Ads Header

Pages


25 July 2012

பழங்களின் பயன்கள் டிப்ஸ்!

ழங்களும் பயன்களும்

1.மலச்சிக்கலைப் போக்கும் *நறுவிலிப் பழம்*

நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு வர
மலச்சிக்கல் அற்றுப் போகும்.
---------------------------------------------------------------------------------

2. தாகம் தணிக்கும் *ஆல்பகோடாப் பழம்*

காய்ச்சல் வந்தபின் நாக்கு உருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும்.
அப்போது, ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம் தணியும். காய்ச்சல் விலகும்.

------------------------------------------------------------------------------------
3. இளமை தரும் *தக்காளி*

இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி,
மலச்சிக்கலையும் போக்கும்.

-------------------------------------------------------------------------------------
4. பேதியை நிறுத்தும் *எலுமிச்சம்பழம்*

எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2
நாளில் பேதி நின்றுவிடும்,

------------------------------------------------------------------------------
5. இன்பம் தரும் *இனிப்புக் கமலா*

இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத்தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும்.

---------------------------------------------------------------------
6. விக்கலை நிறுத்தும் *கொய்யாப் பழம்*

கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட்டு வர விக்கல் வராது. இரைப்பை வலிமை பெறும்.

--------------------------------------------------------------------
7. தலைக் கனம் குறைக்கும் *களாப் பழம்*

களாப் பழத்தை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய நீர் குறைந்து
தலைக்கனம் குறையும்.
----------------------------------------------------------------------
8. கருப்பைக்கு வலிமை தரும் *மாதுளை*

மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும்.
வயிற்றுக் கோளாறு வராது.
-----------------------------------------------------------------------
9. வாய்வுக்கும் *நாரத்தம் பழம்*

நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம்
விலகும்.
-----------------------------------------------------------------------------
10. கண்ணொளி தரும் *முந்திரிப் பழம்*

கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.
-----------------------------------------------------------------------------
11. வெண்மேகம் தீர்க்கும் *கண்டங் கத்திரிப்பழம்*

கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு
வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் ஆஇறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும்.
---------------------------------------------------------------------------
12. காச நோய்க்குத் *தூதுளம் பழம்*

தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும்.
-----------------------------------------------------------------------
13. கபால நரம்புகள் பலம் பெறப் *பலாப்பழம்*

பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.
---------------------------------------------------------------------------
14. பசியைத் 'துண்டும் *இலந்தைப் பழம்*

பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும்.
அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.
------------------------------------------------------------------
15. தாது விருத்தி தரும் *திராட்சை*

உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.
--------------------------------------------------------------------------
16. *பப்பாளிப் பழம்*

யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம்
சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.
-------------------------------------------------------------------------------
17. *வாழைப்பழம்*

மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.
--------------------------------------------------------------------------------------------
18. *வில்வப் பழம்*

பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீ ரகம்
நன்கு செயல்படும்.
--------------------------------------------------------------------------------------
19. *அரசம் பழம்*

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.
--------------------------------------------------------------------------------------
20. *சீமை அத்திப்பழம்*

மூட்டு வலியைப் போக்கி ஆரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது. தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும். இரத்தச் சோகை விலகும்.
------------------------------------------------------------------------------------
21. *பேரீச்சம் பழம்*

இல்லற சுகம் சோர்வின்றி இயங்கத் தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன் சாப்பிடுங்கள். இரத்தச் சோகை விலகும்.
--------------------------------------------------------------------------------------------
22. *தர்பூசணிப் பழம்*

கோடைக்கால வெப்பத்தைத் தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத் தர்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம்.
---------------------------------------------------------------------------------------
23. *முலாம் பழம்*

மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். உடம்பு 'எடை' போட இதனை அடிக்கடி சாப்பிடலாம்.
-----------------------------------------------------------------------------------------
24. *விளாம்பழம்*

பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள்
விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட, பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும்.
---------------------------------------------------------------------------------------------
25. *அன்னாசிப் பழம்*

குடலில் பூச்சி சேருவதை வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால் அதனைக் கரைத்துச் சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப் பழச் சாறு+தேன். மழைக்காலத்தில சாப்பிட்டு வர, தொண்டைக்கட்டு நீங்கும்.
Read more

சில பாட்டி வைத்தியம்!

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
-----------------------------------------------------------------------------------
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
----------------------------------------------------------------------------------
உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.
---------------------------------------------------------------------------------------
வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.
-------------------------------------------------------------------------------
ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
---------------------------------------------------------------------------------
சிலரு‌க்கு கழு‌த்‌திலு‌ம், முக‌த்‌திலு‌ம் கரு‌ந்தேம‌ல் காண‌ப்படு‌ம். இத‌ற்கு ந‌ல்ல கை மரு‌த்துவ‌ம் உள்களது.
மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது ‌கு‌ளிய‌ல் சோ‌ப்பை‌ச் சே‌ர்‌த்து அரை‌த்து பூ‌சி வர ‌விரை‌வி‌ல் கரு‌ந்தேம‌ல் மறையு‌ம்.
---------------------------------------------------------------------------------------
சில பெ‌ண்களு‌க்கு ஏற்.படு‌ம் பெரு‌ம்பாடு, வெ‌ள்ளை‌ப்பாடு ஆ‌கியவை குணமாக, மருதா‌ணி இலையை அரை‌த்து நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு பசு‌ம்பா‌லி‌ல் கல‌ந்து இருவேளை ‌வீத‌ம் 3 நா‌‌ட்க‌ள் சா‌ப்‌பி‌ட்டா‌ல் ‌விரை‌வி‌ல் குண‌ம் ‌கிடை‌‌க்கு‌ம்.
ஆனா‌ல், இதனை உண்ணு‌ம் போது உண‌வி‌ல் பு‌ளியை ‌சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.
-----------------------------------------------------------------------------------------------
உள்ள‌ங்கா‌லி‌ல் ஆ‌ணி ஏற்ப‌ட்டிரு‌ந்தா‌ல் மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது வச‌ம்பு, ம‌ஞ்ச‌ள் க‌ற்பூர‌ம் சே‌ர்‌த்து அரை‌‌த்து, ஆ‌ணி உள்ள இட‌த்‌தி‌ல் தொட‌ர்‌ந்து க‌ட்டி வர ஒரு வார‌த்‌தி‌ல் குணமாகு‌ம்.
------------------------------------------------------------------------------
இதே‌ப்போல கா‌லி‌ல் ஆ‌ணி ஏற்ப‌ட்டவ‌ர்க‌ள் அந்த இட‌த்‌தி‌ல் நசு‌க்‌கிய பூ‌ண்டை வை‌த்து‌க் க‌ட்டி வ‌ந்தாலு‌ம் குண‌ம் ‌கிடை‌க்கு‌ம்.
------------------------------------------------------------------------------------
பல இடங்களில் பல வகையான உணவுகளை உட்கொண்டு நமது வயிற்றைக் கெடுத்து வைத்திருக்கிறோம். அப்படி செய்வதால் வயிற்றுக் கடுப்புக்கு ஆளாவதும் நாம்தான்.
அதற்கு மருந்து

இலந்தை இலை மற்றும் பட்டையில் உள்ளது.
இலையையும், பட்டையையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாய் நசுக்கி 200 மில்லி நீர் விட்டுக் காய்ச்சி 100 மில்லியாக வற்றியதும் குடித்து வர கழிச்சலும், ரத்தம் கலந்து போவதும் குறையும்.
வயிற்றுக் கடுப்புக்கு இது ஒரு மாமருந்தாக அமையும்.
-------------------------------------------------------------------------------------
இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
Read more

உபயோகமான சில வீட்டுக் குறிப்புகள்!

பயோகமான சில வீட்டுக் குறிப்புகள்

*முட்டையின் வெள்ளைக் கருவை அடித்து வைத்து, அத்துடன் கொஞ்சம் உப்பையும், சில துளிகள் எலுமிச்சம் பழச் சாற்றையும் கலந்து வைத்துவிட்டால் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

* காய்கறிகளை சமைக்கும்போது அவற்றில் பச்சை நிறம் போகாமலிருக்க, அவற்றை நறுக்கியதும் உப்பு கலந்த வெந்நீ ரில் சிறிது நேரம் போட்டு வைத்துவிட்டுப் பிறகு ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு வேக விட்டு எடுக்கவும்.

* துணிகளை தேய்க்கும்போது சில துளிகள் யுடிகோலனை விட்டுத் தேய்த்தால், சென்ட் போட வேண்டிய அவசியமில்லா மல், நல்ல மணமுடனிருக்கும்.

*மெழுகுவர்த்தி ஸ்டான்டினுள் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பதற்கு முன்பாக கொஞ்சம் எண்ணெய் தடவி வைத்து விடுங்கள். மெழுகு எரிந்து முடிந்ததும் அதை நீக்குவது சுலபமாக இருக்கும்.

* வாஷ பேசின் அடைத்துக் கொண்டிருக்கிறதா? ஒரு கைப்பிடியளவு சோடா பை கார்பனேட்டும், ஒரு கப் வினிகரையும் ஊற்றி, அதன்மேல் தண்ணீரையும் ஊற்றி விடவும். அடைப்பு நீங்கி வாஷ பேசின் சுத்தமாகும்.

* கை விரல்களில் ஏதேனும் இரும்புத் துகளோ,கண்ணாடித்துகளோ புகுந்து கொண்டு விட்டதா? அந்த இடத்தில் முதலில் கொஞ்சம் ஃபெவிகாலைத் தடவுங்கள். அது காய்ந்ததும் உரித்தெடுங்கள். அத்துடன் சேர்ந்து விரலினுள் மாட்டிக் கொண்ட துகளும் வந்து விடும்.

* மழையில் நனைந்து ஷூக்கள் ரொம்பவும் ஈரமாக இருக்கின்றனவா? அவற்றினுள் கொஞ்சம் நியூஸ் பேப்பரை அடைத்து வைத்து விடுங்கள். பேப்பர் எல்லா ஈரத் தையும் இழுத்துக் கொண்டு விடும்.

* சட்டைக் காலர்களிலும், கை மடிப்பு களிலும் உள்ள அழுக்குகள் எப்படித் துவைத்தாலும் போக மறுக்கிறதா? முதல் நாள் இரவே அவற்றின்மேல் கொஞ்சம் டால்கம் பவுடரைத் தடவி வைத்துவிட்டு, மறுநாள் காலை வழக்கம்போலத் துவைத்து விடுங்கள். அழுக்கு இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

* சட்டைகளிலோ, பெட்ஷீட்டுகளிலோ ஒட்டிக்கொண்டு வர மறுக்கும் சூயிங்கத்தின் மேல் ஐஸ் கட்டியால் தேய்த்தால் சுலபமாக வந்து விடும்.

*உங்கள் வீட்டு ஃப்ரிசரினுள் அடிக்கடி நிறைய ஐஸ் கட்டிகள் சேர்ந்து விடுகின்றனவா? அதனுள்ளே கொஞ்சம் உப்பைத் தூவி வைத்து விடுங்கள். ஐஸ் உறையாது.

* கதவிடுக்குகள் கிறீச் ஒலி எழுப்பி இம்சிக்கின்றனவா? அந்த இடங்களில் பென்சிலால் தேய்த்து விடுங்கள். பென்சி லில் உள்ள கிராஃபைட் சத்தத்தைக் குறைக்க உதவும்.

* அடிப்பிடித்துக் கறை படிந்த பாத் திரங்களினுள் குளிர்ந்த தண்ணீரை நிரப்பி, அத்துடன் கொஞ்சம் பிளீச்சிங் பவுடரையும் போட்டு இரவு முழுக்க அப்படியே வைத்து விடுங்கள். மறுநாள் காலை சோப்பு போட் டுக் கழுவினால் பாத்திரங்கள் பளிச்சென மாறும்.

* தேங்காயை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து விட்டு உடைத்தால் அதன் நாரை சுலபமாக நீக்க முடியும். தேங்காயும் சரி பாதியாக உடையும்.

*துணிகளில் மருதாணிக் கறை கள் பட்டுவிட்டால், அந்த இடத்தை வெது வெதுப்பான பாலில் ஊற வைத்துப் பிறகு சோப்பு போட்டுத் துவைத்தால் கறை நீங்கும்.

* கொஞ்சம் அம்மோனியா அல்லது வினிகர் கலந்த குளிர்ந்த தண்ணீரில் கண்ணாடிப் பாத்திரங்களைக் கழுவினால் அவை புதிது போல பளபளக்கும்.
Read more

24 July 2012

சீரகத்தின் மருத்துவப்பயன்கள்!

சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும்.


வட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது குமின் என்ற வார்த்தையே அராபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப் பட்ட வரலாறு சான்று சிரியாவில் இருந்து கிடைத்துள்ளது.


இந்த வகை செடியின் காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும்.


சீர்+அகம்=சீரகம் என்று கூறப்படுகிறது ஆனால் சரி என்பதற்கு காரணம் இல்லை
ஆனால் தமிழர்கள் இதை நீண்ட நெடுங் காலமாக உபயோகித்து வந்தனர் என்பது தெரிகிறது .திருஅண்ணாமலையில் கிடைத்த ஒரு கல்வெட்டில் நெல்லுக்கு பதிலாக சீரகம் அடைக்காய் முதலிய வாங்கிய செய்தி கிடைத்துள்ளது .


எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே
என தேரையர் என்ற சித்தர் சவால் விட்டுக் கூறுவதாக பாடல ஒன்று உண்டு .


சீரகத்திலிருந்து 56% Hydrocarbons ,Terpene,Thymol போன்ற எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol –[anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic] வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.


BOTONICAL NAME Cuminum Cyminum
FAMILY Apiaceae

சீரகத்திற்கு ஆங்கிலத்தில் ‘குமின்’ என்று பெயர். இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா,
கன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, காஷ்மீரியில் ஜையுர் என்று பெயர்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.

சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
பொதுவாக சீரகம்:

வெப்பமுண்டாக்கி stimulant
பசிதூண்டி stomachic
துவர்ப்பி astringent
வாய்வு அகற்றி carminative

மனித குலத்திற்கு நீண்ட காலமாக தெரிந்த ஒரு மூலிகை !
உணவை சுவையாக்கவும் செரிக்கவும் சீரிய ஒரு மூலிகை !
Read more

வெற்றிலையின் மருத்துவப்பயன்கள்!

வெற்றிலை

வெற்றிலை வெப்பம் தரும்; உமிழ்நீர் பெருக்கும்; பசியை உண்டாக்கும்; பால் சுரக்க வைக்கும்; காமத்தைத் தூண்டும்; நாடி நரம்பை உரமாக்கும்;
நறுமணம் அளிக்கும்.

இரண்டு வெற்றிலையோடு ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி, தேங்காய்த் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

வெற்றிலைச் சாற்றுடன் பாலையும் கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும். குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் கஸ்தூரி, கோரோசனை ஏதேனும் ஒன்றைச் சேர்த்துக் கொடுக்கச் சளி, இருமல், மாந்தம், இழுப்பு குணமாகும். பல மருந்துகளுக்கு வெற்றிலை அனுபானமாகும் .
( உட்செல்லும் மருந்தோடு இதையும் உண்பதால் வீரியம் மிகும்)

ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்கச் சிறிது வெற்றிலை வேரையும், மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 40 நாட்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.இது ஒரு சிறந்த கருத்தடை மருத்து. வெற்றிலை வாயிலிட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவேதான் இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்படும்..

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு கால் லிட்டர் ஆகக் குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து மூன்று வேளை உணவுக்கு முன்பு அருந்தினால் குணமாவதாகக் கூறப்படுகிறது.

உணவுக்குப்பின் வெற்றிலையை அளவாக உபயோகிக்க உண்ட உணவு ஜீரணமாகும் .ஜப்பானிய டீ விருந்து முறை போல் வெற்றிலை, பாக்கு,சுண்ணாம்பு இவைகளைச் சேர்த்து அந்தக்காலத்து மனிதர்கள் போடும் விதமே ஒரு தனியான கலையாகும்; இதை மிகவும் ரசித்துச் செய்வர்.
பின்புறம் இருக்கும் நரம்பை நீக்கிவிடவேண்டும்;அதில் சுண்ணாம்பு தடவ வேண்டும்.வெற்றிலை, பாக்குடன் சேரும்போது சுண்ணாம்பு உண்ணத்தக்கதாக மாறிவிடுகிறது; உடலுக்குச் சுண்ணாம்பு சத்தும் கிடைத்து விடுகிறது . அந்தக்காலத்து பாட்டிகளுக்கு நாளுக்கு இரண்டு முறை பிரஷ் செய்யும் இந்தக்காலத்து நாகரிக மனிதரை விடப்பற்கள் வலுவாக இருந்தன.

இன்னும் வெற்றிலையின் மகிமை சொல்லச் சொல்ல விரியும்;

’வெற்றிலை போடுவத்தல்ல, தரிப்பது’ என்பர்.அதுவே அதன் மதிப்பை உயர்த்தும்

மருத்துவப் பயன்கள் -: பொதுவான குணம். சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.

வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.

வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.

குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.

கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.

வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது.

சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.

குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.

வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும்.

விடாது மூக்கில் ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும்.

ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்க 10 கிராம் வெற்றிலை வேரையும், மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 20-40 நாட்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.

வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும்.

சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.

வெற்றிலை மலேசியாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது . இக்கொடி இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. பயிரிடப்படும் கொடிதான்; இது தானாக எங்கும் விளைவதில்லை; வெற்றிலை வளரும் இடத்தைக் கொடிக்கால் என்று கூறுவர் . பெரும்பாலும் தமிழ் நாட்டில் அது அகத்திச் செடிகளின் மேல் படர விட்டு வளர்க்கப்படுகிறது .இது செடியைச் சுற்றிப் படர்வதால் நாகவல்லி என்றும் பெயர் பெற்றுள்ளது. தென்னந்தோப்புகளில் இதை ஊடுபயிராகவும் விளைவிப்பதுண்டு.

நாகவல்லி சிலை ஒரிசாவின் அனைத்து ஆலயங்களிலும் இடம் பெற்றுள்ளது .முக்கியமாக கோநார்க்கில் அதிகம் உள்ளது.

வெற்றிலை வெறும் இல்லை மட்டுமன்று; மூலிகை மட்டுமன்று. .அது மிகுந்த சமூக மதிப்பு வாய்ந்தது. தமிழர் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது அந்தக்காலத்தில் மன்னர்கள் தொடர்ந்து வெற்றிலையைத் தாம்பூலமாகப் பயன்படுத்தினர் அந்த வெற்றிலையை மடித்துக் கொடுப்பதற்காக அமைச்சர் மதிப்பில் ஓர் அதிகாரியும் அருகில் இருப்பார் .அவருக்குச் சில சமயம்
அமைச்சரை விட மதிப்பு அதிகம் உண்டு; அவருக்கு பெயரே அடைப்பக்காரர். அரியநாயகம் என புகழ்பெற்ற மதுரை நாயக்கர் முதலில் கிருஷ்ணதேவராயரிடம் அடைப்பக்காரராக இருந்ததாகக் கூறப்படுகிறது .எந்த ஒரு செயலுக்கும் அச்சாரம் போடுவதற்கு வெற்றிலை பாக்குக் கொடுத்து விட்டால் போதும்; அதுவே ஒப்பந்தம் ஆன மாதிரிதான். இன்றும் கூட திருமண நிச்சயத்தை வெற்றிலை பாக்கு (தாம்பூலம்) மாற்றிக்கொள்வது என்றுதானே கூறுகிறோம் . நமது சமூக வாழ்வில் அத்தனை மதிப்பு வெற்றிலைக்கு உண்டு .தமிழர்களிடையே எந்த முக்கியமான வைபவமாக இருந்தாலும் வெற்றிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வெற்றிலை இல்லாமல் எந்த சுப காரியமும் தமிழர் வாழ்வில் இல்லை; வெற்றிலை இல்லாத கடவுள் வழிபாடும் தமிழர் வாழ்வில் இல்லை . ஏன் என்றே தெரியாமல் தொடர்ந்து வழக்கமாக நாம் வெற்றிலையை நமது வாழ்வின் அத்தனை செயல்களிலும் உபயோகித்து வருகிறோம்.

கடவுளை மறுப்போர் கூட இதை ஏன் என்று கேட்கவில்லை .
வெற்றிலை என்பதே பன்மைதான்; வெற்றிலைகள் என்று கூறப்படுவதில்லை. அதை என்றும் ஒன்றாகவும் உபயோகிப்பதில்லை .
.
வெற்றிலையைப் பயிர் செய்ய விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டிப் பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். வெற்றிலையில் கரும்பச்சை நிறத்திலிருப்பது ஆண் வெற்றிலை என்றும், இளம்பச்சை நிறத்திலிருப்பது பெண் வெற்றிலை என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். சிலர் அதில் பின்புறம் இருக்கும் நரம்புகளைப் பார்த்தும் ரகம் பிரிப்பதுண்டு .

வெற்றிலையைக் கொண்டு ஆருடம், சோதிடம்கூடப் பார்ப்பதுண்டு .மாந்திரீகத்திலும் இதற்குத் தனி இடம் உண்டு .

மூலிகையின் பெயர் -: வெற்றிலை.
தாவரப் பெயர் -: PIPER BETEL.
தாவரக்குடும்பம் -: PIPER ACEAE.

தாம்பூலம், நாகவல்லி, வேந்தன் என்று வேறு பெயர்களும் இதற்கு உண்டு.
Read more

22 July 2012

இஞ்சியின் மருத்துவப்பயன்கள்!


ஞ்சியின் மருத்துவ குணங்கள்
இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.

பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள்.

இஞ்சியின் மருத்துவ குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
இஞ்சியை நன்றாக சுடவேணும் அதை நசுக்கி உடம்பில் தேக்க பித்த, கப நோய்கள் தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
ஆக முன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி. பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாக தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, 'பைப்ரினோலிடிக்' செயற் பாடுகுன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது.

இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பை உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இஞ்சியையும் சுக்கையும் உபயோகிக்கும் போது சுத்தி செய்தல் மிக முக்கியமானது .இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்ப்படும்.

இஞ்சியை சுத்தி செய்ய அதன் மேல் தொலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும் .அதே போல் சுக்கை சுத்தி செய்ய அதன் மேல் சுண்ணாம்பை தடவிகாயவைது ,பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும் .இது மிக முக்கியமானது சுத்தி செய்யாமல் உபயோகிக்கவேண்டாம்.

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்ப முறையே.

அது என்ன இஞ்சி இடுப்பழகி என ஒரு குரல் கேட்கிறது. தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு குவளை மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும். அதன்பிறகு எந்த வயதிலும் நீங்கள் இடுப்பழகியாகவே இருக்கலாம்.-

எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.

இஞ்சி- சுக்கு மூன்று தொச்த்த்யும் போக்கும் ஆற்றல் படைத்த ஒரு சர்வ ரோக நிவாரிணி.
Read more

21 July 2012

முருங்கை கீரை ஏழைகளின் அமிர்தம்!

னது சத்துக்களின் வீரியத்தை கொஞ்சம் கொஞ்சம் ஆக இழந்து வரும் பூமியில்
முருங்கை மாதிரி கீரை வகைகள் ஏழைகளின் அமிர்தம் எனலாம். அணைத்து ஜீவ சத்துக்களும் அடங்கிய இந்த கீரை ஒரு இயற்கையின் அற்புதம் தான். இது கடவுளின் கொடை .

வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.
கண்களைப் பாதுகாக்க முருங்கையின் பூவை மொழி முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.
இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம் .
இதன் பிசின் கூட மோகத்தை கூட்டவல்லது .பாலில் இட்டு இரவில் சாப்பிடலாம்.
.
இதன் காயை பற்றித்தான் பாக்கியராஜ் சினிமா மூலம் முன்பே பிரபலம் ஆக்கிவிட்டார் .
காய் கறிகளில் முருங்கை சுவையானது அனைவரும் விரும்புவது .அதிக சத்துள்ளதும் கூட
வீட்டுக்கொரு முருங்கை இருந்தால் வைத்தியருக்கும் வேலையில்லை .
சாப்பாட்டிற்கும் கவலையில்லை ..
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner