Ads Header

Pages


02 February 2013

முருங்கையின் மகத்தான பயன்கள்!

முருங்கையின் மகத்தான பயன்கள்!
முருங்கைப்பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தப் படுத்தி, அதை 250 மில்லி பசும்பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் கற்கண்டு கூட்டி, ஒரு மண்டலம் குடித்து வர ஆண்மை பெருகும்.

முருங்கை வேரை நீர் விடாமல் நன்கு அரைத்து, பசும்பாலில் கலந்து காய்ச்சி, 2 வேளை குடித்து வரவும் அவ்வாறு செய்துவர 4 நாட்களில் ‘ஹிஸ்டிரியா’ எனப்படும் மனச்சிதைவு நோய் கட்டுப்படும்.

முருங்கைப் பூவுடன் சமளவு துவரம்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து பகலில் சாப்பிட்டு வர, உடலில் வலு ஏற்படும். ரத்தம் அதிகரிக்கும். பெருப்பாடு குணமாகும்.

முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.

நன்கு பசுமையாகவும், இளசாகவும் உள்ள முருங்கை காய்களை எடுத்து, இடித்து சாறி பிழிந்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட ஜலதோசம் குணமாகும்.

கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.

முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.

முருங்கை இலையை இடித்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு எடுத்து, அதில் 10 கிராம் மிளகை தூள் செய்து கலந்து, சிறிது தேனும் சேர்த்து குடித்து வர, அதிகப்படியான ரத்த அழுத்தம் சமநிலைப்படும்.

முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டி தேவையான உப்பும் சேர்த்து “சூப்” போல செய்து பருகி வர பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குறையும்.

முருங்கைப் பட்டை, வெள்ளைக்கடுகு. பெருங்காயம் இவற்றை நன்கு அரைத்து சூடாக்கி பொறுக்க கூடிய சூட்டில் மூட்டு வீக்கத்தின் மீது பற்றுப் போட சில நாட்களில் மூட்டுவலி குணமாகும்.

முருங்கைக் கீரையுடன் உப்பு சேர்த்து இடித்து சாறு பிழிந்து, அதை இடுப்பில் நன்றாக தேய்த்தால் இடுப்புப் பிடிப்பு குணமாகும். அவ்வாறு இரண்டொரு முறை தேய்க்க நல்ல குணம் கிடைக்கும்.

முருங்கை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்பு மட்டும் நறுக்கி மிளகு சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கை,கால் அசதி நீங்கும்.

குழந்தைகளின் வயிற்று உப்புசம் தணிய முருங்கை கீரைச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து உட்கொள்ள கொடுக்கவும்.

முருங்கைக் கீரையுடன் சிறிது உப்பு கூட்டி நன்கு வறுக்க வேண்டும். கீரை சுருண்டு உப்புடன் சேர்ந்து கருகும். கீரை நெருப்பு பிடிக்கும் வரை வறுத்து, பின் இறக்கி ஆறியதும் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். புளியேப்பம் வரும்போது அதில் ஒரு ஸ்பூன் பொடியை எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடியுங்கள். அது சரியாகிவிடும்.

முருங்கை கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து வயிற்றின் மேல் கனமாக பூச நீர்க்கட்டை உடைத்து சிறுநீரப் பெருக்கும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner