Ads Header

Pages


09 April 2013

கேள்வி பதில்கள் - கணிணிக்குறிப்புக்கள்.

கேள்வி: மானிட்டரில் தெரியும் விண்டோவில் வலது மேல் மூலையில் உள்ள கட்டங்களைப் பெரிதாக அமைக்க முடியுமா? ஏனென்றால் பல வேளைகளில் நான் மாற்றி அழுத்திவிடுகிறேன்.

பதில்: தாராளமாக மாற்றலாம். ஆனால் அதற்கேற்றார்போல் மேலே உள்ள டைட்டில் பாரும் பெரிதாகத் தோற்றமளிக்கும். சரியா! முதலில் திரையில் காலி இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள்.
கிடைக்கும் மெனுவில் Appearance tab என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். சில சிஸ்டங்களில் Advanced என்று இருக்கும். இதில் Item என்ற பிரிவில் பின்னர் கிளிக் செய்திடவும். இதில் நீங்கள் குறிப்பிட்ட கட் டங்களின் அளவை பெரிதாக்கவும் சிறிதாக்கவும் வசதி தரப் பட்டிருக்கும். இங்கே உள்ள அம்புக்குறியினை மேல் நோக்கி அல்லது கீழ் நோக்கி அழுத்தினால்
கட்டங்கள் பெரிதாகவும் சிறிதாகவும் மாறும் நீங்கள் தேவைப்படும் அளவிற்கு பெரிதாக ஆக்கலாம்.

கேள்வி: எக்ஸெல் தொகுப்பில் நெட்டு மற்றும் படுக்கை வரிசைகளுக்கு எண்கள் மற்றும் எழுத்துக்கள் கலந்த பெயர்கள் தரப்படுகின்றன. ஆனால் அதற்குப் பதிலாக நம் இஷ்டப்படி பெயர்களை வழங்கலாமா? இதனால் இந்த செல்களை நாம் கணக்கு வழக்கில் கையாளுகையில் கணக்கில் தவறு ஏற்படுமா?


பதில்: செல்களுக்குப் பெயர்களைச் சூட்டலாம். இதற்கு எக்ஸெல் இடமளிக்கிறது. பார்முலாக்களைப் பயன்படுத்துகையில் இந்த பெயர்களையே சூட்டப்படும் பெயர்களையே அமைக்க வேண்டும்.
எடுத்துக் காட்டாக C1, D1, E1 செல்களில் உள்ள மதிப்புகளுக்கு முறையே Principle, Years, Interest எனப் பெயர் கொடுப்பதாக வைத்துக் கொள்ளுவோம். வட்டி கண்டு பிடிக்க =C1*D1*E1/100 என பார்முலா கொடுப்பதற்குப் பதில் = principal* Years* Interest/100 எனக் கொடுப்பது எளிதாக உள்ளதல்லவா? பெயர்களை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும்.

பார்முலா பாருக்கு பெயரை கிளிக் செய்தால் அந்த பெயருக்கான செல்லை அல்லது ரேஞ்சை எக்செல் தேர்வு செய்து விடும். பெயர் இல்லாமல், செல்லுகளின் முகவரிகளை வைத்து பார்முலா
அமைத்திருந்தால், டிராக் இல்லாமல் செல்லுகளின் முகவரிகளை வைத்து பார்முலா அமைத்திருந்தால், டிராக் செய்யும் பொழுது செல்லுகளின் முகவரிகளும் மாறி விடும். எடுத்துக் காட்டாக F1 செல்லில் = c1*D1*E1/100 என பார்முலா கொடுத்து, பின்பு F1 செல்லின் பில் ஹேண்டிலை F2 செல்லிற்கு இழுத்துச் சென்றால் அந்த பார்முலா = C2*D2*E2/100 என மாறி விடும். ஆனால் பெயர்கள் கொடுத்தால் அந்த தொல்லை வராது.

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கத்திற்கு நன்றி நண்பரே...

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner