Ads Header

Pages


23 March 2013

மூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி.

மூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி - காட்டு இலவங்கப்பட்டை--மூலிகை மருத்துவம்:

காட்டு லவங்கப்பட்டை, தாளிசப்பத்திரி, சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், சீரகம், ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து, சுத்தம் செய்து, இடித்து, பொடித்து, சலித்து 1 முதல் 2 கிராம் அளவு தேன் அல்லது பாலுடன் கலந்து தினமும் 2 முறை சாப்பிட்டு வரலாம். அரை கிராம் காட்டு லவங்கப்பட்டையை பொடித்து, சலித்து தேனுடன் குழப்பி, தினமும் ஒரு வேளை உணவுக்கு பின் சாப்பிட கபம் நன்கு வெளியேறும். மூக்கடைப்பு நீங்கும்.
இதன் பட்டைகளிலுள்ள சின்னமால்டிகைடு, யூஜினால் போன்ற ஆவியாகக்கூடிய எண்ணெய் வகைகள் சதை வளர்ச்சியை கட்டுப்படுத்தி, ஒவ்வாமையை நீக்கி, சுவாசத்தை சீர் செய்கின்றன. இவற்றிலுள்ள டைடெர்பின்கள் ஆன்டிஹிஸ்டமைன்களாக செயல்பட்டு, அலர்ஜியை தடுக்கின்றன.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner