக்கம் வழியாக ஒன்றை டவுண்லோட் செய் கையில், நம்மிடம் எதற்கு இசைவு கேட்கப்படுகிறது என்று சரியாகப் படித்துப் பார்த்து இயங்க வேண்டும்.
6. ஒரே ஒரு பேக் அப் அபாயம்:
பலர் தங்கள் பைல்களுக்குப் பேக் அப் எடுப்பதே இல்லை. இது மிகப் பெரிய தவறு. சிலர் ஒரே ஒரு பேக் அப் பைலுடன் நிறுத்தி விடுகின்றனர். இதுவும் தவறுதான். எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்றைப் பயன்படுத்தி, முழுமையான பேக் அப் காப்பி ஒன்றை உருவாக்குவதும், அதற்கான சாப்ட்வேர் ஒன்றை இயக்கி, குறிப்பிட்ட கால கட்டத்தில் பேக் அப் காப்பி அமைப்பதுவும் மட்டுமே சரியான வழியாகும்.

எக்ஸெல் தொகுப்பில் மறைக்கவும் காட்டவும்! கணினி டிப்ஸ்
எக்ஸெல் தொகுப்பில் மறைக்கவும் காட்டவும்!

எக்ஸெல் தொகுப்பில் சில நேரங்களில் ஒரு சில செல்கள் அல்லது வரிசைகளை மறைக்க வேண்டியதிருக்கும். என்ன செய்கிறோம்? பார்மட் மெனு சென்று பின் ரோ / காலம் சப் மெனு பெற்று அதன் பின் ஹைட்/ அன்ஹைட் கிளிக் செய்து நிறைவேற்றுகிறோம்.
தேவையான டேட்டாவை மறைத்திட இவைதான் சரியான வழியாக இருக்கும். இதன் மூலம் நாம் நம்முடைய எக்ஸெல் ஒர்க் ஷீட் எப்படி தோற்றமளிக்க வேண்டும் என எண்ணுகிறோமோ அது போல அமைக்க முடிகிறது. எந்த டேட்டாவைக் காட்ட வேண்டும் என்று விரும்புகிறோமோ அவற்றை மட்டும் காட்ட முடிகிறது. ஆனால் மவுஸால் ஒவ்வொரு மெனுவாகத் தேர்ந்தெடுத்து செயலாற்றுகையில் தான் இவ்வளவு வேலை பார்க்க வேண்டுமா என்று தோன்றுகிறது.
இதற்கான சில கீகளை அழுத்தினால் போதும்; இந்த கீகள் மூலம் இந்த பணியை மேற்கொள்ளலாம். இதற்கு முதலில் எந்த செல், ரோ, காலம் மறைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்குக் கூட மவுஸ் பயன்படுத்த வேண்டாம். ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு ஆரோ கீகளை அழுத்தினால் போதும். தேர்ந்தெடுத்த பின்னர் கீழ்க்காணும் வழிகளில் கீகளைப் பயன்படுத்துங்கள்.
**
Ctrl + 0 (zero) : அழுத்தினால் நெட்டு வரிசை மறைக்கப்படும்.
Ctrl + 9 : அழுத்தினால் படுக்கை வரிசை மறைக்கப்படும்.
**
அடுத்து மறைக்கப்பட்ட வரிசைகளை மீண்டும் காட்ட என்ன செய்யலாம்?
மறைக்கப்பட்ட செல்களை அடுத்து இருபுறமும் உள்ள செல்களைத் தேர்ந்தெடுங்கள். பின்னர்
Ctrl + Shift + ) : கீகளை அழுத்தினால் தேர்ந்தெடுத்த இரு செல்களுக்கிடையே உள்ள மறைக்கப்பட்ட நெட்டு வரிசை காட்டப்படும்.
Ctrl + Shift + ( : கீகளை அழுத்தினால் தேர்ந்தெடுத்த இரு செல்களுக்கிடையே உள்ள மறைக்கப்பட்ட படுக்கை வரிசை காட்டப்படும்.*
எப்படி! மவுஸ் இல்லாமல் கீ போர்டு வழியாகவே இந்த மறைக்கும் மற்றும் காட்டும் வேலை நடைபெற்றுவிட்டதா!

சிக்கலான சி.டி.களிலிருந்து தகவல்களை பெற !!! - கணிணிக்குறிப்புக்கள்.
இன்று கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்ன வென்றால் சி.டி தாங்க சி.டி யில் நாம் நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும்.
அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற முடியாத சூழல் ஏற்படும் போது தான் நாம் அதிகமாக பாதிக்கப்படிகிறோம். நாம் ஆசை ஆசையாக சேமித்து வைத்த வீடியோக்கள். அனைத்தும் வீணாகி போகும் பொது அதனால் நாம் அடையும் பாதிப்பு மிக மிக அதிகம்.
இப்படி பட்ட சிக்கல் சி.டி.க்களில் இருந்து தகவல்களை பெறும் வழிமுறைகளைப் பற்றி இன்றைக்கு பார்க்க போகிறோம்.வேறொரு சி.டி.யில் இருந்து தகவல்களை, வீடியோக்களை காப்பி செய்து கொண்டு வந்து நமது கணினியில் போட்டு பார்த்தல்,அல்லது நாமது சி.டி.க்களை போட்டு பார்த்தால் 'டொயிங்' என்ற சத்தத்துடன் cannot read from the source destination என்று கணினியில் பதில் வரும்.சி.டி.யில் நமக்கு தெரியாமல் ஏற்பட்டிருக்கும் கீறல்கள், பதிந்திருக்கும் தூசுக்களால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
எனவே, முதலில் மெல்லிய துணி கொண்டு சி.டி.க்களை உள்ளே இருந்து வெளிப்புறமாக துடைக்க வேண்டும். சோப்பு கலந்த நீரில் போட்டு கழுவவும் செய்யலாம். அதன் பிறகும் சிக்கல்கள் ஏற்பட்டால் கீழே இருக்கும் வழிமுறைகளை கையாளலாம்.
நீங்கள் இந்த( http://isobuster.com/ ) இணையத்தளம் வழங்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பிறகு பிறகு மென்பொருளின் ஆய்வுக்கு சி.டி.யை உட்படுத்த வேண்டும். அப்போது இந்த மென்பொருள் பாதிக்கப்பட்ட சி.டி.யிலுள்ள தகவல்களை பெற்று தரும். அல்லது அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள தகவல்களை நமக்கு பெற்று தரும்.
இதன் மூலம் நாம் சிக்கல் சி.டி.களில் இருந்தும் தகவல்களை பெறலாம். நண்பர்களே இன்னும் சிக்கல் விழுந்த சி.டி.க்களை தூக்கி வீசாமல் தகவல்களை பெற இந்த வழியில் முயற்சித்து பாருங்கள்.
31 October 2012
பாதுகாப்பான கடவுச்சொல் எவ்வாறு அமைக்கலாம் ?
பாதுகாப்பான கடவுச்சொல் எவ்வாறு அமைக்கலாம்?
இப்போதெல்லாம் பார்த்தால் அதிகமானோர் சட்டைப் பையில் பணம் இருக்குதோ இல்லையோ பல பல கிரடிட் அட்டைகள் வைத்துருப்பார்கள் அல்லது கடைசி ஒரு வங்கியின் ATM அட்டையாவது இருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் பாதுகாப்பாக பயன்படுத்துவதே இன்று பெரும் சவாலாக உள்ளது.
இணைய மூலம் பொருட்கள் வாங்குவது (online shopping) மற்றும் இணைய வங்கிச்சேவை (net banking) என புதிய தொழிநுட்ப்ப வசதிகளோடு நாம் வாழ வேண்டிய கட்டாயச் சூழல் இது.
*
ஆனால் இவற்றையெல்லாம் கையாழ்வதட்க்கு மின்னஞ்சல் ஒன்று அவசியம் மின்னஞ்சல் என்று வந்துவிட்டால் அதன் கடவுச் சொல் பாதுகாப்பானதா? என்பது மிக முக்கியம் இதற்க்கு முன்னர் நமது கணனி பாதுகாப்பானதா? என்பது மிக மிக முக்கியம், இல்லையென்றால் எல்லாம் அதோ கெதிதான் உழைப்பவன் யாரோ சும்மா உட்கார்ந்து சாப்பிடுபவன் யாரோ என்று நம் கதை வராமல் பார்ப்பது நம் கையில்த்தான் உள்ளது.
***
பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம் என்று பார்ப்போம்!
1. நமது கடவுச்சொல் திருட்டு போவது நமது கையில் தான் இருக்கிறது எனது கடவுச் சொல்லைக் கண்டுபிடியுங்கள்’ பார்க்கலாம் என்று உங்களிடம் சொன்னால் முதலில் என்ன செய்வீர்கள்? எனது பெயர், என் அப்பா பெயர், என் ஊர், என் வயது அல்லது 123456 , abcdef இந்த மாதிரிதானே முயற்சி செய்வீர்கள்? இதுபோன்ற பெயர்களை கொண்டு கடவுச்சொல் உருவாக்குவதை நாம் முற்று முழுதாக தவிர்த்துக்கொள்ளவேண்டும் .
*
2. இதுமாதிரி அர்த்தம் தரும் வேறு எந்த பெயரையும் பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல இதற்கென சில திருட்டு மென்பொருட்கள் உள்ளன அதில் இதுபோன்ற கடவுச்சொல் சேமித்து வைக்கும் கோப்பைக் கொடுத்தால் போதும் உடனே உங்கள் கடவுச்சொல்லை கண்டுபிடித்துவிடும்.
*
3. அடுத்து நீங்கள் கடவுச்சொல்லை தட்டச்சு செய்யும் போது யாரும் பின்னால் இருந்து பார்க்கின்றனரா? என உறுதி செய்துகொள்ளுங்கள் பக்கத்தில் யாரும் இருந்தால் கடவுச்சொல் இடுவதை நிறுத்துங்கள் பல இடங்களில் 6 இலக்கமே போதும் எனச் சொல்வார்கள் ஆனால் நீங்கள் நீளமான கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளுங்கள் கடவுச்சொல் இடும் கட்டம் தாண்டியும் நீளமாக கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளலாம்.
*
4. ஸ்பைவேர், மால்வேர் போன்ற வைரஸ்கள் நமது கணினியில் இருந்து தகவல்களை சிலருக்கு அனுப்பிக் கொண்டிருக்கலாம். இச் சந்தர்ப்பத்தில் நமது கடவுச்சொல்லும் போக வாய்ப்புண்டு. எனவே நீங்கள் கணினித்திரையின் கீழ்ப் பக்கம் வலது சொடுக்கி Task Manager திறந்து பாருங்கள் உங்களுக்குத் தெரியாத ஏதேனும் பின்புலத்தில் ஓடிக் கொண்டிருக்கிறதா? என்று இம்மாதிரி மென்பொருட்கள் நீங்கள் தட்டச்சு செய்பவனவற்றை உடனுக்குடன் தனது முதலாளிக்கு அனுப்பும் வல்லமை வாய்ந்தவை.
*
5. மற்றவர்களின் கணினியில் புகுந்து திருடுவது சேதம் விளைவிப்பது என்பது ஒரு சிலரால் மட்டும்தான் முடியும் எதோ நானும் செய்தேன் என்று சும்மாவேனும் சிலர் பொய் சொல்லக் கூடும் அதற்கு Hack மற்றும் Crack போன்ற துறைகளில் நல்ல தேர்ச்சி வேண்டும் எனவே மற்றவர் உங்கள் கணினியில் நுழையாமல் தடுக்க நல்ல வைரஸ் பாதுகாப்பு மென்பொருளை நிறுவிக்கொள்ள வேண்டும்.
*
6. முடிந்தவரை ஜிமெயில், யாஹூ மற்றும் கொட்மெயில் போன்ற தளங்களில் தானாக உள்ளே நுழைவதை (auto login) தவிருங்கள். அதேபோல ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் அல்லது கடவுச்சொல் இட்ட தளங்களில் இருந்து வெளியேறும் போது லாக்கவுட் செய்து வெளியேறுங்கள்.
*
7. அடுத்து முக்கியமாக நாம் கடவுச்சொல் தேர்வு செய்யும்போது எண்கள் மற்றும் எழுத்துகளுக்கு இடையிடையே சிம்போல் (symbol) :- ! . , * - + `~ @ # $ % ^ & ( ) _ = : ; / போன்றவைகளையும் உள்ளடக்கி கடினமான கடவுச் சொல்லாக தேர்வு செய்வது மிக மிக பாதுகாப்பானது.