Ads Header

Pages


Showing posts with label உடல் பருமன். Show all posts
Showing posts with label உடல் பருமன். Show all posts

15 September 2013

உடல் மெலிய...

உடல் மெலிய:
100-கிராம் கொள்ளை சுத்தம் செய்து ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து குடித்துவர சொல்லிக்கொள்ளும்படி உடல் மெலியும். உடல் பலமும் கிடைக்கும்.
இலந்தை இலைகளை எடுத்து சுத்தம் செய்து மைபோல அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி உள்ளுக்கு அருந்தி வரவும்.
கல்யாண முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.
25-கிராம் சோம்பு, 5-கிராம் கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் கால் லிட்டர் தண்ணீ­ர் விட்டு 50-மில்லியாகும் வரை காய்ச்சி வடிகட்டி 50-மில்லி சுத்தமான தேன் கலந்து காலை மாலை குடித்துவர ஊளைச் சதை குறையும்.
நில ஆவரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து ஒரு ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.
Read more

கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நடந்தால், குறைந்தது, மாதம், நான்கு கிலோ எடை குறைவது மிக உறுதி.

1.தினசரி காலை எழுந்தவுடன், 1 - 2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.
2.குறைந்தது, 35 நிமிடம் உடற்பயிற்சி, வேக நடை, ஸ்பாட் ஜாகிங், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்றவையோ அல்லது இதர பயிற்சிகளோ செய்யவும். 3.அப்போதே தயாரித்த வெண்பூசணிச் சாறு அல்லது வாழைத்தாண்டு சாறு ஒரு டம்ளர் குடிக்கவும். 4.காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை, 3- 4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது. 5. காலை சிற்றுண்டி (8.00 - 9.00 மணிக்குள்): வெண்ணெய் எடுத்த மோர் - 1 டம்ளர், அதனுடன் கொய்யா (சிறியது), பாலாடை கட்டி அல்லது வெண்ணெய் தடவாத இரண்டு (4 துண்டு) வெஜிடபிள் ரொட்டி, சாண்ட்விச் அல்லது இட்லி இரண்டு. 6. மதிய உணவு (12.00 - 1.00 மணிக்குள்): 2 கரண்டி ஏதேனும் ஒரு வகை கீரையும், 2 கரண்டி நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகள் (வெண்பூசணி, புடலங்காய்) பருப்பு சேர்த்து தேங்காய் சேர்க்காமல் கூட்டு, ஒரு கரண்டி சாம்பார், ஒரு கப் சாதம் அல்லது எண்ணெய் சேர்க்காத இரண்டு கோதுமை சப்பாத்தி, ஒரு கரண்டி வெண்ணெய் எடுத்த தயிர் அல்லது ஒரு டம்ளர் மோர். 7. இரவு உணவு (7.00 - 8.00 மணிக்குள்): வேக வைத்த காய்கறிகள் மூன்று கப் அல்லது சூப், பப்பாளி அல்லது ஆரஞ்சு அல்லது பைன் ஆப்பிள் (6 துண்டு) அல்லது கொய்யா 3 துண்டு. 8. பகலில் உறங்குவதை தவிர்த்தல் நல்லது. எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும். உப்புள்ள ஆகாரங்களை (ஊறுகாய், சிப்ஸ், உப்பு பிஸ்கட்) தவிர்க்கவும். இரவில் உண்ட பின் குறுநடை செய்த பிறகு உறங்க ல்லவும். "இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு' என்ற பழமொழிக்கு ஏற்ப காலையில் கொள்ளு கஞ்சி குடிப்பது நல்லது.
Read more

24 August 2013

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மாங்காய் - இஞ்சி


ஞ்சி ஒரு சிறந்த இயற்கை மருந்து என்பது யாவருக்கும் தெரியும். மாங்காய் இஞ்சியும் பல மருத்துவக் குணங்கள் கொண்டது என தாவரஇயல் வல்லுனர்களும், மருந்தியல் விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துள்ளார்கள். மாங்காய் இஞ்சியின் தாவர இயல் பெயர் ‘குர்குமா அமேடா’ இது இஞ்சி பெரேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் ‘‘மாங்கோ ஜிஞ்சர்’’ என்று பெயர். இஞ்சியைப் போன்று மாங்காய் இஞ்சியின் தாயகமும் இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ் டிரா, ஆந்திரா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஒரிசா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. பயன்பெறும் பாகம்: இச்செடியின் மண்ணிற்குக் கீழ் உள்ள தண் டுக்கிழங்குதான் நாம் பயன் படுத்தும் மாங்காஇஞ்சி. இதை தாவர வியலில் ரைசோம் என்று அழைக்கிறார்கள். பெயர் வந்த விதம்: மாங்காயைப் போன்று வாசனையும், இலேசான இஞ்சிச்சுவையும், இஞ்சியைப் போன்று உருவமும் கொண்டதால், தாவர இயல் நிபுணர்கள் தமிழில் இதற்கு ‘மாங்காய்இஞ்சி’ என்று மிகப் பொருத்த மாக பெயர் சூட்டியுள்ளார்கள். அடங்கியுள்ள சத்துப் பொருள்கள்: நாம் சாப்பிடும் மாங்காய் இஞ்சியில் புரதம், மாவுப் பொருட்கள், கொழுப்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ப்பொருட்கள், வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ அடங்கியுள்ளன. மாங்காய் வாசனையின் காரணம்: மாங்காய் இஞ்சியிலுள்ள மாங்காய் வாசனைக்கான காரணம் இதில் உள்ள சீஸ் - ஓசிமென், டிரான்ஸ் டை ஹைட்ரோசிமின், மிர்சீன் ஆல்பா முதலிய வேதிப் பொருட்கள் ஆகும். இதில் அடங்கி உள்ள ‘குர்குமின்’ என்ற வேதிப்பொருள் இதற்கு மிக லேசான மஞ்சள் நிறத்தைக் கொடுக்கிறது. இதிலுள்ள ஒரு வகை ஒலியோரெசின், போர்னியால், ஆர்டர்மிரோன் இவை இஞ்சியின் சுவையை அளிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ’மாங்காய் இஞ்சி’ புதுமொழிகள்மாதா ஊட்டாத சோறை மாங்காய் இஞ்சி ஊட்டும்.வாய்ப்புண்ணிற்கு தேங்காய் வயிற்றுக்கோளாறுக்கு மாங்காய் இஞ்சி!கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பாங்கான மருந்து மாங்காய் இஞ்சி! மருத்துவப் பயன்கள் ஏதாவது ஒருவகையில் மாங்காய் இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர் வதைத் தடுக்கும். இரத்த ஓட்டம் சீராக இயங்கும். இயற்கையிலேயே கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர் களுக்கு, இரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். மாங்காய் இஞ்சியை மெல்லிய வட்டமாக நறுக்கி சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து சாலட்டாக சாப்பிடுவது சாலச்சிறந்தது. வயிற்றிலுள்ள தீமைதரும் பூச்சிகளை அழித்து மலத்துடன் வெளியேற்றும் தன்மை மாங்காய் இஞ்சிக்கு உண்டு. வயிறு, குடல் பகுதிகளில் பூசணங்களை அறவே ஒழிக்கும். சுருங்கச் சொன்னால் மாங்காய் இஞ்சி ஒரு சிறந்த இயற்கை வயிற்றுக் கழுவி ஆகும். மாங்காய் இஞ்சியை துவையல் அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லையை வேரறுக்கும். உணவு செரியாமையை சீர்செய்யும். நன்கு பசி ருசி ஏற்படுத்தும். குண்டான உடல்வாகு உள்ளவர்கள் மாங்காய் இஞ்சியை தொடர்ந்து சமையலில் சேர்த்து வர, உடல் எடை கணிசமாகக் குறையும் என ஜெர்மனியில் மேற்கொண்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது. வயிற்று உப்புசத்திற்கு ஒரு எளிய இயற்கை மருந்து மாங்காய் இஞ்சி. சரும நோய் வராது காக்கும் குணமுடையது. சிலவகை டானிக்கு களில் இதன் சாறு ஒரு உபபொருளாகச் சேர்க்கப்படுகிறது. மாங்காய் இஞ்சி ஒரு வலி நிவாரணி. குடல் வலிக்கு மிகவும் சிறந்த இயற்கை மருந்து. மூட்டுவலியைத் தணிக்கும். வெங்காயத்துடன் மாங்காய் இஞ்சியையும் சேர்த்து சாலட் ஆக சாப்பிட்டுவர ஞாபக சக்தியை அதிகரிக்கும். குளிர்காலத்தில் மாங்காய் இஞ்சியை தாராளமாய் உணவில் சேர்த்துக் கொண்டால் குளிர் உடம்பைப் பாதிக்காது காக்கும் என சில ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன. மாங்காய் இஞ்சியை சிறிய வட்டத் துண்டுகளாக நறுக்கி, சீரகத்தூள் தூவி சாலட்டாக சாப்பிட்டு, ஒரு தம்ளர் மோர் குடித்தால் பித்தம் குணமாகும். மாங்காய் இஞ்சி ரெசிபீஸ் 1. மாங்காய் இஞ்சி சாலட் : மாங்காய் இஞ்சியை மெல்லிய வட்டத்துண்டுகளாக நறுக்கி, சிறிது எலுமிச்சம் பழச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து சாலட்டாக சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. 2. துவையல் : மாங்காய் இஞ்சி, பச்சைமிளகாய், வெள்ளைப்பூண்டு, தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து துவையல் அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். 3. மாங்காய் இஞ்சி சட்னி: சட்னி செய்து இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பத்துடன் சேர்த்து உண்ண சுவையோ சுவை. 4. மாங்காய் இஞ்சி தயிர்ப் பச்சடி : தயிர்ப் பச்சடி தயாரித்து, சைட்டிஸ் ஆக பயன்படுத்தலாம். 5. மாங்காய் இஞ்சி கறி : மாங்காய் இஞ்சியை துண்டுகளாக நறுக்கி, சிறிது நல்லெண்ணெயில் வதக்கி எடுத்து, அத்துடன் சீரகம், வத்தல், வெள்ளைப் பூண்டு, உப்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். இத்துடன் சிறிது புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, கறிவேப்பிலை தாளித்திட்டு இறக்கவும். இந்தக் கறியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவைக்கு சுவை, சத்துக்கு சத்து. 6. மாங்காய் இஞ்சி ஊறுகாய் : நறுக்கிய மாங்காய் இஞ்சியுடன் மிளகாய்த்தூள், எலுமிச்சைசாறு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஊறுகாய் செய்து அவ்வப்போது பயன்படுத்தலாம். 7. மாங்காய் இஞ்சி தொக்கு : சிறு சிறு துண்டுகளாக்கிய மாங்காய் இஞ்சியை மிக்ஸியிலிட்டு தொக்கு பதத்தில் அரைத்து எடுக்கவும். இத்துடன் சீரகத்தூள், மஞ்சள்தூள், மிளகாய் வத்தல்கள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து எண்ணெய் சேர்த்து வேகவைத்து இறக்கவும். மாங்காய் இஞ்சி தொக்கு ரெடி. எல்லாவகை சாதத்துடனும் தொட்டுக் கொள்ள சுவையோ சுவை. 8. மாங்காய் இஞ்சி புலவு : பாசுமதி அரிசியை உதிரியாக வேகவைத்து எடுத்து, துருவிய மாங்காய் இஞ்சி, நெய், உப்பு சேர்த்து புலவு செய்து, வெங்காய தயிர்ப் பச்சடி சேர்த்து சாப்பிட, சூப்பர் சுவைதான். 9. மாங்காய் இஞ்சி, வத்தக்குழம்பு : மிளகாய் வத்தல், மாங்காய் இஞ்சி, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை விழுதாக அரைத்து எடுக்கவும். தேவையான புளிக் கரைசலில் இவற்றைச் சேர்த்து வத்தக்குழம்பு செய்து இறக்கவும். நன்கு சுவையானது இக்குழம்பு. 10. மாங்காய் இஞ்சி பக்கோடா : சாதாரணமாக நாம் பக்கோடாவுக்கு மாவு சேர்க்கும்போது, மாங்காய் இஞ்சியைத் துருவி இட்டு நன்கு கலந்து பின்னர் பக்கோடா பொரித்து எடுக்கவும். இது சூப்பர் சுவையான பக்கோடா.
Read more

05 May 2013

உட‌ல் இளை‌க்க....

ட‌ல் இளை‌க்க கை வை‌த்‌திய‌ம்
food

சில‌‌ர் ‌நிறைய நொறு‌க்கு‌த் ‌தீ‌ணி சா‌ப்‌பி‌ட்டு, ச‌ரியான அளவு வேலை செ‌ய்யாம‌ல் உட‌ல் பெரு‌த்து‌க் காண‌ப்படுவா‌ர்க‌ள்.

ஒரு ‌சில‌ரு‌க்கு சுர‌ப்‌பிக‌ளி‌ன் ‌பிர‌ச்‌சினையா‌ல் உட‌ல் பெரு‌த்து‌க் காண‌ப்படு‌ம். இ‌வ‌ர்க‌ள் உ‌ரிய ‌சி‌‌கி‌ச்சை எடு‌த்து‌க் கொ‌ண்டா‌ல் உட‌ல் பெரு‌க்க‌த்தை‌க் குறை‌க்கலா‌ம்.

முத‌லி‌ல் சொ‌ன்னது போ‌ல், உட‌ல் உழை‌ப்பு இ‌ல்லாம‌ல், உணவு‌ப் பழ‌க்க‌த்‌தி‌ன் மூல‌ம் உட‌ல் எடை அ‌திகமாக இரு‌க்கு‌ம் நப‌ர்க‌ளு‌க்கு ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைக‌ள் ஏ‌ற்படு‌ம்.

குண்டாக இருப்பவர்கள் இலந்தை மர இலையைக் கொண்டு வந்து ந‌ன்கு கழு‌வி அரைத்து ‌சிறு ‌சிறு உரு‌ண்டைகளாக‌ப் ‌பிடி‌த்து ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வைத்துக் கொள்ளுங்கள்.

இதில் தினசரி ஒரு உரு‌ண்டையை‌ப் போ‌ட்டு ஒரு டம்ளர் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி‌க் குடித்து வாருங்கள், ஊளைச்சதை குறையும்.
Read more

01 May 2013

உட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு

ட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக் கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
Read more

03 February 2013

குண்டானவர்கள் ஒல்லியாக...

* விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.

* இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner