Ads Header

Pages


30 March 2013

நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை - கணிணிக்குறிப்புக்கள்.

மிழ் கணணி Computer in Tamil - தமிழில் கம்பியூட்டர்
பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - பாடும்குயில்

நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை

நம் வீட்டில் குழந்தைகள் நம்மிடம் கேட்கும் முறையான கேள்விகளுக்கு முறையான பதிலைத் தர வேண்டும் என்றால் நாம் பல புத்தகங்களைப் புரட்ட வேண்டியுள்ளது. சில கேள்விகள் நியா யமானவையாக இருந்தாலும் அதற்கு பதிலே கூற முடியாது.
குழந்தைகள் மட்டுமல்லாது சிறுவர்களும், இளைஞர்களும் ஏன் சில சமயங்களில் பெரியவர்களும் இது போன்ற கேள்விகளைக் கேட்டு பதில் தேடுகின்றனர்.
இந்த உலகில் நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களில் நமக்கு ஆர்வம் இருக்கும் வரை கேள்விகள் எழுந்துகொண்டுதான் இருக்கும். ஏன்? எப்படி? என்ன? என்ற ன்று கேள்விகளைக் கொண்டுதான் நாம் நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களை அறிந்து கொள்கிறோம்.

இதுபோன்ற கேள்விகளைத் தொகுத்து அவற்றிற்கான பதில்களையும் சுருக்கமாகக் கொண்டு ஒர் இணையதளம் இயங்குகிறது. இந்த தளத்தின் முகவரி http://www.whyzz.com

இதனைப் பயன்படுத்த எளிதான முதல் வழி, இதன் முகப்புத் தளத்தில் உள்ள தேடுதல் கட்டத்தில் நம் கேள்வியை சுருக்கமாக டைப் செய்து அருகில் உள்ள கேள்விக்குறி யின் மீது கிளிக் செய்வதுதான். உடன் பல பதில்கள் கொண்ட லிங்குகள் கிடைக்கும்.
இதில், உங்களுக்குத் தேவையான பதிலுக்கான லிங்கினைக் கிளிக் செய்தால் சற்று விரிவான தகவல்கள் கிடைக்கும். பதில் இல்லை என்றால் உங்கள் கேள்வி எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது. விரைவில் அதற்கான பதில் தரப்படும் என்ற குறிப்புக் கிடைக்கும்.

இன்னொரு வழியிலும் தேவையான தகவலைத் தேடலாம். இந்த கேள்விக்கான கட்டத்தின் கீழாக Featured Answer, Most Recently Answered மற்றும் Category . இதில், மேலும் பிவுகளாக Nature, Animals, World, Science, Human Body, Serious Issues, Creativity & Imagination, Fun Stuff, Current Events எனப் பல பிவுகளை காணலாம்.

இவற்றில் உங்களுக்கு தேவையான பொருள் உள்ள பிரிவில் கிளிக் செய்து விடையைப் பெறலாம். இதில் விடை தரப்படாத கேள்விகளையும் காணலாம். உங்களுக்குத் தெரிந்தால் அதற்கான பதிலையும் அனுப்பலாம். சிறுவர் களுக்கு இந்தத் தளத்தை அறிகப்படுத்தினால், அவர்களே அவர்களின் சந்தேகங்களுக்குப் பதில் பெறுவார்கள்.

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

http://www.whyzz.com நல்ல தளம்... குழந்தைகளுக்கு மிகவும் உதவுகிறது...

பல சேவைகள் தொடர வாழ்த்துக்கள்...

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner