Ads Header

Pages


09 February 2013

சர்க்கரை நோய்க்காரர்களுக்கு உகந்த உணவு முறைகள்!

ந்த நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும். இத்தகைய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைப்பது நம் உணவு முறையே.

முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

கீழ்கண்ட உணவு முறைகளை தவறாமல் கடைப்பிடித்து வருவது நல்லது.

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள்

கத்தரி பிஞ்சு, சுரைக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, வெண்டைக்காய், கோவைக்காய், பீன்ஸ், சாம்பல் பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, காளி பிளவர், வெண்பூசணி, பாகற்காய், வாழைப்பூ, காராமணி, கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வாழை பிஞ்சு, நூல்கோல், முருங்கைக் காய், வெள்ளரிக்காய், சௌசௌ இவைகளுடன் கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்து பச்சடியாக தினமும் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து எளிதில் மீளலாம்.

நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள்

சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கீரைகளுக்கும் உண்டு.

கறிவேப்பிலை, தூதுவளைக் கீரை, ஆரைக்கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக் கீரை, துத்திக் கீரை, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரைக் கீரை, கொத்தமல்லிக் கீரை

இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து தினமும் 1 டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம், அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

சர்க்கரை நோய்க்காரர்களுக்கு உகந்த பழங்கள்

சாத்துக்குடி :1

ஆரஞ்சு : 2

ஆப்பிள் (தோலுடன்) : 1
:
கொய்யா (சிறியது) : 2

பேரிக்காய் (சிறியது) : 2

வெள்ளரிக்காய் : 2

அன்னாசிப்பழம் :4 வளையங்கள்

தர்பூசணி : 1 துண்டு

மேல் சொன்ன பழங்களில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டுள்ள அளவுகளில் தினமும் உண்ணலாம்.

உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பசி அல்லது தாகம் எடுத்தால்.

வெள்ளரி, அரிசிப்பொரி, மோர் (கறிவேப்பிலை, கொத்தமல்லி சீரகம் கலந்தது), கோதுமை உப்புமா, அவித்த சுண்டல், சிறுபயறு, கொண்டைக் கடலை, கொள்ளு, தட்டைப்பயிறு இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.

எலுமிச்சை சாறு : 200 மி.லி.

வாழைத்தண்டு சூப்: 200 மி.லி.

அருகம்புல் சூப் : 200 மி.லி.

நெல்லிக்காய் சாறு :100 மி.லி

கொத்தமல்லி சூப் : 100 மி.லி.

கறிவேப்பிலை சூப் : 100 மி.லி.

இவற்றில் ஏதாவது ஒன்றை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது.

எண்ணெயில் வறுக்கப்பட்ட அனைத்து அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

முட்டை : 1 (வெள்ளைக் கரு மட்டும்)

மீன் : 2 துண்டுகள்

கோழிக்கறி : 100 கிராம் (அவித்தது)

மேற்கண்ட உணவுகளை முறையாக சாப்பிட்டும் தினமும் உடற்பயிற்சியும், நடைபயிற்சியும், ஆசனமும் செய்து வந்தால் சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner