Ads Header

Pages


18 October 2013

நலமும் அழகும் சில குறிப்புகள்

பற்கள் பளபளப்பாக இருக்க எலுமிச்சை சாற்றுடன் உப்பு கலந்து பிரஷ் செய்யவும்.- குளிப்பதற்கு முன்பு மஞ்சள் பொடியையும் நல்லெண்ணையையும் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் காயவிடவும். அதன்பிறகு வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தை கழுவவும். முகம் பளபளக்கும்.- உங்கள் கூந்தல் பளபளப்பாகவும், கறுமையாகவும் இருக்க உங்கள் உணவில் எலுமிச்சை சாற்றை சேர்த்துக் கொள்ளவும்.- வாரம் 5 முறையாவது தவராமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது, எடை குறைகிறது, பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது. உதடுகளின் வடிவத்தை லிப் லைனரைக் கொண்டு வரைந்து, அதன் பிறகு அதற்குள் லிப்ஸ்டிக்கால் நிறத்தை நிறப்புவது நல்லது. லிப்ஸ்டிக் உதட்டைவிட்டு வெளியே பரவுவதை இது தடுக்கும். ஆரஞ்சு ஜூஸ் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக பொலிவுடன் தோன்றும். கசகசா ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம். பப்பாளி ஜூஸ் தடவினால், வியற்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும். கொத்துமல்லி இலையை அரைத்து பூசினால் முகம் வசீகரமாக மாறும்.மேனகா - நாமக்கல்எல்லா வித பழங்களும் முகத்திற்கு நல்லது. அவற்றை மசித்து முகத்தில் பூசினால் முகம் உடனுக்குடன் சுத்தமடைந்து பளபளப்பாய் காட்சி தரும். தக்காளி சாறு : சருமத்தை மிருதுவாக்கி ஒளிரச் செய்யும். பப்பாளி : முகத்தில் சுருக்கம் விழுவதையும் தற்காலிகமாக ஒத்திப்போடும். சிட்ரஸ் பழங்கள் : ப்ளீச்சிங் ஏஜெண்ட் . சருமத்தின் எண்ணெய் பசையை கட்டப்படுத்துகின்றன. உருளை : கண்களுக்கு அடியில் வீக்கம் இருந்தால் உருளை துண்டுகளை கண்ணுக்கடியில் வைக்கவும். வீக்கம் குறையும்.எம். அருள் வாணி உங்கள் முடி சுருட்டையானதாக இருந்தால் சீப்பு உபயோகிப்பதை தவிர்க்கவும். சீப்பு உபயோகித்தால் நீங்கள் விரும்பும் வகையில் முடியை `ஸ்டைல்செய்ய முடியாது. குளித்தவுடன் புருவத்தை ஷேப் செய்தால் வலி தெரியாது. அல்லது வெந்நீரில் பஞ்சை நனைத்து, புருவத்தின் மேல் தடவிய பிறகும் ஷேப் செய்யலாம். "ப்ளஷ்" (Blush ) எங்கே தடவ வேண்டும் என்று சந்தேகம் இருந்தால், அதை சுலபமாக தீர்க்கலாம். 1/2 மணி நேரம் உடற்பயிற்சி செய்த பிறகு முகத்தை கண்ணாடியில் பார்க்கவும். கன்னங்களில் சிவந்திருக்கும் இடத்தில் தான் `ப்ளஷ்தடவ வேண்டும்! மேலே பார்த்தவாறு ஒரு விரலால் உங்கள் புருவத்தை மேல் நோக்கி தள்ளவும். அதன் பிறகு கீழே பார்த்தவாறு மேல் கண் இமையில் மஸ்காரா தடவவும். உங்கள் புருவங்களை குளித்த பிறகு ஷேப் செய்யவும். இல்லையென்றால் வெந்நீரில் நனைத்த துணியை புருவத்தின் மேல் சில நிமிடங்கள் வைக்கவும். இது வலியை குறைத்து புருவத்திலுள்ள முடிகளை எடுப்பதை சுலபமாக்கும். தலை முடியை ஷாம்பு போட்டு கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு மக் நீரில் கலக்கி அதைக் கொண்டு தலையை ஒரு முறை கழுவுங்கள், உங்கள் தலை முடி மிருதுவாகவும், பட்டுப் போன்றும், பளபளப்பாகவும் இருக்கும். காதில் போடும் கம்மல், மூக்குத்தி ஆகியவற்றால் காது அல்லது மூக்கு துளைகளில் புண் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து அந்தத் தண்ணீரைக் கொண்டு புண்களைக் கழுவினால், புண் விரைவில் குணமாகும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner