Ads Header

Pages


03 August 2012

தலை வலி தீர... - பாட்டி வைத்தியம்

லைவலி
தலைபாரம் குறையும்.
துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும்.
------------------------------------------------------------------------------
கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும்.
---------------------------------------------------------
நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
---------------------------------------------------------
தலை வலி...குறைய:
ஒற்றை தலைவலி...குறைய
துளசி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு, லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும்.
----------------------------------------------------
தலைசுற்றல் குறைய
நெல்லி வற்றல், பச்சைபயறு இரண்டையும் 200 கிராம் அளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க தலைசுற்றல் குறையும்.
--------------------------------------------------------------
இஞ்சி சாறு, தேன் கலந்து தொடர்ந்து முப்பது நாட்கள் சாப்பிட்டு வர தலைசுற்றல் குணமாகும்.
---------------------------------------------------------------
ஏலக்காய்களை நசுக்கி அரை டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கஷாயமாகக் காய்ச்சி அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால் தலைசுற்றல் உடனே நீங்கும்.
----------------------------------------------------------------
தலைவலி தீர
கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும்.
--------------------------------------------------------------------
திருநீற்றுப பச்சிலைச் சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ தலைவலி தீரும்.
---------------------------------------------------------------------
முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.
---------------------------------------------------------------------
கீழாநெல்லிச்சாறு, குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி நெற்றியில் தடவி வர தலைவலி குறையும்.
-----------------------------------------------------------------------
எலுமிச்சைப் பழச் சாற்றை இரும்பு சட்டியில் விட்டு காய்ச்சி நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.
-----------------------------------------------------------------------
கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.
-------------------------------------------------------------------------
இஞ்சிச் சாறை நல்லெண்ணெயில் காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து வர தலைவலி குறையும்.
---------------------------------------------------------------------------
ஓமவல்லி இலைச் சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை கலந்து நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.
-------------------------------------------------------------------------------
அகத்தி இலையை அரைத்து நெற்றியில் பற்று போட தலை வலி குறையும்.
---------------------------------------------------------------------------------
மிளகாய் , மிளகு, செம்மண் முன்றையும் சம அளவு எடுத்துத் தண்ணீர் விட்டு மைப்போல அரைத்துக் கொதிக்க வைத்து இளஞ் சூடாகப் பற்றுப் போட தலைவலி குறையும்.
-----------------------------------------------------------------------------
இஞ்சியைத் தட்டி வலி உள்ள இடத்தில் பற்றுப் போட தலை வலி குறையும்.
-------------------------------------------------------------------------------
வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.
-----------------------------------------------------------------------------
வெற்றிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலை, மிளகு, சுக்கு இவற்றின் சாறை எடுத்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்க தலைவலி குணமாகும்.
-------------------------------------------------------------------------------
சுக்குப் பொடியை பாலில் குழைத்து நெற்றியில் தடவ தலை வலி குறையும்.
-----------------------------------------------------------------------------------
மிளகை அரைத்து பாலுடன் கலந்து தலையில் தேய்த்து குளிக்க தலை வலி குறையும்.
----------------------------------------------------------------------------------
கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையை நெற்றியில் தடவினால் தலைவலி குறையும்.
---------------------------------------------------------------------------------
அகத்தி இலைச் சாறெடுத்து நெற்றியில் தொடர்ந்து தடவி வர தலை வலி குறையும்.
-------------------------------------------------------------------------
எலுமிச்சைப்பழச் சாற்றில் மிளகை மைய அரைத்து நெற்றியில் போட தலைவலி குறையும் .
-------------------------------------------------------------------------------
குங்குமப்பூவை மைய அரைத்து நெற்றிப்பொட்டில் தடவ தலைவலி குணமாகும்.
-------------------------------------------------------------------------------
நெல்லிக்காயை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி நீங்கும்.
----------------------------------------------------------------------------
இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி சீசாவில் வைத்துக் கொள்ளவும். தைலத்தை தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் குளிக்க
தலைவலி குணமாகும்.
------------------------------------------------------------------------------
ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி விலகும்.
------------------------------------------------------------------------------
ஜாதிக்காய் விதைகளை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்தால் தலைவலி நீங்கும்.
--------------------------------------------------------------------------------
மிளகு, துளசி இரண்டையும் வாயில் போட்டு கொண்டால் தலை வலி விரைவில் குறையும் .
------------------------------------------------------------------------------
உப்பு,மிளகு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விரைவில் நீங்கும்.
------------------------------------------------------------------------------
தீராத ஒற்றைத் தலைவலி.
விடாத தலைவலி.
எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணையில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.
------------------------------------------------------------------------------
தீராத தலைவலி.
பயணத்தின் போது தலைவலி.
வேலையின் போது தலைவலி.
சிந்தனையின் போது தலைவலி.

குப்பைமேனி இலை மற்றும் பூ - 1 கப் தண்ணீருடன் சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தடவவும்.
---------------------------------------------------------------------------------
சளித் தொல்லை
ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை இவற்றில் சிறிதளவு எடுத்து லேசாக அரைத்து பின்பு அதை நன்றாக இட்லி அவிப்பது போல் அவித்து அதிலிருந்து சாறு எடுக்க வேண்டும் . 2 தேக்கரண்டி சாறு அதில் சம அளவு தேன் கலந்து தினமும் 1 பொழுது வீதம் மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை முற்றிலும் குணமாகும்.
---------------------------------------------------------------------------
புத்துணர்ச்சி பெற‌
ஒரு கையளவு துளசி இலைகளை ஒரு செப்பிலான பாத்திரத்தில் (பூஜை செப்பு பாத்திரம்) தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை பருகவும்.
Read more

வயிற்று வலி குறைய பாட்டி வைத்தியம்,!

வயிற்று வலி குறைய

தேவையான பொருட்கள் :

சீரகம் -- 5 கிராம்
க‌ல் உப்பு -- சிறிது

செய்முறை :
5 கிராம் அள‌வு சீர‌க‌த்துட‌ன் சிறிது க‌ல் உப்பையும் சேர்த்து வாயில் போட்டு ந‌ன்றாக‌ மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி குறையும்.
Read more

02 August 2012

கோவைக்காய்-நீரிழிவை நிறுத்தும்!!

ணவே மருந்து! கோவைக்காய்-நீரிழிவை நிறுத்தும்!!
-------------------------------------------------------------------------------------------------
கோவைக்காய்ப் பொடி
தேவையானவை
கோவைக்காய் - கால் கிலோ
மஞ்சள் பொடி - 3 ஸ்பூன்
உப்புத் தூள் - தேவையான அளவு
புளித்த மோர் - காய்கள் ஊறும் அளவு,
மிளகுத் தூள் - 15 கிராம்
சீரகம் - 15 கிராம்
முழு பூண்டு - 2 (அ) 3
உளுத்தம் பருப்பு - 50 கிராம்
எலுமிச்சைப் பழம் - 4
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோவைக்காய்களை சிறு துண்டுகளாக நறுக்கி போடவும். புளித்த மோரை ஊற்றவும். உப்பைத் தூள் செய்து போடவும். மஞ்சள் பொடியைப் போடவும். இரண்டு நாள் ஊற வேண்டும். எலுமிச்சைப் பழத்தை பிழிந்து ஊற்றவும். இரண்டு இரவு ஊற விட்டு மறுநாள் காயப் போடவும். தினம் காயப்போட்டு மறுபடி, மறுபடி இரவில் கலந்துள்ள மோரில் ஊறவிட வேண்டும். இது போல் தினம் ஊறப் போட்டு, காய வைத்து எடுக்கவும். இவ்வாறு காய வைத்த காய்களுடன், மிளகு, சீரகம் இவற்றை வெய்யிலில் இரண்டு நாள் காய வைத்து அதைத் தூள் செய்து காய்ந்த கோவைக்காய்களையும், மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும். இவ்வாறு பொடி செய்த பொடியுடன் ஒரு ஸ்பூன் (அ) இரண்டு மூன்று ஸ்பூன் சூடான சாதத்தில் போட்டு நெய் இரண்டு ஸ்பூன் விட்டு பிசைந்து சாப்பிடவும். இப்பொடியை பாட்டிலில் வைத்து பத்திரப்படுத்தவும்.
------------------------------------------------------------------------------------------
கோவைக்காய் எரிசேரி
தேவையானவை
கோவைக்காய் பொடியாக
நறுக்கியது - 1 கப்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
உப்புத் தூள் - தேவையான அளவு
புளி (அ) எலுமிச்சை பழம் - 2
பசு நெய் - 200 கிராம்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய கோவைக்காயை போடவும். புளியை கரைத்து ஊற்றவும் (அ) எலுமிச்சைப்பழத்தை பிழிந்து ஊற்றவும். உப்பைப் போடவும். மஞ்சள் பொடியைப் போடவும். மிளகு, சீரகம் இவற்றைப் பொடி செய்து போடவும். தண்ணீர் இல்லாமல் பகல் (அ) இரவு முழுவதும் பிசிறி ஊற விடவும். மறுநாள் சமைக்கும் முன் 10 மணியிலிருந்து 11 (அ) 12 மணி வரை வெய்யிலில் தாம்பாளத்தில் கொட்டிப் பரப்பி வைத்து காய வைக்கவும். அரை மணி நேரம் கழித்து மறுபடி காய்களை புரட்டி வைத்து காய்ந்ததும், எடுத்து வாணலியில் நெய்யை ஊற்றி காய்ந்ததும் காய வைத்த கோவைக்காய்களை நெய்யில் பொரித்து எடுக்கவும். இதுவே கோவைக்காய் எரிசேரி என்பது.
-----------------------------------------------------------------------
கோவைக்காய் பால் கறி
தேவையானவை
கோவைக்காய் - கால் கிலோ
முற்றிய தேங்காய் துருவல் - 2 மூடி
சோம்பு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
தக்காளி - 4 (அ) 5
கறிவேப்பிலை - 3 இணுக்கு
மல்லித் தழை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
பூண்டு பல் - 4
இஞ்சி - 1 துண்டு
பசுநெய் - 10 மில்லி
கசகசா - 2 ஸ்பூன்
மல்லித் தூள் - 2 ஸ்பூன்
செய்முறை
கோவைக்காயை அலசி விட்டு, உப்பு போட்டு, மல்லித்தூள், மஞ்சள் தூள் போட்டு வேக விடவும். காய் வெந்ததும், வாணலியில் பட்டை, சோம்பு இவற்றை தூள் செய்து போட்டு, நெய் விட்டு, கிராம்பை தட்டிப் போட்டு, கசகசாவை தூள் செய்து போட்டு வறுத்து, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மல்லித்தழை இவற்றைப் போட்டு வதக்கி தாளிக்கவும். தேங்காயில், சோம்பு வைத்து தாளித்த காயில் அரைத்து ஊற்றவும். மற்றொரு மூடி தேங்காய்த் துருவலை திக்கான பாலெடுத்து வெந்த காயை இறக்கி வைத்து பாலை ஊற்றவும். இந்தக் கோவைப்பால் கறியை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும்.
---------------------------------------------------------------------------
கோவைக்காய் பொரிச்ச குழம்பு
தேவையானவை
தேவையான (அதாவது) குழம்பு வைக்க போதுமான அளவு
மல்லித் தூள் - 4 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
பூண்டு பல் - 10
இஞ்சி - ஒரு பெரிய துண்டு
தேங்காய் துருவல் - 11/2 மூடி
சின்ன வெங்காயம் - பொடியாக நீளவாக்கில் நறுக்கியது
தக்காளி - ஐந்து
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்
கசகசா - 2 ஸ்பூன்
சோம்பு - 11/2 ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கறிவேப்பிலை - 3 இணுக்கு
மல்லி இலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
கடலைபருப்பு - 5 ஸ்பூன்
பசுநெய் - 4 ஸ்பூன்
செய்முறை
அரிசி களைந்த நீரில் மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் இவற்றை போட்டு நன்கு கலக்கி விடவும். கோவைக்காயை அலசி சிறு துண்டுகளாக கொஞ்சம் நீளவாக்கில் நறுக்கி போட்டு வேகவிடவும். காய் வெந்ததும், சோம்பு ஒரு ஸ்பூன், தேங்காய் துருவலை அரைத்து ஊற்ற வேண்டும். நன்கு கொதித்ததும் உப்பைப் போட வேண்டும். வாணலியில் நெய் விட்டு சோம்பு, பட்டை, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மல்லித் தழை இவற்றைப் போட்டு வதக்கி தாளிக்கவும். தாளிக்கும் போது பூண்டு இஞ்சியை தோல் சீவி கரகரப்பாக அரைத்து போட்டு வதக்கி தாளிக்கவும்.
---------------------------------------------------------------------
கோவைக்காய் மோர் குழம்பு
தேவையானவை
கெட்டித் தயிர் - 2 கப்
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 துண்டு
பச்சை மிளகாய் - 4
பச்சரிசி - 1 ஸ்பூன்
துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 3 இணுக்கு
மல்லிக் கொத்து - 2
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்
காய்ந்த மல்லி விதை - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கோவைக்காய் - 200 கிராம் (அ) கால் கிலோ
உப்பு - தேவையான அளவு
கடலை பருப்பு - 5 ஸ்பூன்
தாளிக்க
தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - நீளவாக்கில் நைசாக நறுக்கியது 2 கைப்பிடி
தக்காளி - 3
செய்முறை
காய்ந்த மல்லியை தனியாக ஊறவைக்கவும். துவரம் பருப்பை தனியாக ஊற வைக்கவும். பச்சரிசியையும் தனியாக ஊற வைக்கவும். கோவைக்காய்களை நீரில் அலசி தண்ணீரை வடிய விட்டு மெல்லியதாக, வட்டமாக நறுக்கிக் கொண்டு தயிரில் போடவும். உப்பைத் தூள் செய்து போடவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெயை விட்டு, பெருங்காயம் போட்டு, மிளகாய் காய்ந்ததை கிள்ளிப் போட்டு வறுபட்டதும், கடுகைப் போட்டு பொரிந்ததும், வெங்காயம் போட்டு, தக்காளியைப் போட்டு (நறுக்கி போடவும்) வதக்கி, மல்லித் தழையை பொடியாக நறுக்கி போட்டு, கறிவேப்பிலையை உருவிப் போட்டு வதக்கி, மிளகாய், பெருங்காயம் போடும் போதே கடலைபருப்பைப் போட்டு சிவந்ததும் கடுகைப் போடணும். கறிவேப்பிலை, மல்லித் தழை போட்டு, காய்ந்த மல்லி, பச்சை மிளகாய் இவற்றை அரைத்து இத்துடன் சீரகம் வைத்து அரைத்துப் போட்டு, மஞ்சள் பொடி ஒரு கொதி வந்ததும் - கொதி அடங்கியதும் தயிரில் கலக்கவும். பச்சரிசி, துவரம் பருப்பு அரைத்து தயிரில் போடவும். இந்த கோவைக்காய் மோர்க்குழம்பு வைக்கும் முன், காலையிலேயே (அ) முதல் நாள் இரவே கெட்டித் தயிரில் உப்புத் தூள் போட்டு கோவைக்காயைப் பொடியாக நறுக்கி போட்டு, தேவையானால் மிளகுப் பொடி ஒரு ஸ்பூன் போட்டு ஊற விட்டு அதன் பிறகே மதியம் கோவைக்காயில் மோர்க்குழம்பு வைக்கவும்.
------------------------------------------------------------------------------
கோவைக்காய் வற்றல்
தேவையானவை
கோவைக்காய் - தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி - தேவையான அளவு
உப்பு தூள் - தேவையான அளவு
புளித்த மோர் வற்றல் - மூழ்கி ஊறும் அளவு
மிளகு பொடி - தேவையான அளவு
செய்முறை
கோவைக்காயை பறித்து அலசி மெலிதாக வட்டமாக அரியவும். ஒரு நாள் வெய்யிலில் காய போடவும். அன்று இரவு மோரில் உப்பு, மஞ்சள் பொடி, மிளகுதூள் போட்டு நன்கு கலக்கி, காயை ஊறப் போடவும். இரண்டு நாள் ஊறியதும் வெய்யிலில் பாலிதீன் கவரில் காயப் போடவும். காய் தினம் காய வைத்து எடுத்து இரவில் உப்பு, மஞ்சள், மிளகு பொடி கலந்துள்ள மோரில் போட்டு கிளறிவிடவும். இது போன்று மோர் சுண்டும் வரை போட்டு காய வைக்கவும். நன்கு ஈரமின்றி காய் காய்ந்ததும் எடுத்து இரண்டு நான்கு மாதங்கள் கழித்து வறுத்து தொட்டுக் கொள்ளவும். இந்த வற்றலை குழம்பு சாதம், மோர் சாதம் எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
----------------------------------------------------------------------------------------
நீரிழிவை நிறுத்துமா? கோவைக்காய்
இந்தியாவில் தான் உலகிலேயே அதிகமான நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். உணவு பழக்க வழக்கங்கள், உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கை முறைகள் மற்றும் பரம்பரை இவற்றால் உண்டாகும் வியாதி நீரிழிவு. இந்த வியாதி நெடுங்காலமாக, ஆயிரக்கணக்கான வருடங்களாக மனிதர்களை பாதித்து வரும் நோய். இவ்வளவு நாட்கள் இருந்தும், நீரிழிவுக்கு முழு நிவாரணம் இல்லை. எனவே மாற்று மருத்துவ முறைகள் தற்போது பிரபலமாகி வருகின்றன. இயற்கை மூலிகைகள், தாவரங்கள் இவைகள் நீரிழிவு வியாதியை குணப்படுத்த முடியுமா என்பது தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. பாகல்காய், வெந்தயம் இவைகள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் என்று தெரியவந்துள்ளது.
கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்த இந்த எளிமையான காய்கறி கொடியினத்தை சேர்ந்தது இந்தியாவில் எங்கும் கிடைக்கும்.
இந்திய ஆராய்ச்சியாளர்களால் கோவைக்காயை வைத்து, ஒரு நீரிழிவு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 60 டைப் - 2 நீரிழிவு நோயாளிகள் (வயது - 35 லிருந்து 60 வயது வரை) இந்த ஆராய்ச்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 33 நபர்கள் ஆண்கள். 26 - பெண்கள். இவர்களின் ரத்த சர்க்கரை அளவு 110 - 180 மிகி. / டெ.லி. (பட்டினியின் போதுள்ள அளவு) இவர்களில் ஒருவர் விலகி விட்டார். மீதி 59 பேரில் 29 நோயாளிகளுக்கு கோவைக்காய் சாறும், 30 நோயாளிகளுக்கு ‘வெற்று’ மருந்தும் கொடுக்கப்பட்டன. கொடுக்கப்பட்ட கோவைக்காய் சாறு இலையிலிருந்தும், கோவைக்காய் / பழங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் தலைவர் ஞிக்ஷீ. ரெபேக்கா குரியன், பெங்களூரில் உள்ள ஆராய்ச்சி கூடத்தில் மேற்கொள்ளப்பட்டது.
90 நாட்கள் இந்த சிகிச்சை தொடர்ந்தது. அதன் பிறகு பார்த்ததில் நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவு கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்தது. 16% சதவிகித குறைவு ஏற்பட்டிருந்தது. கோவைக்காய் சிகிச்சை பெறாதவர்களின் சர்க்கரை அளவு அதிகமாகிருந்தது. தினசரி 1 கிராம் கோவைக்காய் சாறு, உணவுக்குப் பின் எடுத்த சர்க்கரை அளவை 18% சதவிகிதம் குறைந்திருப்பது தெரியவந்தது. பல வருடங்களுக்கு முன்பே, அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பள்ளியில் நடத்திய ஆய்வில் கோவைக்காய் நீரிழிவு வியாதியை குறைக்கும் குணமுடையது என்பது சொல்லப்பட்டது. பெங்களூரில் நடத்திய மேற்சொன்ன ஆராய்ச்சியிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை. ஆராய்ச்சிக்கு உட்பட்ட நோயாளிகளுக்கு சிறிய வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட்டாலும், அவை 1 வாரத்தில் மறைந்து விட்டன.
Read more

அழகான நீண்ட கூந்தலுக்கு மூலிகை எண்ணெய்!

ழகான நீண்ட கூந்தலுக்கு

இயற்கையான மூலிகைகளைக் கொண்ட எண்ணெய்களை தயாரித்து உபயோகித்து வந்தால் நீண்ட கூந்தல் கனவு நிஜமாகும்.

தேங்காய் எண்ணெய் - 1 லிட்டர்
நெல்லிக்காய் காய்ந்த பொடி - 10 கிராம்!
தான்றிக்காய் பொடி - 10 கிராம்
வேப்பிலைப் பொடி - 10 கிராம்
கறிவேப்பிலைப் பொடி - 10 கிராம்
மருதாணிப் பொடி - 10 கிராம்
கரிசலாங்கண்ணிப் பொடி - 10 கிராம்
செம்பருத்திப் பூ காய்ந்த பொடி - 10 கிராம்
வெட்டி வேர் - 10 கிராம்
ரோஜா இதழ் - 10 கிராம்
சந்தனப் பொடி - 10 கிராம்

இந்த பொடிகளை ஒன்றாகச் சேர்த்து தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாகக் காய்ச்சி, பின்பு சூரிய ஒளியில் 5 நாட்கள் வைத்து பின்பு வடிகட்டி அந்த எண்ணெயை உபயோகித்து வந்தால், கூந்தல் உதிர்வது குறைந்து, பேன், பொடுகு போன்றவை நீங்கும். புழுவெட்டு நீங்கும். உடல் சூடு தணிந்து, பித்த நரை மாறும்.
Read more

மாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்!

மாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம் இதோ..

வெற்றிலை - 2
சாம்பார் வெங்காயம் - 2
சீரகம் - 1 ஸ்பூன்
பூண்டுபல் - 2

இவையனைத்தையும் நன்கு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி அந்த சாறை,மாதவிடாய் வருவதற்கு முன்பும், வந்த பின்னும் காலை மாலை இருவேளை வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தால் தீராத வயிற்று வலியும் தீரும்.

வெள்ளைப் பூசணி - 100 கிராம்
வெள்ளரி விதை - 10 கிராம்
சாம்பார் வெங்காயம் - 2
வெள்ளை மிளகு - 5 கிராம்
பூண்டு - 2 பல்
பனங்கற்கண்டு - 100 கிராம்

இவையனைத்தையும் ஒன்றாக்கிச் சாறெடுத்து காலை, மாலை என்று இருவேளை 50 மிலி சாப்பிட மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்று வலி நீங்கும்.

மாதவிடாயில் சரியான அளவு இரத்தப்போக்கு இல்லாதவர்கள், இரத்தத்தை மிகுதிப்படுத்தும் உணவுகளையும், இரத்த சுழற்சிக்கு உகந்த உணவுகளையும் மிகுதியாக உட்கொள்ள வேண்டும்.

உணவில் முருங்கைக்கீரை, அகத்திக் கீரை, மணத்தக்காளிக் கீரை, பசலைக் கீரை, பிரண்டை, பாகற்காய், சுண்டைக்காய், முருங்கைக்காய், பப்பாளிப்பழம், அன்னாசிப்பழம், பேரீச்சம்பழம், அத்திப்பழம் போன்றவற்றைத் தேவையான அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அசோகா கசாயம்

அசோகமரப்பட்டை - 20 கிராம்
மருதம்பட்டை - 10 கிராம்
ஆவாரம் பூ - 10 கிராம்
திரிகடுகு பொடி - 10 கிராம்
திரிபலா பொடி - 10 கிராம்

இவையனைத்தையும் தூள் செய்து 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, பாதியாக சுண்ட வைத்து காலை, மாலை இரவு சாப்பிட்டு வர மாதவிலக்கு சீராகவும், சரியான அளவிலும் இருக்கும்.

அதிக உதிரப் போக்குக்கு சில எளிய மருத்துவக் குறிப்புகள்

முன்று கிராம் மாம்பருப்பை பாலில் அரைத்துச் சாப்பிட அதிக உதிரப்போக்கு சரியாகும்.

மாதும் பழத் தோலை ஐந்து கிராம் அளவில் அரைத்து புளிப்பு மோரில் கலந்து சாப்பிட உதிரம் நிற்கும்.

ரத்தம் அதிகம் வெளியேறினால் ரத்தசோகை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே இரும்புச்சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ போன்றவை நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது அவசியம்.

மாதவிடாயின்போது அதிகளவு உதிரப்போக்கு ஏற்படும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், கருப்பைக் கட்டிகள் (Fibroid) அல்லது கருப்பையில் புற்றுநோயின் பாதிப்போ இருக்கக்கூடும்.

இந்த கோளாறு உள்ளவர்கள் தக்க மருத்துவரை அணுகி பரிசோதனைகள் செய்து நிவாரணம் பெறலாம். இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அனாலும் அதிக உதிரப்போக்கு உள்ளவர்கள் உண்டு. இது சாதாரணமாக உதிரப்போக்கு நிற்கும் காலத்திற்கு ஓரிரு வருடங்கள் முன்பாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு.

இதற்கு சில வாழ்வியல் மாற்றங்கள் உணவுமுறை மாற்றங்கள் அவசியம். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும். மனதை அமைதியான மனநிலைக்கு கொண்டுவர இவ்விரண்டும் உதவும். மேலும் எளிய, சீரணமாகின்ற உணவுகளை சரியான கால அளவில் எடுத்துக்கொள்ளுதல், எண்ணெயில் பொரித்த பண்டங்கள், பலகாரங்களைத் தவிர்த்தல், நேரம் தவறி உண்பதைத் தவிர்த்தல் இவற்றைக் கடைபிடித்தால் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு குறைய வழி உண்டு.
Read more

01 August 2012

மூல நோய்க்கு மிகவும் எளிய வைத்திய முறை!

மூல நோய்க்கு மிகவும் எளிய வைத்திய முறை!


கோவைக்காய் - 5
சின்ன வெங்காயம் - 5
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மணத்தக்காளி கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

முதலில் கோவைக்காயை அவிச்சி, அதோட மத்த பொருட்களையும் சேத்து சூப் செஞ்சி 1 நாளைக்கு ரெண்டு வேளைன்னு 10 நாளைக்குத் தொடந்து சாப்பிட்டுக்கிட்டு வா..
மூலத்தோட வேகம் குறைஞ்சு, படிப்படியா குணமாயிடும்.

அதே மாதிரி கோவக்காய அடிக்கடி சாப்பாட்டுல சேத்துக்கிட்டு வா.. அப்புறம் மூலம் உன் பக்கமே திருப்பிப்பாக்காம ஓடிப்போயிடும்..
----------------------------------------------------
மலம் வெளியேறும்போது எரிச்சலோட ரத்தம் வெளியாவுது.. மலம் சரியா போகமாட்டேங்குது.. மலத்துவாரத்துல புண் மாதிரி இருக்கு.. அதுனாலதான் உக்கார முடியல.. உக்கார மட்டுமா.. எதுவுமே முடியலை.. அதுக்கு ஒரு மருந்து சொல்லுவீங்கன்னுதான் உங்கக்கிட்டே வந்திருக்கேன்..
வைத்தியருக்கு சாமியின் அவஸ்தையும், வேதனையும் இப்போது நன்றாகவே புரிந்தது.

இந்த மூலம் ஏன் வருது தெரியுமா..

ராவுல அளவுக்கு அதிகமாக கடினமான உணவ கண்ணா பின்னான்னு சாப்பிடுறது.. கண்டமேனிக்கு தண்ணியடிக்கிறது.. அதுக்கு சைடுக்கு எண்ணெயில பொரிச்ச பண்டங்கள காரசாரமா சேத்துக்குறது..

அதும் வெயில் காலத்துல இப்படியெல்லாம் உள்ள போச்சின்னா.. அது வேகத்த இப்படித்தான் காட்டும்..

சாப்பிட்ட உணவு சரியா செரிக்காம.. வயிறு மந்தமாகி மலச்சிக்கல் உண்டாகி, மலத்த வெளியேத்த முடியாம வாயு சீற்றமாகி ஆசன வாயில வீக்கத்தையும் புண்ணையும் உண்டாக்குது.. அது காலப்போக்குல பல தொந்தரவுகள கொடுக்க ஆரம்பிக்குது... அளவான உணவும், மிதமான சுவையும் எப்போது உடம்புக்கு தீங்கு செய்யாது.. ஹம்ம்ம்.. அதத்தான் யாரும் இப்ப கடைப்பிடிக்கிறதில்லையே..

சரி... இனிமேலாவது நாக்கு ருசிக்காக இப்படி கண்ட பொருளையும் வாங்கி சாப்பிடாத.. இப்ப சொல்றத கேட்டுக்க..
Read more

அக்குள்ல கட்டி வந்தா...

டுக்காய், சிவப்பு சந்தனம் ரெண்டயும் தண்ணி விட்டு அரச்சி குழம்பு போல ஆக்கி கட்டிமேல பூசிக்கிட்டு வர.. கட்டி தானாக் கரைஞ்சிடும்.

வெயில் காலமானாலும், எந்த காலமானாலும் சரி.. உடம்புல அந்தரங்கப் பகுதிகள்ள அழுக்கு படியாம சுத்தமா வச்சிக்கணும். இந்த மாதிரி கட்டி வர்றதுக்கு. சுகாதாரமில்லாததும் ஒரு முக்கிய காரணம்.. சரி இதல்லாம் கவனத்துல வச்சிக்க..
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner