Ads Header

Pages


05 November 2012

இயற்கை பொருட்கள் மூலம் அழகை பராமரிக்க..

யற்கை பொருட்கள் மூலம் அழகை பராமரிக்க...
‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழி அனைவரும் அறிந்த ஒன்று.

முகம் பொலிவு பெற

வெயிலிலும், மாசு நிறைந்த இடங்களிலும் அலைந்து திரிபவர்களின் முகம் எண்ணெய் பசையுடன் இருக்கும். இதனைப் போக்கி முகம் பொலிவு பெற கீழ்கண்ட முறையை பின்பற்றலாம்.

கஸ்தூரி மஞ்சள் - 5 கிராம்
சந்தனத் தூள் - 5 கிராம்
வசம்பு பொடி - 2 கிராம்

எடுத்து பாதாம் எண்ணெயில் குழைத்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் உறவைத்து பின் இளம் சூடான நீரில் முகத்தை கழுவி மெல்லிய பருத்தித் துணி கொண்டு முகத்தை துடைத்து வந்தால் முகம் பொலிவுடன் காணப்படும். வாரம் இருமுறையாவது இவ்வாறு செய்து வரவேண்டும்.
வெள்ளரிக்காய் (cucumber) சாற்றில் முல்தானிமட்டி மற்றும் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசி பிறகுக் கழுவினால் வெய்யிலினால் கருத்த முகம் பொலிவு பெற்று விடும்
***
முகச்சுருக்கம் மாற

ஆவாரம் பூ காய்ந்த பொடி - 5 கிராம்
புதினா இலை காய்ந்த பொடி - 5 கிராம்
கடலை மாவு - 5 கிராம்
பயிற்ற மாவு - 5 கிராம்
எடுத்து ஆலிவ் எண்ணெய் கலந்து நன்கு குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகச் சுருக்கம் நீங்கும். தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் என்றும் இளமைப்பொலிவுடன் இருக்கலாம்.

வெள்ளரி - 2 துண்டு
நாட்டுத் தக்காளி - 1 பழம்
புதினா - சிறிதளவு
எடுத்து நன்றாக அரைத்து முகத்தில் பூசி குளித்து வந்தால் முகச் சுருக்கங்கள் நீங்கும் . இதை காலை நேரத்தில் செய்வது நல்லது.
***
முகம் பளபளக்க

காலை வேளையில், கடலைமாவை நீரில் குழைத்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து பின் முகம் கழுவி வந்தால் முகம் பளபளக்கும். இதை தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

பாதாம்பருப்பு சருமத்திற்கு ஒரு அற்புதப் பொருள் எனலாம். 5 பாதாம்பருப்பினை ஊற வைத்து பால் சேர்த்து விழுதாய் அரைத்து தேன் சில துளி சேர்த்து முகத்தில் பூசுங்கள். 20 நிமிடம் ஊறிய பின் முகத்தைக் கழுவுங்கள். பளிச் முகம் இப்போது!
***
முகப்பரு தழும்பு மாற

புதினா சாறு - 2 ஸ்பூன்
எலுமிச்சை பழச்சாறு - 1 ஸ்பூன்
இவற்றில் பயிற்ற மாவு கலந்து முகப்பரு தழும்புகளின் மீது தடவி வந்தால் முகப்பருத் தழும்புகள் மாறும்.
***
ஆண்களுக்கு உண்டான முகப்பரு மாற

சாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்து அதனுடன் சந்தனத் தூள் கலந்து, நீர்விட்டு நன்றாகக் குழைத்து முகத்தில் தடவினால் ஆண்களுக்கு உண்டாகும் முகப்பரு தழும்புகள் மாறும்.

கொத்தமல்லி - 5 கிராம்
புதினா - 5 கிராம்
எடுத்து அரைத்து அதனுடன் பயத்த மாவு, கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.
***

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner